Advertisment

பள்ளிகொண்ட சிவன்!

/idhalgal/om/shiva-school

ள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம் ஆந்திர மாநிலத்தின் சுருட்டப்பள்ளி என்னும் இடத்தில் இருக்கிறது. சித்தூர் மாவட்டத் தில் அமைந்திருக்கும் இந்தக் கோவில் ஒரு சிவாலயம். உலகிலுள்ள எல்லா ஆலயங்களிலும் சிவபெருமான் லிங்க வடிவத்தில் இருக்கிறார்.

Advertisment

ஆனால் இந்த ஆலயத்தில் இருக்கும் சிவனோ அன்னை பார்வதியின் மடியில் தலை வைத்துப் படுத்த நிலையில் இருக்கிறார். இப்படிப்பட்ட தோற்றத்தில் சிவனை வேறெந்த ஆலயத்திலும் பார்க்கவே முடியாது.

இந்த ஆலயத்திற்கு வெளியே நந்தியின் மிகப்பெரிய சிலையொன்று இருக்கிறது. இங்கிருக்கும் ராஜகோபுரம் அனைவரின் கண்களையும் ஈர்க்கக்கூடியது.

இந்தக் கோவிலில் சிவபெருமான் வால்மீகீஸ்வரராகவும் தாய் சக்தி மரகதாம்பி கையாகவும் காட்சியளிக்கின்றனர். இந்த ஆலயம் பலமுறை புதுப்பிக்கப்பட்டதாக வரலாறு.

Advert

ss

இந்தக் கோவிலை 1344-1347-ஆம் ஆண்டுகளில் விஜயநகர மன்னரான புக்கராயா கட்டியிருக்கிறார். இப்போது இந்த ஆலயம் ஆந்திர மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது.

இந்த ஆலயத்தைப் பற்றிய வரலாறு இது...

புராண காலத்தில் வாசுகிப் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்திப் பாற்கடலைக் கடைந்தார்கள். தேவர்களும் அசுரர்களும் அந் தச் செயலில் ஈடுபட்டனர். அதிலிருந்து அமிர் தம் வெளிவரும் முன்பே ஆலகால விஷம் வெளிப்பட்டது. அந்த விஷத்தை யாராவது பருகவில்லையெனில் உலகமே அழிந்துவிடும்.

அனைவரும் சிவபெருமானிடம் சரண டைந்தனர். எல்லா உயிர்களையும் காக்கும் பொருட்டு இறுதியில் அந்த விஷத்தை சிவனே உட்கொள்ளத் தீர்மானித்தார். அவர் விஷத் தைப் பருக, அதைப் பார்த்த அன்னை பார்வதி சிவனின் தொண்டையைத் தன் கையால் அழுத் திப் பிடிக்க, விஷம் தொண்டையிலேயே நின்றுவிட்டது. அந்த விஷம் நீலநிறமாக நின்றதால் சிவன் நீலகண்டன் என பெயர் பெற்றார்.

அங்கிருந்து கயிலாயத்திற்குச் செல்லத் தீர்மானித்தார் சிவபெருமான். அப்போது விஷம் அருந்தியதன் தீவிரத்தால் அவருக்கு மயக்கம் வந்தது. பார்வதியின் மடியில் அவர் மயங்கிச் சாய்ந்தார்.

அன்னை பார்வதியின் மடியில் கண்களை மூடி சில நிமிடங்கள் அவர் படுத்துறங்கினார்.

அவர் அப்படி உறங்கிய இடமே இன்றைய சுருட்டப்பள்ளி. சிவன் சுருண்டு படுத்த இடமென்பதால் இந்த இடத்திற்கு அப்படி யொரு பெயர் ஏற்பட்டது.

பார்வதியின் மடியில் மயங்கிச் சாய்ந்திருக்கும் சிவனின் நலம்பற்றி விசாரிப்பதற்காக தேவர்கள் அங்கு குழுமினர். அவர் விரைவில் கண்களைத் திறக்கவேண்டுமென்பதற் காக அவர்கள் வழிபாடு செய்தார்கள். சேஷ நாகத்தின்மீது படுத்திருக்கும் விஷ்ணு வைப்போல அவர்களுக்கு சிவன் காட்சி யளித்தார்.

இந்த ஆலயத்தை காலஹஸ்தி மன்னர் 1833-ஆம் ஆண்டில் புதுப்பித்துக் கட்டினார்.

இங்கு காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் 25 நாட்கள் தங்கியிருக்கி றார். இது நடைபெற்றது 1976-ஆம் ஆண்டில். அவர் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி அதைத் தோண்டுமாறு கூறியிருக்கிறார். அப்போது தோண்டப்பட்ட இடத்தில் இராமரின் மகன்கள் லவ- குசாவின் காலடித் தடங்கள் இருந்திருக்கின்றன. அதைப் பார்த்து பக்தர்கள் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்டனராம்.

இந்த ஆலயத்திலிருக்கும் சிவனைப் பார்க்கும்போது, ரங்கநாதர் ஞாபகத்தில் வருவதாக பலரும் கூறுகிறார்கள். இங்கிருக் கும் சிவனை விஜயநகர மன்னர்கள் "போக சயன சிவா' என்று குறிப்பிட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த ஆலயத்தில் விநாயகர், கார்த்திகேயன், சந்திரன், சூரியன், இந்திரன் ஆகியோரின் உருவச் சிலைகள் இருக்கின்றன. இவர்கள் அனைவரும் சுற்றி நின்று சிவனை வழிபடும் காட்சியை நாம் பார்க்கலாம்.

வசிஷ்டர், பிருகு, விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகியோரின் உருவச் சிலைகளும் இங்கிருக்கின்றன.

இங்குவரும் பக்தர்கள் இங்கிருக்கும் சரஸ்வதி, தாம்பத்திய தட்சிணாமூர்த்தி ஆகியோரையும் மனம்குளிர வழிபடுகிறார்கள்.

இந்த ஆலயம் சென்னையிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று சிவபெருமானின் அருளையும் ஆசிர்வாதத்தையும் பெற நினைப் பவர்கள், சென்னையிலிருந்து பெரியபாளை யம், ஊத்துக்கோட்டை வழியாகச் செல்ல வேண்டும். ஊத்துக்கோட்டையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கி றது இந்த சிவன் கோவில். சென்னையிலிருந்து பயண தூரம் 60 கிலோமீட்டர்.

om010622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe