மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் முழுவதும் 2-ஆமிடத்தில் சஞ்சாரம் செய்கிறார். பொருளாதாரப் பற்றாக்குறை விலகும். தேவைகள் நிறைவேறும். 12-ஆமிடத்து குரு 12-ல் வக்ரம் பெறுவதால் சில நேரம் வீண் விரயமும் உண்டாகலாம். என்றாலும் 2-க்குடைய சுக்கிரனை ராசிநாதன் பார்ப்பது ஒருவகையில் நன்மை தரும். அதாவது வரவும் வரும்; செலவும் இருக்கும். 9-க்குடைய குருவை 10-க்குடைய சனி பார்ப்பதால் இம்மாதம் தர்மகர்மாதிபதி யோகம் உங்களைக் காப்பாற்றும். ஜென்ம ராகுவால் ஏற்படும் மனக்குழப்பத்திற்கும் தீர்வு கிடைக்கும். நீங்கள் யாருக்காக பாடுபடுகிறீர்களோ அவர்கள் உங்களை உதாசீனப்படுத்திய நிலை மாறும். மதிப்பு, மரியாதையும் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 4-ல் கேந்திர பலம்பெற்று 4-க்குடைய சூரியனோடு சேர்க்கை. தாய்- தந்தைவழியில் நிலவிய மனக்கிலேசம் மாறி ஒற்றுமையுணர்வு உண்டாகும். 11-ல் ஆட்சிபெறும் குரு வக்ரமாக இருப்பதால் தொழில்துறை அல்லது வேலை, உத்தியோகத்தில் அலைச்சல், திரிச்சல்கள் சற்று அதிகமாகக் காணப்படலாம். என்றாலும் முடிவில் திருப்திகரமாக அமையும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் பலன் தரும். சுபவிரயம் ஏற்படும். குடியிருப்புவகையில் ஒருசிலருக்கு இடமாற்றம் உண்டாக லாம். 3-ஆமிடத் தைப் பார்க்கும் குரு சகோதரவழியில் சகாயம், நன்மை களைத் தருவார். பல நாட்களாக அலைந்து திரிந்த ஒரு செயல்பாடு இம்மாதம் நிறைவேறி திருப்தியை அளிக்கும். நோய்நிவர்த்தியும் உண்டா கும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 3-ல் மறைவு. வக்ரம். பொதுவாக மற்ற கிரகங் களுக்கு மறைவு தோஷம் பாதிப்பதுபோல் புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. 3-ல் சூரியன் ஆட்சி. தைரியம், தன்னம்பிக்கை இவற்றுக்கு குறைநேராது. அட்டமத்துச்சனி சிலநேரம் மனதில் சோர்வையும் சலனத் தையும் ஏற்படுத்தலாம். 10-ல் குரு வக்ரம். வக்ரத்தில் உக்ர பலம். வேலை, உத்தியோகம் தடைப்படாமல் ஓடிக்கொண்டிருக்கும். 11-ல் உள்ள ராகு காரிய ஜெயம் தரும். குடியிருப்பில் இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தைவிட்டு வெளியூர் அல்லது வெளிமாநிலத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அலுவலகப் பணியில் உயர்வுண்டாகும். 2023 டிசம்பரில் அட்டமத்துச்சனி மிதுன ராசிக்கு நிறைவு பெறும். அதன்பிறகு வாழ்க்கை முன்னேற்றம் காணலாம்.
கடகம்
கடக ராசியில் 2-ல் சூரியன் ஆட்சி. 10-க்குடைய செவ்வாய் 2-ஆமிடத்தையும் சுக்கிரன், புதனையும் பார்க்கிறார். தொழில்வகையில் முன்னேற்றம் தென்படும். பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். செலவு ஒருபுறம் இருந்தாலும் வரவு வருவதில் பற்றாக்குறை நிலவாது. வரவும் செலவும் சரியாக இருக்கும். அதற்கு 12-க்குடைய புதன் 2-ல் வக்ரம் பெறுவது ஒரு காரணம். 9-ல் குரு நின்று ராசியைப் பார்ப்பதால் மதிப்பு, மரியாதை, கௌரவம் கெடாது. நற்பெயரும் நன்மதிப்பும் உண்டாகும். 4-ஆமிடத்துக் கேது சிலநேரம் உடல் உபாதைகளையும் வைத்தியச் செலவுகளையும் தந்தாலும் பாதிப்புகளுக்கு இடமில்லை; கவலை வேண்டாம். தாயார் உடல்நலனில் சற்று அக்கறை தேவை.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் ஜென்ம ராசியில் ஆட்சி. உங்கள் முயற்சிகளிலும் காரியங்களிலும் முன்னேற்றம் தென்படும். நீண்டநாள் இழுபறியாக இருந்த செயல்பாடு இம்மாதம் முடிவுக்கு வரும். 2, 11-க்குடைய புதன் ஜென்ம ராசியில் வக்ரம் பெறுகிறார். நிலம், வீடு சம்பந்தமான முயற்சிகள் நல்லபடியாக நிறைவேறும். அதாவது ரியல் எஸ்டேட் வகையில் லாபம்பெறலாம். 9-க்குடைய செவ்வாய் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகத்துக்கு வழிவகுக்கும். வாழ்க்கை, தொழில் இவற்றில் நன்மைகள் ஏற்படலாம். 3-ஆமிடத்துக் கேது சகோதர- சகோதரிவகையில் கருத்து வேறுபாடு, சங்கடம் போன்றவற்றையும், சொத்துப் பிரச்சினைகளையும் தரலாம். பொறுமையுடன் நிதானமாக செயல்படவும்.
கன்னி
கன்னி ராசிநாதன் 12-ல் விரயஸ்தானத் தில் விரயாதிபதியுடன் கூடியிருக்கிறார். குடும்பத்தில் வீண்விரயங்கள், தேவையற்ற செலவுகள் போன்றவற்றை சந்திக்கலாம். திருமணம், காதணிவிழா போன்றவற்றுக்கு செய்முறைச் செலவுகள் ஏற்படலாம். வரவு வந்தாலும் சில நேரம் வரவை மீறிய செலவுகளால் சேமிப்புக்கு இடமில்லாத வகையில் அமையும். ஒரு சில பெண்களுக்கு கணவர் அல்லது கணவர்வழி உறவினர் களால் சங்கடமும் கவலையும் உண்டாகலாம். அது மனநிம்மதியைப் பாதிக்கும். தொழில்துறையிலும் சிலநேரம் தொய்வுகள் நிலவும். 10-க்குடைய புதன் 12-ல் இருந்து மாறி ஜென்ம ராசியில் ஆட்சியான பிறகு நிலைமை மாறும். ராசிக்கு கிடைக்கும் குரு பார்வை அதன்பிறகு வழிநடத்தும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 11-ல் ஜெய ஸ்தானத்தில் இருக்கிறார். 11-க்குடைய சூரியன் ஆட்சியென்பது ஒரு ப்ளஸ் பாயின்ட். அவர்களை 2-க்குடைய செவ்வாய் பார்ப்பது மேலும் ப்ளஸ் பாயின்ட் செவ்வாய் 7-க்கும் உடையவர். குடும்பத்தில் கணவரால் நிறைவேற்ற முடியாத பொருளாதாரத் தேவைகளை சில நேரம் மனைவிமூலமாக நிறைவேற்றும் சூழல் அமையும். எனவே, ஒருவருக்கொருவர் "ஈகோ' உணர்வும் உண்டாகும். யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலமும் அமைதிகாப்பதன் மூலமும்தான் சச்சரவுகள் வராமல் காப்பாற்றமுடியும். ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் ஒரு காரணமாக அமையும். பிள்ளைகள்வகையில் நன்மதிப்பு ஏற்படும். படிப்பில் விடாமுயற்சியும் கவனமும் அவர்களுக்குத் தேவைப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது ஒருவகையில் நன்மைதான். எனினும் ஏதேனும் ஒரு தடை, தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு செயலை முடிக்க முனைப்புடன் சென்றாலும் அச்செயல் முடியாமல் போவது மனவருத்தத்தை உண்டாகும். கடந்த மாதமும் அல்லது கடந்த இரண்டு மூன்று மாதமும் இந்நிலையை சந்தித்தீர்கள். குரு 5-ல் நின்று ராசியைப் பார்த்த பெருமை வேலை செய்யவில்லையே என்ற கவலையும் ஒருபுறம் இருக்கிறது. 10-ல் புதன் ஆட்சிபெற்ற சூரியனோடு சேர்க்கை. ஆக, எது எப்படி இருந்தாலும் வேலை, உத்தியோகம் பாதிக்காது; இயக்கம் தடைப்படாது. 3-ல் சனி வக்ரம், ஆட்சி. தைரியமும் தன்னம்பிக்கையும் குறையாது.
தனுசு
தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் கடைசிக்கூறு நடைபெறுகிறது. இதில் முதல் சுற்று மங்குசனி, இரண்டாம் சுற்று பொங்குசனி, மூன்றாம் சுற்று மரணச்சனி எனப்படுகிறது. மரணச்சனி என்றால் மரணம் ஏற்படும் என்பது அர்த்தமல்ல. அதற்கு சமான தொல்லைகள், உபாதைகள் என்று அர்த்தம் கொள்ளலாம். இதில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடப்பவர் களுக்கு உயிர்ச் சேதம், பொருட்சேதம் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் திங்கட் கிழமைதோறும் சிவலிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்யவேண்டும். ஒருமுறை சிவன் கோவிலில் ருத்ர ஹோமம் செய்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்யவும். 4-ல் குரு ஆட்சிபெறுவதோடு வக்ரமாகவும் இருக்கிறார். பூமி, வீடு, மனை போன்றவற்றில் சுபநிகழ்வுகள் காணலாம். வேலையிலும் நன்மதிப்பு பெறலாம். சிலநேரம் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், சுமூகத் தீர்வுகள் உண்டாகும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் ஆட்சியென்பதால் ஏழரைச்சனி மகர ராசியை பாதிக்காது என்று நம்பலாம். சனி வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்திகள் நடைபெற்றால் நன்மையான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி, பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி பூர்வீக இடம் விற்பனையாவதன்மூலம் தனவரவு, பொருளாதார முன்னேற்றம் போன்ற பலன்களைச் சந்திக்கலாம். 3-ல் உள்ள குரு உடன்பிறந்த சகோதர- சகோதரிவகையிலோ அல்லது நண்பர்கள்வகையிலோ சகாயங்களை சந்திக்கலாம். பாதகமான தசாபுக்திகள் நடந்தால் உடன்பிறப்புகளால் பிரச்சினை, நண்பர்களால் தொல்லை, வீண்விரயம் ஆகியவற்றையும் சந்திக்க நேரும். 10-க்குடைய வர் 8-ல் மறைவதால் வேலையில் சற்று நிதான மான பலன்கள் உண்டாகும். எதுவும் துரித வேகத்தில் செயல்படாமல் ஆமை வேகத்தில் செயல்பட்டு முடியும்.
கும்பம்
பொதுவாக கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்திற்குரியவர்கள் என்று என் தந்தை அடிக்கடி எழுதுவார். அதன் காரணம் ராசிநாதனே விரயாதிபதி என்பதால் தான். தற்போது ஏழரைச்சனியில் விரயச் சனி நடந்துகொண்டிருக்கிறது. எனவே, வீண்விரயங்களும் உண்டாகும். சுபவிரய செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு கள் ஏற்படலாம். 2-ல் குரு. பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். சேமிப்பிலும் கவனம் செலுத்துவது அவசியம். 4-ல் உள்ள செவ்வாய் 4-ஆமிடத்து அதிபதி யைப் பார்ப்பதால் பூமி, வீடு, மனை வகையில் நற்பலன்களும் சுபச்செலவுகள் உண்டாகலாம். உடன்பிறந்தவகையில் மனக் கிலேசம் வந்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தவறில்லை. அந்த அணுகுமுறையைக் கைப்பற்றுங்கள்.
மீனம்
மீன ராசிநாதன் குரு ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 2-ஆமிடத்திலுள்ள ராகு ஒருசிலரை குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கலாம். வீண் அவப்பெயர் போன்றவற்றையும் சந்திக்க நேரும். 2-க்குடைய செவ்வாய் 3-ல் மறைவு பெறுகிறார். பொருளாதாரத்தில் பற்றாக் குறையும் நிலவும். 5-ஆமிடத்தை குரு பார்ப்ப தால் பிள்ளைகள்வழியில் நற்பலன்கள் ஏற்பட்டாலும் அதை கூட இருந்து கவனிக்கும் சூழல் சிலருக்கு அமையாதது வருத்தத் தைத் தரும். சகோதர- சகோதரிவகையிலும் சங்கடங்கள் உண்டாகும். 4, 7-க்குடைய புதன் 7-ல் உச்சம்பெற்ற பிறகு வீட்டு சூழ்நிலை கள் நன்மையாக மாறும். தற்சமயம் 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தம்பதி களுக்குள் பிரிவினை உண்டாகாமல் பாதுகாப்பார். திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமண வாய்ப்பைத் தருவார்.