Advertisment

கோவில்களின் விஞ்ஞானத் தத்துவம்! - த. கணேசன்

/idhalgal/om/scientific-philosophy-temples-th-ganesan

னிதனின் நாகரிக வளர்ச்சிக்கேற்ப அவன் சிந்தனையில் தோன்றிய கட்டடக்கலையின் வெளிப் பாடாக, இறைசக்தியோடு தொடர்புகொள்ளும் மைய மாக, பல்வேறு சமுதாயப் பண்புகளை உருவாக்கும் இடமாக கோவில்கள் வடிவமைக்கப்பட்டன.

Advertisment

அன்றைய காலங்களில் மாணவர்களுக்கு நற்பண்புகள் போதிக்கும் இடமாகவும், குருமுறைக் கல்வி கற்பிக்கும் இடமாகவும் கோவில்கள் இருந் துள்ளன. அவற்றுடன் இணைந்து தெய்வநிலை களைப் பற்றியும், கண்ணுக்குத் தெரியாத பல்வேறு அரிய நன்மைகளை உணர்த்தும் இடமாகவும் விளங்கி யுள்ளன. எல்லா உயிர்களும் ரசிக்கும் இசையைக் கற்பிக்கும் இடமாகவும் விளங்கியுள்ளன. பல்வேறு ராகங்களின் பயன்பாடுகள், அவை மனிதர்களுக்குப் பயன்படும் விதம், சங்கீதத்தின்மூலம் பரம் பொருளுடன் இணைய வைப்பதற்கான முயற்சிகள் பயிற்சியாக அங்கு வழங்கப்பட்டன.

பரதநாட்டியம் போன்ற கலையைக் கற்பிக்கும் இடமாகவும் இவை விளங்கின. அப்படி கற்பிக்கப் பட்ட நாட்டியக்கலையை அரங்கேற்றும் நிகழ்வு மிக விமரிசையாக கோவில்களிலேயே நடத்தப்பட்டது.

இந்து சமயக் கோவில்களுடன் மன்னர்கள் நெருங்கிய தொடர்புடையவர்களாகத் திகழ்ந்தனர்.

Advertisment

அவர்கள் தங்களது அரசு கஜானாக்களில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை எவரும் அறியா வண்ணம் கோவில்களில் ரகசிய பாதாள அறைகளை அமைத்து வைத்து, அங்கு இறைசக்தியின் துணையுடன் பாதுகாத்தனர்.

f

விண்ணிலுள்ள பல்வேறு சக்திகளை கோவில்

விண்ணிலுள்ள பல்வேறு சக்திகளை கோவில் களுக்கு வரும் மக்களுக்குக் கிடைக்கும் வண்ணம் கொடிமரம், கோபுரக்கலசம், கோவில் முன்பு அமைந் துள்ள ஊருணி, தலமரம் என பல நுணுக்கமான அம்சங்களோடு அமைத்தனர். இவற்றின்மூலம் பல்வேறு சக்திப் பரிமாற்றங்கள் அங்கு செல்லும் மக்களுக்குக் கிடைத்தன.

மனிதனின் செயல்பாடுகளுக்கு மனம் மிகமிக முக்கியமான காரணியாகும். அந்த மனதை ஒருநிலைப் படுத்தக்கூடிய இடமாகவும், தீய எண்ணங்களைத் தவிர்க்கும் இடமாகவும், ஒற்றுமைப் பண்புகளைப் பெறும் இடமாகவும், ஏழை- பணக்காரர் என்ற வேறுபாட்டை நீக்கும் இடமாகவும், கொடைப் பண்புகளை ஏற்படுத்தும் இடமாகவும் கோவில்கள் அமைகின்றன. மூலவரை வணங்கும்பொழுது கிடைக்கும் தெய்வசக்தியுடன் மேலும் தெய்வ சக்தி யைப் பெற பிராகார அமைப்பு அமைக்கப்பட் டுள்ளது.

கோவிலில் ஒலிக்கப்படும் மந்திர ஒலி அலைகள் கோவில் முழுவதும் பரவி, அவை மனித உடலுக்கு அதிக அளவு கிடைக்க இந்த பிராகார அமைப்பு உதவுகிறது. மேலும் மனித உடலிலுள்ள ஏழு சக்கரங்களே மனிதனுக்கு ஒட்டுமொத்த ஆதாரமாக உள்ளன. அந்த அமைப்பைப் பிரதிபலிக்கும்விதமாக கோவிலில் ஏழு பிராகாரங்களுடன் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கொடிமரம் அருகே அமைக்கப்பட்டிருக்கும் நந்திதேவர் சிவனின் வாகனமாக இருந்தாலும், சிவபெருமானுக்குரிய மந்திர ஒலியலைகளும் நந்திக்குரிய மந்திர ஒலியலைகளும் இணைந்து சூரிய மின்காந்த அலைகளை அந்த இடத்தில் பரவச் செய்வதாகவே அமைகிறது.

மூலஸ்தானத்திலுள்ள சிவபெருமானை வணங்கும்பொழுது சிவனுக்குச் சொல்லப்படும் மந்திரங்கள் அனைத்தும், சூரியனின் மின்காந்த அலைகள் ஆலயம் முழுவதும் பரவுவதற்கு உதவுகிறது. அம்பாளுக்குச் சொல்லப்படுகின்ற மந்திர ஒலியலைகள் சந்திரனின் மின்காந்த அலைகளை முழுவதுமாகக் கிடைக்க வகை செய்கிறது. தட்சிணாமூர்த்திக்குச் சொல்லப்படுகின்ற மந்திரங்கள் குரு கிரகத்தின் மின்னாற்றலை பரவச் செய்கிறது. பிராகாரத்திலுள்ள விநாயகருக்குச் சொல்லப்படுகின்ற மந்திரங்கள் கேது கிரகத்தின் மின் ஆற்றலைத் தருகிறது.

அடுத்தபடியாக பெருமாள் சந்நிதி முன்பாக சொல்லப்படுகின்ற மந்திர அலைகள் சனி, புதன் கிரக சக்தியைப் பெற உதவுகிறது. அதன்பின் முருகனுக்குச் சொல்லப்படுகின்ற மந்திர ஒலி அலைகள் செவ்வாய் கிரகத்தின் மின்னாற்றல் அங்கு நிலைக்க உதவுகிறது. அதன் அருகிலுள்ள மகாலட்சுமிக்குச் சொல்லப்படுகின்ற மந்திரங்கள் சுக்கிரனின் மின்னாற்றலைப் பரவச் செய்கிறது.

துர்க்கைக்குச் சொல்லப்படுகின்ற மந்திரங்களால் ராகு கிரகத்தின் மின்னாற் றல் பரவுகிறது. பைரவர் சந்நிதியில் சொல்லப்படுகின்ற மந்திரங்கள், வான்வெளியிலிருந்து சுக்கிரனின் மின்னாற் றல் பெருமளவிற்குக் கிடைக்க உதவுகிறது.

இவ்வாறு கோவில்களுக்குச் செல்லும் மனிதர்கள் மனதை ஒரு நிலைப்படுத்தவும், அங்கு கிடைக்கக்கூடிய ஒன்பது கிரகங்களின் மின்னாற்றலை ஒவ்வொரு சந்நிதிகளிலும் பெறவும் கோவில்களின் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கருங்கல்லால் அமைக்கப்படும் திருமேனிகள் அங்கு ஒலிக்கப்படுகின்ற மந்திர ஒலியலைகளைத் தன்னகத்ததே மிகுதியாக சேமித்து வைத்து வழங்கும் சிறப்புத் தன்மை வாய்ந்தது. உலகம் முழுவதும் இறைசக்தி நிறைந்திருந்தாலும், ஒவ்வொரு சாதாரண மனிதனும் எளிதில் இறைசக்தியைத் தொடர்புகொள்ள உதவும் இடமாக கோவில்களின் கட்டட அமைப்பே உதவுகின்றன.

கோவில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வது எதற்காக என்றால், தினந்தோறும் கோவில்களில் சொல்லப்படும் மந்திர ஒலியலைகள் கோவில் முழுவதும் நிரம்பிக் காணப்பட்டாலும், அந்த கோவிலுக்கு வரும் மக்கள் வேண்டுதல்களாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து, அங்கு நிரம்பியுள்ள நல்ல மின்காந்த அலைகளைப் பெற்றுச்சென்றுவிடுவர். இப்படி லட்சக்கணக்கான மக்கள் வந்து மின்காந்த அலைகளைப் பெற்றுச் சென்றுவிடுவதால், அங்குள்ள மின்காந்த அலைகளின் அளவு குறைந்துவிடும்.

இதை அதிகரிக்கும்விதமாக 12 வருடத்திற்கு ஒருமுறை மூலவர், பிராகாரத்தில் உள்ள பரிவார தெய்வங்களின் தெய்வ சக்திகளை கும்பத்தில் நிரப்பி பாலாலயம் செய்து ஓரிடத்தில் வைத்துவிடுவர். கும்பாபிஷேக நாளாக ஒரு நல்ல நாளைக் குறித்து, நூற்றுக்கணக்கான நபர்களால் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் மந்திரங்களை ஒலிக்கச்செய்து, அந்த ஒலி அலைகள்மூலம் அந்த கும்பத்தில் தெய்வ சக்தியின் ஆற்றலை அதிகரிக்க வைப்பர். வானிலிருந்து பூமிக்கு நல்ல மின்காந்த அலைகள் சரியான விகிதத்தில் வரும் நேரமானதே நல்ல நேரமாகும். அந்த நேரத்தில் அவற்றை அவற்றிற்குரிய சந்நிதிகளில் வைத்துவிடுகின்றனர்.

இவற்றில் மூலவர் சிலைக்கு அடியில், மூலவருக்குரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட எந்திரங்கள் வைக்கப்படுகின்றன. இந்த எந்திரங்கள் 48 நாட்கள் மந்திர ஒலிகளால் நிரப்பப்பட்ட பின்னரே இவ்வாறு வைக்கப்படுகிறது. இதன்மூலம் அந்த கோவில் முழுவதும் மீண்டும் தேவையான அளவு நல்ல மின்காந்த அலைகள் நிலைத்திருக்கும்.

சித்தர்கள் மனிதனாய்ப் பிறந்து தன்னுடைய தவ வலிமையால் சித்தர் நிலையை அடைந்தனர். இப்படி வலிமை மிகுந்த சித்தர்கள் புகழ்பெற்ற கோவில்களில் சமாதி நிலையை அடைந்திருக்கின்றனர். இந்த ஆற்றல் மிகுந்த சித்தர்களை அந்த கோவில்களுக்கு வரும் மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். அந்த சித்தர்களும் பல்வேறு ஆற்றல்களை மனிதர்களுக்கு வழங்குகின்ற னர். அப்படிப்பட்ட சிறப்பான நிலையைப் பெற்ற வலிமை மிகுந்த சித்தர்களே தனக்கு மேலாக பரம்பொருள் ஒன்றே இந்த உலகை காக்கக்கூடிய ஆற்றல் உடைய சக்தி; அந்த சக்தியை எளிதில் தொடர்புகொள்ளக்கூடிய இடம் கோவில்களே எனக்கருதி, அந்த கோவில்களில் ஜீவசமாதி அடைந்தனர். எனவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த கோவில்களுக்குச் செல்லும்பொழுது இறைசக்தியும் சித்தர்கள் வழங்கும் ஆற்றலும் பெற்று இரட்டிப்புப் பலனை அடைவார்கள்.

om010123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe