Advertisment

ராமனுக்கு சீதை இளைப்பில்லை காண்! -இரா.த.சக்திவேல்

/idhalgal/om/see-sita-cant-rest-rama-iratshaktivel

"ராமர் இருக்கிற இடமே சீதைக்கு அயோத்தி' என்கிற புகழ்பெற்ற சொல் வழக்கு உண்டு. கணவனிடம் கருத்து வேறுபாடு கொண்டு, புகுந்த வீட்டில் ஏற்பட்ட புகைச்சலால் தாய்வீடு வரும் பெண்ணுக்கு "கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்; ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் புகுந்தவீடுதான் உன் சொந்தவீடு' என அறிவுரை சொல்லி அனுப்பி வைப்பார்கள்.

Advertisment

அதையொட்டி எழுந்த சொல் வழக்குதான் "ராமன் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி' என்கிற சொற்றொடர். திருமணமான பெண்ணிடம் "விசேஷம் ஏதாவது உண்டா? வயித்துல ஏதாவது புழு- பூச்சி வச்சிருக்கா?' என்று விசாரிப் பார்கள்.

rr

"புழு' என்பது இருந்த இடத்திலேயே முண்டிக் கொண்டிருப்பது; "பூச்சி' என்பது பறந்து போகக்கூடியது.

ஆண்- புழு!

பெண்- பூச்சி!

பருவம் வந்ததும் புருஷன் வீட்டிற்கு பறந்து விடும் பூச்சி!

மிதிலையின் ராஜகுமாரி சீதை அயோத்தி யின் ராணியானாள்!

அயோத்தியின் அரண்மனை அரசியலில் சிக்கிக்கொண்டு 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் அந்த நேர மனச் சலனங்களை, நம்பிக்கை யான உயரங்களை துளசிதாஸர் தனது "துள

"ராமர் இருக்கிற இடமே சீதைக்கு அயோத்தி' என்கிற புகழ்பெற்ற சொல் வழக்கு உண்டு. கணவனிடம் கருத்து வேறுபாடு கொண்டு, புகுந்த வீட்டில் ஏற்பட்ட புகைச்சலால் தாய்வீடு வரும் பெண்ணுக்கு "கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்; ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் புகுந்தவீடுதான் உன் சொந்தவீடு' என அறிவுரை சொல்லி அனுப்பி வைப்பார்கள்.

Advertisment

அதையொட்டி எழுந்த சொல் வழக்குதான் "ராமன் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி' என்கிற சொற்றொடர். திருமணமான பெண்ணிடம் "விசேஷம் ஏதாவது உண்டா? வயித்துல ஏதாவது புழு- பூச்சி வச்சிருக்கா?' என்று விசாரிப் பார்கள்.

rr

"புழு' என்பது இருந்த இடத்திலேயே முண்டிக் கொண்டிருப்பது; "பூச்சி' என்பது பறந்து போகக்கூடியது.

ஆண்- புழு!

பெண்- பூச்சி!

பருவம் வந்ததும் புருஷன் வீட்டிற்கு பறந்து விடும் பூச்சி!

மிதிலையின் ராஜகுமாரி சீதை அயோத்தி யின் ராணியானாள்!

அயோத்தியின் அரண்மனை அரசியலில் சிக்கிக்கொண்டு 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் அந்த நேர மனச் சலனங்களை, நம்பிக்கை யான உயரங்களை துளசிதாஸர் தனது "துளசி ராமாயணத்தில்' அழகும், அவசியமு மாய்ச் சொல்லியிருக்கிறார்.

கோசலை மைந்தனின் குரலுக்கு எதிர்க்குரல் எப்போதும் பேசாத ஜனகனின் மகள் இந்த வனவாச விவாதத்தின்போது "ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்' என்றும் "சிரமேற்கும் ராமனின் வலிமை தனக்கும் உண்டு' எனவும் நிரூபிக்கிறாள்.

அதுமட்டுமா?

ஒருகட்டத்தில் ராமனையே கேலி செய்கிறாள் சீதை!

சோகமும்- சுவையும் நிறைந்த அந்த வனவாச விவாதத்தை இங்கே பார்ப்போம்...

கணவனை 14 ஆண்டுகள் வனவாசம் அனுப்ப நிர்ப்பந்தம் ஏற்பட்டதும் "புருஷன் கஷ்டப்பட்டா எனக்கென்ன? நான் என் அம்மா விட்டுக்குப் போறேன்' என நினைத்தாளா சீதை?

"நீயும் உன் புருஷனோட வனவாசம் போ; இல்லேன்னா ஒங்கம்மா வீட்டுக்கு ஓடிடு' என புகுந்த வீடு ஆலோசனை சொன்னதா?

இரண்டுமே இல்லை!

ராமர் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி என்கிற வாழ்வியல் உருவகத்தை உருவாக்கியவளே சீதைதான்!

"ராமன் வனவாசத்திற்கு போகப் போகிறான்'' என்ற சேதி எட்டியதுமே சீதை ஒருவித நடுக்க நடையுடன் தன் தாய் நிகர் மாமியார் கோசலையிடம் வந்து, வணங்கி அமர்ந்தாள்.

"பூக்களே நொந்துபோகுமே இவளின் மென்மை கண்டு. இவளையா அந்த கரடு முரடான, வனவாசத்திற்கு உடன் அனுப்பு வது?' என கலங்கினாள் கோசலை.

"பிறந்தபோது தாய் உள்ளிட்ட பெண்களின் மடியில் அமர்ந்து வளர்ந்தவள்; சிறுமியான பின் ஊஞ்சலின் மடியில் அமர்ந்து வளர்ந்தவள்; பருவம் எய்திய பின் மெத்தையின் மடியில் இருந்தவள்; கட்டாந்தரை அறியா இவளின் பாதங்கள் காடு கடக்குமா? அன்புமகனே ராமா! என் உயிரான சீதையை இல்லத்திலேயே; என்னுடனேயே விட்டுச்செல், இந்த புத்திமதியை அவளுக்குச் சொல்!'' என சீதையின் மனமறிந்த கோசலை சொன்னாள்.

Advertisment

rr

"ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும். குரங்கு உருவத்தைப் பார்த் தாலே அச்சப்படக் கூடியவளான சீதை தேவலோக ஏரியில் நீந்தும் அன்னப்பறவை.

அவளால் குட்டை நீரில் உலவமுடியுமா? அதனால் நீ உன் உள்ளத்தில் உள்ள தைச் சொல் ராமா!'' என மேலும் சொன்னாள் சோசலை.

"என்னை தவறாக எண்ணாதே சீதே'' என்கிற பீடிகையுடன் ராமன் சொல்லத் தொடங்கினான்.

"நீ இல்லத்தில் இரு! என்னை எண்ணி ஏங்கும் அன்னைக்கு ஆறுதலாய் இரு! நீ என்னுடன் வர பிடிவாதம் செய்தால் காலவமுனிவரும், நகுஷ மன்னனும் பட்ட கஷ்டங்களை நீ பட நேரலாம். காட்டு வாழ்க்கை கடினமுள்ளது. கல்லி முள் பாதையை உன் கமலப் பாதம் தாங்காது! காட்டு விலங்குகளின் உருமலும், பிளிறலும் நம் மனத்துணிவை அசைத்துப் போடும். மனித மாமிசம் உண்ணும் அரக்கர் மாய உருவில் அலைவர். குருவும், கணவரும் கூறும் வார்த்தையை மீறுவோர் தீமைக்கே ஆளாவர்'' என்றான் ராமன்.

ராமனின் வார்த்தைகள் சீதைக்கு ஒப்பவில்லை.

"என்னை மன்னியுங்கள். நீங்கள் இல்லாதபோது கிடைக்கும் சொர்க்கமும் நரகமே! அந்தச் சமயத்தில் கிடைக்கும் வசதிகளும் நோய் தருபவை போன்றவையே! உங்களுடன் நானிருந்தால் கொடூர விலங்குகளும் நமக்கு சிநேகமாகிவிடும். உங்களுடன் இருக்கையில் புல்படுக்கையும் மன்மதனின் காமவிரிப்பே! உங்கள் பிரிவை விடவா வனத் துன்பம் பெரிது? நீருண்ட கருநீலமேக வண்ணம் கொண்ட உங்கள் உருவம். பார்த்து ரசிக்கவே நேரம் பத்தாது எனக்கு. பிறகெப்படி வனத் துயரை அனுபவிக்க நேரம் கிடைக்கும்?

உங்களோடு இருக்கையில் எவருக்கு உண்டு என்னை தப்பிதத்தோடு பார்க்கும் துணிவு?'' என மனங்குலையாமல் உறுதியாய்க் கேட்டாள் சீதை!

கூடவே... தன் அன்புக் கணவன் ராமனைக் கேலியும் செய்தாள் சீதை!

"சரி... நான் மிக மென்மையானவள்; காட்டுவாழ்க்கையின் கடுமையைத் தாங்கமுடியாதவள் என்கிறீர்கள். நீங்கள் மட்டும் என்னவாம்? வனவாழ்வுக்குத் தகுதியான கடுமையும், வலிமையும் உள்ள உடல்வாகு கொண்டவரா? நீங்களும் மென்மையானவர்தான்!'' எனக் கேட்டாள் சீதை!

அன்பு மனைவி சீதையின் அந்தக் கேள்வியில், கேலியில் அழகு ராமனின் கருநீல வண்ணமுகம், அவனின் உதடுகளைப்போல் நிச்சயம் சிவந்திருக்கும்!

புலவர் புலமைப்பித்தன் வரிகளில் "வரப்பிரசாதம்' படத்திற்காக கே.ஜே.யேசுதாஸும்; வாணி ஜெயராமும் ஆர்.கோவர்த்தன் இசையில் உருகிய பாடலை காற்று சுமந்து வந்தது...

கங்கை நதி ஓரம்

ராமன் நடந்தான்

கண்ணின் மணி சீதை

தானும் தொடர்ந்தாள்

மெல்ல நடந்தாள்...

இது வனவாசத்தில் ராமனை சீதை பின் தொடரும் சேதியை சொல்கிறது. என்னதான் சீதை துணிச்சலானவளாக இருந்தாலும் ராமன் கலங்குவதாக புலமைப்பித்தன் உருகிப் போகிறார்.

"மங்கை அவள் சீதை

முள்ளில் நடந்தாள் மன்னனவன் கண்ணில்

கங்கை வழிந்தாள்.

உள்ளம் நெகிழ்ந்தான்!

-ராமன் சீதை புனை புராணமோ, மிகை வரலாறோ ஆயினும்.... வலி வலிதான்!

om011223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe