தமிழர்களால் உருவான சிவலிங்க வழிபாடு! - அடிகளார் மு.அருளானந்தம் 34

/idhalgal/om/shivalinga-worship-created-by-tamils-adigalar-mu-arulanantham34

ல்லகத்தில் அமைந்திருந்த எண் இலக்கங்களை மேலிருந்து கீழாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ எந்த நிரைகளையும் அல்லது நிரல்களையும் கூட்டினால், அவற்றின் கூட்டுத் தொகை 81-ஆக வருமென கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.

இந்த இலக்கங்களை மிக ரகசியமாக சித்தர்கள் அல்லது குருமார்கள் தங்களது சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்துவந்தனர். 81 என்ற ஈரிலக்கங்களை ஓரிலக்கமாக 8+1=9 என மாற்றும்போது கிடைத்த 9 என்னும் எண்ணை, கடவுள் எண் அல்லது இயவுள் எண் என்றழைத்தனர்.

siva

இப்புவியில், அண்டத்திலுள்ள அனைத்து இயக்கங்களையும் தனக்குள் கட்டுப் படுத்தும் வல்லமையுடையது என்றும் கூறினார்கள்.

எண்களின் தெய்வத்தன்மை!

நமது உடலிலுள்ள ஒன்பது துவாரங்களில் மூன்று தனித்தவையாகவும், ஆறு இணை துவாரங்களாகவும் உள்ளன. அதாவது, வாய், சிறுநீர்த் துவாரம், மலத்துவாரம் ஒற்றையாகவும்; மூக்கு, காது, கண்கள் இணை துவாரங்களாகவும் உள்ளன. இந்த ஒன்பது துவாரங்களும் மூன்று வகையாக அமைந்துள்ளன.

முதல்வகை துவாரங்களில் (நீர்த் துவாரம் மற்றும் மலத்துவாரம்) செயல்படும் ஆற்றல், வெளியே தள்ளும் செயல்களை மட்டும் செய்வன. இரண்டாம் வகை துவாரங்களில் (கண்கள் மற்றும் காதுகள்) செயல்படும் ஆற்றல், உள்ளிழுத்து உணர்பவை. மூன்றாம் வகை துவாரங்களில் செயல்படும் ஆற்றல் உள்ளிழுத்து வெளித்தள்ளும் ஆற்றலுடையவை.

இவ்வாறு 3, 6, 9 ஆகிய எண்கள், தெய்வத்தன்மை வாய்ந்தவை என சித்தர்கள் கூறுகின்றனர்.

3ல9=27; 6ல9=54; 27+54=81 என அமைகிறது. 8+1=9 என அடங்குகிறது.

எனவே, இவைதான் நமது உடல் முழுவதும் இயங்கும் ஆற்றல்களின் ரகசிய 3:6:9 என்ற பரிணாம மாற்றங்களாக ஒவ்வொரு செல்களிலும் இயங்குகின்றன என விவரித்தனர். ஆதலால், ஒரு பள்ளிப் படை அடக்க நிகழ்வுகளில் பயன்படுத்தப் படும் பூக்கள் 3, 6, 9 என்ற வகையில் அமைந்த அல்லிவட்டங்களைக் கொண்டவையாக இருக்கவேண்டுமென வலியுறுத்தி வந்துள்ளனர்.

3X 6=18; 1+8=9

6X 9=54; 5+4=9

72: 7+2=9

இதனால் பள்ளிப்படை அடக்கம் செய்வதற்கு 9 அடி நீளம்

இதனால் பள்ளிப்படை அடக்கம் செய்வதற்கு 9 அடி நீளம், 6 அடி அகலம், 9 அடி ஆழமுள்ள செவ்வகக்குழி தோண்டினர். அதில் தெற்குப் பக்கமுள்ள சுவரில் 3 உட்புறமும், சுற்றிலும் 6-க்கு 6 அகல- உயரமுடைய மாடத்தையும் உருவாக்கினார்கள்.

வடக்கிலிருந்து தெற்கே அம்மாடத்தை நோக்கிக் கீழே இறங்குமாறு ஆறு படிக்கட்டுகள் அமைத்தனர். (வரைபடம் காண்க.)

siva

கோள்களின் திசைக்கேற்ப நவரத்தினங்கள்!

அம்மாடத்தின் அடிப்பகுதியில் பசுஞ்சாணமிட்டு மெழுகி, அதன்மீது வெள்ளைக் குங்குலிகத்தால் மேடை அமைத்துக் கொண்டனர். அடக்கம் செய்யப்படுபவர் இறந்த நேரத்திலிருந்த ஒன்பது கோள்களின் திசை அமைப்பிற்கு ஏற்றாற்போல் நவரத்தினக் கற்களைப் பதித்தனர்.

சூரியனுக்கு- மாணிக்கக் கல்.

சந்திரனுக்கு- முத்து.

செவ்வாய்க்கு- பவளக்கல்.

புதனுக்கு- மரகதக் கல்.

வியாழனுக்கு- மஞ்சள் புஷ்பராகக் கல்.

வெள்ளிக்கு- வைரக்கல்.

சனிக்கு- நீலக்கல்.

ராகுவுக்கு- ரத்தக் கோமேதகக் கல்.

கேதுவுக்கு- வைடூரியக் கல்.

மன்னனின் உடலும் செப்புத் தகடுகளும்!

இவற்றின்மீது மிக அகலமான பருத்தித் துணியை விரித்து, இறந்த மன்னனையோ அல்லது குருநாத ரையோ அதன்மீது பதும ஆசனத்தில் அமரவைப்பார்கள்.

அவர்கள் அமர வைக்கும் இடத்திற் குக் கீழே ஒரு செப்புத் தகட்டில் (படம் 1-ல் உள்ளவாறு) வரைந்து, அதனை ஒரு நீண்ட செப்புக் கம்பியால் நான்குபக்கமும் சுற்றிவைத்து, அதன் மீது அமரவைப்பார்கள்.

ss

பருத்தித் துணியை அவரைச் சுற்றிவைத்து, அதற்கு வெளியே நாம் சென்ற இதழில் குறிப்பிட்ட எழுவகைப் பொடி யைச் சுற்றிலும் தூவு வார்கள். அதன்பின் தூப, தீபம் காட்டி, "அகார, உகார, மகார படைநிலைப் பரசிவ மாகுக' என மூன்று முறை முழங்கி, வில்வ இலைகளை அவரைச் சுற்றித் தூவிப் பூசிப் பார்கள்.

பின் பருத்தித் துணிக் குள்ளே அடக்கம் செய்பவரின் முதுகுப்புறம் ஆண் அல்லது பெண் குறிகளுக்கு நேரே (படம் 2-ல் உள்ளபடி) எழுதப்பட்ட செப்புத்தகடை வைத்து, கீழேயிருக்கும் செப்புக் கம்பிச் சுருளை மேலே கொண்டுவந்து இத்தகடை நாற்புறமும் சுற்றி, நாபிக் கமலமுள்ள இடத்திற்கு நேரே பின்பக்கமாக மேலே கொண்டுவருவார்கள்.

அவ்வுடலைச் சுற்றி பருத்தித் துணியை மேல்நோக்கிக் கொண்டு வந்து, அதனைச் சுற்றிலும் ஏழுவகைப் பொடியைத் தூவி நிரப்புவார்கள். பின், தூப, தீபம் காட்டி, "அகார உகார மகார நகாரப் படைநிலை பரசிவமாகுக' என மும்முறை முழங்கி வில்வ இலைகளைக் கொண்டு பூசிப்பார்கள்.

பின் நாபிக் கமலத்திற்கு நேர் பின்புறம் (படம் மூன்றில் உள்ளபடி) எழுதப்பட்ட செப்புத்தகடை வைத்து, கீழிருந்து மேலே கொண்டு வந்த செப்புக் கம்பிச்சுருளை, இத்தகட்டை நாற்புறமும் சுற்றி, மேலே நெஞ்சுக் குழிக்குப் பின்னால் கொண்டுவருவார்கள். பின், பருத்தித் துணியை உடலின் நாற்புறமும் சுற்றி, அதற்கு வெளியே மேற்சொன்ன ஏழுவகைப் பொடிகளைத் தூவி நிரப்புவார்கள்.

இவ்வாறு நெஞ்சுக் குழிக்குப் பின்னால், தொண்டைக் குழிக்குப் பின்னால், நெற்றிப் புருவங்களின் மையப்புள்ளிக்கு நேரே தலைக்குப் பின்னால் முறையே "சி வ ய' என்று எழுதப்பட்ட (படம்-4) தகடுகளை வைத்து, அவற்றை செப்புக் கம்பிச்சுருளால் நாற்புறமும் சுற்றி, அதற்குப் பின்னால் பருத்தித் துணியால் மூடி ஏழுவகைப் பொடிகளைச் சுற்றிலும் தூவி நிரப்புவார்கள்.

இப்போது அடக்கம் செய்யப்படுபவரது முகத்தை பருத்தித் துணியால் மூடி, அவரது உச்சந்தலையிலிருந்து 12 அங்குல உயரத்திற்கு துணியைச் சுருட்டி தலைமீது வைத்து, அதைச் சுற்றிலும் ஏழுவகைப் பொடிகளைக் கொண்டு நிரப்பி, அதன்மீது (படம் 5-ல் உள்ளபடி) எழுதப்பட்ட செப்புத்தகடை, அவருக்குப் பின்புறமிருந்து வரும் செப்புக் கம்பியால் சுற்றி, அதன்மீது ஸ்படிக லிங்கத்தை வைத்து, வில்வ இலைகளால் பூசித்து தூப தீபங்காட்டி வழி படுவார்கள்.

பின், செப்புக் கம்பிச் சுருளை தரைக்கு மேலே கொண்டுவந்து, இடப்புறமிருந்து வலப்புறமாக ஒன்பது சுற்றுகளை வட்ட வடிவமாகச் சுற்றி, அதன்மீது கடந்த அத்தி யாயத்தில் கூறிய, வல்லக மந்திர 81 கட்டங்களைச் செப்புத்தகட்டில் வரைந்து வைத்து, அத்தகட்டிற்கு மேலே (படம் 6-ல் உள்ளபடி) எழுதப்பட்ட செப்புத்தகட்டை வைப்பார்கள்.

ss

ஆற்றல்மிக்க அன்னை ஆனந்தவல்லி!

இது கந்து, வல்லக வழிபாட்டினைத் தொடர்ந்து உருவாகிய, பண்பாட்டு பரிணாம வளர்ச்சியடைந்தபின் உருவாகிய சிவலிங்க உருவக முறையாகும். இத்தகட்டின்மீது சித்தர்கள் அல்லது குருமார்களுக்கான இந்த அறுநிலைப் பள்ளிப்படைகளுக்கு மேல், மரகத லிங்கத்தை அமைப்பார்கள். சிறந்த தலைவன் அல்லது மன்னன் ஆகியோரின் பள்ளிப்படைகளுக்கு மேலே கருங்கல் அல்லது ஆண் கல்லாலான லிங்கத்தை அமைப் பார்கள்.

இந்த லிங்கத்தின் உள்ளமைப்பையும் அதற்குள் இருக்கும் அறிவியல் அமைப்பை யும் கடந்த அத்தியாயத்தில் தெளிவுபடுத்தி னோம். இவ்வாறு அமைக்கப்படும் பள்ளிப் படைகளானது வெட்டவெளிகளில்தான் ஆதிகாலத்தில் இருந்தன.

அதற்குப்பின் வந்த வழித்தோன்றல்கள் அந்த இடத்தைக் கருவறையாக்கி, சிவலிங்கத்தையடுத்து ஒரு மண்டபம் எழுப்பி, அதில் தென்முகமாக ஆனந்தவல்லி தெய்வத்தை நிறுவி, அத்தெய்வத்திற்கு அடியில் வல்லகப் பலகையில் எழுதப்பட்ட 81 வித்தொலி மந்திரக் கட்டங்களைச் செப்புத்தகட்டில் வரைந்துவைத்து வணங்கும் வழக்கத்தை உருவாக்கினார்கள். ஆனந்த வல்லி என்பது- வல்லகத்தில் "வல்' என்றால் இயக்கம், ஆற்றல் என்பதன் உயர்வகை உருவ தெய்வமாகவும், அது வடக்குதிசை நோக்கி பள்ளிப்படை கொண்டவருக்கு மட்டும் அருள்பாலிப்பவளாக விளங்கும் ஆற்றல் மிக்க அன்னையாகவும் வழிபடப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

அதனைத் தொடர்ந்து வந்த பரிணாம வளர்ச்சியின் காரணமாக, பள்ளிப்படைக் கோவில்களில் காளை வாகனம் சிவலிங்கத் தைப் பார்த்தவண்ணம் அமர்ந்த கோலத்தில் அமைக்கப்பட்டது. இதன் பொருள் பின்வருமாறு: சிவலிங்கம் என்றால் அன்னை-

தந்தையரால் கொடுக்கப்பட்ட உடல் எனவும், அதில் ஒன்பது துவாரங்களிலும்- உடல் செல் முழுவதிலும் இயங்கும் இயவுள் என்றும், காளை வாகனமென்பது உடலில் எப்போதும் இருக்கும் வெப்பம் எனவும் உருவகப்படுத்தப்பட்டது.

நீத்தார் வழிபாடும் பரிணாம வளர்ச்சியும்!

நோயினை அறிய சித்த மருத்துவர்கள் நமது முன்கையில் தமனியில் ஓடும் ரத்த ஓட்டத் துடிப்பினை வாதம், பித்தம், கபம் என மூன்று நாடிகளாகப் பகுத்து, ஒரு நோயற்ற மனிதனுக்கு மூன்றும் சமமான துடிப்பில் இருக்கும் என்கிறார்கள். அவ்வாறு சமமாக நாடித் துடிப்புகள் இருக்கும்போது ஒருவரது உடலி-ருக்கும் வெப்பத்தைக் குறிப்பதுதான் காளை வாகனம் என சொல்லப்படுகிறது. இந்த மூன்று நாடிகளில் பேதம் ஏற்பட்டு உடல் வெப்பம் குறைந்து விட்டால், ஒருவனது உயிர் போய்விடும். இதனால்தான் வலிப்புநோய் வரும்போது, உடலைக் குளிரவிடாமல் உள்ளங்கால், கைகளை வேகமாகத் தேய்த்து வெப்பத்தை உருவாக்குகிறார்கள். இவ்வெப்பம் உடம்பில் இருக்கும்வரை இயற்கை மரணம் ஏற்படாது என்பது சித்தர்களின் கருத்தாக உள்ளது.

எனவே, ஒவ்வொரு உடல் செல்களும் நல்ல ஆற்றலோடு இருப்பதற்கு உடல் வெப்பம் அவசியம் வேண்டும். ஆகவே, உடம்பாகிய சிவனையும் அதிலிருக்கும் ஆற்றலாகிய சக்தியையும் சுமந்து நிலைநிறுத்திப் பாதுகாப்பது, வெப்பமாகிய காளை வாகன மாகும். பள்ளிப்படை அடக்க முறையின் காரணமாகவே, தென்பாண்டி நாட்டு ஆதித் தமிழர்கள் உருவாக்கிய உருவக வழிபாட் டால், ஒரு சிவலிங்கத் திருக்கோவில் உருவானது.

இது நீத்தார் வழிபாட்டின் உயர்ந்த பரிணாம பண்பாட்டு வளர்ச்சி. மாணிக்க வாசகர் சிவனை, "தென்பாண்டி நாட்டானே' என விளித்துக் கூறுவதன்மூலம், சிவலிங்க வழிபாடு தென்பாண்டி நாட்டுத் தமிழர் களால்தான் முதன்முதலில் உருவாக்கப் பட்டது என்பது தெளிவாகிறது.

ஆகவே, ஒரு பள்ளிப்படை வழிபாட்டின் முதல்நிலை, அன்னையின் வயிற்றுக் கருப்பையை உருவகப்படுத்தும் முதுமக்கள் தாழியே! இரண்டாவது- உடலையும் அதில் இயங்கும் ஆற்றலையும் உருவகப்படுத்தும் கந்து, வல்லக வழிபாடாகும். மூன்றாவது- உடல், இயக்க ஆற்றல், இவையிரண்டையும் பாதுகாத்து வரும் வெப்ப ஆற்றலை உரு வகப்படுத்தக்கூடிய சிவலிங்க- ஆனந்தவல்லி மற்றும் இவர்களை எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கும் காளை வழிபாடாகும்.+

இதற்கடுத்த பரிணாம வளர்ச்சி வரும் இதழில்..

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்

om011221
இதையும் படியுங்கள்
Subscribe