பஞ்சபூதத் தலங்களில் நீர்த்தலமாகப் போற்றப்படுவது திருவானைக்கா. இத்தலம் திருச்சி மலைக்கோட்டையிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவன்: ஜம்புகேஸ்வரர்; இறைவி: அகிலாண்டேஸ்வரி. சக்தி பீடங்களில் இது வாராகி பீடம், ஞானபீடம் என்றும் போற்றப்படுகிறது.
இங்கு அருள்புரியும் இறைவியின் காதுகளில் ஒருபுறம் சிவசக்கரத்தா லும் மறுபுறம் ஸ்ரீசக்கரத்தாலுமான தாடங்கங்கள் திகழ்கின்றன. ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டு அணிவிக்கப்பட்டவை இந்த சக்கரங்கள். ஒரு காலகட்டத்தில் அன்னை உக்கிரமாக இருந்தபோது இங்கு தலயாத்திரையாக வருகை தந்த ஆதிசங்கரர் அன்னையை சாந்தரூபிணி யாக மாற்றுவதற்காக, அன்னையின் பார்வையில்
பஞ்சபூதத் தலங்களில் நீர்த்தலமாகப் போற்றப்படுவது திருவானைக்கா. இத்தலம் திருச்சி மலைக்கோட்டையிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவன்: ஜம்புகேஸ்வரர்; இறைவி: அகிலாண்டேஸ்வரி. சக்தி பீடங்களில் இது வாராகி பீடம், ஞானபீடம் என்றும் போற்றப்படுகிறது.
இங்கு அருள்புரியும் இறைவியின் காதுகளில் ஒருபுறம் சிவசக்கரத்தா லும் மறுபுறம் ஸ்ரீசக்கரத்தாலுமான தாடங்கங்கள் திகழ்கின்றன. ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டு அணிவிக்கப்பட்டவை இந்த சக்கரங்கள். ஒரு காலகட்டத்தில் அன்னை உக்கிரமாக இருந்தபோது இங்கு தலயாத்திரையாக வருகை தந்த ஆதிசங்கரர் அன்னையை சாந்தரூபிணி யாக மாற்றுவதற்காக, அன்னையின் பார்வையில் படும்படி விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். மேலும், அன்னை யின் சந்நிதியின் பின்புறம் முருகப் பெருமானையும் பிரதிஷ்டை செய்தபின், அன்னைக்கு தங்கத்தாலான சிவசக்கரத் தையும் ஸ்ரீசக்கரத்தையும் தாடங்க ரூபத்தில் அமைத்து, மந்திரங்கள் ஜெபித்து அணிவித்தார். அதன்விளைவால் அன்னை சாந்த சொரூபிணியாக மாறி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறாள்.
அன்னை மேலிருகைகளில் தாமரை மலரையும், கீழிரு கைகளில் அபயவரதம் தாங்கியும் மகாலட்சுமியின் தோற்றப்பொலிவுடன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறாள்.
அன்னை, தினமும் மதிய வேளையில் ஜம்புகேஸ்வரரை வழிபடுவது வழக்கம். இதனை இக்கோவில் பிரதம பூசகர், புடவை அணிந்துகொண்டு இறைவனுக்கு நண்பகல் பூஜை செய்வதை இன்றும் காணலாம்.
புகழ்பெற்ற இந்த அன்னை அகிலாண்டேஸ்வரி ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாதருக்கு தங்கை என்கிறது புராணம். அதனால் ஸ்ரீரங்கநாதர் மார்கழி மாதம், முதல் தேதியன்று தங்கை ஈஸ்வரிக்கு சீர்வரிசை அளிக்கும் நிகழ்ச்சி இக்கோவிலில் நடைபெறுவதைக் காணலாம்.
ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில் வருட உற்சவத்தில் ஒரு தினத்தன்று திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் நான்குகால் மண்டபத்திற்கு வடக்கில் நாச்சியார்தோப்பில் அமைந் துள்ள சிறிய குளத்திற்கு அருகே ரங்கநாதர் எழுந்தருளி இளைப்பாறுவார். மேற்படி தினத்தன்று சமர்ப்பிக்கப் படும் சிறப்பு நிவேதனத்தை (அமுதுபடைத்தல்) ஏற்றுக் கொள்வார். பிறகு தாகம் மற்றும் களைப்பினைப் போக்க இளநீர் பருகியபின், தனது சகோதரி அகிலாண் டேஸ்வரி சந்நிதிக்கு வந்து தனது மனைவி ஸ்ரீரங்க நாச்சியாரின் கோபத்தைத் தணிக்க வேண்டியும், சமாதானம் செய்திட சிபாரிசுக்காக முறையிட்டும், அதன்பின் விடைபெற்று ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்வார். (அன்னையின் பரிந்துரையால் தாயார் ஸ்ரீரங்கநாயகி சமாதானம் ஆனதாக வரலாறு).
அதன் காரணமாகத்தான் தங்கை அகிலாண்டேஸ் வரிக்கு சகோதரன் என்ற முறையில் மார்கழி முதல் நாள், ஸ்ரீரங்கத்திலிருந்து சீர்வரிசை கொடுக்கும் வழக்கம் முன்பு இருந்தது. அது ஒரு காலகட்டத்தில் நின்றுபோயிருந்தது. தற்போது சென்ற ஆண்டிலிருந்து (2017) மீண்டும் அதனைப் புதுப்பிக்கும் வகையில், ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து திரு வானைக்கா அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கும் வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. திருவானைக்கா நான்குகால் மண்டபத்தில் மார்கழி மாதம், முதல் தேதியன்று மாலை 6.30 மணியளவில், யானை மற்றும் மேளதாளத்துடன் வகைவகையான பழங்கள், பட்டுவஸ்திரங்கள், மங்கலப்பொருட்கள், பூ மற்றும் மலர் மாலை வகையறாக்கள் அடங்கிய சீர்வரிசைத் தட்டுகள் ஊர்வலமாக ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மற்றும் திருக்கோவில் அலுவலர்களால் எடுத்து வரப்பட்டு அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு சமர்ப்பிக்கப்படும். திருப்பா வாடை எனும் படையலிடும் நிகழ்ச்சி அம்மன் சந்நிதி யில் நடைபெறும். இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் என்றும் வசந்தம் வீசும் என்பது ஐதீகம்.