உண்மையை உரைக்கும் ஓலைச்சுவடிகள்! புதிய தொடர்!
வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் விதமாகத் தங்களின் வாழ்க்கைமுறையைத் தொடர்ந்து சீர்படுத்தி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அத்தனை சிறப்பானதாக இருந்திருக்கிறது. சாதிகள் என்பதே இல்லாமல், எந்தத் தொழிலையும் யார் வேண்டுமானாலும், சூழ்நிலைக்கேற்ப எந்த இடத்திலும் பார்க்கலாம் என்றே வாழ்ந்திருக்கின்றனர். ஒரு ஊரில் நெசவுத்தொழில் செய்தவரின் வாரிசுகள் இன்னொரு ஊரில் சலவைத்தொழில் செய்வார்கள். ஒரு ஊரில் முடி திருத்தும் தொழிலைச் செய்வார்கள். அவர்களின் சந்ததியினர் இன்னொரு ஊரில் வேளாண் தொழில் பார்ப்பார்கள். அப்போது, "நீ இன்ன சாதி! நீ பார்க்க வேண்டிய தொழில் இதுதான்!'’ என்று யாரும் யார் மீதும் முத்திரை குத்தியதில்லை. தொழில் எதுவானாலும் உயர்வு, தாழ்வு பார்க்காமல், விரும்பிய தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். காலப்போக்கில், உயரிய அந்த நாகரிகத்தைக் கடைப்பிடிக்க நாம் தவறிவிட்டோம். அதனால், நாம் இழந்து வருவது எத்தனை எத்தனையோ!
சற்று பின்னோக்கிப் பயணித்தால், புதைக்கப்பட்ட அந்த நாகரிகத்தைத் தோண்டி எடுக்க முடியும். குறிப்பாக, சித்தர்கள் வடித்துள்ள ஓலைச்சுவடிகளில் யோகம், ஞானம், வைத்தியம், காயகற்பம், வர்மம் என அரிய கலைகள் பாடல்களாகவும், குறிப்புக்களாகவும் உள்ளன. பல ஓலைச்சுவடிகள், கலாச்சாரப் பதிவுகளாகவும், அறிவியல் சான்றுகளாகவும் இருக்கின்றன.
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகில் உள்ளது கிண்ணிமங்கலம். இங்குள்ள ஏகநாதர் கோவிலில், சித்தர்கள் மூவரின் ஜீவசமாதிகள் உள்ளன.
புலிப்பாணி சித்தர் சீடரிடம் பயிற்சி!
சில ஆயிரம் வருடங்களுக்கு முன், திருப்பூலாநந்தீஸ்வரபுரத்தில் (இன்றைய சின்னமனூர்) சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர் அருளானந்தம். அப்போது, பழனி போகரின் சீடர் புலிப்பாணியின் இரண்டாவது சீடரிடம் பயிற்சி பெற்ற 17 பேர், மானசரோவர் அனுப்பப்பட்டனர்.
ரிஷிகளின் வழியில் பயிற்சி பெற்ற அச்சீடர்களில் அருளானந்தம் மட்டும் சதுரகிரி யமவனத்தில், மணிப்புறா வாழும் பாறையில் தவம் செய்தார். அதன்பிறகு நாகமலை நடுப்பகுதியில் காகபு
உண்மையை உரைக்கும் ஓலைச்சுவடிகள்! புதிய தொடர்!
வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் விதமாகத் தங்களின் வாழ்க்கைமுறையைத் தொடர்ந்து சீர்படுத்தி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அத்தனை சிறப்பானதாக இருந்திருக்கிறது. சாதிகள் என்பதே இல்லாமல், எந்தத் தொழிலையும் யார் வேண்டுமானாலும், சூழ்நிலைக்கேற்ப எந்த இடத்திலும் பார்க்கலாம் என்றே வாழ்ந்திருக்கின்றனர். ஒரு ஊரில் நெசவுத்தொழில் செய்தவரின் வாரிசுகள் இன்னொரு ஊரில் சலவைத்தொழில் செய்வார்கள். ஒரு ஊரில் முடி திருத்தும் தொழிலைச் செய்வார்கள். அவர்களின் சந்ததியினர் இன்னொரு ஊரில் வேளாண் தொழில் பார்ப்பார்கள். அப்போது, "நீ இன்ன சாதி! நீ பார்க்க வேண்டிய தொழில் இதுதான்!'’ என்று யாரும் யார் மீதும் முத்திரை குத்தியதில்லை. தொழில் எதுவானாலும் உயர்வு, தாழ்வு பார்க்காமல், விரும்பிய தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். காலப்போக்கில், உயரிய அந்த நாகரிகத்தைக் கடைப்பிடிக்க நாம் தவறிவிட்டோம். அதனால், நாம் இழந்து வருவது எத்தனை எத்தனையோ!
சற்று பின்னோக்கிப் பயணித்தால், புதைக்கப்பட்ட அந்த நாகரிகத்தைத் தோண்டி எடுக்க முடியும். குறிப்பாக, சித்தர்கள் வடித்துள்ள ஓலைச்சுவடிகளில் யோகம், ஞானம், வைத்தியம், காயகற்பம், வர்மம் என அரிய கலைகள் பாடல்களாகவும், குறிப்புக்களாகவும் உள்ளன. பல ஓலைச்சுவடிகள், கலாச்சாரப் பதிவுகளாகவும், அறிவியல் சான்றுகளாகவும் இருக்கின்றன.
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகில் உள்ளது கிண்ணிமங்கலம். இங்குள்ள ஏகநாதர் கோவிலில், சித்தர்கள் மூவரின் ஜீவசமாதிகள் உள்ளன.
புலிப்பாணி சித்தர் சீடரிடம் பயிற்சி!
சில ஆயிரம் வருடங்களுக்கு முன், திருப்பூலாநந்தீஸ்வரபுரத்தில் (இன்றைய சின்னமனூர்) சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர் அருளானந்தம். அப்போது, பழனி போகரின் சீடர் புலிப்பாணியின் இரண்டாவது சீடரிடம் பயிற்சி பெற்ற 17 பேர், மானசரோவர் அனுப்பப்பட்டனர்.
ரிஷிகளின் வழியில் பயிற்சி பெற்ற அச்சீடர்களில் அருளானந்தம் மட்டும் சதுரகிரி யமவனத்தில், மணிப்புறா வாழும் பாறையில் தவம் செய்தார். அதன்பிறகு நாகமலை நடுப்பகுதியில் காகபுஜண்டர் சித்தர் தவம் செய்ததாகக் கூறப்படும் குகை ஒன்றில் இறுதித் தவம் செய்தார். அந்த அருளானந்தமே பின்னாளில் சத்குரு என்றழைக்கப்பட்டு, கிண்ணிமங்கலத்தில் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்குக் கீழ் ஜீவசமாதி அடைந்தார். அவருடைய சீடர்களான மாணிக்கவாசக தம்பிரான் கன்னி மூலையிலும், சபாபதி தம்பிரான் வாயு மூலையிலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.
வித்தைகள் கற்றுத்தரும் கிண்ணிமடம்!
ஏகநாதர் கோவில் மண்டபத்தின்கீழ் நவபாஷாணக் கிண்ணி உள்ளது. கோவிலைச் சுற்றி 16 சீடர்களும் ஆனந்தவல்லி அம்பாளின் 16 கோணங்களில் அமைந்துள்ளனர். இவர்களில் மூன்றாவது சீடர்தான் இக்குருகுல மடத்தை உருவாக்கினார். இவர் திருமணம் செய்து, தன்னுடைய சுற்றத்தாருக்காக ஊரை உருவாக்கி கிண்ணிமங்கலம் என்றும், இம்மடத்தினை கிண்ணிமடம் எனவும் பெயர் சூட்டி, 117-ஆவது வயதில் சமாதி அடைந்தார். இவருடைய வாரிசுகளின் வழிவந்த குருவழித் தொண்டராக இருக்கிறார் மு. அருளானந்தம். இங்கே மடத்தின் பாடத்திட்டங்களாக, 16 கலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து வித்தைகளும் இலவசமாக, வெளிப்படையாக, இரண்டு தசமி திதிகளிலும் கற்றுத் தரப்படுகின்றன.
அடியார் அருளானந்தம் நம்மிடம் ""ஓலைச்சுவடிகளில், முன்னோரின் கூற்றுக் களில் பலவும் மறைக்கப்பட்டுவிட்டன. இன்றைய தலைமுறையினர் நகல் எடுக்க இயலாத நாகரிகமாக அவை விளங்குகின்றன.'' என்று அருவியாய்க் கொட்ட, இத்தொடரில் அவை தெறித்து விழுகின்றன.
ஆற்று சமவெளிப்பகுதிகளை உலக நாகரிகத்தின் தொட்டில் என்று வரலாறு கூறுகிறது. வேட்டையாடி பசியைத் தீர்த்துக்கொண்ட மனித இனம் நாடோடியாகத் திரிந்தபோது, நீர்வளம் மிக்க இடங்களைக் கடந்து சென்றது. அப்போது இயற்கையால் கவரப்பட்டு, தங்கள் வாரிசுகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கினர்.
ஆற்றங்கரைகளில் தங்குமிடங்களாக குடிசைகளை அமைத்துக்கொண்டனர்.
இயற்கை வளங்களை முறைப்படி பயன்படுத்தக் கற்றுக்கொண்டனர். உணவுத் தேவைகளுக்காக, ஆண்கள் வெளியில் செல்ல வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அரணாய்த் திகழ்ந்தார்கள் பெண்கள். கடந்த காலத்தில், தாங்கள் சந்தித்த இடர்பாடுகளை விவரித்து, அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தந்தனர். பெரும் மழைக் காலங்களில், காட்டாற்று வெள்ளத்தை முறைப்படுத்தும் ஆளுமைத் திறனைக் கற்றுத் தந்தனர். இதுபோல், பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் "குடும்பர்' என்று அழைக்கப்பட்டனர். இம்மக்களால் மருத நிலப்பகுதி செழிப்புற்றது. பிற நிலப்பகுதிகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் போது, அங்குள்ள மக்களை அழைத்து, தாங்கள் வசிக்கும் இடங்களில் குடியேற வைத்து, அவர்களை வாழ்வித்தனர். அதனால், அந்தப் பகுதி ‘"குடிச்சேரி'’ ஆனது.
மக்களைக் காக்கும் ராக்காயி!
குடிச்சேரி பகுதிக்கு மேற்கு மற்றும் தெற்கு திசைகளிலிருந்து வந்தவர்கள் சகோதரர் முறை கொண்டவராகக் கருதப்பட்டனர். கிழக்கு மற்றும் வடக்கு திசைகளிலிருந்து வருபவர்களிடமிருந்து பெண் எடுப்பது, பெண் கொடுப்பது போன்ற சம்பந்த வழிமுறையை ஏற்படுத்தி, உறவு களை மேம்படுத்தினர். முதன்முதலில் குடியேற்றப்பகுதியைத் தேர்ந்தெடுத்து குடிவந்த பெண்ணை ஆதித்தாய் என்றனர்.
சேரிப்பகுதி பெண்களுக்கு அனைத்து ஆலோசனைகளையும் அவள் வழங்கி வந்ததால், ‘"ஆய்' என்றும் ‘"ஆயா' என்றும் அன்புடன் அழைக்கப்பட்டாள். இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் காத்ததால், "இராக்காயி' என்றும், தன்னைச் சார்ந்திருக்கும் பெண்களை சிப்பிக்குள் முத்துபோல பாதுகாத்ததால், "முத்து ராக்காயி' என்றும் போற்றப்பட்டாள். இறந்தபிறகு, சிறு தெய்வமாக அவளை வணங்கினர்.
சீர்திருத்தப்பட்ட கழனிகளும், வாய்க்கால்களும் வேளாண் உற்பத்திப் பெருக்கத்துக்குத் துணைநின்றன. மருதநில மக்கள் தங்களின் ஓய்வு நேரங்களில், கூரைக் குடில்களை, செங்கல் மற்றும் மண்ணாலான கட்டடங்களாக உருமாற்றினர். தானிய சேமிப்புக் கிடங்குகளையும் அமைத்தனர். மேலும், தங்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற் காக, கட்டடக்கலை, உலோக அச்சு வார்த்தல், தச்சுக்கலை, சிற்பக்கலை, நெசவுத் தொழில், மண்பானை வனைதல் போன்றவற்றைக் கற்றனர்.
வாழ்வைச் செழுமை யூட்டவும், புதுப்பித்துக் கொள்ளவும் இயல், இசை, நாடகங்களில் லயித்தனர்.
தகுதி உள்ளவனே தலைவன்!
திட்டமிடப்பட்ட, அழகிய தூய நகர மாகத் திகழ்ந்தது குடிச்சேரி. அங்குள்ள மக்கள் சமத்துவமாக, இயற்கைசார் குண நலன்களுடன் வாழ்வதற்கு சிறந்த வாழ்வியல் வழிகாட்டியாகவும், நெறிப்படுத்தும் குருவாகவும் திகழ்ந்தார்கள் ஆதித்தாய் குடும்பத்தினர்.
பிற வேட்டைக்குழுவினரிடமிருந்து தம் மக்களைப் பாதுகாப்பதற்கு, கோட்டைகள், பலம் வாய்ந்த கதவுகளைக் கொண்ட வாயிலுடன் கூடிய கொத்தளங்களை அமைத்தனர். இந்தப் பாதுகாப்பு அரணுக்கு நடுவில் அமைந்த வாழ்வியல் மனையே அரண்மனை ஆகும். மூத்தகுடியில் பிறந்த குரு, அரண்மனைகளைப் பாதுகாப்பதற்கான பயிற்சிகளை அளித்தார். குருவானவர் தனது அனுபவ அறிவால், இயற்கைச் சூழலுக்கேற்ப, ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஆண் பிள்ளைகளுக்கு கற்றுத் தந்தார். நற்குணமும் பேராண்மையும் ஒருங்கே அமையப்பெற்ற ஆணை அப்பகுதியின் தலைவன் ஆக்கினார். உடன் பயிற்சி பெற்றவர்களை தலைவனுக்கு உறுதுணை யாக இயங்கச் செய்தார்.
உழைத்தால் உணவு தேடிவரும்!
நகருக்கு அப்பால், சிறிய செயற்கை நீர்த்தடாகங்களை உருவாக்கினார்கள். அந்த ஊரணிப் பகுதியில் நெசவுத் தொழில், முடி திருத்தம் செய்தல் மற்றும் உடைகளைத் தூய்மைப்படுத்துதல் போன்ற வேலைகளை முறைப்படுத்தினர். இந்த வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி உழைத்த மக்களுக்குத் தேவையான உணவுகள் பிற வீடுகளிலிருந்து தரப்பட்டன.
பெண்ணியக் குறைபாடுகளைக் கண்டறிந்து களைதல்!
பெண்ணியத்துக்கு உரிய முக்கியத்துவம் அளித்த காலம் அது. பிறந்தது முதல் வளரிளம் பெண்ணாகப் பரிணமிக்கும் வரையிலும், பராமரிப்பு அறிவுரைகள் செம்மையாய் வழங்கப்பட்டன. பருவகால மாற்றங்கள் காணும் ஆடி மற்றும் மாசி மாதங்களில், குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில், நகரிலுள்ள வளரிளம் பெண்களுக்கு அனுபவம் மிக்க மூதாட்டியரால், நடுயாம வேளையில் உடற்பரிசோதனைகளும், இயற்கை மருத்துவ சிகிச்சைகளும், பண்பாடு நிறைந்த வழிபாட்டு முறையில் வழங்கப்பட்டன. ஏன் இந்த வழிபாடுகள் என்றால், மார்பகப் புற்றுநோய் மற்றும் பெண்ணியத்தன்மையின் சிறப்புக்களை இழப்பது போன்ற இருபெரும் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்காகக் கடைப்பிடிக்கப்பட்டன.
பெண்ணிடம் ஆண்மைத்தன்மை மிகுந்து காணப்படுவதும், பூப்படையாதிருப்பதும் அந்தக் காலக்கட்டத்தில் பெண்ணியக் குறைபாடுகளாகக் கருதப்பட்டன. ஆண்மைத்தன்மை அதிகம் உள்ள பெண்ணை ‘ஔவை’ என்றும், குறிப்பிட்ட வயது கடந்தும் பூப்படையாமல் இருக்கும் பெண்ணை மடவை’ என்றும் குறிப்பிட்டனர். இக்குறைகள் வராமல் இருப்பதற்கு புங்க இலை, புளிய இலை, பொன்னாவரை போன்றவை அவ்வழிபாட்டில் பயன்படுத்தப்பட்டன. அத்தகைய பெண்களுக்கு, அனுபவத்தில் சிறந்து விளங்கும் மூதாட்டியரால், உயர்ந்த நாகரிகப் பண்பாட்டியல் உணர்த்தப்பட்டது. மேலும், திட்டமிடுதல் மற்றும் பகிர்ந்தளித்தலை உணர்த்தும் பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளையும் பெண்களுக்கு கற்றுத் தந்தனர்.
மடவைப் பெண்களின் உயிர்த் தியாகம்!
ஔவைப் பெண்களை, நீதி நெறி மிக்க வாழ்வியல் கோட்பாடுகளைப் பிறருக்குக் கற்றுத்தரும் சிறந்த கல்வியாளர்களாகவும், பாடல் புனைபவர்களாகவும் உருவாக்கி உயர்த்தினார்கள். மடவைப் பெண்களுக்கோ, கடுமையான போர்ப்பயிற்சி உத்திகள் கற்றுத்தரப்பட்டன. போர்க்களத்தில் எதிரிகளை வேட்டையாடும் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், சிறு குடங் களில் போதை (ஊக்க) மருந்துகளை, போர்க்களத்திற்கே கொண்டுபோய்க் கொடுக்கும் துணிச்சலான பணியில் மடவைப் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மடவைப் பெண் போரில் வீரமரணம் அடைய நேரிட்டால், அவளுக்காக நடுகல் நடப்படும். "வீரத்தின் விளைநிலமாய் விளங்கும் மருதநில மக்களைக் காக்கும் ‘சிறந்த தாய் நீயே'’ என்னும் பொருள்பட, ‘"மருதாயி'’ என பெயரிட்டு அவளை வணங்கினார்கள். இவ்வாறு நடுகல்லில் செதுக்கப்பட்ட சிலைகளில் உள்ளவர்கள், தந்தை- மகள், அண்ணன் - தங்கை, மாமன்- மருமகள் உறவுமுறை உள்ளவர்களாகவே இருப்பார்கள். கணவன்- மனைவியாக நிச்சயம் இருக்க மாட்டார்கள் என்பதை தொல்லியலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உறவுகளுக்காக உயிர்நீத்த மடவைப் பெண்களின் தியாகத்தை, அந்த உயரிய நாகரிகத்தை நாம் மறக்கலாகாது.
மேற்சொன்ன இரு குறைபாடுகளற்ற, உடல்நலம் சீராக உள்ள வளரிளம் பெண்ணை வள்ளி என்றும், உயர்ந்த குணநலன்கள் கொண்ட பெண்ணை ஆனந்தவள்ளி என்றும் கௌரவித்தார்கள். வள்ளல் என்பதன் பெண்பால்தான் வள்ளி ஆகும்.
ஒரு பெண், தன் அங்கத்தை எவ்விதம் ஆளுமை செய்யவேண்டும்?