Advertisment

அறிந்துகொள்ள வேண்டிய சாஸ்திரங்கள்! - எம். அசோக்ராஜா

/idhalgal/om/shastras-know-m-ashokaraja

றந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து, இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம்வரை நம் வீட்டைச் சுற்றி வரும். ஆகவே, மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப் பூச்சி அடிக்கடி பறந்து வந்துகொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷமும், சுபகாரிய நிகழ்வும், அங்குள்ள வர்களுக்கு தீர்க்காயுளும் உண்டா கும்.

Advertisment

சிங்கம், புலி, கரடி ஆகிய மிருகங்களின் பொம்மைகளை வீடு களில் வைப்பதன்மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.

Advertisment

தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன்மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும்.

நாம் செய்த பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்துகொண்டே வரும்.

முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர்மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1,008 நாட்கள் மட்டுமே சக்தியுண்டு. அதன்பிறகு அது செய்தவரையே திரும்பத் தாக்கும். தான் செய்த வினையைத் தாமே அனுபவிப்பார்.

உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தால் கண்ணேறு தாக்கியிருப்பதாக உறுதிசெய்து, உங்கள் வீடு முழுக்க உப்புகலந்த நீரால் கழுவிவிட்டால் கண்ணேறு போய்விடும்.

ss

அடுக்கு அரளி, செம்பருத்திப் பூக்களைக்கொண்டு பூஜை செய்வதனால் ஞானம் பெருகும். தொழில் விருத்தியடையும்.

ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள்வரை அவளது ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லுதல் கூடாது.

அன்னாசிப்பழ ஓவியத்தை வீட்டின் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்.

ஆண் குழந்தை பன்னிரண்டாவது மாதத்திலும், பெண் குழந்தை எட்டாவது மாதத்திலும் பேசத் துவங்கும். ஆகவே. பெண் குழந்தைக்கு எட்டாவது மாதத்திலும், ஆண் குழந்தைக்கு பன்னிரண்டாவது மாதத்திலும் சாதம் ஊட்டுதல் வேண்டும்.

சிவப்பு நல்லதிர்ஷ்டத்தைக் குறிக்கும் நிறமாகும். திருமணத்தின்போது மணமகள் சிவப்புநிறப் பட்டாடை உடுத்துவது உத்தமம். சிவப்புநிறப் பெட்டியில் அல்லது பீரோவில், சிவப்புநிறப் பையில் பணம் சேர்த்துவைத்தால் அது மேன்மேலும் பெருகும். சிவப்புநிறம் சோம்பேறிகளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும்.

தேங்காயை தானம் செய்தால் பசுவை தானம் செய்த பலன் உண்டாகும்.

ஒருமுறை கும்பாபிஷேகம் பார்ப்பது 100 முறை ஆலய தரிசனம் செய்வதற்கு சமம்.

வஸ்திர தானத்தால் சர்வ தேவதைகளும் சந்தோஷம் அடைகின்றனர். ஆயுளும் விருத்தியாகின்றது. ஆகவே ஆயுளைப் பெருக்கும் வஸ்திர தானம் மிகவும் நல்லது.

தேய்பிறை அஷ்டமியிலும் சதுர்த்தசி யிலும் ஒருவேளை சாப்பிட்டு விரதமிருந்து சிவபெருமானைப் பூஜிப்பவர்களுக்கு வியாதி கள் நீங்கும்; உடல்வலிமை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமக் காலங்களில் செம்பருத்தி, அறுகம்புல் ஆகியவற்றுடன், இடையில் மல்லிகை கட்டி கணபதிக்கும், திருமாலுக்கும் மாலையாக அணிவித்தால் பலகாரியங்கள் நல்லபடியாக முடியும்.

ஸ்ரீ சரபேஸ்வரர் நீதிமன்ற வழக்குகளிலிருந்து நம்மை விடுவிக்கும் தெய்வம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் ராகு காலத்தில் இவரை வணங்கிவந்தால் வழக்குகளில் வெற்றி உறுதி.

வங்கியில் கடன்வாங்க திங்கட்கிழமை உகந்ததாகும்.

செவ்வாய்க்கிழமையன்று கடன் வாங்கு வதோ, வட்டி வரும் என்ற நோக்கத்தில் பணம் வட்டிக்கு விடுவதோ கூடாது. ஆனால், ஏற்கெனவே வாங்கிய கடனில் ஒரு சிறு அளவேனும் செவ்வாய்க்கிழமையன்று கொடுத்துவிட்டால் வெகுவிரைவில் கடன் முழுதும் அடைபட்டுவிடும்.

நீண்டகால வைப்புநிதியில் வங்கியில் பணம்போட புதன்கிழமை உகந்ததாகும்.

வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்க வியாழன், வெள்ளிக்கிழமைகள் உகந்ததாகும். மேலும் தங்க பிஸ்கட் வாங்கவும் இவ்விரு நாட்களும் உகந்ததாகும்.

மாலைச் சூரியனையோ மதிய சூரிய னையோ நமஸ்கரிக்கக் கூடாது. காலைச் சூரியனை அதுவும் காலை 8.00 மணிக்குள் ளேயே கும்பிடவேண்டும். அதுவும் எப்படி? குளித்து முடித்து ஈர உடம்போடு கும்பிட வேண்டும்.

பில்லி, சூனியம், திருஷ்டி, ஏவல் போன்றவற்றால் ஏற்படும் துன்பங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள, மகிழம்பூ மாலையை ஸ்ரீ நரசிம்மருக்கு சாற்றி, சுதர்சனத் துதிகள் ஓதி வழிபடவும்.

அறிமுகமில்லாதவர்கள் வீட்டிலோ, எதிரிகள் வீட்டிலோ விருந்து சாப்பிடும் போது இதைத் தவிர்ப்பது நல்லது. இறைச்சி யும் உளுந்தும். இவை வசியத்துக்கு ஏற்றவை. குறிப்பாக கோழிக் குழம்பு, உளுந்தவடை ஆகியவற்றுக்கு இந்த சக்தி அதிகமுண்டு.

விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குரிய தேவதை ஆவாஹனமாகிவிடு வதால், எரியும் விளக்குத் திரியின் கசடைத் தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. இதனால் வீண் சாபங்களும் தோஷங் களும் ஏற்படுகின்றன. பதிலாக திரியைப் பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம்.

அக்னியை வாயினால் ஊதியணைப்பது முக்கியமான மரணச் சடங்குகளில் ஒன்றா கும். பலர் தற்காலத்தில் பிறந்த நாளன்று மெழுகுவர்த்தி ஏற்றி வாயினால் ஊதி அணைக்கின்றனர். மனநிறைவுடன் கொண்டாடவேண்டிய பிறந்த நாளில் மரணச் சடங்கையா செய்வது? இது சரியல்ல.

செல்: 97503 33265

om010722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe