29
சித்தர்தாசன் சுந்தர்ஜி
பாவ- சாப தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!
"சாதியாவ தேதடா சனந்திரண்ட நீரெல்லாம்
பூதவாசம் ஒன்றல்லோ பூதமைந்தும் ஒன்றல்லோ
காதில்வாளி காரைகம்பி பாடகம் ஒன்றல்லோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மையென்ன தன்மையோ.'
(சிவ வாக்கியர்)
புலத்தியர்: பொதிகை முனியே, மதம் பற்றி தெளிவு பெற்றோம். மனிதர்களுள் சாதிப்பிரிவு பற்றி உண்மையை அறிய அனைவரும் ஆவலாக உள்ளோம்.
அகத்தியர்: புலத்தியனே, விலங்கு, பறவை, தாவர இனங்களில் பலவகையான உருவ அமைப்புகள் கொண்டவை உள்ளதால், அவற்றின் தோற்றத்தைக்கொண்டு தனித்தனி சாதிப்பிரிவுகள் என கூறுகிறோம்.
பூமியில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் தலை, முகம், கை, கால்கள் என வே று பாடில்லாமல் ஒன்றுபோல் உருவ அமைப்பு இருப்பதால் சாதி, பேதம் என்பது மனிதர் களில் கிடையாது. மனிதர்களில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் இல்லை. மதகுருமார்களால் உருவாக்கப்பட்ட தெய்வங்களிலும் பெரிய தெய்வம், சிறிய தெய்வம் என இல்லை.
மனிதர்கள் பிறப்பாலும் உருவத் தாலும் உணர்வுகளாலும் சமநிலை பெற்றிருக்கும்போது, சாதி பேதம் எப்படி வந்தது எனக்கூறுகிறேன்.
இயற்கையின் பரிணாம வளர்ச்சியால், பூமியில் தாவரங்கள், பின் உயிரினங் கள் தோன்றி, அடுத்து மனித இனம் உருவானது. பழம்பதியான பாண்டிய நாட்டு தமிழ்ப்பகுதியில்தான் முதன்முதலில் மனிதன் தோன்றினான். தமிழின மக்களே பூமியில் பிறந்த முதல் மனிதர்கள்- மூத்த குடியினர்.
தமிழின மக்கள் அகத்தியன் வழி காட்டலில், பகுத்தறிவால் ஒழுக்கத்தில் வழுவாது வாழ்ந்துவருபவர்களாக இருந்தார்கள். இம்மக்கள் நீர்வளமும் நிலவளமும் பெற்ற- செழுமையான பகுதிகளான கிருதமால், தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதிகளிலுள்ள மருதம், முல்லை நிலப்பகுதிகளில் குடியமர்ந்து உழவுத்தொழில், ஆநிரை, கால்நடைகளை வளர்த்தல் என செய்து, தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இட
29
சித்தர்தாசன் சுந்தர்ஜி
பாவ- சாப தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!
"சாதியாவ தேதடா சனந்திரண்ட நீரெல்லாம்
பூதவாசம் ஒன்றல்லோ பூதமைந்தும் ஒன்றல்லோ
காதில்வாளி காரைகம்பி பாடகம் ஒன்றல்லோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மையென்ன தன்மையோ.'
(சிவ வாக்கியர்)
புலத்தியர்: பொதிகை முனியே, மதம் பற்றி தெளிவு பெற்றோம். மனிதர்களுள் சாதிப்பிரிவு பற்றி உண்மையை அறிய அனைவரும் ஆவலாக உள்ளோம்.
அகத்தியர்: புலத்தியனே, விலங்கு, பறவை, தாவர இனங்களில் பலவகையான உருவ அமைப்புகள் கொண்டவை உள்ளதால், அவற்றின் தோற்றத்தைக்கொண்டு தனித்தனி சாதிப்பிரிவுகள் என கூறுகிறோம்.
பூமியில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் தலை, முகம், கை, கால்கள் என வே று பாடில்லாமல் ஒன்றுபோல் உருவ அமைப்பு இருப்பதால் சாதி, பேதம் என்பது மனிதர் களில் கிடையாது. மனிதர்களில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் இல்லை. மதகுருமார்களால் உருவாக்கப்பட்ட தெய்வங்களிலும் பெரிய தெய்வம், சிறிய தெய்வம் என இல்லை.
மனிதர்கள் பிறப்பாலும் உருவத் தாலும் உணர்வுகளாலும் சமநிலை பெற்றிருக்கும்போது, சாதி பேதம் எப்படி வந்தது எனக்கூறுகிறேன்.
இயற்கையின் பரிணாம வளர்ச்சியால், பூமியில் தாவரங்கள், பின் உயிரினங் கள் தோன்றி, அடுத்து மனித இனம் உருவானது. பழம்பதியான பாண்டிய நாட்டு தமிழ்ப்பகுதியில்தான் முதன்முதலில் மனிதன் தோன்றினான். தமிழின மக்களே பூமியில் பிறந்த முதல் மனிதர்கள்- மூத்த குடியினர்.
தமிழின மக்கள் அகத்தியன் வழி காட்டலில், பகுத்தறிவால் ஒழுக்கத்தில் வழுவாது வாழ்ந்துவருபவர்களாக இருந்தார்கள். இம்மக்கள் நீர்வளமும் நிலவளமும் பெற்ற- செழுமையான பகுதிகளான கிருதமால், தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதிகளிலுள்ள மருதம், முல்லை நிலப்பகுதிகளில் குடியமர்ந்து உழவுத்தொழில், ஆநிரை, கால்நடைகளை வளர்த்தல் என செய்து, தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகியவற்றை சுயஅறிவால், சுயஉழைப்பால் உருவாக்கிக்கொண்டு மகிழ்வுடன் வாழ்ந்தார்கள்.
ஒரு நிலத்தில் விளைந்த பொருளை, அது விளையப்பெறாத அடுத்த இடங்களுக்குக் கொண்டுசென்று, அப்பகுதியில் விளைந்த பொருட்களுக்கு பண்டம் மாற்றிக் கொண்டார்கள். இந்தப் பண்டம் மாற்றியது நாளடைவில் "பவுன்' என்ற பொன்னைக் கொண்டு, "வாணிபம்' என்ற பெயரால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
பூமியில் இயற்கையால் உருவாக்கப்பட்ட இரும்பையும் மரங்களையும் கொண்டு உழவுத்தொழிலுக்குத் தேவையான கருவிகளையும், வீடு கட்டத் தேவையான பொருட்களையும் செய்து பயன்படுத்திக் கொண்டனர்.
நதிகள், ஆறுகள் என நீர்வளமில்லாத பகுதிகளில், பூமிக்குள்ளே நீர் இருப்பதை அறிந்து, மண்ணைத் தோண்டி ஊற்று நீரைக்கொண்டு பயிர் வளர்த்தனர். மழைக்காலத்தில் வீணாகும் நீரை ஏரி, குளங்களை அமைத்து தேக்கிவைத்து, நீர்க்குறைவுக் காலத்தில் ஏற்படும் நீர்த்தேவையை சரிசெய்துகொண்டனர்.
தாம் வசிக்கும் பகுதியில் தன் உபயோகத்திற்காக பூமியின் உள்ளிருந்து எவ்வளவு நீரை வெளியில் எடுத்துப் பயன்படுத்திக்கொண்டனரோ, அதே அளவு நீரை மழைக்காலங்களில் ஏரி, குளங்களில் தேக்கிவைத்து, நிலத்தடி நீர் குறையாமல் பாதுகாத்துக்கொண்டனர். நீரை சேமிக்கும் விதத்தை அறிந்து வாழ்ந்தனர்.
தமிழ்மக்கள் எந்தவகை மண்ணில் எந்தப் பயிர் விளையும்- எந்தப் பருவத்தில் எந்தப் பயிரைப் பயிர் செய்யவேண்டும் என்பதை அனுபவத்தால் அறிந்து, பருவத்தே பயிர் செய்து, உற்றம், சுற்றம், ஊரார் என அனைவரும் ஒற்றுமையுடன், ஏற்றத்தாழ்வின்றி, ஒருவருக்கொருவர் ஆதரவுடன் அன்பு செலுத்தி வாழ்ந்தார்கள்.
மனிதன் அறிவு வளர வளர, உழவுத் தொழில் அல்லாமல், உழவுத் தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் தேவையான பொருட்களை செய்துகொள்ளத் தொடங்கினான்.
இதனைத் தொழிலாகச் செய்த மக்கள் தங்களை ஒரு பிரிவினராக அடையாளப் படுத்திக்கொண்டார்கள்.
நிலத்தை உழுது பயிர் விளைவித்து மக்களுக்கு உண்ண உணவு கொடுத்தவர்களை "வேளாண்', "வேளாளர்' எனக் குறிப்பிட்டுக் கூறினார்கள். இந்த இனமக்கள், அவரவர் வசிக்கும் இடத்தைக்கொண்டு தங்களை ஒவ்வொரு பெயரால் அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
தாமிரபரணி, கிருதமால் நதிப்பகுதிகளில் பயிர்த் தொழில் செய்த மக்கள் தங்களை "சைவ வேளாளர்' என அழைத்துக்கொண்டனர்.
பாண்டிய தேசத்தின் மேற்குப் பகுதியில் மலையாசலப் பகுதிகளில், மழை நீரை ஆதாரமாகக் கொண்டு ஓடிவரும் சிற்றாறு களின் பகுதிகளில் பயிர்த்தொழில் செய்த மக்கள் தங்களை "கொங்கு வேளாளர்' என அடையாளப்படுத்திக்கொண்டார்கள்.
காவேரி நதிக்கரை ஓரங்களில் வாழ்ந்த வேளாண் மக்கள் தங்களை "சோழிய வேளாளர்கள்' எனக் கூறிக்கொண்டார்கள்.
நதிகள், ஆறுகள் இல்லாத இடங்களில் மழை நீரை ஏரி, குளங்களில் தேக்கிவைத்து பயிர்த் தொழில் செய்த மக்கள் "கார்காத்த வேளாளர்' என்று கூறப்பட்டார்கள். ("கார்'- என்றால் மழை, மழை நீர் என்று பொருளாகும். கார்காலம் என்பது மழைக்காலத்தைக் குறிக்கும்.)
நீர் சூழ்ந்த பள்ளமான இடங்களில் பயிர்செய்த வேளாண் மக்கள் "பள்ளர்' என அழைக்கப்பட்டார்கள்.
தங்கள் பகுதியில் வெற்றிலை மட்டுமே விளையும் என்பதை அறிந்து, அதை மட்டும் பயிர் செய்த வேளாண் பெருமக்கள் தங்களை "கொடிக்கால் வேளாளர்' என அடையாளப்படுத்தினர்.
இதுபோன்று இன்னும் தென்பாண்டி மண்டலத்தில் பயிர்த்தொழில் செய்த அனைத்து மக்களும், தாங்கள் வாழும் பகுதியையும் இணைத்து வேளாளர் களாக அடையாளப்படுத்திக் கொண்டார்கள். இவர்கள் தனித்தனி சாதிப்பிரிவினர் அல்ல. பயிர்த்தொழில் செய்யும் வேளாண் மக்கள் அனைவரும் ஒரே பிரிவினர்தானே தவிர, பிறப் பால், தொழிலால், சாதி பாகுபாட்டால் வேறுபட்டவர்கள் அல்ல.
மக்களுக்கு உணவு தந்து, உயிர்களைக் காப்பாற்றி வாழச்செய்யும் இந்த வேளாளர் இனமக்களே தமிழர்களில் தலைமையான மூத்த குடியினர். அரசனும் வணங்கத்தக்கவர்கள்.
வேளாண் மக்களின் உழவுத்தொழிலுக்கு உற்றதுணையாக இருப்பது கால்நடைகள்.
அவற்றை வளர்த்து, பால், தயிர் என உணவுப் பொருட்களைத் தந்து, உழவுத்தொழில் செய்யும் மக்களுக்கு உதவ காளைகளை வளர்த்துத் தருபவர்கள் இந்த மண்ணில் இரண்டாவது இடத்தில் வைத்துப் போற்றப் படுபவர்கள். இவர்களை "கோனார்கள்' என அழைத்தனர். "கோ' என்றால் "பசு' என்று பொருளாகும்.
கால்நடைகளை மந்தையாக கிடை (ஒரே இடம்) போட்டு மேய்த்ததால் இவர்களை சில இடங்களில் "இடையர்கள்' என்றும் அழைத்தனர். இவர்களும் தாங்கள் வசிக்கும் இடங்களைக்கொண்டு தனித்தனியே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார் கள்.
உழவுத்தொழிலுக்குத் தேவையான கருவிகளை செய்துகொடுத்தவர்கள் தமிழ்ப்பகுதியில் அடுத்த நிலையில் வைத்துப் போற்றத்தக்கவர்கள். இவர்களை உபதொழில் செய்பவர்கள் எனலாம். இரும்பு, தங்கம், வெள்ளி, மரம் என இந்த பூமியில் இயற்கையால் உருவாக்கப்பட்ட பொருட்களை மக்களின் பயன்பாட்டிற்குத் தந்தவர்கள்.
தங்கள் பகுத்தறிவால் இரும்பு உலோகத்தின் தன்மையை அறிந்து, உழவுத்தொழிலுக்குத் தேவையான கருவிகளை செய்துகொடுத்தவர்கள் "கருமார்', "கன்னார்' என அழைக்கப் பட்டனர்.
மண்ணை எடுத்து மக்களுக்கு உணவு சமைக்க மண்பாண்டங்களை செய்து தந்தவர்கள் "வேளாளர்', "குயவர்' என்று அழைக்கப்பட்டார்கள். பொதுவாக மண்ணை மட்டும் மூலப்பொருளாகக் கொண்டு, தொழில்செய்து ஒன்றை உருவாக்குபவர்கள் "வேளார்', "வேளாளர்' என அழைக்கப்பட்டனர்.
தங்கத்தை உருக்கித் தட்டித் தட்டி ஆபரணங்கள் செய்பவர்களை "தட்டான்', "தட்டார்கள்' என அழைத்தனர்.
மரங்களைக்கொண்டு, மக்கள் பாதுகாப்பாகக் குடியிருக்க வீடுகளை அமைக்கும் தொழிலைச் செய்தவர்கள் "தச்சர்கள்' எனப்பட்டனர். "தச்சு' என்றால் ஒன்றுடன் ஒன்றைப் பொருத்துதல், இணைத்தல் என்று பொருளாகும்.
மக்கள் உண்ண உணவையும், தங்க வீட்டையும் தந்தவர்கள்போல், ஆண்கள்- பெண்களின் மானம் காக்க துணி நெய்து தருபவர்களை "சேணியர்' என அழைத்தனர்.
புலத்தியனே, இன்னும் இதுபோன்று உபதொழில் செய்யும் மக்கள் பிரிவுகள் உண்டு. அவர்களைப் பற்றி நாளை சித்தர் சபை கூடும்போது கூறுகிறேன்.
வாசி யோகம்
மரண காலம் அறிய...
ஒரு மனிதனுக்கு கை, கால், நெற்றி, கன்னம் போன்ற பகுதிகள் திடீரென அடர்ந்து துடித்தால் அவருக்கு மரண காலம் நெருங்கியது என அறிந்துகொள்ள வேண்டும்.
கை மட்டும் துடித்தால் அவருக்கு ஒரு வருடத்தில் மரணம் உண்டாகக்கூடும்.
கால் மட்டும் அடர்ந்து துடித்தால் மூன்றுமாத காலத்தில் மரணம் உண்டாகலாம்.
நெற்றி மட்டும் தொடர்ந்து துடித்தால் மூன்றுமாத காலத்தில் மரணம் உண்டாகலாம்.
கன்னம் மட்டும் இடைவிடாமல் துடித்தால் பத்து நாளில் மரணம் உண்டாகக் கூடும்.
நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள ஒருவருக்கு, எந்தவித விபத்து, நோய்த் தாக்கம் எதுவும் ஏற்படாமல் திடீரென காது மட்டும் கேளாமல் போனால், அவருக்கு ஏழு நாளில் மரணம் உண்டாகக்கூடும்.
உடல் ஆரோக்கியத்துடன் உள்ளவர் களுக்கு திடீரென கண் பார்வை மங்கிப் போனால் ஐந்து நாளில் மரணம் உண்டாகலாம்.
ஒருவருக்கு திடீரென்று மூக்கில் இடைவிடாமல் ரத்தம் வெளியேறினால் மூன்று நாளில் மரணம் உண்டாகலாம்.
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நன்கு பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு, திடீரென வாய் குழறி பேச்சிழந்தால் அவருக்கு இரண்டு நாளில் மரணம் உண்டா கலாம்.
"உத்தார மிப்படியே புராணங் காட்டி
உலகத்தில் பாரதம்போல் கதையுண் டாக்கிக்
கர்த்தாவைத் தானென்று தோணவொட் டாமல்
கபடநாட கமாக யேதும் சேர்த்துச்
சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க் கெல்லாம்
சதியுடனே வெகுதர்க்கம் பொருள்போல் பாடிப்
பத்தாகச் சைவர்க்கும் ஒப்பனையும் செய்து
பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே.'
(அகத்தியர்)
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)