மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஆட்சியாக இருக்கிறார். அத்துடன் இம்மாதம் 1-ஆம் தேதி ராகு- கேதுப் பெயர்ச்சியாகி றார்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் இருக்கும் ராகு 2-ஆமிடத்திற் கும், 9-ல் இருக்கும் கேது 8-ஆமிடத்திற்கும் மாறுகிறார்கள். உத்தியோக வாய்ப்புகள், ஸ்தம்பித்து நிற்கிற தொழில்கள் போன்றவற்றிலிருக்கும் தடைகள் விலகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும்; குடும்பம் அமையும். இந்த நன்மைகளை ராகு தந்து, குடும்பப் பொறுப்புகளையும் சுமைகளையும் தருவார். 8-ஆமிடத்தை ராகு பார்ப்பதால், சிலருக்குக் கௌரவப் பிரச்சினையும் இடப்பெயர்ச்சியும் ஏற்படக்கூடும். என்றா லும், 9-ல் குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதால், சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். 10-க்குரிய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் என்பது உங்களுக்குத் தெரிந்ததே! தேக சுகத்தில் அவ்வப்பொழுது மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்; உடல் பாதிக்காது.

dd

ரிஷபம்

இம்மாதம் 1-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி ஏற்படுகிறது. 2-ல் இருக்கும் ராகு இப்பொழுது ஜென்மத்திற்கும், 8-ல் இருக்கும் கேது 7-ஆமிடத்திற்கும் மாறுகி றார்கள். ஊர்மாற்றம், உத்தியோகத்தில் இலாகா மாற்றம், இடமாற்றம் போன்றவற்றை சந்திக்கலாம். பொதுவாக, ஜென்ம ராசியிலோ 7-ஆமிடத்திலோ ராகு- கேது நின்றாலும் பார்த்தாலும் நாகதோஷம் எனப் படும். அதனால், திருமணம் தடையாகும், தாமதமாகும், கருத்து வேறுபாடு போன்றவையும் ஏற்படும் என்பது ஜோதிடப் பொதுவிதி. ஆனால், ராகு- கேதுவுக்கு வீடுகொடுத்த கிரகமோ குருவோ அல்லது ரிஷப ராசிக்கு 5, 9-க்குரிய கிரகமோ சம்பந்தப்பட்டால் தோஷ நிவர்த்தியாகும். ஜாதக தசாபுக்திகளும் யோகமாக நடந்தால் எல்லாப் பிரச்சினைகளையும் சுமுகமாகத் தீர்க்கலாம். தேக சுகம் நன்றாக இருக்கும். 12-க்குரிய செவ்வாய் 12-ல் ஆட்சி. 16-ஆம் தேதிமுதல் வக்ரம். எனவே, விரயம் சற்று அதிகமாகலாம். சுபநிகழ்வுகளும் ஏற்படலாம்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சியாக இருக்கிறார். வீடு, மனை, வாகனவகையில் நற்பலன்கள் உண்டாகும். இப்பொழுது 1-ஆம் தேதி ராகு- கேதுப் பெயர்ச்சி ஏற்படுகிறது. இதுவரை ஜென்ம ராசியிலிருக்கும் ராகு 12-ஆமிடத்துக்கும், 7-ல் இருக்கும் கேது 6-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். 12-ஆமிடமும் 6-ஆமிடமும் அசுப ஸ்தானங் கள். இந்த அசுப ஸ்தானங்களுக்கு அசுப கிரகங்களான ராகு- கேது வருவதால், அந்த அசுப இடத்துக் கெட்ட பலன்களை விரட்டியடிக்கும் என்பது பொதுவிதி. டபுள் மைனஸ்= ஒரு பிளஸ். உங்கள் ராசியிலேயே ராகு இருந்தபொழுது மனநிம்மதிக்குறைவும், ஆரோக்கியப் பாதிப்பும், காரியத் தடைகளும் கொடுத்திருக்கலாம். இனி, அந்நிலை மாறும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமைக்குறைவு விலகும். அன்பும், அரவணைப்பும் ஏற்படும். தொழில்துறைப் பணியாளர்களுக்கு லாபம் உண்டாகும். 12-க்குரிய சுக்கிரன் 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சுபவிரயம் ஏற்படும். மங்கள நிகழ்வுகள் உண்டாகும்.

கடகம்

கடக ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். மாத முற்பகுதியில் சூரியன் 2-ல் ஆட்சிபெறுவார். தன ஸ்தானத்தில் தன ஸ்தானாதிபதி ஆட்சி என்பதால் பொருளாதாரப் பற்றாக்குறை விலகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். இம்மாதம் 1-ஆம் தேதி உங்கள் ராசிக்கு 12-ல் இருக்கும் ராகு 11-க்கும், 6-ல் இருக்கும் கேது 5-க்கும் மாறுகிறார்கள். ராகு வந்துள்ள இடம் நல்ல இடம். அதை விளக்கும் ஜோதிடப் பாடல்- "ராகு பன்னொன்று மூன்று ஆறாம் இடத்திற்சேரின் தேன்பாலும் பழமும் வற்றாத தனமும் உண்டாம்: ஆகும் காரியங்கள் உண்டாம்: வாக்கு மணமுண்டாம்: வரத்துமேல் வரத்துண்டாம்' என்றபடி, எல்லா சௌபாக்கியங்களும் உண்டாகும். அதிலும், ராகு தசையோ ராகு புக்தியோ நடந்தால் நிச்சயமாக மேற்படி யோகம் நடக்கும். 5-ஆமிடத்துக் கேது உங்கள் எண்ணங்கள், திட்டங்கள் ஆகியவற்றுள் தாமதத்தை ஏற்படுத்தலாமே தவிர, தடைகள் ஏற்படாது. காரிய ஜெயம் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். 17-ஆம் தேதிக்குப் பிறகு 2-க்கு மாறுகிறார். செல்வாக்குள்ள பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும், பாராட்டும் கிடைக்கும். உங்கள் செயல்பாடுகள் பூர்த்தியாகும். இம்மாதம் 1-ஆம் தேதி சிம்ம ராசிக்கு 11-ல் இருக்கும் ராகு 10-ஆமிடத்துக்கும், 5-ல் இருக்கும் கேது 4-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். தொழில்துறையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். 4-ஆமிடத்துக் கேது உங்களுக்குச் சொந்த வீடு, வாகன யோகத்தைத் தருவார். அது சம்பந்தமான கடன் வாங்க நினைத்தாலும் அத்திட்டம் நிறைவேறும். வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழிற்கடன் போன்றவையெல்லாம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தித் தருவார். அதுசம்பந்தமான முதலீடுகளும் சுபவிரயங்களும் ஏற்படும். சொல்வாக்கும் செல்வாக்கும் குறையாது. தேவைகளும் நிறைய இருக்கும்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் ஆட்சியாக இருக்கிறார். உங்கள் செயல்பாடுகளில் காரிய வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படும். 1-ஆம் தேதி 10-ல் இருக்கும் ராகு 9-ஆமிடத்துக்கும், 4-ல் இருக்கும் கேது 3-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ராகு 3-ஆமிடத்தையும், 7-ஆமிடத்தையும், 11-ஆமிடத்தையும் பார்க்கிறார். ராகு- கேதுக்களுக்கு 3, 7, 11-ஆம் பார்வை உண்டென்பது தெரிந்த விஷயந்தான். 3-ல் கேது நிற்க, ராகு பார்க்கிறார். சகோதர- சகோதரிவகையில் சில குழப்பங்களும் பிரச்சினைகளும் உருவாகலாம். நெருங்கிப் பழகிய நண்பர்கள் வட்டாரத்திலும் சலசலப்பும் பிரச்சினைகளும் உருவாகலாம். அல்லது பகையை வளர்த்துக் கவலையை ஏற்படுத்தலாம். 11-ஆமிடத்தைப் பார்க்கும் ராகு காரிய அனுகூலத்தைத் தரும். 5-ஆமிடத்தைப் பார்க்கும் கேது திட்டங்களையும் எண்ணங்களையும் செயலாக்கம் புரிவார். ஆன்மிகம், தெய்வீக வழிபாடுகளில் நாட்டமுண்டாகும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதக் கடைசிவரை 10-ல் இருக்கிறார். தொழில்துறையில் சில நல்ல மாற்றங் கள் நிகழும். அதோடு, இம்மாதம் 1-ஆம் தேதி, கடந்த ஒன்றரை வருடமாக உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த ராகு 8-ஆமிடத்துக்கும், 3-ல் இருந்த கேது 2-ஆமிடத்துக்கும் மாறியுள்ளனர். 8-ஆமிடமென்பது கெட்ட ஸ்தானம். சஞ்சலம், ஏமாற்றம், விபத்து, பீடை, கௌரவப் பங்கம், விசனம், கவலை, இழப்பு ஆகியவற்றைக் குறிக்குமிடம். இயற்கையில் பாவகிரகமாகிய ராகு மேற்கண்ட பாவ ஸ்தானத்திற்கு வருவதால், அந்தப் பாவத்தன்மைகளை விரட்டியடிப்பார். கேது இப்பொழுது மாறியுள்ள இடம் சுமாரான இடந்தான். எனினும், தன ஸ்தானத்திலுள்ள கேது பணப் பஞ்சத்தைப் போக்குவரென நம்பலாம். பொதுவாக, ராகு- கேது யார் வீட்டிலிருக்கிறார்களோ, யார் சாரத்தில் சஞ்சரிக்கிறார்களோ, யாரோடு சேர்ந்திருக்கிறார்களோ, யாரால் பார்க்கப்படுகிறார்களோ அவர்களின் பலனைத்தான் செய்வார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் ஆட்சிபெறுகிறார். எனவே, மறைவு தோஷம் பாதிக்காது. கடந்த ஒன்றரை வருட காலமாக உங்கள் ராசிக்கு 8-ல் இருந்த ராகு இப்பொழுது 7-ஆமிடத்துக்கும், 2-ல் இருந்த கேது ஜென்ம ராசிக்கும் மாறியுள்ளனர். கடந்த காலத்தில் ராகு- கேது இருந்த இடங்களை அவ்வளவு சிறப்பான இடங்களாகச் சொல்லமுடியாவிட்டாலும், ஏழரைச்சனியின் கடைசிக்கூறில் சிலர் நன்மைகளை அனுபவித்தனர் என்பதை மறுக்கமுடியாது. ஜென்ம ராசியில் கேது நிற்பதும், அவரை ராகு பார்ப்பதும் விசேஷந்தான். உங்கள் தொழில் முயற்சிகளில் முன்னேற்றமும் கீர்த்தியும் செல்வாக்கும் உண்டாகும். (உங்கள் நற்செயல்களைப் பொருத்து). சகோதரவழியில் சகாயமும் நன்மையும் ஏற்படும். பிரிந்திருக்கும் உடன் பிறப்புகளுடையே நெருக்கமும் இணக்கமும் உருவாகும். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 2-க்குரிய சனி சேர்ந்திருக்கிறார். இந்த மாதம் 1-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சியாகிறார்கள். 7-ல் இருக்கும் ராகு 6-ஆமிடத்துக்கும், ஜென்ம ராசியிலிருக்கும் கேது 12-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ஏற்கெ னவே ராகுவும் கேதுவும் இருந்த இடங்கள் சாதகமும் இல்லை; பாதகமுமில்லை. ஏழரைச்சனியில் ஜென்மச்சனி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. 6-ஆமிடம் என்பது ரோகம், ருணம், சத்ரு ஸ்தானம். எதிரி, கடன், நோய் ஆகியவற்றைக் குறிக்கும். அங்கு வந்துள்ள ராகு இவற்றை அழிப்பதன்மூலம் உங்களுக்கு நன்மையுண்டாகும். எதிரி விலகுவார். கடன் குறையும். நோய் நிவர்த்தியாகும். 12-க்கு வந்திருக்கும் கேது இதுசம்பந்தமான விரயங்களை விரட்டியடிப்பார். பூமி, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட செலவுகளாகவும் எடுத்துக்கொள்ளலாம். அயன சயன சுகபோக ஸ்தானத்தில் கேது இருப்பதால், அவ்வகைச் செலவுகள் உண்டாகலாம்.

மகரம்

இம்மாதம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நடைபெறும் மூன்று முக்கியப் பெயர்ச்சிகளுள் ராகு- கேது பெயர்ச்சியும் ஒன்றாகும். 6-ல் இருக்கும் ராகு 5-ஆமிடத்துக்கும், 12-ல் இருக்கும் கேது 11-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ராகு- கேதுவுக்கு 3, 6, 11-ம் இடங்களும், 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களும் யோகம் தருமிடங்களாகும். ராகு 5-க்கு மாறுவது சுமாரான இடம்தான். எனினும், கேது மாறும் 11-ஆமிடம் நல்ல இடமாகும். ராகுவுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் தொழில் பாதிப்படையாமல் காப்பாற்றிக் கைகொடுத்து 11-ஆமிடத்துக் கேது துணைநிற்பார். 11-ஆமிடம் கேதுவுக்குப் பலமான இடம்; லாபம் தருமிடம். ராகுவும் கேதுவும் எப்பொழுதும் சமசப்தமமாகவே இருப்பார்கள். ஒருவரையொருவர் உரிமையோடு பார்த்துக்கொள்வார்கள். அதனால், இருவருள் யாராவதொருவர் பலம்பெற்றால்கூட மற்றவரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். பலக்குறைவுபெற்ற கிரகத்தின் தாக்கத்தைப் போக்கி ஊக்கத்தைக் கொடுத்துவிடுவார்.

கும்பம்

கடந்த ஒன்றரை வருடமாகக் கும்ப ராசிக்கு 5-ல் இருந்த ராகு இப்பொழுது 4-ஆமிடத்துக்கும், 11-ல் இருந்த கேது 10-ஆமிடத்துக்கும் மாறியுள்ளனர். 4-ஆமிடம் பூமி, வீடு, வாகனம், சுகம், தாய், கல்வி ஆகியவற்றைக் குறிக்குமிடம். அங்கு ராகு நிற்கிறார். கேதுவும் 4-ஆமிடத்தைப் பார்ப்பதால், மேற்கண்டவகையில் சுபச்செலவு உண்டாகும். 4-ல் உள்ள ராகு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். உத்தியோக உயர்வு, ஊர்மாற்றம், இடமாற்றம் ஆகியவை விரும்பிய மாதிரி அமையும். அலங்கார மனை அமையும். அதற்கு நீண்டகாலத் தவணைக் கடனும் கிடைக்கும். 11-ல் ராசிநாதன் சனி நின்று ராசியைப் பார்ப்பது உங்களுக்கு ஒரு பலம். உங்கள் திட்டங்கள் செயல்வடிவம் பெறும். காரியத் தடைகள் விலகும். சிலசமயம் சில குறுக்கீடுகளும் தடையும் காணப்பட்டாலும் அவை சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும்.

மீனம்

இம்மாதம் 1-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சியாகிறார்கள். 4-ல் இருக்கும் ராகு 3-ஆமிடத்துக்கும், 10-லிருக்கும் கேது 9-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். "அஞ்சு ஒன்பதுக்கு அதிபர் பாபர் சுபரானா லும் பொன்போன்ற நன்மையே தருவார்' என்பது "சந்திர காவிய' விதி. மேலும், ராகுவும் கேதுவும் தலையும் வாலுமாகும். இவர்களுள் யாராவதொருவர் நல்ல இடத்திலிருந்து மற்றவர் பார்த்தால் அந்த கிரகத்துக்கும் நல்ல பலன் கிடைக்கும். ராகு 3-ல் அமர்ந்து உங்களுக்கு நன்மை செய்வார். சகோதர சகாயம் உண்டாகும். பழகிய நண்பர்களுடையே எதிர்பாராத கருத்து வேறுபாடும் பிரிவும் பிளவும் இருந்திருந்தால், அவை மாறும். தொழில்துறையில் முதலீடு செய்யலாம். úஷர் மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம். சகோதரவகையிலும் மனைவிவகையிலும் கூட்டுசேர்ந்து தொழில் ஆரம்பிக்கலாம். வாரிசுகளுக்கும் படிப்பு, வேலை, சம்பாத்தி யம் போன்ற நன்மைகள் நடக்கும்.