சித்தர்கள் அருளிய வாசி யோகம்! - சித்தர்தாசன் சுந்தர்ஜி

/idhalgal/om/siddhars-are-blessed-siddharthasan-sunderji

"அன்னை யெனுங் கர்ப்ப

மதனில்வந்து மதிலேயிருந்து

நன்னய மாய் பத்து திங்களும்

நானகத்தே யிருந்தேன்

என்ன அதிசயந் தானிவ்

வுலகிலே யமைந்த

உன்னத மெல்லா மறிந்தும்

உண்மையைக் காண்கிலரே.''

(திருவள்ளுவர் ஞானம்)

அகத்தியர்: சித்தர் பெருமக்களே, இன்று உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள்.

தேரையர்: ஆசானே, ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையில் இணைந்து பெண்ணின் கர்ப்பத்தில் குழந்தை உருவாகுமென்று கூறினீர்கள். ஒரு குழந்தை எப்படி உருவாகிறதென்பதையும் கூறுங்கள்.

அகத்தியர்: தேரையரே, மருத்துவ மகாஞானியே, ஒரு பெண் ஆணுடன் உறவுகொண்டு கர்ப்பம் தரிப்பது, அவளுக்கே தெரியாமல் ரகசியமாக நடைபெறும் செயல். தான் கர்ப்பமடைந்தது, அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கு நின்று, உடலி−ல் சில மாற்றங் கள் உண்டாகும்போதுதான் தெரியவரும். இதுவல்லவோ ரகசியம்.

இந்த பூமியில் உருவாகும் உயிரினங்கள் முதன்முத−ல் ஆணின் விதைப்பையில், உண்ணும் உணவின்மூலம் விந்துவாக உருவாகிறது. இதேபோன்றுதான் பெண் உண்ணும் உணவின்மூலம், அவளின் கர்ப்பப்பையில் கருமுட்டைகள் உருவாகின்றன.

ஆணிடம் உருவாகும் விந்தணுக்கள், ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும்போது மிகப்பாதுகாப்பாக- வெளிப்புறத்தி−ருக்கும் மண், நீர், தீ, காற்று, ஒளி, ஒ−, ஆகாயம் ஆகியவற்றின் தொடர்பில்லாமல், வானிலுள்ள கிரகங்களும் அறியமுடியாதபடி ஆண்குறிமூலம் வெளியேறி, பெண்ணின் யோனிமூலம் கர்ப்பக்குழாய் வழியாக, கர்ப்பப்பையிலுள்ள கருமுட்டையுடன் இணைந்து கரு உருவாகிறது.

தேரையர்: தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் தலைவரே, உயிரினங்களின் உடல், உயிர், ஆன்மா பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டு, அவற்றால் இயக்கப்படுகிறதென்று முன்பு கூறினீர்கள். இப்போது விந்தும் கருமுட்டையும் பஞ்சபூதங்களின் தொடர்பு, தாக்கமில்லாமல் கருவாகி சிசு வளர்ச்சியடைகிறதென்று கூறுகிறீர்கள். இதில் கொஞ்சம் சந்தேகம்.

yy

அகத்தியர்: தேரையரே, நான் அன்று கூறியதும் உண்மை; இன்று கூறுவதும் உண்மை. அண்டத்திலுள்ள பஞ்சபூதங்கள் நமது பிண்டத்தில் (உடல்) உள்ளதென்று கூறுகிறோம். ஆணின் உட−லுள்ள பஞ்சபூத சக்திகள் அவன் விந்த உயிரணுக்களில் உள்ளன. பெண்ணிடமுள்ள

"அன்னை யெனுங் கர்ப்ப

மதனில்வந்து மதிலேயிருந்து

நன்னய மாய் பத்து திங்களும்

நானகத்தே யிருந்தேன்

என்ன அதிசயந் தானிவ்

வுலகிலே யமைந்த

உன்னத மெல்லா மறிந்தும்

உண்மையைக் காண்கிலரே.''

(திருவள்ளுவர் ஞானம்)

அகத்தியர்: சித்தர் பெருமக்களே, இன்று உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள்.

தேரையர்: ஆசானே, ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையில் இணைந்து பெண்ணின் கர்ப்பத்தில் குழந்தை உருவாகுமென்று கூறினீர்கள். ஒரு குழந்தை எப்படி உருவாகிறதென்பதையும் கூறுங்கள்.

அகத்தியர்: தேரையரே, மருத்துவ மகாஞானியே, ஒரு பெண் ஆணுடன் உறவுகொண்டு கர்ப்பம் தரிப்பது, அவளுக்கே தெரியாமல் ரகசியமாக நடைபெறும் செயல். தான் கர்ப்பமடைந்தது, அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கு நின்று, உடலி−ல் சில மாற்றங் கள் உண்டாகும்போதுதான் தெரியவரும். இதுவல்லவோ ரகசியம்.

இந்த பூமியில் உருவாகும் உயிரினங்கள் முதன்முத−ல் ஆணின் விதைப்பையில், உண்ணும் உணவின்மூலம் விந்துவாக உருவாகிறது. இதேபோன்றுதான் பெண் உண்ணும் உணவின்மூலம், அவளின் கர்ப்பப்பையில் கருமுட்டைகள் உருவாகின்றன.

ஆணிடம் உருவாகும் விந்தணுக்கள், ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும்போது மிகப்பாதுகாப்பாக- வெளிப்புறத்தி−ருக்கும் மண், நீர், தீ, காற்று, ஒளி, ஒ−, ஆகாயம் ஆகியவற்றின் தொடர்பில்லாமல், வானிலுள்ள கிரகங்களும் அறியமுடியாதபடி ஆண்குறிமூலம் வெளியேறி, பெண்ணின் யோனிமூலம் கர்ப்பக்குழாய் வழியாக, கர்ப்பப்பையிலுள்ள கருமுட்டையுடன் இணைந்து கரு உருவாகிறது.

தேரையர்: தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் தலைவரே, உயிரினங்களின் உடல், உயிர், ஆன்மா பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டு, அவற்றால் இயக்கப்படுகிறதென்று முன்பு கூறினீர்கள். இப்போது விந்தும் கருமுட்டையும் பஞ்சபூதங்களின் தொடர்பு, தாக்கமில்லாமல் கருவாகி சிசு வளர்ச்சியடைகிறதென்று கூறுகிறீர்கள். இதில் கொஞ்சம் சந்தேகம்.

yy

அகத்தியர்: தேரையரே, நான் அன்று கூறியதும் உண்மை; இன்று கூறுவதும் உண்மை. அண்டத்திலுள்ள பஞ்சபூதங்கள் நமது பிண்டத்தில் (உடல்) உள்ளதென்று கூறுகிறோம். ஆணின் உட−லுள்ள பஞ்சபூத சக்திகள் அவன் விந்த உயிரணுக்களில் உள்ளன. பெண்ணிடமுள்ள பஞ்சபூத சக்திகள் அவளது கருமுட்டையிலும் ரத்தத்திலும் உள்ளன. பஞ்சபூத சக்திகள் சிசுவுக்கு நேரடியாக இல்லாமல், தாய்மூலம் மறைமுகமாக இயங்கி சிசுவை வளரச்செய்கிறது. கருத்தரித்தல் ஒரு ரகசியமான செயலாகவே நடைபெறுகிறது. மனிதன் மட்டுமல்ல; எல்லா உயிரினங்களும் இதுபோன்று ரகசியமாகத்தான் கர்ப்பம் தரிக்கின்றன.

(இன்றைய நாளில் செயற்கைமுறையில் கருத்தரித்தல் செய்யும்போது மருத்துவர்கள் ஆணின் விந்தை, வெளிப்புறத்திலுள்ள பஞ்சபூத சக்திகளின் தாக்கம் படாமல் எடுத்து, ஒரு குழாய்மூலம் பெண்ணின் கருமுட்டையுடன் இணைத்துதான் சிசுவை உருவாக்குகிறார்கள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; கால்நடைகள் செயற்கையாகக் கருத்தரித்தல் செய்யும் முறையிலும் இதுபோன்றுதான் செய்கிறார்கள்).

தேரையர்: ஆசானே, ஒரு சிசுவை இந்த பூமியில் உருவாக்கி உயிர்ப்புடன் வாழச்செய்வதில் பெண்ணுக்குதான் பெரும்பங்கு உள்ளதென்பதை உங்கள் பதில் தெளிவுபடுத்தியது. இந்த பூமி பெண்களால்தான் பெருமையடைகிறது.

அகத்தியர்: தேரையரே, பெண்களால் பெருமையென்றும், இந்த பூமி பெண்களால்தான் உயிர்ப்புடன் உள்ளதென்றும் சாதாரணமாகக் கூறிவிட்டீர்கள். பூமியில் ஆண்களுக்கு ஒரு பிறப்புதான். ஆனால் பெண்கள் நான்குமுறை பிறக்கிறார்கள். இதில் ஒரு பிறப்பு தவறிப்போனாலும் இந்த சமுதாயம் அந்தப் பெண்ணை வாழவிடுவதில்லை.

தேரையர்: அகத்தியர் பெருமானே, பெண்களுக்கு மட்டும் நான்கு பிறப்பு களென்று புதிய செய்தியைக் கூறுகிறீர்களே?

அகத்தியர்: ஆண்களுக்கு தாய்- தந்தையிடமிருந்து பிறக்கும் ஒரு பிறப்பு தான். ஆனால் பெண்கள் இயற்கையின் செயலால் நான்குமுறை பிறக்கிறார்கள். தாய்- தந்தை இணைவால் குழந்தையாகப் பிறப்பது முதல் பிறப்பு; வளர்ந்து மலர்ந்து பருவமடைவது இரண்டாவது பிறப்பு; தாய்- தந்தையைவிட்டுப் பிரிந்து, ஒரு ஆணைத் திருமணம் செய்துகொண்டு தனக்கென்று ஒரு வாழ்க்கையைத் தொடங்குவது மூன்றாவது பிறப்பு; கணவனுடன் இணைந்து கருத்தரித்து, கர்ப்பத்தில் சிசுவளர்த்து, அதனை நல்லமுறையில் பெற்றெடுத்து அவள் உயிர்பிழைத்து வருவது நான்காவது பிறப்பு.

ஒரு பெண்ணின் வாழ்வில் மூன்றா வது பிறப்பான திருமணம் நடைபெறா மல் போய்விட்டாலும், திருமணம் நடந்தும் கணவனின் வம்சம் விளங்க ஒரு குழந்தையைப் பெற்றுத்தர முடியாமல் போய்விட்டாலும் அவளின் குடும்பத்தாரும், உறவுகளும், சமுதாய மக்களும் அவளுக்கு மலடி என்று பெயர் சூட்டி, சுபகாரியம், மங்கள காரியம் என்று கூறிக்கொள்ளும் நிகழ்ச்சிகளில், திருமணமாகாத பெண்களையும், குழந்தைபெறாத பெண்களையும் ஒதுக்கிவைத்து, அப் பெண்களை தினம் தினம் கொல்கின்றனர். இந்த பூமியையே உயிருடன் வாழவைக்கும் இந்த பெண்களின் உயிர் இந்த சமுதாயத்தால் மதித்துக் காப்பாற்றப்படுவதில்லை; பெருமைப்படுத்தப்படுவதில்லை.

ஒரு பெண் குழந்தை பெறமுடியாமல் போவதற்குப் பெண் மட்டும் காரணமல்ல. ஆண்தான் முக்கிய காரணம். ஆணின் விந்தணுக்கள் வீரியமில்லாது போனால் ஒரு பெண் எப்படி கர்ப்பம் தரிக்க முடியும்? ஆண் உண்ணும் உணவினால், அவனுக்கு விந்தணுக்கள் உருவாகி அவை 27 நட்சத்திர நாட்கள் ஆணிடம் வாசம்செய்து வளர்ந்து, ஒரு குழந்தை முதன்முத−ல் உருவாவது ஆணிடம்தான்.

இந்த உண்மையை மறைத்து, பெண்களைக் காரணம் கூறி, பொய்யான பல சடங்கு, சம்பிரதாயம், சட்டதிட்டங்களைக் கூறியும் எழுதியும் வைத்துவிட்டார்கள்.

தேரையர்: ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் எல்லா நாட்களிலும் கர்ப்பம் உண்டாகுமா?

அகத்தியர்: ஆணும் பெண்ணும் உறவுகொள்ளும் எல்லா நாட்களிலும் பெண்ணுக்கு கர்ப்பம் உண்டாகாது. ஒவ்வொரு மாதத்திலும், குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே கரு கூடும். இந்த நாட்கள் "கர்ப்பகால நாட்கள்' ஆகும். ஒரு பெண் கர்ப்பகாலம், மசக்கை காலம், பேறு காலம் என்ற மூன்று பருவங்களை அனுபவித்துதான் குழந்தையைப் பெறமுடியும். இனி கர்ப்ப கால நாட்கள் பற்றிக் கூறுகிறேன்.

கர்ப்ப காலம்

ஒரு பெண் மாதந்தோறும் உண்டாகும் மாதவிடாய்க்கால நாட்களான நான்கு நாட்களும் தாம்பத்திய உறவு கொள்ளக்கூடாது. இந்த நாட்களில் உறவுகொண்டால் பெண் கர்ப்பம் தரிக்கமாட்டாள்.

பெண் மாதவிடாயான நான்கு நாட்கள் முடிந்து, தலைக்குளித்தபின் வரும் 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ஆகிய பன்னிரண்டு நாட்களும் பெண் கருத்தரிக்கும் கர்ப்பகால நாட்களாகும்.

ஒரு பெண் கருத்தரித்து குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்றால் இந்த பன்னிரண்டு நாட்களில் மட்டும் ஆணுடன் உறவுகொண்டால் மட்டுமே கர்ப்பமடையமுடியும். இதற்கு மேற்பட்ட நாட்களில் உறவுகொண்டால் கர்ப்பம் உண்டாகாது. இதற்குரிய காரணத்தையும் கூறுகிறேன்.

பெண் மாதவிலக்கான நாள்முதல் பதினாறு நாட்கள்வரை, பெண்ணின் கர்ப்பப்பையின் வாய் திறந்திருக்கும். பதினேழாம் நாள்முதல் கர்ப்பப்பையின் வாய் மூடிக்கொள்ளும். மறுபடியும் பெண் மாதவிடாய் ஆகும் காலத்தில்தான் திறக்கும். கர்ப்பப்பை வாய் திறந்திருக்கும் இந்த பன்னிரண்டு நாட்களில் மட்டும்தான் கருமுட்டைகள் நாள்தோறும் புதிதுபுதிதாக உருவாகிக்கொண்டிருக்கும்.

இனி, பெண்ணின் கர்ப்பத்தில் ஆண்குழந்தை, பெண்குழந்தை உருவாகும் கால நாட்களைப் பற்றிக் கூறுகிறேன்.

ஆண் கரு நாட்கள்

பெண் மாதவிடாய் முடிந்த 6, 8, 10, 12, 14, 16 ஆகிய இரட்டைப்படை ஆறு நாட்களில் கர்ப்பம் தரித்தால் அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.

வாசியோக முறைப்படி, ஆண்- பெண் உறவுகொள்ளும்போது, ஆண்- பெண் இருவரின் மூக்கின் வலப்பக்கத் துவாரத்தில் மட்டும் மூச்சுக்காற்று சூரியகலையாக (வடகலை) நடக்கும்போது பெண் கருதரித்தால் ஆண் குழந்தை பிறக்கும்.

தாம்பத்திய சமயத்தில், ஆணின் வலப்பக்க நாசி துவாரத்தில் மட்டும் மூச்சுக்காற்று ஓடும்போது பெண்ணிடம் உறவுகொண்டால் விந்து வெளியேற நீண்டநேரமாகும். போகம் நீடிக்கும்.

பெண் கரு நாட்கள்

பெண் மாதவிடாய் முடிந்த 5, 7, 9, 11, 13, 15 ஆகிய ஒற்றைப்படை ஆறு நாட்களிலும் கர்ப்பம் தரித்தால் பெண் குழந்தை பிறக்கும்.

வாசியோக முறையில், ஆண்- பெண் உறவுகொள்ளும்போது, இருவரின் மூக்கின் இடப்பக்க துவாரத்தில் மட்டும் சந்திர கலையாக (இடகலை) சுவாசம் நடந்தால், அந்த கர்ப்பத்தின்மூலம் பெண் குழந்தை பிறக்கும்.

(ஒவ்வொரு நாளும் மூச்சுக்காற்று, வடகலை, இடகலையாக, எந்ததெந்த நாட்களில் எப்போது நடைபெறும் என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். அதனைப் படித்து அறிந்துகொள்ளவும்).

ஆண் யோகம்

பெண் மாதவிலக்கான 6, 8-ஆவது நாளில் கர்ப்பம் தரித்தால், யோகம் குறைந்த ஆண் குழந்தை பிறக்கும்.

10-ஆவது நாளில் கர்ப்பம் தரித்தால், உயர்ந்த வாழ்வையடையும் மகன் பிறப்பான்.

12-ஆவது நாளில் கருத்தரித்துப் பிறக் கும் பிள்ளை ஞானம், புத்தி, நன்றியுள்ள நற்குணத்துடன் பிறப்பான்.

14-ஆவது நாள் கருத்தரித்தால், வித்தை, விவேகம், சத்தியம், புலனடக்கம், எல்லாரையும் காப்பாற்றும் சகல சௌபாக்கியமுள்ள மகன் பிறப்பான்.

பெண் யோகம்

பெண் மாதவிலக்கான 5, 7-ஆவது நாட்களில் கர்ப்பம் உண்டானால், யோகம் குறைந்த பெண் பிறக்கும்.

9-ஆவது நாளில் கருத்தரித்தால், சௌபாக்கியமுள்ள பெண் பிறக்கும்.

11-ஆவது நாளில் கருத்தரித்தால், நல்ல குணமில்லாத, பொறாமை குணமுள்ள பெண் பிறக்கும்.

13-ஆவது நாளில் கர்ப்பம் உண்டானால், பல ஆடவரை விரும்பிச்சேரும் பெண் பிறப் பாள்.

15-ஆவது நாளில் கர்ப்பம் தரித்துப் பிறக் கும் பெண்குழந்தை, உயர்ந்த இடத்தில் திருமணம் புரிந்து, அநேக சுகங்களை அனுபவித்து, சௌபாக்கியவதியாக வாழ்வாள்.

(குழந்தை பாக்கியம் தடைப்பட்டிருக்கும் பெண்கள், இந்த நாட்களை கவனமாக கவனித்து, கணவனுடன்கூடி பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த கர்ப்பகால நாட்களில் கணவன்- மனைவி இருவரும் கோவில், குளம், விரதம், பூஜை என காரணம்கூறிப் பிரிந்திருக்கக்கூடாது. கூடி சுகம் அனுபவித்து புத்திரபாக்கியம் அடைந்துகொள்ளவேண்டும்.

திருமணம் முடிந்த அடுத்த வருடமே குழந்தை பிறக்கவேண்டுமென விரும்புபவர்கள், பெண் மாதவிலக்கு முடிந்த இந்த கர்ப்பகால நாட்களான 12 நாளில் திருமணம் செய்து உறவுகொண்டால், அந்த மாதமே கருத்தரித்து, அதே வருடத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாள்.)

அகத்தியர்: தேரையரே, நாளை தமிழ்ச் சபையில் உங்களின் மற்ற கேள்விகளுக்கு விளக்கம் கூறுகிறேன். இன்று சபையை முடித்துக்கொள்வோம்.

"ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவொன் றேயாம்

ஆனாலும் பெண்ணுக்கு பேதைகுண மென்பார்

வீணுக்கே யெடுத்தசன் மமனந்த கோடி

விவேகமுத்தி யடைந்த வர்கள் பெண்ணிலுண்டு

உணவினைத் தேடியுண்டே உறங்கிச் செத்த

உளுத்தருண்டு ஆணிலே மனந்தங் கோடி

தாணுக்கே யேகசரா சரந்தாம் நெஞ்சே

சற்குருமார் களுக்கு மப்படியே சார்ந்துபாரே.'

(சைவ சித்தாந்தம்)

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)

om010120
இதையும் படியுங்கள்
Subscribe