இது என்ன புதுப்பெயராக இருக்கிறதே என்று வியப்பு தோன்றலாம். அனந்தம்மா அல்லது ஆனந் தம்மா என்பது இயற்பெயர். இவரது குருவான நட்சத்திர குணாம்பாள் ஸ்ரீ சக்கரம் தந்து வழிபடக் கூறினார். அதனால் சக்கரம்மாள் என பெயர் ஏற்பட்டு, அந்தப் பெயரே நாளடைவில் சர்க்கரையம்மாள் என்று மருவிவிட்டது.
இவரது சமாதிக்கோவில் சென்னை திருவான்மியூரில்தான் உள்ளது. ஆனால் பலருக்கும் தெரியாது. நான் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். 1964 வரை, பலமுறை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தை தரிசித்துள்ளேன். ஆனால் இவர் சமாதி அங்கிருப்பதை அறியேன். பாம்பன் சுவாமிகள் சமாதிக்கு சென்றிருக்கிறேன். 2010-ஆம் ஆண்டில் ஒருமுறை பாம்பன் சுவாமிகள் சமாதியை தரிசிக்கச் சென்றேன். தவறான தெருவில் நுழைந்துவிட்டேன். வழி புரியாதபோது அங்கிருந்த ஒரு அம்மையாரிடம், ""பாம்பன் சுவாமிகள் சமாதிக்கு எப்படிப் போகவேண்டும்? வழி தவறிவிட்டேன்'' என்று சொன்னேன். அந்த அம்மையார், ""நீங்கள் வழி தவறவில்லை. அடுத்த கட்டடத்தில் சர்க்கரையம்மாள் சமாதி சந்நிதி உள்ளது. அவர் தான் உங்களை இவ்வழியே வரச்செய்திருக்கிறார். அவரை தரிசித்துவிட்டுச் செல்லுங்கள். இந்த வழியில் சென்றால் பாம்பன் சுவாமிகள் சமாதியை அடையலாம்'' என்று சொன்னார். இது சக்கரம்மாள் அருளே என்பதில் சந்தேகம் உண்டோ?
சர்க்கரையம்மாள் என்றதும் ரமண மகரிஷி நினைவுக்கு வருகிறார். காவியகண்ட மகரிஷி என்பவர் படவேடு தலத்தில் தவம்புரிந்தார். அப்போது குண்டலினி சக்தி சகஸ்ராரத்தில் ஏற, தாங்கமுடியாத வெப்பம் அவருக்கு உண்டானதாம்.
அப்போது அவர் திருவண்ணாமலையிலிருந்த ரமண மகரிஷியை நினைக்க, அவர் வான்வழியே வந்து மகரிஷியின் தலையைத் தடவ, வெப்பம் குளிர்ந்ததாம். அதுபோல சர்க்கரைம்மாளுக்கும் லகிமா என்னும் சித்தி உண்டு. அதாவது உடல் காற்றுபோல கனமற்றிருக்கும். அதனால் வான்வெளியில் பறந்து செல்வாராம். ஞானசொரூபியான அந்த அம்மையாரின் வரலாறை சற்று சிந்திப்போமா?
திருவண்ணாமலை- போளூர் அருகே தேவிகாபுரம் என்னும் ஊரில் 1854 -ஆம் ஆண்டு, திருவாதிரை நட்சத்திர நாளில் பிறந்தவர் ஆனந்தம் மாள். இவரது தந்தையின் பெயர் சேஷ குருக்கள். தாயார் பற்றிய விவரம் தெரியவில்லை. இவரது வீட்டுக்கு அருகே பிருகன்நாயகி கோவில் உண்டு. மலைமீது கனககிரீசுவரர் சிவன் கோவிலும், தானே தோன்றிய நரசிம்ம சுவாமி கோவிலும் உள்ளன. போளூர் ஒரு ஆன்மிகத் தலம். விட்டோபா சுவாமிகள், ஞானானந்த சுவாமிகள் தவ
இது என்ன புதுப்பெயராக இருக்கிறதே என்று வியப்பு தோன்றலாம். அனந்தம்மா அல்லது ஆனந் தம்மா என்பது இயற்பெயர். இவரது குருவான நட்சத்திர குணாம்பாள் ஸ்ரீ சக்கரம் தந்து வழிபடக் கூறினார். அதனால் சக்கரம்மாள் என பெயர் ஏற்பட்டு, அந்தப் பெயரே நாளடைவில் சர்க்கரையம்மாள் என்று மருவிவிட்டது.
இவரது சமாதிக்கோவில் சென்னை திருவான்மியூரில்தான் உள்ளது. ஆனால் பலருக்கும் தெரியாது. நான் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். 1964 வரை, பலமுறை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தை தரிசித்துள்ளேன். ஆனால் இவர் சமாதி அங்கிருப்பதை அறியேன். பாம்பன் சுவாமிகள் சமாதிக்கு சென்றிருக்கிறேன். 2010-ஆம் ஆண்டில் ஒருமுறை பாம்பன் சுவாமிகள் சமாதியை தரிசிக்கச் சென்றேன். தவறான தெருவில் நுழைந்துவிட்டேன். வழி புரியாதபோது அங்கிருந்த ஒரு அம்மையாரிடம், ""பாம்பன் சுவாமிகள் சமாதிக்கு எப்படிப் போகவேண்டும்? வழி தவறிவிட்டேன்'' என்று சொன்னேன். அந்த அம்மையார், ""நீங்கள் வழி தவறவில்லை. அடுத்த கட்டடத்தில் சர்க்கரையம்மாள் சமாதி சந்நிதி உள்ளது. அவர் தான் உங்களை இவ்வழியே வரச்செய்திருக்கிறார். அவரை தரிசித்துவிட்டுச் செல்லுங்கள். இந்த வழியில் சென்றால் பாம்பன் சுவாமிகள் சமாதியை அடையலாம்'' என்று சொன்னார். இது சக்கரம்மாள் அருளே என்பதில் சந்தேகம் உண்டோ?
சர்க்கரையம்மாள் என்றதும் ரமண மகரிஷி நினைவுக்கு வருகிறார். காவியகண்ட மகரிஷி என்பவர் படவேடு தலத்தில் தவம்புரிந்தார். அப்போது குண்டலினி சக்தி சகஸ்ராரத்தில் ஏற, தாங்கமுடியாத வெப்பம் அவருக்கு உண்டானதாம்.
அப்போது அவர் திருவண்ணாமலையிலிருந்த ரமண மகரிஷியை நினைக்க, அவர் வான்வழியே வந்து மகரிஷியின் தலையைத் தடவ, வெப்பம் குளிர்ந்ததாம். அதுபோல சர்க்கரைம்மாளுக்கும் லகிமா என்னும் சித்தி உண்டு. அதாவது உடல் காற்றுபோல கனமற்றிருக்கும். அதனால் வான்வெளியில் பறந்து செல்வாராம். ஞானசொரூபியான அந்த அம்மையாரின் வரலாறை சற்று சிந்திப்போமா?
திருவண்ணாமலை- போளூர் அருகே தேவிகாபுரம் என்னும் ஊரில் 1854 -ஆம் ஆண்டு, திருவாதிரை நட்சத்திர நாளில் பிறந்தவர் ஆனந்தம் மாள். இவரது தந்தையின் பெயர் சேஷ குருக்கள். தாயார் பற்றிய விவரம் தெரியவில்லை. இவரது வீட்டுக்கு அருகே பிருகன்நாயகி கோவில் உண்டு. மலைமீது கனககிரீசுவரர் சிவன் கோவிலும், தானே தோன்றிய நரசிம்ம சுவாமி கோவிலும் உள்ளன. போளூர் ஒரு ஆன்மிகத் தலம். விட்டோபா சுவாமிகள், ஞானானந்த சுவாமிகள் தவம்செய்த தலம். பூண்டி சுவாமிகள் சமாதியான தலம்.
தந்தை கோவில் குருக்கள் என்பதால், ஆனந்தம்மாள் சிறு வயதிலேயே பக்தியில் ஆழ்ந்தார். வெகுநேரம் கோவிலிலேயே இருப் பார். அந்த தியானத்தில் மிகவும் ஆனந்தம்கொண்டார். இவரது தந்தைக்கு ஆண் குழந்தைகள் இல்லாததால், ஆண்குழந்தைபோல் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பினா ராம். ஆனால் படிப்பு மிகவும் குறைவே.
ஆனந்தம்மாவின் ஒன்பதாவது வயதில் அவரது தாயாருக்கு இன்னொரு குழந்தை பிறந்தது.
அடுத்த ஆண்டில் தாயார் இறந்து போனார். தாயாரின் தமக்கை சுப்பம்மா என்பவரால் இரு குழந்தை களும் வளர்க்கப்பட்டனர்.
ஆனந்தம்மாவின் பதின்மூன்றா வது வயதில் உறவினரான சாம்ப சிவ குருக்கள் (24 வயது) என்பவருக் குத் திருமணம்செய்து கொடுத்தனர். அவர் முன்னரே திருமணமாகி மனைவியை இழந்தவர். சாம்பசிவ குருக்கள் கோமளீஸ்வரர் ஆலய சட்டநாத மடத்தின் தலைவர். எனவே ஆனந்தம்மாள் மடத்தின் தலைவிபோல வாழ்ந்தார். கணவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செவ்வனே செய்தார். ஆனந்தம்மாவுக்கு 20 வயதானபோது கணவர் சாம்பசிவ குருக்கள் இறந்தார். எனவே இளம்வயதிலேயே விதவையானார்.
அம்மையார் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, தன்னிடமிருந்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம், பூஜைகள் செய்வார். கோமளீஸ்வரர் சிவனை தரிசிப்பார். அம்மனுக்கு கட்டில்வாங்கி பள்ளியறை தீபாராதனை செய்வார். அம்மையாரின் வேண்டுதல் என்ன? 'அசைவற்று இருக்கவேண்டும்; ஆனந்தமாக இருக்கவேண்டும்; நீயே நானாகவேண்டும். அது எப்போது?' என்பதே. அதாவது பக்தியின்மூலம் முக்திதர வேண்டுகிறார் அம்மா.
அருணகிரிநாதர் திருப்புகழில்-
"பக்தியால் யான் உனைப் பலகாலும்
பற்றியே மா திருப்புகழ் பாடி
முத்தனமாறு பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கு அருள்வாயே'
என்று பாடுகிறார். அதுபோன்ற நிலையே.
திருவிளையாடற்புராணம், பெரியபுராணம் போன்றவற்றை வாசிப்பார். நந்தனார் சரிதம், கண்ணப்பர் சரிதம் படிப்பார். ஒன்றுமறியாத சிவபக்தர்கள் சிவனால் ஆட்கொள்ளப்பட்டதை எண்ணி நெகழ்வார். பட்டினத்தார் பாடல்களும் அம்மையாரின் மனதை உருக்கும். வேத உபநிடதங்களில் புகவில்லை.
ஒருசமயம் அவரது ஆழ்ந்த தியானத்தின்போது மூச்சு நின்றுவிட்டதாம். அனைவரும் கவலைப்பட, தியானம் கலைந்தபோது மூச்சுவந்தது. மற்றவர்கள் இதுகுறித்து கேட்டபோது, "ஆழ்ந்த தியானத்தில் இவ்வாறு நடப்பது இயல்பு' என்றாராம். ஆனாலும் அம்மாவுக்கு அவ்வாறான ஆழ்ந்த தியானத்தில் விருப்பமில்லை. "எதைச் செய்தாலும் மனம் இறைவனிடமே லயிக்கவேண்டும். அதுதான் முக்கியம்' என்பார்.
அம்மாவுக்கு இஷ்டதெய்வங்கள் என்று கூறவேண்டுமெனில் தன்னிடமிருந்த ஸ்படிகலிங் கம், பிறந்த வீட்டுக்கு அருகே இருந்த பிருகந்நாயகி- கனககிரீஸ்வரர், தனது மடத்திலிருந்த அகத்தியர், காமாட்சி, கோமளாம்பிகை- கோமளேஸ்வரர், மீனாட்சி- சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகள். தனது சில நகைகளை விற்று காமாட்சி, கோமளவல்லிக்கு நகைகள் செய்து அணிவித்தாராம்.
தன் கணவர் இறந்து பத்து வருடங்கள்வரை இந்த தெய்வத் தம்பதிகள்மீது ஈடுபாடு அதிகமிருந்தது. ஆனாலும் புற வழிபாட்டை விட அகவழிபாடே (இறைவனைத் தன் உள்ளத்திலேயே ஆழ்த்திப் போற்றுவது) உயர்ந்தது என்று அதனில் ஆழ்ந்தார்.
போளூர் அருகே நட்சத்திரக் குன்றில் வாழ்ந்த நட்சத்திர குணாம்பாள் என்பவரைத் தன் குருவாக ஏற்றார். தன் குருவான அம்மையாரை தரிசித்து, உரையாடி, அருள்பெற்று ஞானம் வளர்த்தார். நட்சத்திர குணாம்பாள் ஒரு ஜமீன்தாரின் மனைவியாக இருந்தவர். தனது ஒரே மகன், குடும்பத்தை விட்டு, கானகம் சென்று 12 ஆண்டுகள் தவம்செய்தாராம். தனது நகைகளையெல்லாம் ஆடு மேய்ப்பவருக்குக் கொடுத்துவிட்டாராம். உணவுண்பது அரிதாம். பேசுவதும் மிகக் குறைவு.
அத்தகையவர் ஆனந்தம்மாவுக்கு ஸ்ரீசக்கரம் கொடுக்க, அம்மா சக்கரத்தம்மாள் ஆனார்.
திருவண்ணாமலையில் அடிமுடி பரதேசி என்னும் ஒரு சாது இருந்தார். அவரை தரிசிக்கவேண்டுமென்று அம்மாவுக்கு விருப்பம். ஆனால் திருவண்ணாமலை செல்ல இயலவில்லை. அவர் தான் இருக்குமிடம் வருவதாகத் தெரிய, தன்னிடம் வருமாறு வேண்டினார். அவருக்கு கேழ்வரகுக் கூழ் விருப்பமானது என அறிந்து, அதைத் தயாரித்து வைத்தார். அடிமுடி பரதேசி நான்காம் நாள் வந்தார். 'கூழ் தயாரிக்கட்டுமா?' என்று அம்மையார் கேட்க, "அதை நான் ஆடைவெளுப்பவர் வீட்டில் குடிப்பேன். இங்கு உண்பேன்' என்றார். பின்பு வந்து உண்டார். மிகவும் மகிழ்ந்தார் அம்மா. அந்த சாது அம்மையாரிடம், 'உனக்கு என்ன தேவை?' என்று கேட்க, "நான் எப்போதும் ஆனந்தத்தில்- ஆண்டவனில் ஆழ்ந்திருக்க வேண்டும்' என்றார் சக்கரம்மாள்.
'மறக்காதிருந்தால் இறக்காதிருப்பாய்; இறக்காதிருந்தால் பிறக்காதிருப்பாய்.
அதனால் ஆண்டவனை மறக்காதிரு' என்றார்.
1900 ஆண்டு, அந்த சாதுவின் சமாதிக் கோவிலை அம்மா தரிசித்து நெகிழ்ந்தார்.
ஒருசமயம் கோமளீஸ்வரர் கோவிலில் செல்லக்கண்ணு பரதேசி என்னும் சாதுவைக் கண்டார். அவர் யார், எங்கிருந்து வந்தார் என்ற விவரமெதுவும் தெரியவில்லை. கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் அவரை வணங்கினார். உண்ண உணவு தந்தார். சிலர் அவர் அங்கிருப்பது கண்டு வெறுக்க, அவர் அங்கிருந்து அகன்று ஒரு குளக்கரையில் இருந்தார். இது அம்மாவுக்குத் தெரியாது. கனவில் அவர் இருப்பிடம் தெரிய, அங்கு சென்று அவரை வணங்கி உணவு தந்தார். பின்னர் அவர் மதுரை செல்வதாகச் சொல்லி, அம்மாவுக்கு ஆசிகள் வழங்கினார்.
அம்மாவுக்கு திருவண்ணாமலை உண்ணாமலை பரதேசி என்பவரிடமும் ஈடுபாடு இருந்தது. அவரே அம்மாவைத் தேடிவந்து, "உங்கள் தரிசனம்காண வந்தேன்' என்றார். அவருக்கு வேண்டிய கற்பூரம், ஊதுவர்த்தி போன்றவற்றை அம்மா கொடுத்தார். அந்த சந்நியாசி அம்மாவுக்கு கற்கண்டு கொடுத்து, "இதை நீங்கள் உண்டால் நான் கடைத்தேறுவேன்' என்றாராம். அதுபோல ஆட்கொண்டான் பரதேசி என்பவரை தரிசித்து, பழங்கள் தந்து சாப்பிட வேண்டிட, அவர் சிறிது உண்டபிறகே
அவரை வணங்கிச் சென்றாராம் அம்மையார்.
பகவத் கீதையில் கண்ணன், 'சாதுக்கள் இதயத்தில் நான் உள்ளேன்; என் இதயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்' என்கிறான்.
சக்கரம்மாவின் தந்தையும் மற்ற குடும்பத்தினரும் சாதுக்களை தரிசிக்க அம்மாள் செல்வதை விரும்பவில்லை.
ஆனால் அம்மாவோ தன் மனம் எங்கு இழுக்கிறதோ அங்கெல்லாம் சென்று தரிசித்தார்.
ஒருசமயம் கண்ணப்பர் சரிதத்தில் ஆழ்ந்து அப்படியே கண்ணயர, காளஹஸ்தி கோவில், ஸ்வர்ணமுகி நதி, கண்ணப்பர் வழிபட்ட சிவலிங்கம் அனைத்தையும் கனவிலேயே தரிசித்தார். இன்னொரு சமயம் மருந்தீஸ்வரர், தியாகராஜர், அம்பாள் அனைவரையும் கனவில் தரிசித்தார். சில நாட்கள் கழித்து அந்தத் தலங்களைக் காண நேரில் சென்றபோது, கனவில் கண்டபடி இருந்தது கண்டு பிரமித்தார்.
'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பது வாக்கு. மாணிக்கவாசகரின் சரிதம், சில திருவாசகத் துதிகள் படித்து, மாணிக்கவாசகருக்குக் கிடைத்த அருள் தனக்குக் கிடைக்காதா என ஏங்கினார். பல ஆண்டுகள் கழித்து நட்சத்திர குணாம்மையை தரிசிக்கச் சென்றார்.
அப்போது அந்த அம்மையார், "இச்சமயம் அதிகாலை நீராடத் தேவையில்லை. ஞான சூரியன் உதிக்க நீராடல் தேவையில்லையே' என்றாராம். மேலும், 'ஸ்படிக லிங்கத்தை துர்க்கை குண்டத்தில் இட்டுவிடு. புறவழிபாடு இனி தேவையில்லை. உனக் குள்ளேயே வழிபாடு ஆழ்ந்து செல்லட்டும்' என்று கூறினார். சக்கரம்மாள் அன்றிலிருந்து அதைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்.
ஒருநாள் காலை நீராடிவிட்டு, "இன்னும் நான் என்னை உணரவில்லையே. அந்தநிலை ஏன் எனக்குக் கிடைக்கக் கூடாது? உனக்கு காது இல்லையா? நான் இன்னும் என்னதான் செய்யவேண்டும். உணவை விட்டேன். உயிரின்மீதும் ஆசை விட்டது' என்று உள்ளம் உறுகிக் கூற, 'தானே பிரம்மம்; அனைத்தும் பிரம்மம்' என்றுணர்ந்தார்.
அப்போது அவர் ஒளிமயமாக விளங்கினார். ஆனந்தமாய் இருந்தார். அகண்டாகாரமாய், ஆனந்தமாய், அசைவற்றதாய், எங்குமே நிறைந்ததாய் இருக்கின்ற ஸ்வரூபமே நாம்; நமக்கு வெளியே ஒன்றுமில்லை' என்றார். இந்த நிலையை பத்து வருட சாதனையிலேயே அடைந்தார். அப்போது அவருக்கு வயது முப்பதுதான். அதன்பின் காவியுடை உடுத்த ஆரம்பித்தார்.
சக்கரம்மாள் தன்னை உணர்ந்தவர் என்பதையறிந்த சண்முகன் என்பவர் அம்மையாரை தரிசித்து, "என் துயரங்கள் தீர உங்கள் பாதம் பணிகிறேன்' என்றார்.
அம்மா தன் சரிதத்தைக் கூறினார். மனசாந்தி பெற்ற அவர், வெள்ளிக்கிழமைதோறும் அம்மாவை தரிசிக்க வந்தார். ஆனந்தம் பெற்றார். இதன்பின்னர் எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் அம்மா ஆனந்தத் தில் அமிழும் அம்மா என்றானார். எவர் வந்தாலும், "துக்கத்தை அகற்றுங்கள்; சிரியுங்கள்; ஆனந்தமாக இருங்கள்; மங்களமே பொழியும். நீ உடல் அல்ல. உடலினுள் உள்ளாய்' என்பார்.
அம்மாவின் தம்பியுடைய உடல்நலத்தைப் பரிசோதிக்க நஞ்சுண்டராவ் என்னும் மருத்துவர் வந்தார். அப்போது அவர் அம்மாவை ஆழ்ந்து நோக்கினார்; சிந்தித்தார். "இவர் சாதாரண காவியுடை தரித்த அம்மா அல்ல. முற்றும் உணர்ந்தவர்; வணங்கத் தக்கவர்' என்பதைப் புரிந்துகொண்டு அடிக்கடி வந்து தரிசித்தார்.
ஒருசமயம் அந்த மருத்துவருடன் திருவான்மியூர் மருந்தீஸ்வரரை தரிசிக்கச் சென்ற அம்மையார், அங்கு கோவில் கொண்டுள்ள திரிபுரசுந்தரி அம்மனிடம் தமது பக்தர்களைக் காப்பது உன் பொறுப்பு என்றார். பின்னர் அங்கிருந்து திரும்பி நடக்கும்போது அருகிலிருந்த சவுக்குத் தோட்டத்தைப் பார்த்து, "நான் இங்கு சமாதியாவேன்' என்றார். அதைக்கேட்ட மருத்துவர், அம்மையார் குறிப்பிட்ட அந்த இடத்தை வாங்கினார்.
28-2-1901 அன்று (மாசி மாதம் திருவாதிரை) தான் சமாதி அடையவிருப்பதை உணர்ந்து கூறி, நண்பகல் 3.00 மணிக்கு சமாதி எய்தினார்.
மருத்துவர் நஞ்சுண்டராவ் அவருக்கு சமாதி வைத்துக் கோவில் எழுப்பினார். யாவரும் சென்று தரிசிக்கலாம். (இந்தக் கட்டுரை மருத்துவர் நஞ்சுண்டராவ் எழுதிய புத்தகத்தின் சுருக்கமே.)
முகவரி: 75, கலாஷேத்ரா சாலை,
திருவான்மியூர், சென்னை-41.
தொலைபேசி: 2452 1231.