Advertisment

சீர்மிகு வாழ்வருளும் செந்துறை சிவதாண்டீசுவரர்! - நெய்வாசல் நெடுஞ்செழியன்

/idhalgal/om/sentura-shivthandeeswarar-who-lives-well-neivasal-nedunchezhiyan

க்தி மிகும்போது உணவு பிரசாதமாகிறது; நீர் தீர்த்தமாகிறது; பயணம் யாத்திரையாகிறது; பாடல் கீர்த்தனையாகிறது; செயல் சேவை யாகிறது; மனம் கோவிலாகிறது; மனிதன் புனி தனாகிறான். இந்த உயரிய தத்துவம் அனைத்து மதங்களுக்கும் பொருத்தமானது. குறிப்பாக இந்து மதத்திற்கு முழுக்க முழுக்கப் பொருந்தும்.

Advertisment

இந்து கலாச்சாரமும் பண்பாடும் ஆலயங் களை அடிப்படையாகக் கொண்ட.வை. பல்லாயி ரம் ஆண்டுகளுக்கு மேலாக வேதநெறியுடன் வாழும் இந்துமதத்தின் சநாதானதர்மம் தலை முறை தலைமுறையாகக் கட்டிக் காக்கப்படுவதற்கு கோவில்களே காரணமென்றால் மிகையாகாது.

Advertisment

பண்டைய அரசர்கள் குடிமக்களை நல்வழிப் படுத்த ஆலயங்களை எழுப்பினர். அதனால் ஒவ்வொரு ஊரையும் நிர்மாணிக்கும்போது முதலில் அங்கொரு கோவிலை ஸ்தாபிப்பதை மரபாகக் கடைப்பிடித்தனர். அப்படி அமைக்கப் படும் கோவில்களும் ஒரு வெற்றியின் சின்னமா கவோ திட்டத்தின் அடையாளமாகவோ அல்லது பக்திப்பரவசத்துடன் இறையனுபூதிபெற்ற ஒரு அடியாரின் நினைவாகவோ எழுப்பப்பட்டதாக இருக்கும். கோவிலானது மக்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதற்காகவே இத்தகைய பின்புலம் உருவாக்கப்பட்டது. பின்னர் அதனை மையமாகக்கொண்டு குடி மக்கள் வசிப்பதற்கு வீதிகள், வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டன. மக்கள் பயன்பாட்டுக்காக குளங்கள் வெட்டப்பட்டன. இப்படித்தான் சோழப் பேரரசின் பெரும்பான்மையான கோவில் களும் ஊர்களும் உருவாக்கப்பட்டன.

இதனடிப்படையில் அரியலூர் மற்றும் செந்துறை பகுதியை ஆட்சிபுரிந்த சிற்றரசர் ஒருவரால் உருவாக்கப்பட்டதே செந்துறை மகா தேவர் கோவில் எனப்படும் சிவதாண்டீசுவரர் திருக்கோவில்.

ss

வரலாற்றில் செந்துறை சிவதாண்டீசுவரர் அருள் பாலிக்கும் செந்துறையும் அதனைச் சார்ந்த பகுதி களும் சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைக் காலத்தில் கடலாக இருந்ததாகவும், பிறகு ஏற்பட்ட பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளால் கடல்நீர் கிழக்காக வடிந்து தரைப்பகுதி ஏற்பட்டதாகவும், இதனால் கடலில் வாழ்ந்த கோடிக்கணக்கான ஜீவராசிகள் மற்றும் கடலோரத்தில் வாழ்ந்த டைனோசர் போன்ற உயிரினங்கள் கடல் சேற்றில் புதைந்து காலப்போக்கில் கல்படிவங்களா

க்தி மிகும்போது உணவு பிரசாதமாகிறது; நீர் தீர்த்தமாகிறது; பயணம் யாத்திரையாகிறது; பாடல் கீர்த்தனையாகிறது; செயல் சேவை யாகிறது; மனம் கோவிலாகிறது; மனிதன் புனி தனாகிறான். இந்த உயரிய தத்துவம் அனைத்து மதங்களுக்கும் பொருத்தமானது. குறிப்பாக இந்து மதத்திற்கு முழுக்க முழுக்கப் பொருந்தும்.

Advertisment

இந்து கலாச்சாரமும் பண்பாடும் ஆலயங் களை அடிப்படையாகக் கொண்ட.வை. பல்லாயி ரம் ஆண்டுகளுக்கு மேலாக வேதநெறியுடன் வாழும் இந்துமதத்தின் சநாதானதர்மம் தலை முறை தலைமுறையாகக் கட்டிக் காக்கப்படுவதற்கு கோவில்களே காரணமென்றால் மிகையாகாது.

Advertisment

பண்டைய அரசர்கள் குடிமக்களை நல்வழிப் படுத்த ஆலயங்களை எழுப்பினர். அதனால் ஒவ்வொரு ஊரையும் நிர்மாணிக்கும்போது முதலில் அங்கொரு கோவிலை ஸ்தாபிப்பதை மரபாகக் கடைப்பிடித்தனர். அப்படி அமைக்கப் படும் கோவில்களும் ஒரு வெற்றியின் சின்னமா கவோ திட்டத்தின் அடையாளமாகவோ அல்லது பக்திப்பரவசத்துடன் இறையனுபூதிபெற்ற ஒரு அடியாரின் நினைவாகவோ எழுப்பப்பட்டதாக இருக்கும். கோவிலானது மக்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதற்காகவே இத்தகைய பின்புலம் உருவாக்கப்பட்டது. பின்னர் அதனை மையமாகக்கொண்டு குடி மக்கள் வசிப்பதற்கு வீதிகள், வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டன. மக்கள் பயன்பாட்டுக்காக குளங்கள் வெட்டப்பட்டன. இப்படித்தான் சோழப் பேரரசின் பெரும்பான்மையான கோவில் களும் ஊர்களும் உருவாக்கப்பட்டன.

இதனடிப்படையில் அரியலூர் மற்றும் செந்துறை பகுதியை ஆட்சிபுரிந்த சிற்றரசர் ஒருவரால் உருவாக்கப்பட்டதே செந்துறை மகா தேவர் கோவில் எனப்படும் சிவதாண்டீசுவரர் திருக்கோவில்.

ss

வரலாற்றில் செந்துறை சிவதாண்டீசுவரர் அருள் பாலிக்கும் செந்துறையும் அதனைச் சார்ந்த பகுதி களும் சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைக் காலத்தில் கடலாக இருந்ததாகவும், பிறகு ஏற்பட்ட பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளால் கடல்நீர் கிழக்காக வடிந்து தரைப்பகுதி ஏற்பட்டதாகவும், இதனால் கடலில் வாழ்ந்த கோடிக்கணக்கான ஜீவராசிகள் மற்றும் கடலோரத்தில் வாழ்ந்த டைனோசர் போன்ற உயிரினங்கள் கடல் சேற்றில் புதைந்து காலப்போக்கில் கல்படிவங்களாக (பாசில் கள்) மாறியதாகவும் கூறப்படுகிறது.

இதை உண்மையாக்கும் விதமாக செந்துறையைச் சுற்றியுள்ள நின்னையூர் ஓடையில் டைனோசர் முட்டைப் படிவங் களும், ஓட்டக்கோவில் ஓடையில் அம்மோ னைட் எனப்படும் நத்தைப் படிவங்களும், கல்லாமேடு என்னும் இடத்தில் 30 அடி நீளமுள்ள ராட்சச பல்லியின் எலும்புப் படிவமும், மேலும் இப்பகுதியில் கிடைக்கும் சுண்ணாம்புப் பாறைகளில் நத்தை, ஆமை, கடற்குதிரை, கல்மரங்கள் மற்றும் தாவரங்களின் படிமங்கள் இருப்பதையும் குறிப்பிடலாம். கடல்நீர் வடிந்தபின்னர் தங்கிப்போன உப்புகலந்த சுண்ணாம்பால் இப்பகுதிப் பாறைகள் உருமாறி, தற்போது சுண்ணாம்புச் சுரங்கங்களும் அதனை மூலப்பொருளாகக் கொண்ட சிமென்ட் ஆலைகளும் தோன்றி இப்பகுதியை வளமாக்கி வருகின்றன.

உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சங்ககால சோழர்கள், காஞ்சி யைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த பல்லவர்கள், அவர்களுக்குப் பின் தஞ்சை யைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பிற்கால சோழர்கள், அவர்களுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்கள், பாளையக் காரர்கள் போன்றவர்களின் ஆட்சிக்குட் பட்டிருந்த செந்துறையை, பிற்கால சோழர் கள் காலத்தில் பிராம்மணர்கள் வசிப்பதற் காக கி.பி. 999-ஆம் ஆண்டில் பிரம்மதேய கிராமமாக வழங்கப்பட்டதாக சிவதாண்டீசு வரர் கோவிலில் இடம்பெற்றுள்ள இராஜராஜ சோழனின் 14-ஆம் ஆண்டு கல்வெட்டு கூறுகிறது.

சிவந்த மண்ணையும் நீர்வளத்தையும் கொண்டிருந்ததால் தண்பொழில் செந்துறை என்றும், ஊரின் ஒரு பகுதி காரைச்செடிகள், வெள்வேலமரம், புளி, இலுப்பை, கருங்காலி, வன்னி, விளா போன்ற மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்தமையால் காரைக்காட்டு தண்டநாடு என்றும் அழைக்கப்பட்டதாக கி.பி. 1125-ல் விக்கிரமசோழன் காலத்தில் எழுதப்பட்ட மற்றொரு கல்வெட்டு கூறுகின் றது. இந்த காடு (வனம்) காலப்போக்கில் நெய்வனமென்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த வனத்தில் மகாசித்தர் என்பவர் வாழ்ந்த தால் சித்தர்துறை என்றழைக்கப்பட்டு, பின்னர் அது மருவி செந்துறை என்றானதாக மற்றொரு வரலாறும் முன்வைக்கப்படுகின்றது. அந்த சித்தர் உருவாக்கிய சித்தர் ஏரியே மருவி தற்காலத்தில் சித்தேரி என்று அழைக்கப்படு கிறது.

ss

இந்த மகாசித்தர் ஒரு வில்வமரத்தின்கீழ் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து மாகேசு வர பூஜை, வழிபாடுகள் மேற்கொண்டு இறை தரிசனம் கண்டு அஷ்டமா சித்துகள் கைவரப் பெற்றவராக விளங்கினார். இவரின் சக்தி யைப் புரிந்த மக்கள் இவரை நாடிவந்து அருளாசி பெற்றுச் சென்றனர். பல ஆண்டு கள் குழந்தைப் பேறின்றி கவலையுடன் இப்பகுதியை ஆட்சிபுரிந்த சிற்றரசனுக்கு சித்தர் பற்றிய தகவல் தெரிந்து அவர் தாள் பணிந்தான். தன்னை சந்தித்த சிற்றரசன்பால் கருணைகொண்ட சித்தர், அவன் வாய்திறந்து தன் வேண்டுதலைச் சொல்லும்முன்பே, "குழந்தைவரம் கேட்டு வந்திருக்கிறாய். இப்பகுதியில் ஒரு சிவாலயம் எழுப்பி வழிபடு; குழந்தைப்பேறு கிட்டும்'' என்று கூறினாராம்.

அதுகேட்ட சிற்றரசன் மெய்சிலிர்த்து, தன் முகவாட்டத்தை வைத்தே தன் உள்ளக் கிடக்கையை உள்ளபடி கூறிய சித்தர்மேல் மிகுந்த பக்திகொண்டு அவர் சொன்னபடி ஒரு பெரிய சிவாலயத்தைக் கட்ட திட்டமிட்டான்.

ஆலயக் கட்டுமானம்

திரிபுவன சக்கரவர்த்தி இராஜராஜ சோழனி டம் அனுமதிபெற்று, அவனது சகோதரி குந்தவை நாச்சியார் வழிகாட்டுதலுடன் சிவாலயம் கட்டி குடமுழுக்குச் செய்ததுடன், இராஜராஜ சோழ னின் ஆலோசனைப்படி தேரோடும் வீதிகளை அமைத்து அதில் பிராமணர்களை அழைத்து வந்து குடியேற்றினான். அதன்பின்னர் சித்தர் வாக்குப்படி சிற்றரசன் குழந்தைப்பேறினைப் பெற்று மகிழ்ந்தான். பிராம்மணர்கள் குடியேற்றப் பட்ட அக்ரஹாரப் பகுதி தற்காலத்தில் அகரம் என்று அழைக்கப்படுகிறது. சிற்றரசனுக்கு அருள் பாலித்த சித்தரின் சமாதி ஆலயத்தின் வடக்கு வீதியில், ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது. சிற்றரசனின் வேண்டுகோளை தீர்த்துவைத்த சிவன் தீர்க்கபுரீசுவர் என்றழைக்கபட்டு தற்காலம் சிவதாண்டீசுவரராகப் போற்றப்படுகிறார்.

தலச்சிறப்பு

முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தின் 14-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 999) தஞ்சை பெரியகோவில் கட்டுவதற்கு முன்பாகக் கட்டப் பட்டுள்ள இவ்வாலயம் வரலாற்றுச் சிறப்பும் பழமையும் பெருமையும் கொண்டதாகும். இவ்வாலயம் பற்றி குறிப்புகள் ஐந்து கல்வெட்டு களிலும், இரண்டு செப்பேடுகளிலும் இடம் பெற்றுள்ளன. முழுக்க முழுக்க வெள்ளைக்கல் எனப்படும் சுண்ணாம்புக் கல்லால் இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டுமானங் களை செந்துறையைச் சுற்றியள்ள இராயம் புரம், சென்னிவனம், ஓட்டக்கோயில், தாமரைப் பூண்டி, பெரியாக்குறிச்சி, கொடுக்கூர் ஆகிய ஊர் களிலுள்ள சிவாலயங்களிலும் காணமுடிகிறது. கருங்கல்லாலான கோவில்கள் எதுவும் இப்பகுதி யில் இல்லை. முதலாம் இராஜராஜன் காலத்தில் இவ்வால யம் கட்டப்பட்டிருந்தபோதிலும், இவ்வாலயத் தில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள், செப்புத் திரு மேனிகளில் பெரும்பான்மையானவை 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டு வார்ப்பாக உள்ளன.

உடையார்பாளையம் பாளையக்காரர் நல்லரங் கப்ப காலாக்கத் தோழ உடையாரின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1611-ல் எழுதப்பட்டுள்ள கல்வெட் டில், இவ்வூர் முழுவதும் இக்கோவிலுக்கு சர்வ மானியமாக வழங்கப்பட்டது குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆலய அமைப்பு

ஊருக்கு வடகிழக்கு மூலையில் அமைந் துள்ள இவ்வாலயம் கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் ரம்மியமாகக் காட்சி யளிக்கிறது. இந்த ராஜகோபுரம் தற்காலம் பக்தர்களின் பங்களிப்பில் கட்டப்பட்டதாகும். ஒரேயொரு திருச்சுற்றுடன் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று மாளிகை மற்றும் பரிவார சந்நிதிகளைக் கொண்டுள்ளது. ராஜகோபுரத்தை அடுத்து கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியெம்பெருமான். தொடர்ந்து உள்கோபுரம். அதன் இடப்புறம் வினாயகப்பெருமானும், வலப்புறமாக முருகப் பெருமானும் அருள்பாலிக்கின்றனர். ராஜ கோபுரத்திற்கும் உட்கோபுரத்திற்கும் இடைப் பட்ட பகுதியில், இடப்புறம் ஆலய யாகசாலை மண்டமும், வலப்புறம் வாகன மண்டபமும் இடம்பெற்றுள்ளன.

உள்கோபுரம், அதனைத் தொடர்ந்து மகா மண்டபத்தின் வாயிலைத் தாண்டி ஆலயத் துள் செல்ல, வேண்டுவோருக்கு வேண்டிய தைத் தரும் சிவதாண்டீசுவரப் பெருமான் சுயம்புமூர்த்தியாக கருவறையிலிருந்து அருள் பாலிக்கிறார். மகாமண்டபத்தில் வினாயகர், நடராஜர் மற்றம் உற்சவர் திருமேனிகள் இடம்பெற்றுள்ளன. பிராகாரச் சுற்றில் மேற்கில் மடப்பள்ளி, வன்னிமரம், அறுபத்துமூவர் மற்றும் சப்தமாதர்கள் சந்நிதிகளும், வடக்குப் பிராகாரத்தில் திருச்சுற்று மாளிகையில் தல வினாயகரான கோடிவினாயகர், நால்வர், சிவன், வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான், சொக்கநாதர், விசுவநாதர், பஞ்சலிங்கங்கள் மற்றும் கஜலட்சுமி தனித்தனி சந்நிதிகளிலும் எழுந்தருளியுள்ளனர்.

பெருமான் கருவறை அமைந்துள்ள இடத் திற்கு நேர்கிழக்காக பிராகாரச் சுற்றில் பிரகந் நாயகி (பெரியநாயகி) அம்பாளின் கருவறையும், அண்ணாமலையாரின் சிறிய சந்நிதியும் இடம்பெற்றுள்ளன. சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கிடையே சண்டீகேசுவரர் இடம் பெற்றுள்ளார். திருச்சுற்று மாளிகையின் வட கிழக்கு மூலையில் நடராஜர் சபை உள்ளது. இதில் கயிலாயக் காட்சியும், நால்வர் மற்றும் இராம லிங்க சுவாமியின் படங்களும் இடம்பெற்றுள் ளன. இதற்கடுத்து 1939-ல் பிரதிஷ்டை செய்யப் பட்ட நவகிரக சந்நிதி அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கிழக்கில் பைரவர், சூரியர், சந்திரர் (சிவலிங்க வடிவில்) இடம்பெற்றுள்ளனர்.

பூஜை மற்றும் சூரிய வழிபாடு

இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை யின்கீழ் இருந்துவரும் இவ்வாலயத்தில் தினசரி நான்குகால பூஜைகள் நடைபெற்று வரு கின்றன. இதுதவிர சிவாலயங்களுக்கே உரித் தான மாத உற்சவங்கள், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி விழா, கார்த்திகை தீப விழா, சோமவார உற்சவம், மார்கழி தரிசனம், தைப்பூசம் போன்ற வருடாந்திர விழாக்களும் சிறப்பாக நடத்தப்பெறுகின்றன. பங்குனிமாதம் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப் பெறுகி றது. சித்திரைமாதம் முதல்நாளன்று சூரியன் காலை 6.05 மணிக்கு இவ்வாலயப் பெருமானை வழிபடுகிறார். இந்நாட்களில் சுவாமியும் அம்பாளும் வீதியுலா செல்கிறார்கள்.

தினசரி காலை 7.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையிலும் கோயில்நடை திறந்திருக்கும்.

அமைவிடம்: தஞ்சை பெரியகோவிலுக்கு முன் கட்டப்பட்டதும், முழுக்க முழுக்க வெள்ளைக்கல் கொண்டு கட்டப்பட்டதுமான செந்துறை சிவதாண்டீசுவவர் ஆலயம் சென்னை- திருச்சி காட்லைன் ரயில் மார்க்கத் தில் அமைந்துள்ளது. அண்மையிலுள்ள ரயில் நிலையம் செந்துறை மற்றும் அரியலூர். சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், அரியலூர், ஜெயங்கொண்டம், திட்டக்குடி, பெண்ணாடம் ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.

om010822
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe