மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் 7-ஆம் தேதிமுதல் 6-ஆமிடமான கன்னிக்கு மாறுகிறார். செவ்வாய் 8-க்கும் உடையவராவதால் அவர் 6-ல் மறைவது நல்லதுதான். விபரீத ராஜயோகத்துக்கும் இடமுண்டு. 10-ல் சனி வக்ரம் பெற்று 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். ராசிநாதனும் 12-ஆமிடத்தைப் பார்க்கி றார். தொழில்துறையில் சில முதலீடு மற்றும் செலவுகள் ஏற்படலாம். உழைப்பும் சற்று கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரவகையில் ஒத்துழைப்பு உண்டாகும். முன்னேற்றமும் கூடும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். 7-ஆம் தேதிமுதல் 7-க்குடைய சுக்கிரன் 7-ல் ஆட்சி; ஜென்ம ராசியைப் பார்க்கிறார். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். குரு சுக்கிரனைப் பார்க்கிறார். சுபமங்கள காரியங்கள் நிறைவேறும்.

ss

ரிஷபம்

இம்மாதம் 7-ஆம் தேதிமுதல் ரிஷப ராசிநாதன் சுக்கிரன் நீசம் தெளிந்து துலாத்தில் ஆட்சி பெறுகிறார். 6-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும், அவர் ராசிநாதன் என்ற அடிப்படையில் மறைவு தோஷம் பாதிக்காது. ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு இடமுண்டு. எதிர்பாராத வகையில் பல நல்ல காரியங்கள் நடைபெறும். பொருளாதாரத்தில் நிறைவுண்டாகும். 10-ல் குரு வக்ரம். உத்தியோகத்தில் பதவி மாற்றம், இடமாற்றம் வரலாம். ஒருசிலருக்கு உத்தியோக மாற்றம் கூட ஏற்படலாம். 7, 12-க்குடைய செவ்வாய் 5-ல் (2-ஆம் தேதிமுதல்) மாறுகிறார். 5-க்குடைய புதன் ஆட்சி. சிலருக்கு வெளியூரில் இருந்து வேலைக்கு அழைப்புகள் வரலாம். குடும்பத்தில் திருமணம், சடங்கு போன்ற வைபவங்கள் நடைபெறலாம். தந்தைவழி உறவில் சிலருக்கு விரிசல், மனக்கிலேசம் ஏற்பட இடமுண்டு. தொழிலில் புதியவர்களை நம்பி பண முதலீடு செய்யவேண்டாம்; கவனமுடன் இருப்பது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சி, உச்சம். தொட்டது துலங்கும் பட்டது துளிர்க்கும். பொதுவாக அட்டமச்சனியில் தொட்டது துலங்காது என்பது ஜோதிட மொழி. ஆனால் இங்கு ராசிநாதன் ஆட்சி, உச்சம் என்ற அடிப்படையில் பாதிப்புகள் ஏற்படாது என்று நம்பலாம். ஒருசிலர் சொந்த வீடு அல்லது மனை வாங்கும் திட்டத்தைப் பற்றி சிந்திக்கலாம். 10-க்குடைய குரு 9-ல் நிற்க, தர்மகர்மாதிபதி யோகம் செயல்படுவதால் அது சாத்தியமாகும். அதற்குண்டான கடன் முயற்சிகளும் கைகூடும். தவிர குரு ராசியைப் பார்க்கிறார். நாணயம் கெடாது. குரு 14-ஆம் தேதிமுதல் மகரத்திற்கு மாறுகிறார். 2-ஆமிடம், 4-ஆமிடம், 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஆகவே, மேற்கூறிய பலன்கள் துரிதமாக நடைபெற வழிவகைகள் பிறக்கும். வருமான வரவு திருப்தி தரும். சுபவிரயங்களும் அதிகரிக்கும். 4-ல் ஆட்சிபெறும் புதன் 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். தொழில் இயக்கம் கெடாது.

கடகம்

கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் ஆட்சி. குடும்பத்தில் மதிப்பு, மரியாதைக்குக் குறைவிருக்காது. ஒருசிலருக்கு வீட்டில் தாயார்வழியில் மனச்சங்கடம், பூசல்கள் தோன்றினாலும், 4-ஆமிடத்தை குரு பார்ப்பதால் விரிசல்கள் ஏற்படாது. 10-க்குடைய செவ்வாய் 7-ஆம் தேதிமுதல் 3-ல் மறைவு. என்றாலும் ஆட்சி, உச்சம்பெற்ற புதன் இணைவதால் தொழில்துறையில் ஏற்ற- இறக்கங்கள் காணப்பட்டாலும் பாதிப்புக்கு இடமில்லை. ஒருசிலருக்கு கைக்கு வந்த வாய்ப்புகள் செயல்படாமல் நின்றுகொண்டிருக் கலாம். 9-க்குடைய குரு 7-ல் மாறி (மரகத்தில்) ராசியைப் பார்க்கும் காலம் நின்றுபோன காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்புடன் செய்து நற்பெயர் எடுக்கலாம்; நாணயம் கெடாது. துணிந்து சிலமுடிவுகள் எடுத்து மற்றவர் களை ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம். சந்தோஷங்களும் கிடைக்கும். குறுக்கீடுகள் விலகும்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் புதன் ஆட்சி. ராசிக்கு குரு பார்வை மாத முற்பகுதிவரை கிடைக்கி றது. "நானே ராஜா நானே மந்திரி' என்பதுபோல் உங்களு டைய செயல்பாடுகள் அமையும். 2-க்குடைய புதனும் ஆட்சி, உச்சம். பொருளா தாரத்தில் தாராள வரவு- செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி கள் தென்படும். கொடுக்கல்- வாங்கல் முயற்சிகள் கைகூடும். 8-க்குடைய குரு 14-ஆம் தேதிமுதல் 6-ல் மாறுகிறார். அவர் 2, 10, 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். தொழில் மேன்மையும், புதிய ஒப்பந்தங்களும் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுயதொழில் முயற்சியில் ஆர்வம் காட்டலாம். பூர்வீக சொத்துகளைப் பிரித்துக்கொள்வதில் இருந்த தடைவிலகி சுமூகத் தீர்வு உண்டாகும். நண்பர்களின் உதவியும் ஒத்தாசையும் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் ஆட்சி, உச்சம். புதன் 10-க்குடையவர். ஜென்ம ராசியில் உச்சம் பெறுவதால் தொழில் துறையில் இருந்துவந்த தடைகள் விலகும். நின்றுபோன சுயதொழில்கள் மீண்டும் இயங்கும் வாய்ப்புகள் அûயும். அதேநேரம் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய உத்தியோக வாய்ப்பும், உத்தியோக மாற்றமும் ஏற்படலாம். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். 12-ல் சூரியன் ஆட்சி. அரசு விஷயங்களில் சில விரயங்களைச் சந்தித்துதான் காரியம் சாதிக்கவேண்டும். 14-ஆம் தேதிமுதல் குரு மீண்டும் மகர ராசிக்கு மாறி கன்னி ராசியைப் பார்க்கி றார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றலாம். அலைச்சல்களும் அலைக்கழிப்புகளும் விலகும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீரும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை ஏற்படலாம். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை கள் மறையும். தீர்வுண்டாகும். பிள்ளைகளுக்கு நல்லவை நடக்கும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசியில் ஆட்சி பெறுகி றார். குரு ஜென்ம ராசியைப் பார்க்கி றார். தொட்ட காரியங்கள் வெற்றிபெறும். தொல்லைகள் தந்த எதிரிகள் விலகுவர். 2, 7-க்குடைய செவ்வாய் 7-ஆம் தேதிமுதல் 12-ல் விரயத்தில் மாறுகிறார். புதன் ஆட்சி, உச்சம். குடும்பச்சுமை சற்று கூடலாம். 14-ஆம் தேதிமுதல் குரு மகர ராசிக்கு மீண்டும் மாறி 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். 4-ஆமிடம் தாய், சுகம், வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட ஸ்தானம். அவற்றில் நற்பலன்கள் உண்டாகும். தெய்வ வழிபாடு பலன் தரும். உடன்பிறந்தவர்களால் நன்மையுண்டு. தந்தைவழி உறவில் பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். கொடுக்கல்- வாங்கலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரும். குரு 10-ஆமிடத்தைப் பார்க்கும் காலம் தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு போன்ற பலன்கள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 11-ஆமிடமான லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். அங்கு 11-க்குடைய புதன் ஆட்சி, உச்சம் பெறுகிறார். பொருளாதார நிலை உயரும். ஏதேனும் புதிய முயற்சிகள் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். தொழிலில் பழகிய நட்போ அல்லது உறவினரோ பங்குதாரராக வந்து இணையலாம். உத்தியோகத் துறையினர் புதிய தொழில் முயற்சிகளில் இறங்குவர். 6-ஆம் தேதிமுதல் 12-க்குடைய சுக்கிரன் ஆட்சி. அவரை 6-க்குடைய குரு பார்க்கிறார். விபரீத ராஜயோகம் செயல்பட வாய்ப்புகள் வரலாம். சிலநேரம் எதிர்பாராத திட்டங்களில்கூட வெற்றி உண்டாகும். 14-ஆம் தேதிமுதல் கும்ப குரு மகர ராசிக்கு மாறி 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். செய்தொழில் லாபம், முன்னேற்றம் போன்ற நற்பலன்களை எதிர்பார்க்கலாம். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு திருமண முயற்சிகளில் வெற்றி தருவார். தடைப்பட்ட திருமணமும் நடைபெறும்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு இம்மாதம் 14-ஆம் தேதிமுதல் கும்பத்திலிருந்து மீண்டும் மகர ராசிக்கு மாறுகிறார். 2-ல் சனி ஆட்சி. குரு 6-ஆமிடம், 8-ஆமிடம், 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். குரு சுபகிரகம் என்பதால் அவர் பார்க்கும் இடங்களின் பலனைப் பெருக்குவார். அதனடிப்படையில் 6-ஆமிடமான ரோகம், ருணம், சத்ரு போன்றவற்றின் பலன்கள் அதிகமாகக் காணப்படலாம். மறைமுக எதிரிகளினால் தொல்லைகள் ஏற்படும். உடல் உபாதைகளால் மருத்துவச் செலவு உண்டாகும். பொருளாதாரத்தில் தாராள வரவு- செலவுகள் இருக்கும் என்றாலும், சேமிப்புக்கு இடமில்லாத நிலையாக அமையும். எந்தவொரு வேலையையும் கவனமுடன் செய்யமுடியாது. 11-க்குடைய சுக்கிரன் ஆட்சிபெறுகிறார். தொழில்ரீதியாக சில முன்னேற்றங்கள் தெரியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஏற்பட்டாலும் இடமாற்றமும் உண்டாகும். குடும்பத்தில் உடன்பிறப்புகளிடையே மனக்கிலேசம் ஏற்பட்டு விலகும். "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை' என்றரீதியில் பக்குவமடையுங்கள்.

மகரம்

மகர ராசிநாதன் சனி ஆட்சி, வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். 12-க்குடைய குரு ஜென்ம ராசியில் நீசம் பெற்றாலும் நீசபங்க ராஜயோகமாகும். விரயம் ஏற்பட்டாலும் பொருளாதாரமும் வந்துகொண்டிருக்கும். ஏழரைச்சனி நடப்பதால் சிலருக்கு வீடு மாற்றத் திற்கும் இடமுண்டு. வேலையில் இடமாற்றத் திற்கும் வாய்ப்புண்டு. 5-க்குடைய சுக்கிரன் 10-ல் ஆட்சியாகிறார். தொழிலில் முன்னேற் றம் உண்டு. பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். ஊதிய உயர்வுக்கும் இடமுண்டு. 4-க்குடைய செவ்வாய் 7-ஆம் தேதிமுதல் 9-ல் திரிகோணம் பெறுகிறார். சகோதரர்களால் நன்மை உண்டாகும். சொத்து விற்பனையிலுள்ள இழுபறிநிலை மாறும். சொத்து விற்பதன்மூலம் வேறொரு சொத்து வாங்கவும் இடமுண்டு. பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கலாம். குரு 7-ஆமிடத்தைப் பார்க்கும் காலம் திருமண முயற்சிகள் கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமை உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனியின் ஆதிக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேநேரம் சனி வக்ரகதியிலும் இயங்குகிறார். விரயாதிபதி வக்ரம் பெறுவதாலும், தனலாபாதிபதி ஜென்ம ராசியில் இருப்பதாலும் மாத முற்பாதிவரை தாராள வரவு- செலவு வந்து கொண்டேயிருக்கும். ராசிநாதன் சனி மாற்றங்களின்மூலம் ஏற்றங்களையே தருவார். என்றாலும் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு விலகும். 14-ஆம் தேதிமுதல் தனாதிபதி குரு 12-ல் மாறி நீசம்பெறுகிறார். பொருளாதாரத் தில் சில சங்கடங்களும் பற்றாக்குறை களும் உருவாகலாம். எதையும் முன்கூட்டியே யோசித்துச் செயல்படக்கூடிய நேரமாகும். 3, 10-க்குடைய செவ்வாய் 8-ல் மறைகிறார். சகோதர- சகோதரிகள் வழியில் சுபகாரியங் கள் தாமதமாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் திருப்தியற்ற நிலை தோன்றலாம். 5-க்குடைய புதன் 8-ல் உச்சம். பிள்ளைகளின் நலன்கருதி எதிர்காலத் தேவைக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள்.

மீனம்

இம்மாதம் 14-ஆம் தேதிமுதல் மீன ராசிநாதன் குரு 11-ஆமிடமான மகரத்தில் நீசம் பெற்றாலும் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். 14-ஆம் தேதிவரை குரு 12-ல் இருப்பதால் விரயங்கள் உண்டாகும். வீடு மாற்றமும் இடமாற்றமும் ஏற்படலாம். அது விரும்பியபடி அமையலாம். அலுவலக உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கு இடமுண்டு. 7-ல் புதன் உச்சமாக இருக்கிறார். திருமண முயற்சிகள் கைகூடும். கல்வி சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்திகள் நடைபெற்றால் வெளிநாட்டு வேலைக்கு அழைப்புகள் வரலாம். 8-ல் சுக்கிரன் ஆட்சிபெறுவதால் திடீர் ராஜயோகத்திற்கும் வாய்ப்புண்டு. 10-க்குடைய குரு 11-ல் மாறியபிறகு நற்பலன்கள் நடைபெறும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். 2-க்குடைய செவ்வாய் 7-ல் மாறுகிறார். அக்காலம் வாழ்க்கைத் துணையின் உத்தியோகம் சம்பந்தமாக செய்த முயற்சிக்குப் பலன் கிட்டும்.