ங்கு பார்த்தாலும் "தண்ணீர் இல்லை; தண்ணீர் இல்லை' என்ற அவலக்குரல் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், "ஒரே வெயில்... புழுக்கம் தாங்கமுடியல... போன வருஷத்தோட இந்த வருஷம் வெயிலின் தாக்கம் கடுமையா இருக்கு...' இப்படி நம்மில் பலர் பலவாறா கப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

"ஓம்' இதழில் எழுத ஆரம்பிக்கும் முன்பாக தொடர்ந்து நான்கு மரணங் களை சந்தித்தேன். அதுவும் 15 நாட்களுக்குள். அந்த நால்வரில் ஒருவர் மட்டுமே 90 வயதைக் கடந்த பெரியம்மா. மற்ற மூவரில் ஒருவர் சினிமாக்காரர்; எம்.பி.யாகப் பணி செய்தவர். மற்ற இருவர் எனது நண்பர்கள். ஒருவர் தேவையற்ற மன உளைச்சலில் இருந்தார். யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ளமாட்டார். நான்காவது நபர் மிகப்பெரும் கோடீஸ்வரர். தனது குணங்க ளாலும், தேவையற்ற பழக்க வழக்கங்களாலும் நடுத்தரக் குடும்பச் சூழலுக்கும் கீழே தள்ளப் பட்டார். தள்ளப்பட்டார் என்பதை விட தானே தனக்கு ஒரு குழி யைத்தோண்டி அதில் அவரே விழுந்து விட்டார். விளைவு மரணம். 90 வயது பெரியம்மாவும் எனது நண்பரின் தாயாரே. மற்ற மூவரின் மரணமும் மாரடைப்பால் நிகழ்ந்தது. இந்த மூவரும் 35 வயதிற்குமேல் 43 வயதிற்குட்பட்டவர்கள்.

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். நான்கும் மரணமே. ஒவ்வொரு வீட்டிற் கும் சென்றபோது அங்கே இறந்தவரின் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தனர். மற்றவர்கள் எல்லாரும் மரணத்தை ஒரு நிகழ்வாக மட்டும் பார்த்தனர். பல கதைகளைப் பேசுகின்றனர். சிலர் சிரித்துக்கொண்டி ருக்கின்றனர். பலர் வருவதும், போவதுமாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இதனை ஒரு நிகழ்வாகப் பார்ப்பதை உணர்ந்தேன்.

பிறப்பும் இறப்பும் ஒரு நிகழ்வல்ல. மரணமென்பது ஒரு மிக உன்னதமான- உயர்ந்த பாடமாகும்; அதையெல்லாம் மிஞ்சி இழப்பென்பது ஒரு தத்துவம் (டட்ண்ப்ர்ள்ர்ல்ஹ்) என்பது பலருக்கும் புரியாமல் போகிறது. நிகழ்ந்த மரணம் நமக்கல்ல; யாருக்கோ என்ற எண்ணமே அதற்குக் காரணமாக இருக்கிறது. மரணம் எதை உணர்த்துகிறது?

Advertisment

"காற்றைத் தவிர வேறில்லை' (சர்ற்ட்ண்ய்ஞ் க்ஷன்ற் ஜ்ண்ய்க்) எனும் மகா தத்துவத்தை உணர்த்து கிறது. ஆம்; காற்றே (உயிர்க்காற்று) இந்த உடலை இயக்கும் மிக முக்கிய கருவியாகும். அத்தகைய காற்றுக்கு நம்மை எவ்வளவு காலம் பிடிக்கிறதோ அவ்வளவு காலம் மட்டுமே நம்மால் நடமாடமுடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த உயிர்க்காற்றை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? "தண்ணீர் இல்லை, வெயில் தாங்க முடிய வில்லை' என்று சொல்லித் திரியும் நாம், இது எதனால் நடக்கிறது என்று யோசிக்கி றோமா? நம் முன்னோர்கள் நமக்காக உருவாக்கி வைத்துச்சென்ற வளங்கள், குளங்கள், ஏரிகள், மரங்கள், மலைகள், நீராதாரங்கள் என எல்லாவற்றையும் அழித்துக்கொண்டிருக்கிறோம்.

குறிப்பிட்ட சதவிகிதத் தினரின் சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

nat

Advertisment

இத்தகைய செயலெல் லாம் இறைவனின் அன்பைப் பெற உதவாது. மரங்களை அழித்துவிட்டு தண்ணீருக்காக குடத் தைத் தூக்கிக்கொண்டு அலைந்து கொண்டி ருக்கிறோம். ஓரறிவு கொண்டவை என்று சொல்லப்படும் மரங்களும் செடிகளும் கொடிகளும் இறைவனின் தயவை எதிர்பார்த்து, தன் வாழ்நாள் முழுவதும் காத்திருக்கின்றன. ஒன்று தோன்றுவதும், பின்பு மறைவதும் இயற்கையே. ஆனால் அது இயல்பாக இல்லை என்பதே பிரச்சினை.

இயற்கை வளங்களாகிய செடி, கொடி, மரங்கள் எல்லாம்- குறிப்பாக நகரங்களில் இருப்பவை காற்றிலிருக்கும் ஈரப்பதத்தையே உணவாக உண்டு, இறைவன் அளித்ததாக நினைத்து மகிழ்ந்து வாழ்கின்றன. அதுமட்டுமல்லாமல் மனித இனத்திற்குப் பலவகையில் உதவிகளைச் செய்கின்றன.

ஆறறிவு ஜீவிகள் எதற்கெதற்கோ கூட்டணி வைக்கிறார்கள். பச்சோந்தி யைப்போல நிமிடத்திற்கு நிமிடம் கூட்டணி மாறுகிறார்கள். யாராவது ஒரு 1,000 மரக்கன்றுகளை வளர்த்து ஆளாக்க வேண்டுமென்று கூட்டணி வைக்கிறார்களா? நீராதாரங்களையும், மலை வளங்களையும் பாதுகாக்க கூட்டணி வைக்கிறார்களா? "யாரும் நம்மை கவனிக்கவில்லை; யாரும் நம்மைப் பார்க்கவில்லை. நாம் எந்த தவறையும் செய்யலாம்' என்று "பணம்... பணம்...' என்று சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப்

புதைத்து வைக்கும்

கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்

கூடுவிட்டு ஆவிதான்

போனபின்பு ஆரோ அனுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்'

என்ற பொன் வரிகளை மனதில் நிறுத்தி னால் பாவ எண்ணம் வருமா?

பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையம், மைய ஈர்ப்பு சக்தி, மைய விசை... இவையனைத் தையும் எவன் உருவாக்கினானோ அவனே இவற்றைத் தனது கால்பெருவிரலில் அழுத்தி வைத்து பிரபஞ்சத்திலுள்ள சகல உயிரினங் களையும் பாதுகாத்து வருகிறான். அவனே இவையனைத்தையும் அழித்தொழித்துப் புதுப்பிக்கும் பேராற்றல் பெற்றவன். அவன் இப்போது பூமிப்பந்தில் பேராசைகொண்ட மானிடர்களால் உண்டாக்கப்படும் கேடுகளை கவனித்துக்கொண்டிருக்கிறான். அழிப்பது அவனுக்கு வெகு சுலபம். அவனே பிரபஞ்ச இயக்குநரான சிதம்பரத்தில் வீற்றிருக்கும் தில்லை நடராஜன். அவன் அழிக்கும் ஆயுதத்தை இன்னும் கையில் எடுக்கவில்லை. நமக்கு இன்னும் வாய்ப்பை வழங்கிக்கொண்டிருக்கிறான்.

கடந்த காலத்தில் ஒரு மகாபேரரசன் வாழ்க்கையையும், நிகழ்காலத்தில் ஒரு மறைந்த கோவா முதலமைச்சர் வரையிலும் நமக்கு பல வழிகளிலும் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறான். நாம் சரியாக நல்பாடத்தை, படிப்பினையைக் கற்றுக்கொள்ளவில்லை என்றால், இந்த பிரபஞ்சத்தின் மொத்த இயக்கத்தையும் தன் கால்பெருவிரலில் அழுத்திவைத்திருக்கும் அந்த இறைவன் ஒரு நொடியில் அதை அழித்துவிடுவான். அதன்பிறகு எதுவும் மிஞ்சாது. எவரும் மிஞ்சமுடியாது. தில்லை நடராஜனின் கருணைப் பார்வை நமக்கு வேண்டுமெனில், நாம் இப்போதாவது திருந்திவிட வேண்டும்.

இன்று எது நம்முடையதோ நாளை அது வேறொருவருக்கு சொந்தமாகிவிடும். இறைவனின் கருணை மட்டுமே நிரந்தரம். எப்படி? ஒரு நிகழ்வை கவனிப்போம்.

ஒரு தாய்க் குரங்கானது தனது குட்டியை சுமந்தவாறு உணவைத் தேடுவது, உறங்குவது, ஓய்வெடுப்பது என்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் தனது குட்டியை அது பிடித்துக்கொள்வதில்லை. குரங்கின் குட்டிதான் தாய்க்குரங்கை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும்.

ஆனால் ஒரு தாய்ப் பூனையானது உணவைத் தேடும்போதோ, உறங்கச் செல்லும்போதோ, ஓய்வெடுக்கச் செல்லும்போதோ தனது குட்டிப் பூனையை அதன் பிடரியைக் கவ்விப்பிடித்துப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யும். இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். குட்டிக் குரங்கானது தன் தாயைப் பிடித்துக் கொண்டிருக்கும் தனது பிடியை விட்டால் தன் கதி அதோ கதி என்ற பயத்துடனே இருக்கும். ஆனால் குட்டிப் பூனையோ எதைப் பற்றியும் கவலைப்படாமல், எது நடந்தாலும் அது தன் தாய்ப் பூனையின் பொறுப்பு என்று மகிழ்ந்தே இருக்கும்.

நாம் ஒன்றைப் பிடித்துக் கொண்டி ருப்பதற்கும், நம்மை எதுவோ பிடித்துக் கொண்டிருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நாம் மனமாசற்று இருக் கும்போது எதை நாம் பிடிக்க நினைக்கிறோமோ- அதாவது இறைவனின் திருவடி- அதுவே நாளடைவில் நம்மைப் பற்றிக்கொள்ளும். வாழ்வியல் சித்தர் திருவள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம்.

"பற்றுக பற் றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு. (திருக்குறள்: 350)

விருப்பு- வெறுப்பு என்ற பேதமில்லாத- பற்றில்லாதவனாகிய இறைவனிடம் நம் அன்பெனும் பக்தியால் பற்றிக்கொள்ள வேண்டும். ஆணவம், கன்மம், மாயை எனும் ஆசைப்பிணிகளை விட்டொழிக்க அதுவே வழி.

"எவன் ஒருவன் என்னை (ஈஸ்வரன்) எல்லாவற்றிலும் காண்கின்றானோ, அவனே எல்லாவற்றையும் என்னில் காணமுடியும்.

அவனுக்கு நான் மறைவதில்லை. அவனும் எனக்கு மறைவதில்லை.'

அன்பை விதைப்போம்... இயற்கையாய் வளர்வோம்... இயற்கையைக் காப்போம்... இயற்கையில் இணைவோம்.