செப்டம்பர் மாத ராசி பலன்கள்

/idhalgal/om/september-month-rasipalan

மேஷம்

மாதத் தொடக்கத்தில் இருந்தே உங்களுக்கு புத்திசாலித்தனமான யோசனைகளும், புதிய திட்டங்களும் உருவாகும். அதை நிறைவேற்றுவதில் ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். எதிரிகளை எப்போது, எங்கே மடக்க வேண்டும்- எப்படி வெற்றியை எட்டிப்பிடிக்க வேண்டுமென்று மகாபாரதத்தில் அர்ஜுனனை வழிநடத்திய பார்த்தசாரதி கண்ணனைப்போல, உங்களுக்கு பக்கபலமாக தக்க ஆலோசனை கூற தெய்வமே ஒருவரை அனுப்பலாம். அது நண்பராகவும் இருக்கலாம். மனைவியாகவும் இருக்கலாம். அல்லது குடும்பத்திலுள்ள ஒரு உறுப்பினராகவும் இருக்கலாம். "தெய்வம் மனித ரூபத்தில்' என்பதுதானே பெரியோர் கணிப்பு. அடுத்த மாதம்வரை குரு ராசிக்கு ஏழில் இருந்து ராசியைப் பார்க்கிறார். குரு பார்வையும் உங்களுக்கு ஒரு கவசம்போல! அதிலும் அவர் 9-க்குடையவர். 9-ல் 10-க்குடைய சனி நிற்பதும் தர்மகர்மாதிபதி யோகமாகும். எந்த ஒரு ஜாத கத்திலும் தர்மகர்மாதிபதி யோகம் அல்லது பரிவர்த்தனை யோகம் இருந்தால் அந்த ஜாதகத்துக்கு வீழ்ச்சியே இல்லை! கலைஞர் சொன்னபடி- கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டு மரமாக மிதக்கலாமே தவிர நீரில் மூழ்க நேராது.

ரிஷபம்

கோட்சார கிரகங்களில் சனி உங்களுக்கு எதிர்ப்பாக இருப்பதுடன் குருவும் அனுகூலமாக இல்லை. அட்டமத்துச்சனியும், ஆறாமிடத்து குருவும் உங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளன. அற்புதத் திட்டங்கள் இருந்தாலும் எதையும் செயல்படுத்த முடியாமல் தேக்கமும் குழப்பமும் உண்டாகும். ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப்போட சக்தியற்ற நிலையில் நீங்கள் தவிக்க நேரும். அதாவது கலர் டி.வி., பிரிட்ஜ், ஏ.ஸி. எல்லாம் இருந்தும் கரன்டும் இல்லை; இன்வெட்டரும் இல்லை என்பதுபோல எதையும் "என்ஜாய்' பண்ண முடியாது. சுக்கிரனும் பலவீனமாக இருப்பதால் ஆசைகளும் நிராசைகளாகிவிடும். அதேசமயம் உங்களுடைய அடிப்படைத் தேவைகள் எல்லாம் எந்தவிதத் தடையும் இல்லாமல் பூர்த்தியடையும். அதேபோல பொருளாதாரத்திலும் கஷ்டமில்லை. தேவைக்கேற்ற நேரத்தில் தேவைப்படுமளவு பணப்புழக்கமும் இருக்கும். "மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்பதுபோல இறைவன் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவான். "தாயினும் சாலப் பரிந்தூட்டும் தெய்வம்' என்பது பெரியோர் வாக்கு.

மிதுனம்

மிதுன ராசிக்கு 7-ல் உள்ள சனியும், 5-ல் உள்ள குருவும் உங்கள் ராசியைப் பார்க்கிறார்கள். மிதுனத்துக்கு சனி 9-க்குடையவர்; குரு 10-க்குடையவர். இருவரின் பார்வையும் தர்மகர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்தும். அதனால் உங்கள் ஜாதகத்தில் எப்படிப்பட்ட கெடுதலான தசாபுக்திகள் நடந்தாலும் தற்போதைய கோட்சாரம் அதை நீக்கி இதயத்தை மகிழ்விக்கும். பாலைவனச் சோலையாக தாகம் தீர்க்கும். குருவருளும் திருவருளும் உங்களைத் தேடிவந்து ஆட்கொள்ளும். சமயக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரை திருமண பந்தத்தி

மேஷம்

மாதத் தொடக்கத்தில் இருந்தே உங்களுக்கு புத்திசாலித்தனமான யோசனைகளும், புதிய திட்டங்களும் உருவாகும். அதை நிறைவேற்றுவதில் ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். எதிரிகளை எப்போது, எங்கே மடக்க வேண்டும்- எப்படி வெற்றியை எட்டிப்பிடிக்க வேண்டுமென்று மகாபாரதத்தில் அர்ஜுனனை வழிநடத்திய பார்த்தசாரதி கண்ணனைப்போல, உங்களுக்கு பக்கபலமாக தக்க ஆலோசனை கூற தெய்வமே ஒருவரை அனுப்பலாம். அது நண்பராகவும் இருக்கலாம். மனைவியாகவும் இருக்கலாம். அல்லது குடும்பத்திலுள்ள ஒரு உறுப்பினராகவும் இருக்கலாம். "தெய்வம் மனித ரூபத்தில்' என்பதுதானே பெரியோர் கணிப்பு. அடுத்த மாதம்வரை குரு ராசிக்கு ஏழில் இருந்து ராசியைப் பார்க்கிறார். குரு பார்வையும் உங்களுக்கு ஒரு கவசம்போல! அதிலும் அவர் 9-க்குடையவர். 9-ல் 10-க்குடைய சனி நிற்பதும் தர்மகர்மாதிபதி யோகமாகும். எந்த ஒரு ஜாத கத்திலும் தர்மகர்மாதிபதி யோகம் அல்லது பரிவர்த்தனை யோகம் இருந்தால் அந்த ஜாதகத்துக்கு வீழ்ச்சியே இல்லை! கலைஞர் சொன்னபடி- கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டு மரமாக மிதக்கலாமே தவிர நீரில் மூழ்க நேராது.

ரிஷபம்

கோட்சார கிரகங்களில் சனி உங்களுக்கு எதிர்ப்பாக இருப்பதுடன் குருவும் அனுகூலமாக இல்லை. அட்டமத்துச்சனியும், ஆறாமிடத்து குருவும் உங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளன. அற்புதத் திட்டங்கள் இருந்தாலும் எதையும் செயல்படுத்த முடியாமல் தேக்கமும் குழப்பமும் உண்டாகும். ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப்போட சக்தியற்ற நிலையில் நீங்கள் தவிக்க நேரும். அதாவது கலர் டி.வி., பிரிட்ஜ், ஏ.ஸி. எல்லாம் இருந்தும் கரன்டும் இல்லை; இன்வெட்டரும் இல்லை என்பதுபோல எதையும் "என்ஜாய்' பண்ண முடியாது. சுக்கிரனும் பலவீனமாக இருப்பதால் ஆசைகளும் நிராசைகளாகிவிடும். அதேசமயம் உங்களுடைய அடிப்படைத் தேவைகள் எல்லாம் எந்தவிதத் தடையும் இல்லாமல் பூர்த்தியடையும். அதேபோல பொருளாதாரத்திலும் கஷ்டமில்லை. தேவைக்கேற்ற நேரத்தில் தேவைப்படுமளவு பணப்புழக்கமும் இருக்கும். "மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்பதுபோல இறைவன் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவான். "தாயினும் சாலப் பரிந்தூட்டும் தெய்வம்' என்பது பெரியோர் வாக்கு.

மிதுனம்

மிதுன ராசிக்கு 7-ல் உள்ள சனியும், 5-ல் உள்ள குருவும் உங்கள் ராசியைப் பார்க்கிறார்கள். மிதுனத்துக்கு சனி 9-க்குடையவர்; குரு 10-க்குடையவர். இருவரின் பார்வையும் தர்மகர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்தும். அதனால் உங்கள் ஜாதகத்தில் எப்படிப்பட்ட கெடுதலான தசாபுக்திகள் நடந்தாலும் தற்போதைய கோட்சாரம் அதை நீக்கி இதயத்தை மகிழ்விக்கும். பாலைவனச் சோலையாக தாகம் தீர்க்கும். குருவருளும் திருவருளும் உங்களைத் தேடிவந்து ஆட்கொள்ளும். சமயக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரை திருமண பந்தத்தில் சிக்கிவிடாமல் தடுத்துக் காப்பாற்றி எம்பெருமான் அழைத்துச் சென்றதுபோல, உங்களை இறையருள் வழிநடத்தும். ஏழு வயதில் ஆதிசங்கரர் சன்யாசம் போக தாயின் அனுமதிக்காக முதலை நாடகம் ஆடியதுபோல, உங்கள் எதிர்கால இன்ப வாழ்வுக்காக குடும்ப நிகழ்ச்சிகள் நாடகமாடும். எந்த ஒரு செயலுக்கும் காரணம்- காரியம்- கர்த்தா என்னும் மூன்றும் இயங்கும். அது நல்லதாக இருந்தாலும் சரி; கெட்டதாக இருந்தாலும் சரி- அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதன் தத்துவம்தான் கீதை உபதேசம்! எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

கடகம்

கடக ராசியில் ஜென்ம ராகுவும், ஏழில் சப்தம கேதுவும் இருக்க, குரு 4-ல் அமர்ந்து 8-ஆம் இடம், 10-ஆம் இடம், 12-ஆம் இடங்களைப் பார்க்கிறார். தொழில், வாழ்க்கை, பொருளாதாரத்தில் பாதிப்பு ஏதும் இருக்காது. அதேசமயம் சம்பளத்துக்கு வேலை பார்த்தாலும் அல்லது சொந்தத் தொழில் செய்தாலும் அல்லது அரசுப்பணியில் இருந்தாலும் பணிச்சுமை அதிகமாக இருக்கும். 8.00 மணி நேரத்துக்கு பதிலாக 12.00 மணி நேரம் வேலை செய்தாலும் ஓவர் டைம் சம்பளமோ ஊதியமோ போனசோ கிடைக்காது. எல்லாப் பிரச்சினைகளிலும் வேலைகளிலும் டென்ஷன் அதிகமாகவே இருக்கும். ஆனாலும் 5-க்குடைய செவ்வாய் பலமாக இருப்பதால் மனம் சோர்வடையாமல் பணியாற்றலாம். சில நேரம் சில இனங்களில் லாபம் குறைவாக அமையும். ஆனால் நஷ்டப்பட இடமில்லை. திருமண வயதில் உள்ளவர்களுக்கு (பருவப்பெண்கள்- பருவ ஆண்கள்) திருமணம் தள்ளிப்போகும்; தடையாகும். அப்படிப்பட்டவர்கள் ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்துகொள்வது அவசியம்! இது திருமணத்தடை நீங்குவதற்கு மட்டுமல்ல; நல்ல மணவாழ்க்கை அமைவதற்கும்தான்! அலைச்சல் திரிச்சல் இருந்தாலும் ஆரோக்கியம் பாதிக்காது.

சிம்மம்

hanuman12-ல் ராகுவும், 6-ல் கேதுவும் இருக்கிறார்கள். பாவ கிரகங்கள் பாவ ஸ்தானத்தில் இருப்பது நல்லது. அதனால் கெடுதல்கள் விலகும். நல்லது நடக்கும். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பார்கள். சிலசமயம் மற்றவர்கள் உங்களுக்குச் செய்யும் கெடுதல்களே நல்லதாக மாறிப் பலனளிக்கும்! குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு இக்காலம் நற்காலமாகும். "ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு வாடியிருக்குமாம் கொக்கு' என்பதுபோல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு தற்போது யோகப்பலனாக நடக்கும். ஜாதக தசாபுக்திகள் அனுகூலமாக இருந்தால் அதிர்ஷ்டமும் யோகமும் உங்களைத் தேடிவந்து அரவணைக்கும். சிலர் வெளிநாடு அல்லது வெளியூர் வேலைக்கு முயற்சிக்கலாம். வெற்றியுண்டாகும். அதுமட்டுமல்ல; வீடு, மனை, வாகன யோகமும் சிலருக்கு அமைய வாய்ப்புண்டு. 5-ஆம் இடத்துச்சனி 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சிலருக்கு திருமணத்தடை, தாமதமும், சிலருக்கு வாரிசு யோகத்தடை, தாமதமும் ஏற்படலாம். ஜாதகரீதியான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம்.

கன்னி

கன்னி ராசிக்கு 11-ல் ராகுவும், 5-ல் கேதுவும் இருக்க, 4-ல் அர்த்தாஷ்டமச் சனி இருப்பதாலும் ராசியைப் பார்ப்பதாலும் சில காரியங்கள் நினைத்தவுடன் நினைத்தபடியே நடந்துவிடும். சில காரியங்கள் காரண காரியம் புரியாமல் தடையாகும்; தாமதமாகும். சில காரியங்கள் எதிர்பாராமல் எதிர்மறையாக நிறைவேறும். இதைத்தான் ஒரு புலவர் "ஒன்று நினைக்கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்; அன்றி அதுவரினும் வந்தெய்தும்; ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும் எனையாளும் ஈசன் செயல்' என்று பாடினார். "என் செயலால் ஆவது ஒன்றில்லை இனித்தெய்வமே யாவும் உன் செயலே என உணரப்பெற்றேன். நன்றே வரினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றுமில்லை' என்று மனதைப் பக்குப்படுத்திக்கொண்டால் வெற்றியும் தோல்வியும் சமமாகிவிடும். வெற்றிக்காக மகிழ்ச்சியும் அடைய வேண்டாம். தோல்விக்காக வருத்தப்படவும் தேவையில்லை. ஒரு துன்பம் பெரிதாக வருத்தம் தரும்போது அதைவிட பெரிய துன்பம் வரும்போது பழைய துன்பம் சிறிதாக மாறிவிடும். அதாவது ஒரு கோடு அருகில் அதைவிடப் பெரிதாக கோடு போட்டால், பழைய கோடு சின்னக் கோடாகிவிடும்.

துலாம்

துலா ராசியிலுள்ள ஜென்ம குரு 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்ப்பது நன்மை! உங்கள் எண்ணம்போல- விருப்பம்போல எல்லாம் நிறைவேறும். அதில் ஒரு திருத்தம். நியாயமான எண்ணங்களும் ஆசைகளும் நிறைவேறும். தகுதிக்கு மீறிய ஆசைகளை விரட்டியடிக்க வேண்டும். பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்து விடக்கூடாது. எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுத்து பின்பு அதைச் செயல்படுத்த வேண்டும். "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்று வள்ளுவர் சொல்லுவார். ஏனென்றால் 10-ஆம் இடத்து ராகு தொழில், வாழ்க்கை இவற்றில் உங்களைக் குழப்பத்துக்கு ஆளாக்கலாம். அதேசமயம் தொழில் காரகன் (ஜீவனகாரகன்) சனி 3-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த குரு ஜென்மத்தில்! "ஜென்ம ராமர் சீதையை வனத்தில் சிறை வைத்தது' என்பது பாடல். எனவே உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் உங்கள் மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும். மற்றவர்களைத் திருப்திப்படுத்த செயல்பட வேண்டாம். மற்றவர்களின் விமர்சனங்களையும் பொருட்படுத்த வேண்டாம். "வாழ்ந்தாலும் ஏசும்- தாழ்ந்தாலும் ஏசும்- வையகம் இதுதானடா' என்ற பழைய திரைப்படப்பாடலை நினைவுகூரவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி 2020 வரை உள்ளது. இதில் போன மாதம் (ஆகஸ்டுவரை) சனி வக்ரமாக இருந்தார். இப்போது வக்ர நிவர்த்தியாகிவிட்டார். ராசிநாதன் செவ்வாயும் வக்ரம். செப்டம்பர் 6-ஆம் தேதி அவரும் வக்ர நிவர்த்தியாகிறார். எனவே முழுமையான ஆரோக்கியம் உண்டாகும். எலும்பு, நரம்பு சம்பந்தமான தொந்தரவுகள் இருந்தால் அவையும் முழுமையாக விலகும். சிலருக்குப் பயணங்களினால் பயனும் பலனும் உண்டாகும். சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். வேறுசிலர் சொந்தத் தொழில் அல்லது கூட்டுத் தொழில் ஆரம்பிக்கலாம். தனியார் பணியில் இருப்போர் வேறு உயர்ந்த வேலைக்கு மாறலாம். திருப்தியாக சம்பாதிக்கலாம். அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பென்ஷன் தொகையை மிச்சப்படுத்தி, புதிய கடன் வாங்கி புதிய தொழில்துறையில் முதலீடு செய்யலாம். ஏற்றுமதி- இறக்குமதி தொழில் அல்லது கமிஷன் ஏஜென்ஸி தொழில் யோகமாக இருக்கும். உங்கள் பேரிலோ அல்லது மனைவியின் பேரிலோ தொழில் ஆரம்பிக்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. ராசிநாதன் குரு 11-ல் இருக்கிறார். 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 3-ஆம் இடங்களைப் பார்க்கிறார். எனவே குரு நிற்கும் இடமும் பார்க்கும் இடமும் நல்ல இடங்கள் என்பதால் உங்களுக்கு நல்லதே நடக்கும். ராகு- கேது தசாபுக்தி நடப்பதால் சிலருக்கு ஆரோக்கியக்குறைவும் வைத்தியச்செலவும் ஏற்படும். ஜாதக தசாபுக்திகள் சரியாக அமையாவிட்டால் ஜென்மச்சனி பலனாக எந்த வைத்தியத்திலும் நோய் கட்டுப்படாமல் தொல்லை தரும். சிலர் செய்வினைக் கோளாறு காரணமாக உடம்பைப் படுத்துகிறதோ என்று சந்தேகப்படலாம். செய்வினைக் கோளாறால் ஒருவரை சங்கடப்படுத்த முடியும் என்பது நம்ப முடியாத சமாச்சாரம். அவரவர் செய்த வினைதான் அவரவரைப் படுத்துமே தவிர- வேறு இல்லை. ஆனால் திருஷ்டிக் கோளாறு- கண் திருஷ்டி பாதிக்கும். உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது. கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பமுடியாது என்பதை நம்பத்தான் வேண்டும். அதற்குத் தேவையான பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.

மகரம்

ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்ப்பதோடு, சனி நின்ற வீட்டதிபன் 3, 12-க்குடைய குரு 10-ல் நிற்கிறார். "10-ல் குரு பதிமாறச் செய்யும்; பதவி மாறச் செய்யும்' என்பது விதி. எனவே ஊர் மாற்றம், இட மாற்றம், தொழில் மாற்றம், பதவி மாற்றம், வீடு மாற்றம் போன்ற மாறுதல்கள் ஏற்படலாம். ஒருசிலருக்கு நாடு மாற்றமும் ஏற்படலாம். வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும்; கைநிறைய சம்பாதிக்க வேண்டும்; சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்று கனவு கண்டவர்களுக்கு இக்காலம் நற்காலம். ஏழரைச்சனி- விரயச்சனி உங்கள் ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றி வைப்பார். நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன தெரியுமா? வசதியிருப்பவர்கள் காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) சனி சாந்தி ஹோமம், நவகிரக ஹோமம் உள்பட 18 வகையான ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம். வசதியற்றவர்கள் திருத்துறைப்பூண்டி அருகில் திருக்கொள்ளிக்காடு சென்று கலப்பை ஏந்திய பொங்கு சனீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்யலாம். அல்லது அவரவர் வயதுடன் ஒன்றுசேர்த்து, அந்த எண்ணிக்கை மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, மண்விளக்கில் நெய் நிரப்பி மிளகுப்பொட்டலத்தை நனைத்து சனிக்கிழமை தோறும் பைரவர் சந்நிதியில் தீபம் ஏற்றலாம்.

கும்பம்

ராசிநாதன் சனி 11-ல். அவருக்கு வீடு கொடுத்த குரு அதற்கு 11-ல் இருந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடிய மாதிரி உங்களுக்கு எந்தக் குறையும் வராது. 6-ல் ராகு, 12-ல் கேது. வீண்விரயங்கள் விலகி சுபவிரயங்களாக மாறும். ஒரு பெண்மணி எல்லாரிடமும் வாரச்சீட்டு, மாதச்சீட்டு என்று வசூல்செய்து வேறொரு நபருக்கு (ஏஜெண்டுபோல இருந்து) பணம் பட்டுவாடா செய்தார். அதில் ஒரு அம்மாள் சீட்டு முடிந்ததால் அவரிடம் சீட்டுத் தொகையை கண்டித்துக்கேட்க, அவரும் வெளியில் ஏற்பாடுசெய்து கொடுத்துவிட்டார். மற்றவர்களுக்கு சீட்டுப் பிடித்தவர் பணம் பட்டுவாடா செய்யாமல் இழுத்தடித்து- கடைசியில் தரமுடியாது என்று நிமிர்ந்துவிட்டார். 50 பேர்களுக்குமேல் லட்சக்கணக்கில் பாக்கி விழுந்துவிட்டது. சீட்டு நடத்தியவர் தலைமறைவு ஆகிவிட்டார். சீட்டு வாங்கிக் கொடுத்தவர் மாட்டிக்கொண்டார். கண்டித்து வசூல் செய்தவர் தப்பிவிட்டார். குரு பார்வை பகையை ஏற்படுத்தினாலும் பணத்தை வாங்கித்தந்தது. ராகு- கேது பலன்- சீட்டுப் போட்ட மற்றவர்களும், வசூல் செய்துகொடுத்த அம்மணியும் சிக்கிக்கொண்டார்கள். இப்படி இழப்பு ஏற்படாவிட்டால் வேறுவகையில் நஷ்டம் வந்திருக்கும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு (அக்டோபர்- 4 வரை) 8-ல் இருக்கிறார். 10-ல் உள்ள சனி ஆகஸ்டு மாதம் (போன மாதம்) வக்ர நிவர்த்தியாகிவிட்டார். 8-ல் குரு, 10-ல் சனி வக்ரம், 5-ல் ராகு, 11-ல் கேது. இந்த கோட்சாரம் உங்கள் வாழ்க்கையில் சுனாமி வந்த மாதிரி! இதில் சனி போன மாதம் வக்ர நிவர்த்தியானது பாதி நிவர்த்திக்கு சமம்! (பாதிக்கிணறு தாண்டிய மாதிரி). அடுத்த மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு முழு நிவர்த்தி! யோகம்தான்! கொடுக்கிற தெய்வம் கூரையைப் பொத்துக்கொண்டு கொட்டும் என்பதுபோல, 9-ல் வரப்போகும் குரு உங்கள் ராசியைப் பார்க்கப் போவதால் உங்கள் காட்டில்தான் மழை பொழியப் போகிறது. அதுவரை பொறுமையோடு, நம்பிக்கையோடு காத்திருங்கள். நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு! அதன் அறிகுறி இந்த மாதமே உங்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும். சூரியன் உதயமாவதற்கு முன்பே விடியல்- வைகறைப் பொழுது- கீழ்வானம் சிவப்பது போல அறிகுறி தெரியும். நம்பிக்கை உதயமாகும். நேரம் வரும்போது எல்லாம் தானாகக் கூடி வரும்; நெருங்கிவரும். கஷ்டம் கஷ்டமாகவே இருக்காது. இரவு இரவாகவே இருக்காது. எல்லா இரவுகளும் விடியத்தானே வேண்டும்.

Om010918
இதையும் படியுங்கள்
Subscribe