1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதுமே மிக நல்ல பலன்கள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். உங்கள் திட்டங்கள், ஆசைகள் அனைத்தும் நல்லவிதமாக நடக்கும். அரசு சார்ந்த உதவிகளும் வருமானமும் பெருகும். அரசியல்வாதிகள் மிகப்பெரிய உயர்வடைவார்கள். மூத்த சகோதரர் பண உதவி செய்வார். சிலர் புதிய கைப்பேசி வாங்குவார்கள். தொழிலில் இடமாற்றத்துடன் கூடிய முதலீடு செய்வீர்கள். மனைவியின் வேலை இட மாறுதல் பெறும். பெண் வேலையாட்கள் வேலையைவிட்டு நீங்கலாம். வீடு மாற்றம் அல்லது வீட்டில் பழுது நீக்கும் வேலை நடைபெறும். சிலரின் வாரிசுகள் வேலை கிடைக்கப் பெறுவர். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு வரலாம். பெற்றோருக்கு மருத்துவச் செலவு ஏற்படக்கூடும். ஆனால் கவலைப்படுமளவு இருக்காது. விவசாயம், பண்ணைகள், மனை, அறுவை சிகிச்சை போன்ற விஷயங்களை செப்டம்பர் முதல்வாரத்திற்குள் முடித்துவிடுவது நல்லது. கலைத்துறையினர் நல்ல வாய்ப்பைப் பெறுவார்கள். மாணவர்களின் நிலை சுமாராக இருக்கும். காவல் துறையினர் இரண்டாம் வாரத்திலிருந்து மிக கவனமாக இருக்க வேண்டும். இளைய சகோதரியால் செலவுண்டு. திருமண விஷயங்களில் வெகு தூரத்திலிருந்து தகவல் கிடைக்கும். உங்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதால் எவ்வளவு செலவு வந்தாலும் அஞ்சமாட்டீர்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23.

எச்சரிக்கை தேதி: 9, 18, 27.

Advertisment

பரிகாரம்: செம்பருத்திச் செடி வளர்க்கவும் அல்லது தானம் செய்யவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் பெண்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதரி வீடு வாங்க நல்ல வழிகாட்டுவார். உங்கள் வீட்டை அழகுபட மாற்றுவீர்கள். மாத முற்பகுதியில் பணவரவு சரளமாக இருக்கும். பிற்பகுதியில் செலவு அதிகமாகும். உங்கள் இளைய சகோதரத்தாலும் செலவு கூடுதலாகும். பிள்ளைகளின் கல்வி விஷயங்களில் முதல் வாரத்திலுள்ள நிலைமாறி, அடுத்தடுத்த வாரங்களில் வேறு விதமான பலன்களைக் கொடுக்கும். தந்தையின் உடல்நிலை கவனிக்கப் பட வேண்டும். சிலர் வீடு விஷயமாக கடன் வாங்க நேரிடும். சில தம்பதிகளுக்குள், வேறொரு பெண்ணால் சச்சரவு வரலாம். இந்த தேதிகளில் பிறந்த பிள்ளைகளின் தந்தைக்கு வேலை கிடைக்கும். காவல் துறையினர் இடமாற்றம் பெறுவர். விவசாயிகள் முழு முயற்சியுடன் லாபம் காண்பர். லாபத்தோடு சில இன்னல்களையும் சேர்த்துப் பெறுவர். பெண் அரசியல் வாதிகள் சிலர் கட்சி மாறி பதவி பெறுவர். உங்கள் கைப்பேசியில் வரும் வங்கி சம்பந்தமான தகவல்களை கவனமாகக் கையாளுங்கள். தொழிலாளர்களின் சம்பள விஷயத்தால் செலவு கூடும். இந்த மாதம் முழுவதும் பேச்சில் மிக கவனமாக இருத்தல் வேண்டும்.

Advertisment

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24.

எச்சரிக்கை தேதி: 8, 17, 26.

பரிகாரம்: நீல நிற மலர்கள் தரும் செடிகளை வளர்க்க உதவுங்கள் அல்லது பரிசளியுங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

dd

இந்த மாதம் நீங்கள் நினைத்தே பார்த்திராத ஒரு அதிர்ஷ்டம் நடக்கும். அது வேலை, தொழில், அரசியல், பணவரவு, இளைய- மூத்த சகோதர சம்பந்தம் என எதுவாகவும் இருக்கலாம். திருமணம் நிச்சயமாகும். வருகின்ற வரன் அரசு சார்புடைய வராக அமைவார். இந்த தேதிகளில் பிறந்த குழந்தை களின் தந்தை சொந்தத் தொழில் தொடங்குவார். உங்களுக்கும் தொழிலில் புத்திக் கூர்மையுள்ள பங்குதாரர் அமைவார். குழந்தைகளின் கல்வி பற்றி மனம் சஞ்சலப்படும். வீடு, வாகனம் சம்பந்தமான பிரச்சினையில் புதிய தீர்வு தென்படும். அரசியல் வாதிகள் திடீர் பதவி பெறுவர். பங்கு பத்திரங்களை விற்பனை செய்வீர்கள். பூர்வீக வீட்டைப் பழுது பார்ப்பீர்கள். உங்கள் உடல்நிலையை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டியிருந்தால் செப்டம்பர் முதல் வாரத்திலேயே செய்துகொள்ளவும். தாயின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். அரசு, அரசு சார்புள்ள நிகழ்வுகள் நன்மை தரும். தந்தை நன்மையும் தீமையும் கலந்து தருவார். சமையல் வேலையின்போது கவனம் தேவை. பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் அதில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். உங்கள் மருமகளால் ஒரு மகிழ்வும், ஒரு மன சங்கடமும் கிடைக்கும். திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தால் மிக யோசித்துத் தள்ளிப்போடாமல், இந்த மாதம் நிச்சயம் செய்துவிடுங்கள். இந்த மாதத்தில் சிறப்பான வரன் அமையும் வாய்ப்புள்ளது. களவுபோன அல்லது காணாமல்போன ஒரு பொருள் திரும்ப கிடைக்கும். பணவரவு சரளமாக அமையும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23.

எச்சரிக்கை தேதி: 6, 15, 24.

பரிகாரம்: மல்லிகைச் செடி வளர்க்கவும் அல்லது தானம் தரவும்.

4 ,13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களுக்கு, ஏதேதோ கனவுகள் ஏதேதோ எண்ணங்கள் என சிந்தனை இறக்கை கட்டிப் பறக்கும். நமக்கா இவ்வளவு யோசனை வருகின்றன என்று உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வீர்கள். இதில் 50 சதவிகிதம் ஏறுமாறான எண்ணங்களாகவும், 50 சதவிகிதம் நடைமுறைக்கு ஏற்ற திடமாகவும் இருக்கும். செல்போனில் உங்கள் பதிவுக்கு லைக்குகள் வந்து குவியும். இந்த களேபரத்தில் பணம் செலவிடுவது பற்றி யோசனையே வராது. சிலரது காதல் காசைக் கரியாக்கும். காவல் துறையினருக்கு மாறுதலுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சேவை பாராட்டுப்பெறும். தந்தையால் ஒரு சங்கடம் நேரலாம். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். ஓட்டல் தொழிலில் தள்ளாடிக் கொண்டி ருந்தவர்கள் ஒரு நிலைக்கு முன்னேறுவர். விவசாயிகளின் மாறுபட்ட யோசனை லாபம் தரும். அரசியல் வாதிகள் லாபத்தில் நஷ்டம் காண்பர். சிலருக்கு அரசு தகவல்கள் சார்ந்த பகுதி நேர வேலை கிடைக் கும். கலைஞர்கள் அலைந்து திரிந்து பணம் சம்பாதிப்பர். இந்த தேதிகளில் பிறந்த மாணவர்களுக்கு அரசு ஆதாயம் உண்டு. பொதுவாக இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு மோசமில்லை; நன்மைதான்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23.

எச்சரிக்கை தேதி: 8, 17, 26.

பரிகாரம்: துளசிச் செடியை வீட்டில் வைத்து வளர்த்து வாருங்கள். அதிர்ஷ்டம் பன்மடங்காகும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாத முற்பகுதி செலவைக் கொடுக்கும். தொழில் விரயம் தரும். கௌரவம் குறையும். ஆனால், மாதப் பிற்பகுதியில் இவையனைத்தையும் ஈடுசெய்யும் விதத்தில் பெரும் நன்மை கிட்டும். உங்கள் முழு முயற்சி தொழிலில் ஏற்றம் தரும். பணப்புழக்கம் வெள்ளமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் முகவரி தேடி வந்து அருகில் அமர்ந்துகொள்ளும். அரசியல் வாதிகள் பெரிய நன்மை அடைவார்கள். உங்கள் தொழில் பங்குதாரர் அல்லது நீங்கள் சந்திக்கும் நபர் அல்லது கிடைக்கும் ஒரு தகவல் உங்களுக்கு வில்லனாக மாறக்கூடும்; கவனம் தேவை. காவல்துறையினர் விசார ணைக்கு வருபவரை மெதுவாக அடிக்கவும். இல்லையெனில் பிரளயமாகிவிடும். விவசாயிகளுக்கு இது சுமாரான மாதம்தான். வீடு, வாகனம் சற்று பழுதுபார்க்கும் செலவைத் தரும். வாழ்க்கைத் துணைக்கு நிச்சயமாக வேலை கிடைக்கும். வாரிசுகள் எரிச்சல் தருவர். உங்களுக்கும் கொஞ்சம் மருத்துவச் செலவுண்டு. திருமணப் பேச்சில் தேக்கம் வரலாம். தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் உடையவர்கள் மாதப் பிற்பகுதியில் அதற்கான முன்னெடுப்புகளை ஆரம்பிக்க லாம். மாத முற்பகுதி சிரமமாகவும் பிற்பகுதி லாபமாகவும் இருக்கும்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24.

எச்சரிக்கை தேதி: 9, 18, 27.

பரிகாரம்: அழகுக்காக வளர்க்கப்படும் செடிகளை வளர்க்கலாம் அல்லது யாருக் காவது பரிசளிக்கலாம்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் அரசின் பணம் ஏதோ ஒருவகையில் உங்களிடம் புரண்டு கொண்டிருக்கும். அல்லது உங்களது தந்தை பண உதவி செய்வார். இளைய சகோதரிக் கும் உங்களுக்கும் இடையே கொஞ்சம் மனக் கசப்பு ஏற்படும். மாதப் பிற்பகுதியில் பணவரவு அதிகரிக்கும். பங்கு வர்த்தகம் மிக உயரிய லாபம் தரும். மாதப் பிற்பகுதியில் கலைத்துறையினர் அரசாங்கத்தால் நல்ல லாபம் அல்லது நற்செய்தி பெறுவர். வாழ்க்கைத் துணையால் நன்மையும் தீமையும் கலந்து கிடைக்கும். காவல்துறையினருக்கு கிட்டும் மாறுதல் வருமானம் தருவதுபோல் இருப்பினும் சச்சரவையும் கொடுக்கும். விவசாயிகளுக்கு அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். மூத்த சகோதரரின் உடல் நிலை கவனிக்கப்பட வேண்டும். மாதப் பிற்பகுதியிலிருந்து தொழிலாளர்கள் நிலை ஏற்றம் பெறும். தொழில் வளமும் பெருகும். பேச்சில் கவனம் வேண்டும். இந்த மாதம் உழைப்புக்கேற்ற பணப்பலனைப் பெறலாம். வியாபாரிகள் தங்கள் முதலீட்டை சற்று மாற்றுவார்கள். அரசியல்வாதிகள் பழைய கட்சியிலேயே இருந்திருக்கலாமோ என்று யோசித்து, அந்த கட்சிக்கு தூது விடுவர். மாணவர்களுக்கு அருமையான நேரமிது. அரசின் சலுகை அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். மனை சம்பந்தமான விஷயம் நல்ல முடிவுக்கு வரும். பெண்களுக்கு தொலைபேசி துறைசார்ந்த வேலை கிடைக்கும். பணவரவு மிக்க மாதமிது.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23.

எச்சரிக்கை தேதி: 3, 12, 21, 30.

பரிகாரம்: ரோஜா செடி வளர்க்கவும் அல்லது பரிசளிக்கவும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் மனம் சற்று சஞ்சலமாகவே இருக்கும். பிள்ளைகளின் கல்விநிலை கவலை தரும். வேலையில் எதிர்பாராத உயர்வு ஏற்படும். தொழில் முன்னேற்றப் பாதையில் நடக்கும். உங்கள் பங்குதாரரும் நீங்களும் சேர்ந்து தொழில் எனும் பெருந் தேரை ஓடவைத்து விடுவீர்கள். ஆனா லும் அதிலிருந்து முழுமையான பணவரவு கிடைக்க தாமதமாகும். பூர்வீக சொத்துகளை விற்க ஏற்பாடு செய்வீர்கள். இந்த மாதம் அரசு அனுகூலம் உண்டு. அரசின் சில அறிவிப்புகள் உங்கள் தொழிலுக்கு ஏற்றம் தரும் வகையில் அமையும். அரசு அறிவிக்கும் தள்ளுபடி, கடனுதவி, சலுகைகளை நன்றா கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சில சமயம் உங்கள் தந்தை பெயரில் அரசின் உதவியைப் பெறுங்கள். நோய் கட்டுக்குள் இருக்கும். பெண்களால் சில இடையூறுகள் ஏற்படலாம். வேலை நடப்பதற்கு பெண்கள் மூலம் லஞ்சப்பணம் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. பெண் அரசியல் வாதிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பிறந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வரத் தொடங்குவார்கள். வாழ்க்கைத் துணையால் கௌரவம் கிடைக்கும். உயர் கல்வி மேம்படும். தான தர்ம சிந்தனை மேலோங்கும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

எச்சரிக்கை தேதி: 4, 13, 22, 31.

பரிகாரம்: கற்பூரவல்லிச் செடியை வளர்க்கலாம் அல்லது தானம் தரலாம்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் திருமணம் கைகூடி வரும். அவற்றுள் சில காதல் திருமணமாக அமையும். செலவு சற்று கையைக் கடிக்கும். கைபேசி பழுதாகலாம். பெற்றோர் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். காவல்துறையினர் சிறுதூர மாறுதல் பெறுவர். விவசாயிகள் கைபேசித் தகவல்கள் மூலம் நன்மை பெறுவர். வேலை தேடுவோருக்கு மாதப் பிற்பகுதியில் வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு சம்பந்தமாகவும், சிலருக்கு தந்தையின் மூலமும் கிடைக்கும். சிலர் வேலைக்காக லஞ்சம் கொடுக்கவும் நேரிடலாம். அதற்காக கடன் வாங்கும் சூழலும் உண்டு. வாழ்க்கைத் துணை வியாபாரத்தில் ஈடுபடுவார். களவு போன பொருள் கிடைக்கும். சிலர் பூர்வீகத் தொழிலைத் தொடங்குவார்கள். சிலர் மனைவியுடன் ஆலோசித்து பங்கு பத்திரங்களை வாங்குவார்கள். கலைத் துறையினர் சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். அரசியல்வாதிகள் தங்கள் சேவை அறிவிப்புக்கு அலைபேசியைப் பயன்படுத்து வர். சிலருக்கு மாதப் பிற்பகுதியில் அரசுப் பதவி கிடைக்கக்கூடும். மாணவர்கள் கல்வி சம்பந்தமாக சற்று குழப்பமடைவர். வீட்டு வேலை அல்லது வேறு தொழிலில் வேலை செய்யும் சிலர் சொல்லாமல் ஓடிவிடுவர்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24.

எச்சரிக்கை தேதி: 3, 12, 21, 30.

பரிகாரம்: ஏதேனும் பூஞ்செடிகள் அல்லது பசுமை இலைகள் நிறைந்த வரவேற்பறை செடிகளை வளர்க்கலாம்; தானம் கொடுக்கலாம்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு கண்டிப்பாக வேலை கிடைப் பதால், பண நெருக்கடியிலிருந்து சற்று மீண்டுவிடுவீர்கள். காவல் துறையினர் திடீர் மாற்றம் பெறுவர். அது எதிர்பாராத மேன்மையைத் தரும். இது காவல்துறையினர் மட்டுமல்லாது, இந்த தேதிகளில் பிறந்த வர்கள் அனைவருக்கும் பொருந்தும். குழந்தை விஷயமாக மருத்துவக் கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு இம்மாதம் குழந்தை கருத்தரிக்கும் பாக்கியம் கிடைக்கும். வாடகை வீடு தேடுவோருக்கு நல்ல வீடு அமையும். விவசாயிகள் நஷ்டம் அடைந்திருந்தால் அதிலிருந்து மீண்டு வருவார்கள். இது செப்டம்பர் முதல் வாரத்திற்குப்பின் நடக்கும். மறுமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். உங்களது புதுவிதமான யோசனைகள், உங்கள் வேலைக்கு புதிய பரிமாணம் கொடுக்கும். கல்வித் துறையில் உள்ளவர்களுக்கு சிறந்த நன்மை கிடைக்கும். செய்தி, போக்குவரத்து, தொலைக்காட்சி, குத்தகை, வீட்டுத் தரகர்கள், சிறுதூரப் பயணப் பணியாளர்கள் என இவ்வகையில் வேலை செய்வோர் பதவி உயர்வும் புகழ், வருமானம் போன்றவையும் கிடைக்கப் பெறுவார்கள். கலைத்துறையினர் நிறைய வேலைவாய்ப்பும் புகழும் பெறுவர். பத்திரிகைத் துறை சார்ந்தவர்களுக்கு மிக நல்ல காலகட்டம் இது. பயன்படுத்திக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

எச்சரிக்கை தேதி: 4, 13, 22, 31.

பரிகாரம்: ஜாதிப்பூஞ்செடி, கொடி வளர்க்கவும் அல்லது பரிசளிக்கவும்.

செல்: 94449 61845