26-12-2020 அன்று சனி பகவான் தனுசு ராசியில் இருந்து அவரது சொந்த வீடான மகர ராசிக்கு இடம் பெயர்கி றார். ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்கிப் பலன் தருபவர் சனி பகவான். எனவே சனிப்பெயர்ச்சிக்குத் தனி முக்கியத்துவம் உண்டு.
பொதுவாக சனியின் சஞ்சாரப் பலனை கோட்சாரப்படி சந்திர ராசியிலிருந்து பார்க்கவேண்டும். அவ்வாறு பார்க்கும்போது சனி பகவான் 3, 6, 10, 11 ஆகிய ராசிகளில் சஞ்சரித்தால் நற்பலன்களைத் தருவார் என்பது ஜோதிட விதி. மேலும் ஒரு சிறப்புவிதி உண்டு. ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்துக்கு 2, 4, 6, 8, 9-ஆம் நட்சத்திரங்களில் சனி சஞ்சரித்தாலும் நற்பலன்கள் கிடைக்கப்பெறும்.
குறுகிய காலத்தில் ராசி மாறும் கிரகங்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியவையாகும். இரண்டே கால் நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் இடம்மாறுவார். இவர்களின் ராசி மாற்றத்தையும் உதாசீனப்படுத்த இயலாது. குறுகிய காலம் என்றாலும் நல்ல இடங்களில் சஞ்சரிக்கும்போது நன்மைகள் ஏற்படும். அதனையும் மனதில் கொள்ளவேண்டும். மேலும் ஜனன ஜாதகத்தில் சிலருக்கு சனி உச்சம் பெற்றிருப்பார் அல்லது வேறு கிரகங்கள் உச்சம் பெற்றிருக்கக்கூடும். அந்த கிரகங்களின் தசை, புக்தி, அந்தர காலங்கள் இந்த நேரத்தில் நடந்து கொண்டிருந்தால் அவையும் பேருதவி புரியும்.
எனவே நவக்கோள்களில் சனிக்கு மட்டும் தான் முக்கியத்துவம் என்று நாம் எண்ண இயலாது.
அஷ்டமச்சனி என்றோ, ஏழரைச்சனி என்றோ எண்ணி, அந்த ஒன்றின்மூலமாக நம்வாழ்வு பின்னடைந்துவிடும் என்ற பயத்திற்கு ஆளாக வேண்டாம். பரிகாரத்தால் வருமுன் காக்கலாம்.
மேஷம்
உங்கள் ராசிக்கு 10-ஆம் இடத்திற்கு சனி பகவான் இடம் மாறுகிறார். தொழில்துறையில் வளர்ச்சிகாண இயலும். என்றாலும் பொறாமை கொண்டோரால் சூழ்ச்சிக்கும் ஆட்படும் நேரும். இடமாற்றம், பணிமாற்றம் எந்தத் தொழிலிலும் நேரலாம். உடன்பிறந்தவர்களால் தொல்லை வரும். எதிர்பாராத செலவினங்களை எதிர்கொள்ள நேரும். முன்பின் தெரியாதவரிடம் ஏமாற்றமடைய நேரலாம். கொடுக்கல்- வாங்கலில் கவனமாக செயல்படவேண்டும். வெளிநாட்டுத் தொடர்பும் அனுகூலம் தராது. தீயோர் தொடர்பைத் தவிர்க்கவேண்டும். இருப்பினும் உங்கள் ஜனன ஜாதகத்தில் தசாபுக்தி சீராக நடைபெற்றால் நலம்பெற வாய்ப்பு பெருகும்.
பரிகாரங்கள்
தற்சமயம் உங்கள் வயது 48 எனில், அசையா சொத்து சார்ந்த வேலைகள், வீட்டு வேலைகள், புதிய மனை வாங்குதல் போன்றவற்றைத் தவிர்க்கவும். பார்வையற்றோர் பத்துப் பேருக்கு இயன்ற உதவிகள் செய்தல் நன்று. ஏழை மாணவர்களுக்கு கருப்புநிறக் காலனி தானம் செய்தல் நற்பலன் தரும். ஒரு இரும்புக் கிண்ணத்தில் கருப்புநிற எள்ளை நிரப்பி, அதில் பழைய செல்லாத நாணயங்களைப் போட்டு வீட்டில் இருட்டான இடத்தில் வைப்பது நல்ல பரிகாரம். சனிப்பெயர்ச்சி முதல் தொடர்ந்து எட்டு நாட்கள் ஆலயத்திற்கு நல்லெண்ணெய் வாங்கித் தருதல் சிறப்பானது. இப்போது குடியிருக்கும் வீட்டு வாசல் தெற்கு நோக்கியிருந்தால்- அதுவும் மரத்தினாலான கதவு என்றால், அதில் மூன்று இன்ச் அளவுள்ள இரும்பு ஆணியை தென்மேற்கு மூலையில் பதிக்கவும். இதனால் கெடுதல் தடுத்து நிறுத்தப்படும். அந்த ஆணி கடலின் மிதக்கும் படகின் ஆணி எனில் கூடுதல் பலன் தரும்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு 9-ஆம் இடத்திற்கு சனி வருகிறார். அங்கு வரும் சனி பெரும் நன்மை தராது என்றாலும், அஷ்டமச் சனியிலிருந்து விடுபட்டது ஆறுதலான விஷயமே. அலைச்சல், கடும் உழைப்பு, துன்பங்களிலிருந்து விடுபடலாம். நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டோர் நலத்தை எதிர் பார்க்கலாம். வாழ்க்கைத் துணையோடு இருந்துவந்த பிரச்சினைகள் மறையும். காரியத்தடைகள் அகன்றுவிடும். வீண் செலவு குறையும். தொழிலாளர் பிரச்சினை மறையும். உழைப்பின்மூலம் நற்பலன் பெறலாம். சனி நல்ல திருப்பங்களைத் தருவார்.
பரிகாரங்கள்
ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்ப தால், நீதிமன்ற வழக்கு இருந்தால் வாய்தா வாங்கி ஆறு மாதங்கள் தள்ளிவைப்பது நல்லது. 45 வயதைக் கடந்தவர்களுக்குத் தொல்லையில்லை. சுக்கிரன் கேதுவுடன் இருப்பதால், ஆண் சந்ததிகளால் வருமானம் பெருகும். தடை ஏற்பட்டால், ஒன்பது வெள்ளிக்கிழமைகள் குரு பகவானை மஞ்சள்ந

ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்ப தால், நீதிமன்ற வழக்கு இருந்தால் வாய்தா வாங்கி ஆறு மாதங்கள் தள்ளிவைப்பது நல்லது. 45 வயதைக் கடந்தவர்களுக்குத் தொல்லையில்லை. சுக்கிரன் கேதுவுடன் இருப்பதால், ஆண் சந்ததிகளால் வருமானம் பெருகும். தடை ஏற்பட்டால், ஒன்பது வெள்ளிக்கிழமைகள் குரு பகவானை மஞ்சள்நிற மாலை சாற்றி வழிபடவும். உடைந்த கதவு, ஜன்னல், நாற்காலிகள் இருந்தால் சீர்செய்து உபயோகிக்கவும். இனம்புரியாத நபர்களை இரவில் வீட்டில் தங்க அனுமதிக்கக்கூடாது. சனி தோஷம் விலக ஆலயங்களில் வளரும் மரங்களில் சிறிது நல்லெண்ணெய் கலந்த நீர் ஊற்றுதல் நன்று. உங்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் 4-ல் இருந்தால் வருமானத்தடை நீங்க செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு ஆறு ரூபாயை, தொடர்ந்து மூன்று வாரம் காணிக்கை செலுத்தவும்.
மிதுனம்
சனி உங்கள் ராசிக்கு 8-ல் வந்துள்ளார். இதை அஷ்டமச்சனி என்பர். அஷ்டமச்சனி தொட்டது துலங்காது என்பார்கள். ஆனால் உங்கள் ராசிக்கு சனி யோககாரகன் என்பதாலும், தன் வீடான மகரத்தில் இருப்பதாலும், உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானமான துலா ராசியைப் பார்ப்பதாலும், அது அவருக்கு உச்ச ராசி என்பதா லும் அஷ்டமச்சனியை எண்ணி நீங்கள் பயப்படத் தேவையில்லை. சகிப்புத் தன்மையை கடைப்பிடிக்கவேண்டும். கடின உழைப்புதான் மூலதனம். எந்த தீங்கும் நேராமல் சனி பகவான் நல்வழி காட்டுவார். அவரை அரணாக நம்பலாம்.
பரிகாரங்கள்
உங்கள் சுய ஜாத கத்தில் 12-ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லாமல் இருப்பின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் வாழ்வோர் இரவில் அங்கு செல்வது கூடாது. விஷ ஜந்துக்களால் தொல்லை ஏற்படும். ஒரு சமச்சதுர வெள்ளித்துண்டை எப்போதும் வைத்திருக்கவும். வெள்ளி தாயத்தும் அணிந்துகொள்ளலாம். சனிக்கிழமையன்று காய்ச்சாத பாலை மனையின் மேற்குப் பகுதியில் தெளிப்பது போதுமானது. ஒரு மர ஸ்டூல் அல்லது கல்லில் அமர்ந்து, தலையில் சிறிது நல்லெண்ணெய் தடவி குளிக்கலாம். தலையில் நீர் ஊற்றும்போது பாதங்கள் தரையில் படாது தூக்கிக் கொள்ளவேண்டும். இதனால் சனி தோஷம் அகலும். ராகு ராசிக்கு 12-ல் இருப்பதால், வேலை பார்ப்போருக்கு பதவி உயர்வு வரும். தடை ஏற்பட்டால் கோமேதக மோதிரம் அணியவும். திருமணத்தின்போது வரதட்சணையாக மோதிரம் தந்தால் இடது கை சுட்டுவிரலில் அணியவும். கொம்பில்லா கருப்புநிறப் பசுவுக்குப் புல் தருவது நல்ல பரிகாரமாகும்.
கடகம்
சனி உங்கள் ராசிக்கு 7-ஆம் இடத்திற்கு மாறியிருக்கிறார். இது அனுகூல நிலையல்ல. என்றாலும் ஜனன ஜாதகத்தில் சனி பலம்பெற்றவர்களுக்கும், தசாபுத்திகளும் சிறப்பாக இருப்பவர்களுக்கும் அதிக தொல்லை வராது. இளம் தம்பதியருக்கு மிக உற்சாகத்தை ஏற்படுத்தும். வம்ச விருத்தி உண்டாகும். அசையா சொத்து விவகாரத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. அதிக பயணங்களை எதிர்கொள்ள நேரும். இரும்பு வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். பொதுவாக நல்லவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஒரு குடும்பத்தில் இரு கடக ராசியினர் இருந்தால், ஐந்து சனிக்கிழமைகள் காலணி அணியாமல் ஆலயம் சென்று சனி பகவானை வழிபடவும்.
பரிகாரங்கள்
நீங்கள் மருத்துவர் எனில், அடுத்த இரண்டரை ஆண்டுகள் நல்ல சூழ்நிலை மகிழ்வைத் தரும். ஊனமுற்றோருக்கு இலவச மருத்துவம் செய்வது பெருமை சேர்க்கும். ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு சனிபகவான் வேண்டிய பொருளாதார உதவி செய்வார் என்பதும் விதி. பயணங்களில் பாலங்களைக் கடக்கும் போது எட்டு ஒரு ரூபாய் நாணயங்களை நீரில் போடுவது நன்று. வாடகை வருமானம் பெருகும். சுக்கிரனும் கேதுவும் செவ்வாய் வீட்டில் இருப்பதால், நாய் வளர்ப்போர் நெய் கலந்த உணவை அதற்குத் தருதல் கூடாது. பணமுடை ஏற்படும். விநாயகரை வணங்கவும். சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நகைகளை அடகுவைப்பது கூடாது. அனுமனை வணங்கிவந்தால் அடகுவைத்த நகை குறுகிய காலத்தில் மீண்டுவரும். பரம்பரை வீட்டில் 30 வருடங்களுக்குமேல் குடியிருப்போர் இரும்பினாலான குதிரை லாடம் வாங்கித் தொங்கவிடலாம்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு 6-ஆம் இடத்திற்கு சனி மாறுகிறார். 6-ஆம் இடம் நல்லதை அள்ளித்தரும் இடமென்கிறது சாஸ்திரம். எல்லா பிரச்சினைகளும் விடைகொடுக்கும். மனச்சோர்வு, உடல்சோர்வு அகன்று சுறுசுறுப்பு மிகையாகும். ஞாபகசக்தி பெருகும். நீண்டநாள் நோய் படிப்படியாக மறையும். குறிப்பாக முழங்காலில் இருந்த வேதனை தீரும். வழக்குகளில் வெற்றி உங்களுக்குத்தான். பொருளாதாரம் நிறைவைத் தரும். திருமணம் கைகூடும். தாம்பத்தியத்தில் இருந்த திருப்தியற்ற நிலைமாறி சந்தான பாக்கியம் கிட்டும். தினக் கூலியினருக்கு நிரந்தர வருமானத்திற்கு வழிபிறக்கும். வாழ்வு செழிப்பாகும்.
பரிகாரங்கள்
பயணத்தால் லாபம் கிட்டும். தந்தையை விட மகனுக்கு வருமானம் அதிகமாகும். ஆண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டத்தைத் தரும். இரவுப் பணியாளர்கள் காவலாளிகள் வலக்கையில் ஒரு செம்புக் காப்பு அணிதல் நன்று. எதிரியின் வேகம் குறையும். உங்களு டைய சொந்த ஜாதகத்தில் சூரியன் 12-ல் இருந்தால் மனைவியின் வருமானம் அதிகமாகும். தடைப்பட்டால் ஐந்து சனிக் கிழமைகள் கருங்குவளை மலரால் சனி பகவானை பூஜிக்கவும். உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு 5-ல் எந்த கிரகங்கள் இருந்தாலும் குழந்தை பாக்கியம் சிலருக்குத் தடைப்படும். சனியை வணங்கினால் இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆண்மகனை வாரிசாகத் தருவார். 28 வயதிற்குமுன் திருமணம் செய்தோர் சனிபகவானை வணங்குவதால் 36 அல்லது 39 வயதில் உங்களை சொந்த வீட்டில் வைத்து அழகு பார்ப்பார். அமாவாசையன்று இரவு மண் குடுவையில் நல்லெண்ணெய்யை ஊற்றி நீர்நிலையில் போடுவது நல்ல பரிகாரம்.
கன்னி
சனி உங்கள் ராசிக்கு 5-ஆம் இடத்திற்கு வருகிறார். அர்த்தாஷ்டமச் சனியின் காலம் விலகுகிறது. எனவே சோதனைகள் குறையும். மனசஞ்சலம் விலகும். நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். மதிப்பு உயரும். கோட்சாரப்படி சனி ஐந்தில் சஞ்சாரம் செய்வது விசேஷமானது. என்றாலும் சனிப்பிரீதி செய்துகொள்வது நல்லது. 5-ல் உள்ள சனி பிள்ளைகளால் வருத்தத்தை ஏற்படுத்துவார். மனதில் குழப்பம், தீய எண்ணம், மறதி வரும் வாய்ப்புள்ளது. இடமாற்றம், பணிமாற்றம் நிகழும். அவை சார்ந்த கவலையும் ஏற்படலாம். தசாபுக்தி சரியில்லாதவர்களுக்கு வேலையிலும் தடை ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்பிலும் முன்னேற்றம் இருக்காது. அரசியல்வாதிகள் சிலருக்குப் பதவி பறிபோகலாம். பரிகாரம்மூலம் வருமுன் காக்க முயற்சிப்பது நன்று.
பரிகாரங்கள்
ஆறில் சனியுடன் குருவும் சேர்ந்திருப்ப தால், சிறிது பாதாம்பருப்பை லேசாக வறுத்துப் பொடிசெய்து, சனிக்கிழமையன்று நீரில் கலந்து நீராடுவது போதுமானது. கேதுவுடன் சுக்கிரன் இருப்பதால், நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு தீயபழக்கம் இருந்தால் பால்வினை நோய் வரும். கவனம் தேவை. பரம்பரை வீட்டில் நெடுநாள் குடியிருப்போர், ஒரு மண்குடுவையில் நல்லெண்ணையை நிரப்பி வாசலில் தொங்கச்செய்து, பத்து நாட்கள் கடந்தபின் வீதியில் போடலாம். சுபிட்சம் வரும். இப்போது வயது 6, 16, 28, 40, 52, 64, 76, 88 என்றால் கோமேதக ராசிக்கல் மோதிரம் அணிதல் நன்று. கூட்டுக் குடும்பமாக இருப்போர் அடுத்துவரும் இரண்டரை ஆண்டுகள் தனிக்குடித்தனம் போனால் சிக்கல் ஏற்படும். சொந்த ஜாதகத்தில் இரண்டாம் இடம் கிரகங்கள் இல்லாமலிருந்தால் நாயைத் துன்புறுத்துதல் கூடாது.
துலாம்
உங்கள் ராசிக்கு 4-ல் சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இது அனுகூலமான நிலையென்று கூற இயலாது. இருப்பினும் இந்த சனிப்பெயர்ச்சிக் காலத்தில் குருபலம் கைகொடுக்கும். சனியின் கெடுபலன்கள் தொடராவண்ணம் சனிப்பிரீதி செய்வது நல்லது. திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை வணங்கி வந்தால் கெடுதல்களின் வேகம் குறையும். உடல் ஊனமுற்றோருக்கு உங்களால் இயன்ற உதவிகள் செய்வது நல்ல பரிகாரம். பொதுவாக 4-ல் உள்ள சனி சுகத்தைக் கெடுப்பார். அரசு சார்ந்த தொல்லைகள் வரும். இடமாற்றம், பணிமாற்றம், தொழில் மாற்றம் ஏற்படலாம், வாழ்க்கைத் துணை யுடன் கருத்து வேறுபாடுகள், ஆரோக்கியக் குறைவு, எதிரிகளால் தொல்லை போன்றவை ஏற்படலாம். பரிகாரங்கள்மூலம் சீர் செய்யலாம்.
பரிகாரங்கள்
ராசிக்கு 4-ல் சனியுடன் குரு இருக்கும் வரை தொழில் மேன்மை அடையும். எனினும் மூட்டுவலி, முழங்கால் வலி வரலாம். டர்குவிஸ் ராசிக்கல் மூன்று கேரட்டில் வெள்ளி உலோகத்தில் பதித்து மோதிரமாக அணிதல் நன்று. சனிப் பெயர்ச்சியின்போது சூரியன், புதன் மூன்றிலும், சனி நான்கிலும் நிற்பதால் ஜோதிடம், ஆன்மிகம், தெய்வபக்தித் துறையினருக்கு புகழ் சுலபமாக வந்துசேரும். தடை ஏற்பட்டால், சனி ஹோரையில் நிலத்தடிநீரை அப்படியே பருகுதல் கூடாது. சூடாக்கிப் பருகலாம். சுக்கிரன் மற்றும் கேது விருச்சிகத்தில் இருப்பதால், சுக்கிரன் தனுசு ராசிக்குச் செல்லும்வரை வம்ச விருத்திக்கு முயல்வது கூடாது. சொந்த ஜாதகத்தில் ஆறாமிடம் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் கூடவே கூடாது. சனி காயத்ரி மந்திரத்தை தினமும் எட்டுமுறை கூறவும். சனைச்சராய சாந்தாய சர்வபீஷ்ட பிரதாயினே நம சர்வாத்மனே துவ்யம் நமோ நீலாம்பராய.
விருச்சிகம்
சனி உங்கள் ராசிக்கு 3-ஆம் இடத்திற்கு வருகிறார். இது அனுகூல மாற்றம் எனலாம். ஏழரைச்சனியின் காலம் முடிந்து, நல்ல பலன்தரும் பொற்காலம் எனக் கருதலாம். பழைய பிரச்சினைகள் கூண்டோடு மறையும். பொருளாதாரம் மேம்படும். நோய் விடைபெறும். காரியங்கள் வெற்றி பெறும். அரசியல், பொதுநல ஈடுபாடு உடையவர்களுக்கு, கிராம, நகர அதிகாரிகளுக்கு செழிப்பான சூழல் சுலபமாகும். புதிய பொருட்கள் சேரும். கிடப்பில் போடப்பட்ட வீட்டுப் பணிகள் நிறைவேறும். வாகனங்கள், கால்நடைகளால் ஆதாயம் பெருகும். எதிரிகள் புறமுதுகு காட்டி ஓடுவார்கள். உடன்பிறப்புகளால் நன்மைகள் இருப்பினும் கவனம் தேவை. கூலிவேலை செய்வோருக்கு நிரந்தர வருவாய்க்கு வழிபிறக்கும். தொழில் வளர்ச்சி பெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரங்கள்
உங்கள் வீட்டில் தலைவாசல் கிழக்கு அல்லது வடக்கு நோக்கியிருந்தால், சனிக்கிழமைகளில் பிறரிடம் கொடுக்கல்- வாங்கலைத் தவிர்க்கவும். இல்லையேல் பண நெருக்கடி வரும். சொந்த ஜாதகத் தில் மூன்று அல்லது பத்தில் கேது இருந்தால் கெடுதல்கள் குறையும். சொந்த ஜாதகத்தில் சந்திரன் 10-ல் இருந்தால் திருட்டு போகுதல் போன்றவை நிகழும்; எச்சரிக்கை. வீட்டின் இருட்டான அறை யில், ஆறு பாதாம்பருப்பை கறுப்புத் துணியில் பொட்டலம் கட்டி இரும் புப் பெட்டியில் வைப்பது மிக நன்று. மூன்றுக்கு மேற்பட்ட நாய் வளர்ப் போருக்கு ராகு- கேது அசையா சொத்தைத் தருவார். பூர்வீக வீட்டிலிருப்போர் தலை வாசலில் மரக்கதவு இருந்தால், அதில் மூன்று இன்ச் அளவுள்ள இரும்பு ஆணியைப் பதித்து வைக்கவும். 18 அல்லது 36 வயதளவில் பொருளாதாரம் கணிசமாக உயரும்.
தனுசு
தனுசு ராசிக்கு இரண்டாமிடத்தில் சனி வருகிறார். ஜனன ஜாதகத்தில் சனி பலம்பெற்றிருந்தாலும், சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும், தற்சமயம் நடப்பு தசா புக்திகள் சிறப்பாக இருந்தாலும் கெடுபலன்கள் குறையும். நட்சத்திரரீதியாக சனி சஞ்சரிக்கும் நிலையை அறிந்து பலனை நிர்ணயம் செய்தல்வேண்டும். வெளிநாட்டு வர்த்தகம் சீராக இருக்காது. விநாயகரை வழிபடுதல் நன்று. இழப்பைத் தவிர்க்கும் வாய்ப்புகள் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். கலைஞர்கள் நிச்சயம் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். பிறமொழி, மதத்தவரால் தொடர்ந்து நன்மைகளை எதிர்பார்க்கலாம். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. நண்பர்கள் அளவோடு உதவுவார்கள். அக்கம்பக்கத்தினரால் சிறு தொல்லைகள் வரலாம். உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டும். அசையா சொத்துகள் வாங்க அல்லது விற்க நல்ல தருணம்.
பரிகாரங்கள்
சனிப் பயிற்சியின்போது குருவும் உடனிருப்பதால் பணவரவு அல்லது உடல்நலம் பாதிக்கப்படலாம். குறிப்பாக 9, 21, 31, 41, 57, 65 வயதில் உள்ளவர்களுக்கு இந்த நிலை தெரியவரும். எனவே சனிக்கிழமையன்று, காலணி அணியாமல் சனி பகவான் ஆலயம் சென்று, ஐந்து அல்லது பதினோரு நாட்கள் வணங்கி வரவும். ஒரு சிறு எவர்சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி ஆலயத்திற்குக் கொண்டுசென்று, வணங்கி வந்தபின் அந்த நீரை வீட்டின் மேற்கு திசையில் தெளிக்கவும். கேது ராசிக்கு 12-ல் இருப்பதால், குடும்ப சொத்துகள் வரவேண்டியது இருந்தால் சனியை வணங்கினால் பலன் கிட்டும். நாய் வளர்ப்போர் வீட்டில் நாய் இறந்தால், 40 நாட்களுக்குள் வேறொரு நாய் வாங்கி வளர்ப்பது முக்கியமானது. ராகு 6-ல், சனி 2-ல் இருப்பதால், நீலநிறப் பூவால் சனி பகவானை அல்லது சரஸ்வதியை மனதார வணங்கினால் எல்லா ஆசைகளும் 24 மாதங்களுக்குள்ளாக மனநிறைவோடு நிறைவேறும்.
மகரம்
சனி ஜென்ம ராசிக்கு இடம்பெயர்கி றார். இது திருப்திகரமான மாற்றமல்ல. இருந்தாலும் ஜென்மச் சனியின் பாதிப்புகள் குறையும். இது இரண்டாவது சுற்று எனில் அதிக கெடுபலன்கள் ஏற்படாமல் தப்பிக்கலாம். முதல் சுற்றும் மூன்றாவது சுற்றும் இருக்கும் என்றால்தான் சற்று கெடுபலன்கள் அவ்வப்போது ஏற்படும். மேலும் சுய ஜாதகத்தில் சனி ஆட்சிபலம் பெற்றுக் காணப்பட்டால் இந்த சனிப் பெயர்ச்சியின் தாக்கம் பெருமளவு குறைந்துவிடும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகமாகும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் நிறைவேறும். வேலை யாட்களின் அனுகூலம் பெற இயலாமல் போகலாம். கடன்தொல்லை சற்று அதிகரிக்கும். திருமணம் தாமதமாகும். வேலையிலும் சற்று பின்னடைவுகள் வரக்கூடும். பரிகாரங்களால் சமாளிக்கலாம்.
பரிகாரங்கள்
சனியுடன் குருவும் இருப்பதால், ஒரு வருடம் கடந்தபின் அசையா சொத்து வாங்குதல் நன்று. ஒரு இரும்புச் சட்டி புதிதாக வாங்கி, ஏழைகள் சமையல்கூடம் நடத்திவந்தால் அவர்களுக்கு சனிக்கிழமை யன்று தானமாகத் தரலாம். தற்போது சிறியோர், வயது முதிர்ந்தோர் ஆலயப் பிரவேசம் செய்யக்கூடாது என்பதற்கான பரிகாரம் இது. மார்கழியில் சூரியன் தனுசு ராசியில் வரும்போது குடும்பத்திலுள்ள உறவினருக்கு உடல்நல பாதிப்பு வரலாம். ஞாபகமறதி தலைகாட்டும். மாமன், மைத்துனர் உறவுகளோடு இரண்டரை ஆண்டுகள் கூட்டுவியாபாரம் செய்வதைத் தவிர்க்கவும். ஐந்தில் ராகு இருப்பதால் தந்தை- மகன் உறவில் விரிசல் வரலாம். கோமேதக ராசிக்கு மூன்று கேரட்டில் அணிதல் நன்று.
கும்பம்
இதுவரை லாப ஸ்தானத்தில் உலாவந்த சனி தற்போது விரய ஸ்தானத்தில் வரப்போகிறார். பன்னிரண்டில் சனி வருவது நன்றல்ல. ஏழரைச் சனியின் ஆரம்ப காலமிது. கைப்பொருள், சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக விரயமாகலாம். தகுதியற்ற பணிகளைக் கையாள நேரிடும். ஏழரைச் சனியின் இரண்டாம் சுற்று என்றால் கவலைவேண்டாம். முதல் சுற்று, மூன்றாம் சுற்று நடப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும். சோம்பல், தூக்கம் ஆகியவற்றை அறவே அகற்றி, சுறுசுறுப்புடன் செயல்பட்டால் பலன்பெறலாம். நல்ல தசாபுக்தி நடை பெற்றால் சங்கடங்கள் குறையும். உங்கள் ராசிக்கு சனி 9, 10-க்குரியவர் என்பதால், விரயச் சனி அதிக கெடுதல் தராவண்ணம் காக்கப்படுவீர்கள். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படவும்.
பரிகாரங்கள்
திங்கட்கிழமை சிவனுக்கு ஊமத்தம்பூ மாலை அணிவித்து வணங்கி வருதல் நன்று. லலிதா சகஸ்ரநாமம் கூறுதல் சிறப்பு. ஞாயிற்றுக்கிழமைகளில் காலபைரவருக்கு தேங்காயில் தீபமேற்றி வழிபடலாம். ஆஞ்சனேயரை சாஷ்டாங்கமாக வணங்குதல் மிகநன்று. வேலையில்லா பட்டதாரிகள் சிலருக்கு வேலைவாய்ப்பு அமையும். வெளிநாடு சென்று கல்வி பயிலும் சந்தர்ப்பம் கூடிவரும். எக்காரணம் கொண்டும் பொய்சொல்லுதல் கூடாது. ஐந்து சனிக்கிழமைகள் ஆலயத்திற்கு ஒரு பாக்கெட் நல்லெண்ணெய் தருதல் மிகநன்று. கருப்பு எள்ளுருண்டையும், சித்தசுத்தி இலையும் கருப்புநிற மாட்டுக்குத் தருதல் நல்ல பலன் தரும்.
மீனம்
சனி உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்திற்கு வருகிறார். இது வரவேற்கத்தக்க அம்சமாகும். அவர் உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி. உங்கள் வாழ்க்கை மேன்மை பெறும் என திடமாக நம்பலாம். உங்கள் அந்தஸ்து எல்லா நிலையிலும் உயர்வடையும். குடும்பம் செழிக்கும். பயணத் திட்டங்கள் தங்குதடையின்றி நிறைவேறும். கருப்புநிற உலோக வியாபாரம் செய்வோருக்கு அபரிமிதமான லாபம் கிட்டும். சனிப் பெயர்ச்சியின் பிற்பகுதி இன்னும் அற்புதத் தைப் பெற்றுத்தரும். திருமணம் கூடிவரும். மகப்பேறு கிடைக்கும். கமிஷன் ஏஜெண்டு களுக்கு அதிக லாபம் சுலபமாக வந்துசேரும்.
பரிகாரங்கள்
உங்கள் வீட்டுத் தலைவாசல் தெற்கு நோக்கியிருந்தால், ஐந்து சனிக்கிழமைகள், எட்டு எருக்கம்பூ அல்லது மொட்டை கிண்ணத்தில் போட்டு வாசலில் வைத்து, மாலை மயங்கியபின் தெருவில் கொட்டவும். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வணங்கி தீபமேற்றவும். அமாவாசையை அடுத்த எட்டாவது நாளில்- அதாவது அஷ்டமி திதியில் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றலாம். ஸ்ரீ ராகவேந்திரருக்கு பிருந்தாவன பூஜையும் செய்யலாம். குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம். ஞாயிற்றுக்கிழமைகளில் காலபைரவரை வணங்குவதும் கெடுதலை அகற்றும். ஒரு இரும்புச் சட்டியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கருங்குவளை மலர்கள் மிதக்கவிட்டால் பூ வலமாகச் சுற்றினால் வெற்றியை உணரலாம். சனிக்கிழமையன்று அண்டங்காக்கைக்கு உணவு தருதல் நல்லது.
செல்: 93801 73464