1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சூரியன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் பல நன்மைகளை அடையப் போகிறீர்கள். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும். சுபச்செய்திகள் நிறைந்த மாதம். இதுவரை இழுபறியாக இருந்த காரியங்களும் நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரும். ஆனால் நீங்கள் அதனைப் பெரிதுபடுத்தமாட்டீர்கள். தொழிலதிபர்கள் நிர்வாகத்திலுள்ள குளறுபடிகளை கவனித்து உடனுக்குடன் மாற்றம் செய்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் அளவோடு கொள்முதல் செய்தால் அதிக லாபத்தை அடையலாம். அளவுக்கதிகமான கொள்முதல் நஷ்டத்தைத் தரும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு மறதி அதிகமாகலாம். எனவே கவனமாக செயல்பட்டால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். வீட்டுப் பெண்மணிகள் பிள்ளைகள் வகையில் செலவு கூடுவதால் அவதியுறலாம். அதற்குத் தகுந்தாற்போல் பணவரவுகள் கணவர்மூலம் வரும். மாணவ- மாணவியர் ஆர்வத்துடன் படிப்பார்கள். மனதுக்குப் பிடித்த பள்ளிகளில் கல்வி பயில்வார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8. 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு;
சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். எந்தவொரு காரியமும் அதிர்ஷ்டத்தால் கைகூடாது. நீங்கள் கவனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியடைய முடியும். அதிக எதிர்பார்ப்புகளை மனதில் கொள்ளக்கூடாது. யாரை முழுமையாக நம்புகிறீர்களோ அவர்களே உங்களுக்கு இடையூறு செய்வார்கள். அரசு ஊழியர்கள் தங்களது சொந்த விஷயங்களை அடுத்தவரிடம் கூறாமலிருப்பது நல்லது. உங்களிடமுள்ள இயலாமையே சிரமத்தைக் கொடுத்துவிடும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் போடும்போது நேரடி கவனம் செலுத்தினால் லாபம் பெருகும். நஷ்டத்தைத் தவிர்க்கலாம். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர் வரவால் லாபம் பெருகும். சரக்கு தட்டுப்பாடு வரும். கூடுதலாகக் கொள்முதல் செய்யலாம். தடைப்பட்டு வந்த சுபகாரியம் கைகூடும். வேலைதேடி வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிநாட்டுப் பயணம் தொடரும். இளைஞர்கள் இந்த மாதம் முயற்சித்தால் ராணுவம் மற்றும் இதர துறைகளில் நினைத்தபடி வேலைவாய்ப்பு கிட்டும். அரசியல் செய்வோர் தலைமையின் பாராட்டைப் பெறுவார்கள். தலைமையின் அறிவிப்புகள் உங்களை மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைக்கும்.
அதிர்ஷ்ட தேதி: 2, 11, 20, 29; 14; 7,

அதிர்ஷ்ட தேதி: 2, 11, 20, 29; 14; 7, 25.
தவிர்க்கவேண்டிய தேதி: 8, 26; 9, 18.
வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
குருவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சுயசிந்தனை உள்ளவர். மற்றவர்கள் சொல்வதை நம்பமாட்டீர்கள். எல்லா காரியத்தையும் இந்த மாதம் நேரடி கவனத்தில் செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி காண்பீர்கள். மாணவ- மாணவியர் நினைத்தபடி உயர்கல்வி கைகூடும். வங்கிக்கடனும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழிலதிபர்கள் தொழிலாளர்களின் ஒற்றுமையாலும் உழைப்பாலும் அதிக லாபம் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு இதுவரை மந்தமாக இருந்த வியாபாரம் கூடும். பழைய பாக்கிகள் கேட்காமலேயே வசூலாகும். அரசு ஊழியர்கள் சிலர் நினைத்தபடி இடமாறுதலைப் பெற்று, குடும்பத்தோடு வேறு நகரம் செல்வார்கள். ஒருசிலருக்கு இதுவரை இருந்து வந்த வேலைத்தடை நீங்கி, மீண்டும் வேலையில் சேர்வார்கள். கடிதம்மூலம் நல்ல தகவல்கள் வந்துசேரும். மனைவிவழியில் வரவேண்டிய சொத்துகள் கிட்டும். மனைவியால் குடும்பம் நிமிர்ந்து நிற்கும். வீட்டில் சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும். அரசியல் செய்வோருக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். பெற்றோர்களின் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டும். உடனடி சிகிச்சை செய்தால் அதிக செலவிலிருந்து தப்பிக்கலாம். வெளிநாடு சென்ற பிள்ளைகள் பெற்றோர் எதிர்பார்த்தபடி வந்து சேர்வார்கள். வங்கி சேமிப்பு உயரும்.
அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 29, 4. 13, 22, 31; 6; 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
ராகு பகவான் ஆதிக்கம் பெற்ற நீங்கள் அஞ்சா நெஞ்சம் உள்ளவர்கள். அதற்கேற்றாற்போல் இந்த மாதம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தடை, தாமதங்கள் ஏற்பட்டாலும் காரியத்தை முடிப்பீர்கள். இதுவரை வராம”லிலிருந்த பூர்வீக சொத்துகள் வந்துசேரும். வழக்குகள் வெற்றிதரும். பெற்றோர் சுகவீனம் செலவைக்கூட்டும். உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடுவர். தடைப்பட்டு வந்த சுபகாரியம் திடீரென நடக்கும். உயர்கல்விக்குப் பிள்ளைகளை அனுப்பும் திட்டம் நிறைவேறும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் போடும் காலம். எதிர்பார்த்தபடி ஒப்பந்தம் லாபம் தரும். தொழிலாளர்களின் ஒற்றுமை தொழிலதிபர்களுக்கு நன்மை தரும். வியாபாரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களில் அதிக லாபம் பெறுவர். திருமணமான ஒருசிலருக்கு மேலும் ஒரு திருமணம் திடீரென நடக்கலாம். அதனால் காவல்துறை நடவடிக்கையை சந்திக்கவும் நேரலாம். அரசுப் பணியாளர்களின் வேலைப்பளு கூடும். ஆனால் மேலதிகாரிகளின் ஆதரவு பூரணமாகக் கிடைக்கும். இதுவரை வராமலிலிருந்த நிலுவைத் தொகை கேட்காமலே வந்துசேரும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். உங்களை நேசித்த ஒருவரைப் பிரியவேண்டிய வரலாம். அரசியல் லாபம் தராது. தடைகளைத் தரும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் இந்த மாதம் எதிர்பாராத தனவரவுகளைப் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலிலில் ஈடுபடுபவர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். பணிநீக்கம் போன்ற தண்டனையை அடைந்த பணியாளர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். முயற்சி வீணாகாது. அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகத்தில் உடன்பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் சிரமம் வர வாய்ப்புள்ளது. தொழிலாளர்கள் பிரச்சினையால் தொழிலதிபர்கள் சிரமத்தை அடையலாம். லாபம் குறையும். புதிய தொழில்களைத் துவங்கும்முன் “அவசியம்தானா’ என்று நன்கு யோசித்து முடிவெடுக்கவும். வியாபாரிகளுக்கு சக வியாபாரிகளின் போட்டியால் லாபம் குறையும். கடும்போட்டிகளைத் தவிர்த்தால் நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்ளலாம். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்து வாழும் தம்பதியர் திடீரென ஒன்றுகூடுவார்கள். இனி பிணக்குகளே வராது. விவாகரத்து கோரியவர்கள் வழக்கை வாபஸ் பெறுவார்கள். பெற்றோர்கள் சேர்த்துவைத்தது தக்கசமயத்தில் உதவும். பெண்கள் சிலர் விசித்திரமான ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.
வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்த உங்களது செயல்பாடுகள் மற்றவர்கள் வியக்கும்வண்ணம் இருக்கும். உயர்கல்வி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து பாராட்டைப் பெறுவார்கள். விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தில் உயர்வார்கள். உயர்நிலையாளர்கள் பாராட்டுவார்கள். அதற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைப்பீர்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு, அவரவர் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும். பெற்றோர்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். திடீர் சுகவீனம் ஏற்பட வாய்ப்புள்ளது. மகளிர் பதவி உயர்வு பெறுவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். வீடுகட்டும் திட்டம் நிறைவேறும். பிரிந்து வாழும் கணவன்- மனைவி கூடுவார்கள். இதுவரை பிரிந்து வாழ்ந்த பிள்ளைகள் பெற்றோர்களைத் தேடிவருவார்கள். மாமியார்- மருமகள் சண்டை சுமுகமாகும். தொழிலதிபர்கள் திட்டமிட்டபடி தொழிலை விரிவுபடுத்துவார்கள். வியாபாரிகள் கொள்முதலிலில் அதிகலாபம் பெறுவார்கள். கணவன்- மனைவி பிணக்குகள் வந்து நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடை, ஆபரணம், பொருட்கள் வாங்கும் திட்டம் நிறைவேறும். உயர்கல்வி பயில எடுத்த முயற்சிப்படி மாணவ- மாணவியருக்கு இடம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.
வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
நீங்கள் கேது ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த மாதம் வயது வந்த பிள்ளைகளுக்கு தடைப்பட்டுவந்த சுபகாரியம் இனிதே நிறைவு பெறும். தங்கள் பெண்கள் வயதுக்கு வராமல் நாள் கடக்கிறதே என்று ஏங்கும் பெற்றோர்கள் கவலை தீர பெண்கள் ருதுவாகும் மாதம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். எந்த முடிவுகளையும் தெளிவாக எடுப்பீர்கள். அரசு ஊழியர்கள் சிலர் திடீர் இடமாறுதலை அடைவார்கள். அது நன்மையாகவே நடக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வந்துசேரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையலாம். அதனால் நேரம் பார்க்காமல் கடினமாக உழைக்கவேண்டிய வரும். மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி வழியில் உருவான கருத்து வேறுபாடுகள் நீங்கி, மனைவிவழி சொத்துகள் வந்துசேரும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகள் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்திக்கொள்ள உகந்த மாதம். தடை, தாமதங்கள் விலகும். வியாபாரி கள், சகவியாபாரிகளின் போட்டியால் சில சங்கடங்களை சந்திக்கலாம். சிறு வியாபாரிகளுக்கு போட்டி வியாபாரத்தில் லாபம் பெருகும். ஒருசில மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர்கல்வி கைகூடும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.
தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.
வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சனி பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் துடிப்புடன் செயல்படும் மாதம். இதுவரை உங்களைப் புறங்கூறித் திரிந்தவர்கள் இனி உங்களைத் தேடிவருவார்கள். நண்பர்கள் எப்போதும்போல உதவியாக இருப்பார்கள். மனைவியின் ஒற்றுமைக்குறைவு எப்போதும்போல தொடரும். ஆனால் பிரிவு வராது. பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். அவர்கள் இனி தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்வார்கள். அரசு ஊழியர்களுக்கு இதுவரை அரசாங்கத்தில் கிடைக்காத அனைத்து சலுகைகளும் தடையின்றிக் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். வெளியூர்ப் பயண திட்டம் நிறைவேறும். சிறுதொழில் புரிவோர் நினைத்தபடி லாபத்தைப் பெறலாம். அரசு சலுகைகள் கிடைக்கும். சகோதர வழிகளில் இருந்து வந்த பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். ஷேர்மார்க்கெட் லாபத்தைத் தரும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு உற்சாகத்தைத் தரும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் சுமுகமாக முடியும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகப் பணி செய்பவர்கள் சமுதாயத்தில் மக்களால் பாராட்டப்படுவார்கள். அரசியல்வாதிகளின் உயர்வில் தடையாக இருந்த சக நண்பர்கள் விலகிச் செல்வார்கள். தலைமையினால் போற்றப்படுவார்கள். பிரிந்த கணவன்- மனைவி பேச்சுவார்த்தையின்றி ஒன்றுசேர்வார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறுவார்கள். ஏமாற்றம் வராது.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.
வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
நீங்கள் செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த மாதம் அரசுப் பதவிக்கான தேர்வெழுதியவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். மாதம் முழுவதும் மனம் இனம்புரியாத மகிழ்ச்சியில் லயித்திருக்கும். நினைத்தபடி வரன்கள் அமையும். திருமணமான தம்பதியர் வெளியூர், வெளிநாடு சென்று வருவார்கள். அரசுப்பணியில் உள்ளவர்கள் பதவி உயர்வையும், உயரதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள். பிள்ளைகளின் உயர்கல்வி திட்டமிட்டபடி கிடைக்கும். சிலரது சொத்துகளில் இருந்துவந்த தடைநீங்கி லாபம் கிடைக்கும். மனைவிவழியிலும் சொத்து கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். லாபம் கூடும். வியாபாரிகளுக்கு வியாபாரம் கூடும். பணியாளர்கள் வாக்குவாதம் செய்யக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். கடல் வாணிபம் செய்யும் வியாபாரிகள் நல்ல லாபத்தை அடைவார்கள். ஷேர்மார்க்கெட் செய்வோர் ஏற்றம் பெறும் காலம். வெளிநாட்டில் பிழைப்பு தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். பெற்றோர்வழியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். குலதெய்வ வழிபாடு தடையின்றி நடக்கும். கலைத்துறையில் உள்ளோர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்வியை அடைவார்கள். அரசு சலுகைகள் கிடைக்கும். மகான்களின் தரிசனம் கிட்டும்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.
வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.