மகா சிவராத்திரி 26-2-2025
வருடா வருடம், மாசி மாதம், கிருஷ்ண பட்ச சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. அன்றிரவு முழுவதும் நான்கு ஜாம பூஜையாக கொண்டாடப்படும்.
பரமேஸ்வரனுக்கு 64 மூர்த்திகள் உண்டு. விருஷா பாரூடர், அர்த்த நாரீஸ்வரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர். தட்சிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர், பிக்ஷாடனர், ஊர்த்துவதாண்டவர், ஜலந்த ராஸுரஸம்ஹாரர், கால ஸம்ஹாரர் என இம்மாதிரி அறுபத்து நான்கு மூர்த்திகள் உண்டு. இதில் ஒன்றுதான் லிங்கோத்பவ மூர்த்தி ஆகும்.
இது எல்லா சிவன் கோவில் கர்ப்ப கிரகஹத்தின் பின்புறம் காணப்படுகிறது. அதில் லிங்கத்துக்குள் ஒரு திவ்ய மூர்த்தி யிருக்கும். அதன் ஜடா மருடம் லிங்க வட்டத் துக்குள் முடியாமல் இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. இந்த மூர்த்திக்கு கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும். மேலே ஹம்ஸ ரூபத்தில் ஒரு மூர்த்தி இருக்கும்.
இந்த மூர்த்தியை லிங்கோத்பவ மூர்த்தி என்பர். இதன் தாத்பார்யம் என்ன? ஜோதி லிங்கமாக நின்ற சிவனின் பாதத்தை பார்க்க, விஷ்ணு வராஹ ரூபம் எடுத்து, பூமியை கடைந்து கொண்டே போய் தேடினார். பிரம்
மகா சிவராத்திரி 26-2-2025
வருடா வருடம், மாசி மாதம், கிருஷ்ண பட்ச சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. அன்றிரவு முழுவதும் நான்கு ஜாம பூஜையாக கொண்டாடப்படும்.
பரமேஸ்வரனுக்கு 64 மூர்த்திகள் உண்டு. விருஷா பாரூடர், அர்த்த நாரீஸ்வரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர். தட்சிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர், பிக்ஷாடனர், ஊர்த்துவதாண்டவர், ஜலந்த ராஸுரஸம்ஹாரர், கால ஸம்ஹாரர் என இம்மாதிரி அறுபத்து நான்கு மூர்த்திகள் உண்டு. இதில் ஒன்றுதான் லிங்கோத்பவ மூர்த்தி ஆகும்.
இது எல்லா சிவன் கோவில் கர்ப்ப கிரகஹத்தின் பின்புறம் காணப்படுகிறது. அதில் லிங்கத்துக்குள் ஒரு திவ்ய மூர்த்தி யிருக்கும். அதன் ஜடா மருடம் லிங்க வட்டத் துக்குள் முடியாமல் இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. இந்த மூர்த்திக்கு கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும். மேலே ஹம்ஸ ரூபத்தில் ஒரு மூர்த்தி இருக்கும்.
இந்த மூர்த்தியை லிங்கோத்பவ மூர்த்தி என்பர். இதன் தாத்பார்யம் என்ன? ஜோதி லிங்கமாக நின்ற சிவனின் பாதத்தை பார்க்க, விஷ்ணு வராஹ ரூபம் எடுத்து, பூமியை கடைந்து கொண்டே போய் தேடினார். பிரம்மா, பட்சியாகி, ஹம்ஸ ரூபம் எடுத்து, மேலே மேலே பறந்து, சிவனின் முடியைத் தேடினார். ஆனால் இருவருக்கும் சிவனின் அடியும் முடியும் காணக் கிடைக்கவில்லை.
இவ்விதம் சிவன் ஜ்யோதி ஸ்வருபமாக ஆவிர்பவித்த இரவே, சிவராத்திரி ஆகும்.
மேற்கண்ட புராண வரலாறு, இன்னொரு விஷயமும் கூறுகிறது. அதாவது இறைவனை அகங்காரத் தோடு தேடினால் அகப்பட மாட்டார். அகங்காரமின்றி அன் போடு பக்தி செய்து உருகினால் அவர் நமக்கு அகப்பட்டு, அனுக்கிரகமும் செய்வார். அன்பினால் திருப்தி அடையவர். என்பதால், சிவனுக்கு ஆசு தோஷி என்று பெயர் இருக்கிறது.
லிங்கம் ஏன் வட்ட வடிவமாக இன்றி, நீள் வட்டமாக உள்ளது. பிரபஞ்சமே நீள் வட்டமாகத்தான் இருக்கிறது. சூரிய மண்டல மும், கிரகங்களின் சுற்றும் நீள் வட்டமாகவே உள்ளது. இதனால்தான் சிவலிங்கமும் நீள் வட்டமாக உள்ளது.
சிவராத்திரியின் காரணம் என மேற்கண்ட புராணக்கதையை மகாபெரியவர் கூறியுள்ளார். இது தவிரவும், மேலும் சில செய்தி களில், சிவராத்திரி பற்றி கூறப்பட்டுள்ளது.
ஒரு வேடன், வேட்டையாட கானகத்துக்குள் சென்றுவிட்டான். இரவு ஆனவுடன் ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். அவர் ஏறி அமர்ந்தது ஒரு வில்வ மரம். அதனடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அவன் கண்ணுக்கு தெரிய வில்லை. இரவு முழுவதும், அந்த இலைகளை பறித்து, கீழே போட, அது நேராக அந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது. மேலும் அவன் கையில் வைத்திருந்த, தண்ணீர் குடுவையிலுள்ள நீரும், லிங்கம்மீது தெளித்தது. இவ்விதம், அவன் ஒன்றுமே தெரியாமல் இரவு முழுவ தும் லிங்கத்துக்கு வில்வ அபிஷேகம் செய்ததால், அந்த புண்ணியம் கிடைத்தது. அந்த புண்ணியத்தின் பயனாக, மறுபிறவியில் குகனாக பிறந்து, இராமரின் உடன் பிறவா சகோதரன் ஆனான்.
இன்னொரு செய்திப்படி, பிரளய காலத்தில் உயிர்கள் அனைத்தும் அழிந்துவிட்டது. உயிர்களை தோற்றுவிக்கும் பொருட்டு, அம்பிகை சிவனுக்கு நான்கு ஜாம பூஜை செய்ததாகவும், அதுவே சிவராத்திரி ஆனதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு கதைப்படி, அம்பிகை, விளையாட்டாக, சிவனின் கண்களை பொத்திவிட, அன்றுதான் சிவராத்திரி எனவும் கூறப்படுகிறது.
சிவராத்திரி வகைகள்
சிவராத்திரியை ஐந்து விதமாக கொண்டாடுகிறார்கள். நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி எனப்படும்.
சிவராத்திரி கொண்டாடும்விதம்
சிவராத்திரியன்று குளித்து, வீட்டில் பூஜை செய்யவேண்டும். பெரும் பாலோர் ஒருபொழுது விரதமாக எடுத்துக் கொள்வர். சிவராத்திரியின் விசேஷம், இரவு முழுவதும் கண் விழிக்கவேண்டும் என்பதுதான்.
கோவில்களில் நான்குகால பூஜை நடக்கும். இதனை ஜாம பூஜை என்பர்.
முதல் ஜாமம்: சிவனை சோமாஸ்கந்தராக வழிபடுவர். அபிஷேகம் பஞ்சகவ்யமாக அமையும். நிவேதனம் சர்க்கரைப் பொங்கல் ஆகும்.
இரண்டாம் ஜாமம்: சிவனை தென்முக கடவுளாக வணங்குவர். அபிஷேகம் பஞ்சாமிர்தம் ஆகும். நிவேதனம் பாயசம் ஆகும்.
மூன்றாம் ஜாமம்: சிவனை லிங்கோத்பவர் என வழிபடுவர். அபிஷேகம் தேன் ஆகும். நிவேதனம் எள் அன்னம் ஆகும்.
நான்காம் ஜாமம்: சிவனை சந்திரசேகரர் என வழிபடுவர். அபிஷேகம் கருப்பஞ்சாறு ஆகும். நிவேதனம் வெண் சாதம் ஆகும்.
மேற்கண்டவை பொதுவாக சொல்லப் பட்டாலும், ஒவ்வொரு கோவிலுக்கு சற்று மாறுபாடும் இருக்கும்.
சிவராத்திரி விரதப் பலன்
சிவராத்திரியன்று, இரவுப்பொழுது முழுவதும், கண் விழிக்க வேண்டும்.
அப்போது பகவத் சிந்தனை, தெய்வீக கதை, கீர்த்தனை, பராயணம் என இவ்வகைகளில் மனதை செலுத்தவேண்டும். இவ்வாறு முழு ஈடுபாட்டுடன் விரதமிருந்து, பூஜையில் ஒன்றும்போது, நமக்கு நல்லன எல்லாம், சிவபெருமான் தருவார். திருமணம் தடை பெறுபவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பேறு உண்டாகும். உங்கள் தொழில், குடும்ப வாழ்க்கை என இவை இருட்டில் அகப்பட்டதுபோல் தடுமாறி நின்றால், அவை வெளிச்சத்துக்கு வரும்.
சிவனுக்கு ப்ரியமான ராத்திரி- சிவராத்திரி. மேலும் அன்றிரவு நேரத்தில், பிரபஞ்சத்திலிருந்து, சில இயற்கை சக்திகள் பெருகி பிரவகிக்கும். அந்த சக்தி கதிர்கள், நம் மனித இனத்துக்கு பெரும் நன்மையைக் கொடுப்பது ஆகும். அந்த இயற்கை சக்தி எங்கும் பரவும் நேரம். நாம் விழித்திருந்து, சிவ நாமம் கூறுவதால், நம் உடம்பிற்கு பலவகை நன்மைகள் உண்டாகும். இந்த இயற்கை பேராற்றல், சிவராத்திரியன்று வெளிப்படுகிறது.
அதனை வெகு நுணுக்கமாக கணித்த நம் முன்னோர்களும், ரிஷிகளும், அந்த சக்தியை மக்கள் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் எனும் பெரும் கருணையால், அன்று சிவனுக்கு, இரவு முழுவதும் கண் விழித்து பூஜை செய்ய பணித்துள்ளனர். இந்த விரதம் தெய்வம் மற்றும் பிரபஞ்ச ஈர்ப்பு சேரப்பெற்ற பூஜை ஆகும். இதனை மக்கள் பயன்படுத்திகொள்ளவும். ஒரு புதிய சக்தி உங்களை வந்தடையும். அது சரி, அதற்கு ஈசன் அனுமதிக்க வேண்டும். அது முக்கிய மாயிற்றே!