Advertisment

அற்புதங்கள் நிகழ்த்தும் சத்ய சாய்பாபா!

/idhalgal/om/sathya-sai-baba-performs-miracles

"மனித உருவில் வாழ்ந்த கடவுள்தான் பெங்களூர் புட்டபர்த்தி பகவான் சத்ய சாய்பாபா. என் குடும்பம் முழுக்க சீரடி சாய்பாபா பக்தர்கள். நான் 1976 சென்னை மெடிக்கல் காலேஜில் படித்த நேரம் பீஸ் கட்ட அலுவலக வயதான கணக்காளரை சந்தித்தபோது அவர் என்னை புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவை தரிசனம் செய்துவிட்டுவா என்று அன்பு கட்டளை இட்டார். நான் அவர் அப்படி சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

Advertisment

அதுவரை குடும்பத்தோடு பல முறை சீரடி சென்று சாய்பாபாவை வணங்கிவந்த நான் முதன்முதலாக செல்வோம் என்று மட்டும் அப்போது நினைத்தேன். காரணம் அதற்குமுன் சத்ய சாய்பாபாவை பற்றி நான் நினைக்கக்கூட இல்லை. அதுவரை அவர்மீது பக்தியும் இருந்தது இல்லை. அந்த நேரம் என் கனவில் ஸ்கூட்டரில் சென்னை சாலையில் நான் சென்றபோது மியூசிக் அகாடமி சிக்னலில் நான் நின்றதும் அருகில் காரில் வந்து இறங்கி என் தலைமீது கைவைத்து ஆசீர்வாதம் செய்துவிட்டு சத்ய சாய்பாபா புன்னகையுடன் சென்றுவிடுகிறார்.

ss

இந்த கனவு என் மனதில் பக்தியுடன் நிலைத்து விட்டது. 1978 ஆண்டில் என் தந்தை மெடிக்கல் ஷாப் திறந்தபோது பெரிய சைஸ் சத்ய சாய்பாபா படம் அங்கே வைத்து தினமும் அவரை தவறா மல் வணங்கி நான் தீவிர சத்ய சாய்பாபா டிவோட்டி- பக்தர் ஆகிவிட் டேன். அதிகம் கோவில் செல் வதில்லை. ஆனால் சத்ய சாய்பாபா வை மனதார தினமும் வணங்கு வதை மட்டும் இப்போது செய்து வரு கிறேன்.

Advertisment

1982 ஆண்டில் சென்னை ஆபட்ஸ்பரி மாளிகைக்கு சத்ய சாய்பாபா வருகைதந்த போதுதான் அவரை முதன்முதலாக நேரில் தரிசனம் செய்ய சென்றேன். ஓரமாக நின்றிருந்த என்

"மனித உருவில் வாழ்ந்த கடவுள்தான் பெங்களூர் புட்டபர்த்தி பகவான் சத்ய சாய்பாபா. என் குடும்பம் முழுக்க சீரடி சாய்பாபா பக்தர்கள். நான் 1976 சென்னை மெடிக்கல் காலேஜில் படித்த நேரம் பீஸ் கட்ட அலுவலக வயதான கணக்காளரை சந்தித்தபோது அவர் என்னை புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவை தரிசனம் செய்துவிட்டுவா என்று அன்பு கட்டளை இட்டார். நான் அவர் அப்படி சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

Advertisment

அதுவரை குடும்பத்தோடு பல முறை சீரடி சென்று சாய்பாபாவை வணங்கிவந்த நான் முதன்முதலாக செல்வோம் என்று மட்டும் அப்போது நினைத்தேன். காரணம் அதற்குமுன் சத்ய சாய்பாபாவை பற்றி நான் நினைக்கக்கூட இல்லை. அதுவரை அவர்மீது பக்தியும் இருந்தது இல்லை. அந்த நேரம் என் கனவில் ஸ்கூட்டரில் சென்னை சாலையில் நான் சென்றபோது மியூசிக் அகாடமி சிக்னலில் நான் நின்றதும் அருகில் காரில் வந்து இறங்கி என் தலைமீது கைவைத்து ஆசீர்வாதம் செய்துவிட்டு சத்ய சாய்பாபா புன்னகையுடன் சென்றுவிடுகிறார்.

ss

இந்த கனவு என் மனதில் பக்தியுடன் நிலைத்து விட்டது. 1978 ஆண்டில் என் தந்தை மெடிக்கல் ஷாப் திறந்தபோது பெரிய சைஸ் சத்ய சாய்பாபா படம் அங்கே வைத்து தினமும் அவரை தவறா மல் வணங்கி நான் தீவிர சத்ய சாய்பாபா டிவோட்டி- பக்தர் ஆகிவிட் டேன். அதிகம் கோவில் செல் வதில்லை. ஆனால் சத்ய சாய்பாபா வை மனதார தினமும் வணங்கு வதை மட்டும் இப்போது செய்து வரு கிறேன்.

Advertisment

1982 ஆண்டில் சென்னை ஆபட்ஸ்பரி மாளிகைக்கு சத்ய சாய்பாபா வருகைதந்த போதுதான் அவரை முதன்முதலாக நேரில் தரிசனம் செய்ய சென்றேன். ஓரமாக நின்றிருந்த என்னிடம் வந்து என்னை ஆசீர்வதித்து சென்றார். 1976 ஆண்டில் கனவில் நடந்தது 1982-ல் நேரில் நடந்ததால் பக்தி பரவசப்பட்டு கண்ணீர் மல்க "ஓம் சாய்ராம்' என்று சத்யசாய்பாபாவை பூரண சரணாகதி அடைந்து அவரின் தீவிர டிவோட்டி பக்தன் ஆகிவிட்டேன். அது போல் அவர் படத்தை எனது இல்லம், மருத்துவமனைகளில் மாட்டி வைத்து வேறு எந்த தெய்வத்தையும் வேண்டாமல் சத்ய சாய்பாபாவை மட்டுமே வணங்கிவருகிறேன்.

பகவான் சத்ய சாய்பாபா என் வாழ்வில் நடத்திய, நடத்திக்கொண்டிருக்கும் அற்புதங்களை கூறிக்கொண்டே இருக்கலாம். அவற்றில் சிலவற்றை சொல்கிறேன்... கேளுங்கள்...

நான் மருத்துவ படிப்பு முடித்ததுமே எனது 27 வயதிலேயே சென்னை இசபெல்லா மருத்துவமனையின் சீப் மெடிக்கல் கன்சல்டன்ட் ஆக்கி நான் காண்பது கனவா? அல்லது நினைவா என்று என்னை பிரமிக்க வைத்து முதல் அற்புதத்தை என் வாழ்வில் துவங்கினார் பகவான் சத்ய சாய்பாபா.

பிறகு என் வாழ்வில் பல அற்புதங்களை, முன்னேற்றங்களை, சாதனைகளை தொடர்ந்து சந்திக்க வைத்தார் பகவான் சத்ய சாய்பாபா.

கண் கண்ணாடி அணிந்திருந்ததால் நான் கப்பல் டாக்டர் ஆகப்போவதை தடுத்த பல தடைகளை உடைத்தெரிந்து மினிஸ்ட்ரி ஆப் ஷிப்பிங்கில் கன்சல்டன்ட் ஆக வைத்தார் பாபா. என்னை முன்பின் தெரியாதவர்கள் என்னை நாடிவந்து இந்த பெரிய மதிப்புமிகு எந்த மருத்துவருக்கும் எளிதில் கிடைத்துவிடாத அறிய "கப்பல் மருத்துவர்' பதவி தந்தது மிராக்கிள் தானே?

இருக்கும் இடத்தை மிக சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக்கொள்வது, ஒவ்வொரு நிமிடத்தையும் பொன்னான நேரமாக செலவிடுவது பாபா எனக்கு கற்றுத்தந்தவையாகும். 1988 ஆண்டில் இளம் வயதில் குடும்ப பிரச்சினை காரணமாக எனக்கு லாயர் நோட்டீஸ் வந்தது. அந்த சமயம் நான் புதிதாக ஆரம்பித்த மைலாப்பூர் கிளினிக்கிற்கு சிகிச்சைபெற பெரியபெரிய விஐபிக்கள் வந்து முதல் ஆரம்ப தினமே என்னை அசர வைத்தார்கள். அதில் விஐபிக்கள் வழக்கு களுக்கு வாதாடும் பெரிய லாயரும் ஒருவர். பாபாவை வேண்டிகொண்டு அவரிடம் என் கேஸை கொடுத்ததும் தயக்கமின்றி வாதாடி வெற்றியும் பெற்றுத் தந்தார். பிறகு வழக்கு தொடுத்தவரே மனம் வருந்தி என்னிடம் பேசி சமாதானம் ஆனார்.

இதுபோல் எனக்கு எதிராக செயல்பட்ட பலரும் பாபாவின் அருளால் என்னிடம் தானாகவேவந்து மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.

எண்ணெய் எடுக்கும் கப்பலில் பாதுகாப்பு மருத்துவராக நான் ஒவ்வொரு முறையும் சென்றுவருவதே பெரிய ரிஸ்க்கான விஷயமாகும். ஒருசமயம் எண்ணெய் குழாயில் தீ பற்றி கப்பலில் பெரிய தீ விபத்து நான் போகும்போது ஏற்பட்டுவிட்டது. கப்பலில் இருந்த அனைவரும் "லைப் போர்டு'மூலம் காப்பாற்றப்பட்டு விட்டார்கள். அப்போது நான் இருந்த ரூம் மட்டும் லாக் ஆகி திறக்கமுடியவில்லை. அய்யோ எப்போதும் பல உயிர்களை காப்பாற்றும் நம் டாக்டர் உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதே என்று கப்பல் கேப்டன் கலங்கி போய்விட்டார்; பதட்டம் அடைந்துவிட்டார். ஆனால் நானோ சிறிதும் உயிர் பயமின்றி பாபாவை பிரார்த்தனை செய்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன்.

ஏஸி வழியாக என் அறை உள்ளே நெருப்பு சுவாலை வந்துவிட்டது. நான் சாக்லேட் ஒன்றை சாப்பிட்டுவிட்டு அமைதியாக இருந்தேன். அந்த மிக பரபரப்பான நெருக்கடியான நேரத்தில் கேப்டன் அழைப்பை தைரியமாக ஏற்று வெல்டர் ஒருவர் என் அறை முன்புறமாக வந்து லாக்கரை வெல்டிங் செய்து மன உறுதியோடு செயல்பட்டு என் அறை கதவை திறந்து என்னை அழைத்து கப்பலைவிட்டு வெளியேற்றி மற்றொரு படகில் ஏற்றி தாங்களும் உடன்வந்து கப்பல் கேப்டனும், வெல்டரும் என்னை கரை சேர்த்து உயிர் பிழைக்க வைத்தபோது அது பகவான் சத்ய சாய்பாபா எனக்குப் போட்ட "உயிர் பிச்சை' என்பதை பரிபூரணமாக உணர்ந்து பாபாவிற்கு நன்றி கூறினேன்.

ஒருசமயம் இரவில் கொசுவர்த்தியை என் வீட்டில் படுக்கையறையில் பற்ற வைத்து தூங்கியபோது தீ கங்கு படுக்கை பெட்சீட்டில் பட்டு தீ கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்ததும் பகவான் சத்யசாய்பாபா என் கனவில் வந்து "உடனே எழுந்து ஓடு' என்று கட்டளை யிட்டார். நான் அதன்படியே கண் விழித்து ஓடி அறை வெளியே வந்த அடுத்த நிமிடமே கொசுவத்தி "தீ' அறைபடுக்கை, துணிகள் முழுக்க பரவி பெரிதாக கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டது.

வீட்டில் இருந்த எல்லாரும் அலறி அடித்து ஓடிவந்து ரொம்ப நேரம் போராடி நிறைய தண்ணீர்விட்டு தீயை ஒருவழியாக அணைத்தனர்.

சாய்பாபா தக்க சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி என் உயிரை காப்பாற்றியதை எப்படி என்னால் மறக்க முடியும்? பாபாவை வேண்டி உறவினரிடம் 25 லட்சம் செக் பிசினஸ் செய்ய நம்பிக்கையுடன் தந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக பிசினஸ் நஷ்டம் ஏற்பட்டு 25 லட்சம் போயேவிட்டது. ஆனால் ஐந்து வருடம் கழித்து நானே சொந்த பிசினஸ் செய்த போது நஷ்டமான 25 லட்சம் லாபமாக எனக்கு வந்து "பாபாவை நம்பினோர் கைவிடப்படமாட்டார்' என்பதை உணர்ந்து நன்றி கூறினேன். சோதனையை சாதனை ஆக்குபவர் பகவான் சத்ய சாய்பாபா என்பது மட்டும் உறுதி என்பதை நன்றாகவே உணர்ந்தேன்.

ஒருசமயம் கப்பலில் இருந்து போட்டிற்கு நான் மாறியபோது கால் கப்பல் படகு இடையே சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. சிறிய ஆபரேஷன்மூலம் அது சரிசெய்யப்பட்டது. கால் நடக்கமுடியாமல் செய்துவிடாமல் அங்கு காப்பாற்றிது பாபாவின் கருணை என்று நன்றி சொன்னேன்.

பெரிய வசதி உள்ளவர்கள் மட்டுமே வசிக்கும் சென்னையில் ஒரு பகுதியில் இடம் வாங்கி வங்கி கடனை பெற்று வீடுகட்டி முடிந்தது இமாலய சாதனை போன்றது. அதை நடத்தி தந்தது சாய்பாபா அருளே! நாம் கனவிலும் நினைக் காத நல்ல விஷயங்களை நடத்திக்காட்டி நமக்கு தன் சக்தியை உணர்த்துபவர்தான் சத்ய சாய்பாபா.

நான் டாக்டராக பல பேஷண்டுகளை உயிர் காப்பாற்ற வைப்பது பாபா அருள்தான்.

எம்.எஸ் படிக்க எனக்கு வாய்ப்பு வந்தும் படிக்காமல் போனதற்கு காரணம் நான் ஆபரேஷன்கள் செய்யும் டாக்டராக மட்டும் ஆபரேஷன் தியேட்டரிலேயே முடங்கி விடாமல், எம்.டி படித்து பொதுமருத்துவராக ஓ.என்.ஜி.சி போன்ற பெரிய நிறுவனத் தில் பணிபுரிந்த பாக்கியம் பெற்றதும் பாபா அருளால்தானே? குறிப்பிட்ட நோய் என்றில்லாமல் பல்வேறு நோய்களை குணப்படுத்தி புகழ்பெறும் நல்வாய்ப்பும்... ஆத்ம திருப்தியும் கிடைத்துவிட்டதே!

பலசமயம் காரை ஓட்டிக்கொண்டு ஞட முடித்து இரவில் வீடு திரும்பும்போது கார்கள், லாரிகள், டூவீலர்கள் என் காரில் மோதுவதுபோல் வந்து விலகி செல்வார்கள். படு பயங்கர விபத்துக்களில் இருந்து என்னைக் காப்பது பகவான் சத்ய சாய்பாபா அருளும் அற்புதம்தானே!!'' டாக்டர் ஏ. சாய்ரமணன் தொடர்புக்கு: 98400 99639

om011223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe