Advertisment

சாதிக்க வைத்தாள் சமயபுரம் மாரியம்மன் !

/idhalgal/om/samayapuram-mariamman-made-her-achieve

த்தா... ஆத்தா... மாரியாத்தா...

மங்களங்கள் உண்டாக்குவா!

சமயபுரம் ஆத்தா... ஆத்தா...

சமயத்திலே கை கொடுப்பா...

aa

Advertisment

என பக்தர்களை பக்திப் பரவசப்பட்டு மெய்சிலிர்க்கப் பாட வைத்துவிடும் பேசும் தெய்வமாகவும், பக்தர்களுக்கு நலம்தந்து, வேண்டிவரும் பக்தர்களின் வேதனைகள் தீர்த்து, தம்மைச் சரணடையும் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம், சௌபாக்கியம் தந்துவரும் கண்கண்ட பெண் தெய்வம் சமயபுரம் மாரியம்மனின் அதிதீவிர பக்தர்களாகத் திகழும் மதுரை மிராக்கிள் ட்ரீ லைப் சயின்ஸ் நிறுவன அதிபர்கள் சுஜாதா மற்றும் அவரது கணவர் சரணவகுமரன் இருவரையும் அவர்களது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

தங்கள் வாழ்வில் சாதனைகள் செய்யவைத்த சமயபுரம் மாரியம்மனை நினைத்து நன்றி சொல்லி மெய் சிலிர்க்கி றார்கள் சுஜாதா- சரவணகுமார் தம்பதிகள்.

"மிராக்கிள் ட்ரீ' சரவண குமரன் பேசுகையில், "நான் என்ஜினியரிங் பட்டதாரி... என் மனைவி வணிகவியல் பி.காம் பட்டதாரி.

Advertisment

ஆனால் எங்கள் படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத விவசாய துறையில் வித்தியாச மான முழுமையான முருங்கை சம்பந்தப் பட்ட தயாரிப்பு சாதனைகளைச் செய்துவருகிறோம் என்றால் அதற்கு முழுக்காரணமும் நாங்கள் எங்கள் மகள்கள் இருவருடன் தினமும் தவறாமல் வணங்கிவரும் சமயபுரம் மாரியம்ம னின் திருவருள் என்றுதான் கூறுவோம்.

நான் மிராக்கிள் ட்ரீ நி

த்தா... ஆத்தா... மாரியாத்தா...

மங்களங்கள் உண்டாக்குவா!

சமயபுரம் ஆத்தா... ஆத்தா...

சமயத்திலே கை கொடுப்பா...

aa

Advertisment

என பக்தர்களை பக்திப் பரவசப்பட்டு மெய்சிலிர்க்கப் பாட வைத்துவிடும் பேசும் தெய்வமாகவும், பக்தர்களுக்கு நலம்தந்து, வேண்டிவரும் பக்தர்களின் வேதனைகள் தீர்த்து, தம்மைச் சரணடையும் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம், சௌபாக்கியம் தந்துவரும் கண்கண்ட பெண் தெய்வம் சமயபுரம் மாரியம்மனின் அதிதீவிர பக்தர்களாகத் திகழும் மதுரை மிராக்கிள் ட்ரீ லைப் சயின்ஸ் நிறுவன அதிபர்கள் சுஜாதா மற்றும் அவரது கணவர் சரணவகுமரன் இருவரையும் அவர்களது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

தங்கள் வாழ்வில் சாதனைகள் செய்யவைத்த சமயபுரம் மாரியம்மனை நினைத்து நன்றி சொல்லி மெய் சிலிர்க்கி றார்கள் சுஜாதா- சரவணகுமார் தம்பதிகள்.

"மிராக்கிள் ட்ரீ' சரவண குமரன் பேசுகையில், "நான் என்ஜினியரிங் பட்டதாரி... என் மனைவி வணிகவியல் பி.காம் பட்டதாரி.

Advertisment

ஆனால் எங்கள் படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத விவசாய துறையில் வித்தியாச மான முழுமையான முருங்கை சம்பந்தப் பட்ட தயாரிப்பு சாதனைகளைச் செய்துவருகிறோம் என்றால் அதற்கு முழுக்காரணமும் நாங்கள் எங்கள் மகள்கள் இருவருடன் தினமும் தவறாமல் வணங்கிவரும் சமயபுரம் மாரியம்ம னின் திருவருள் என்றுதான் கூறுவோம்.

நான் மிராக்கிள் ட்ரீ நிறுவனராகவும், என் மனைவி இணை நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறோம்.

முருங்கை மரம்தான் மிராக்கிள் ட்ரீ... மிராக்கிள் என்றால் அற்புதங்கள். சமயபுரத்தாள் முருங்கைமூலம் எங்கள் வாழ்வில் பல சாதனைகளையும் அற்புதங்களையும் நிகழ்த்தி வருகிறாள்.

ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு சத்து இருக் கும். ஆனால் எல்லாச் சத்துகளையும் கொண்டது முருங்கைக்கீரை மட்டுமே. மீனில் இருக்கும் ஒமேகா உள்ள ஒரே வீட்டல் ப்ராடக்ட் முருங்கைக்காய் மட்டும்தான். ஒமேகா ஆறு, ஒன்பது எல்லாமே இதில் இருக்கிறது. எனவே முருங்கைக் கீரையை குழந்தைகள்முதல் வயதான ஆண்கள், பெண்கள்வரை எல்லாருமே சாப்பிடலாம். ஆப்பிள், நெல்லியைவிட முருங்கைக்காயில் சக்தி அதிகம். விலையும் குறைவு. முருங்கைக்கீரையை தினமும் தவறா மல் சாப்பிட்டுவர வேண்டும். கீரையை வதக்கக்கூடாது. சக்தி போய்விடும். பருப்புப் போட்டு கடைந்து சாப்பிடவேண்டும்.

முருங்கைக் கீரையில் நாங்கள் வால்யூ ஆடட் ப்ராடக்ட்ஸ் மற்றும் மதிப்பு கூட்டல் பொருட்கள் செய்து விற்பனை செய்துவருகிறோம். முருங்கை மரத்தை ப்ராடக்ட் ஆக்கிவிட்டோம். முருங்கைப்பூ பெண்களின் பிசிஓடி பிரச்சினைகளுக்கு நல்லது. கர்ப்பப்பை பிரச்சினை, குழந்தை யின்மை பிரச்சினை என அனைத்திற்கும் சிறந்தது முருங்கை. எனவே முருங்கைப் பூவை பவுடர் ஆக்கித் தருகிறோம். அதைத் தேனில் குழைத்து சாப்பிடவேண்டும். சூப் போட்டும் சாப்பிடலாம். டேப்லெட் வடிவிலும் மாத்திரையாகவும் தருகிறோம்.

முருங்கையை வைத்து ஐம்பது ப்ராடக்ட் கள் தயாரித்து வழங்கிவருகிறோம். கனடா, சுவிட்சர்லாந்து, மலேஷியா, அமெரிக்கா போன்ற பதினெட்டு நாடுகளுக்கு எக்ஸ் போர்ட் ஏற்றுமதி செய்துவருகிறோம்.

ss

2009 ஆம் ஆண்டில் இருந்து முருங்கைப் பொருட்களை ஆராய்ச்சி செய்து தயாரித்து முருங்கையில் என்னென்ன இருக்கிறது என்று ரிசர்ச் செய்து முறைப்படி அரசு அனுமதிபெற்று விற்பனை செய்து வருகிறோம். 2014 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தைத் துவங்கி, 120 கிராம் முதல் பவுடர் பேக்கிங் செய்து தந்து வரவேற்பு பெற்றோம். "மோகோ' என்ற எனர்ஜி பார் செய்து பாதாம், ஏலக்காய், நிலக்கடலை, முருங்கை இவற்றால் தயாரித்து அளித்தோம். இதைச் சாப்பிட்டால் ஒருமணிநேரம் பசி தாங்கும். குழந்தைகளுக்கு சிறந்த ஸ்நாக்ஸ் ஆகவும் இது திகழ்கிறது. சீம்பால் கலந்தும் இந்த பார் செய்து தந்துள்ளோம்.

இதுவரை முருங்கைக்கீரையில் தயாரிப்பு கள் வந்துள்ளது. உலகிலேயே முதன்முதலாக முருங்கைக்காயை ப்ரீஸ் செய்து பாக்கெட் டில் தருகிறோம். இது இரண்டு வருடம் கெடாமல் இருக்கும். அதை சாம்பாரில் போட்டால் அப்படியே ப்ரஷ் ஆன முருங்கைக்காய் மாதிரியே சுவை தரும்.

கண்களுக்கு நலன்தரும் வகையில் முருங்கை எண்ணெய்யைத் தயாரித்து அளிக்கிறோம்.

இப்படி முருங்கை சார்ந்த ஆரோக்கிய வாழ்வை மனித சமுதாயம் பெறும்படி எங்களை இயங்கவைத்து வருவது உலகையே காக்கும் சமயபுரம் மாரியம்மன் அருள் என்று பரிபூரணமாக நம்புகிறோம். எங்கள் எல்லாப் புகழும் அவளையே சாரும்.

தொடர்ந்து பேசிய சுஜாதா சரவணகுமார் தனது பக்தி அனுபவங்களைக் கூறினார்.

"2002-ஆம் ஆண்டில் எங்கள் திருமணம் நடந்தது. சமயபுரம் மாரியம்மனின் அருளால் எங்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தார்கள். ஸ்ரீசக்தி சைகாலஜி படித்து முடித்திருக்கிறார்.

ss

வேதலெட்சுமி- ப்ளான்ட் சயின்ஸ் படித்துக் கொண்டே எங்களுக்கு உதவியாக இருந்துவருகி றார். நாங்கள் இருவரும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா வகுப்புகளில் பங்கேற்று பயிற்சிபெற்றோம். அதனைத் தொடர்ந்து அலங்கா நல்லூரில் பத்து ஏக்கரில் தோட்டம் அமைத்து முருங்கைப் பனை விவசாயம் செய்து, முருங்கைப் பொருட்களைத் தயாரித்து வழங்கிவருகிறோம். எங்களது நிறுவனம் சார்பாக விரைவில் நூறு ப்ராடக்ட்களைத் தொட்டுவிடுவோம். தினமும் காலை பூஜைகள் செய்து பிரார்த்தனை செய்வோம். யோகா, தியானப் பயிற்சிகளும் உண்டு. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடை பெறும் இரவு பூஜைக் குத் தவறாமல் சென்று வழிபடுவோம்..

எங்கள் குல தெய்வம் திருநெல் வேலி செட்டிக்குறிச்சி அய்யனார். நான் பிறந்தது வளர்ந்தது திருச்சி என்பதால் சிறுவயது முதலே சமயபுரம் மாரியம்மனின் தீவிர பக்தை ஆகி விட்டேன். என் கணவரும் என்னால் சமயபுரத்தாள் பக்தர் ஆகிவிட்டார்.

என் பெரிய பெண்ணின் பெயரை ஸ்ரீசக்தி என்று சமயபுரம் மாரியம்மனை வேண்டித்தான் வைத்தோம். இங்கே அருகிலுள்ள ஐய்யனார் கோவில், அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி வழிபாட்டையும் குடும்பத்துடன் செய்துவிடுவோம். திருச்செந்தூர் முருகன் என் கணவர் கனவில் வருவதுண்டு.

காரில் என் கணவர் தனியாக சென்று விபத்தில் சிக்கி உயர் பிழைத்தது திருச்செந்தூர் முருகன் அருளால்தான்!

என் இளைய மகளுக்கு அவளின் ஏழு வயதில் கடுமையாக அம்மை வந்து இருபது நாட்கள் மிகவும் கஷ்டப்பட் டாள். சமயபுரம் மாரியம்மன் கோவில் தீர்த்தம் வாங்கிவந்து தந்தபிறகுதான் அம்மா இறங்கவே ஆரம்பித்தாள். பிறகு படிப்படியாக சமயபுரத்தாள் அருளால் குணம் அடைந்தாள். அதை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்த்துப் போவோம். என் மூத்த பெண்ணை நான் கருத்தரித்தபோது அங்குசென்று வழிபட்டுவந்த பிறகுதான் வளைகாப்பே எனக்கு நடந்தது. அவள் சக்தியால்தான் எனக்கு நார்மல் டெலிவரியும் ஆனது.

சென்ற ஆண்டு தமிழக அரசின் சிறந்த விருது உட்பட பல விருதுகள் பெற்று சமயபுரம் மாரியம்மன் அருளோடு தொடர்ந்து மிராக்கிள் ட்ரீ நிறுவனத்தின் சார் பில் சாதனைகளைச் செய்துவருகிறோம்.''

மாரியம்மன் அரு ளோடு மகத்தான வெற்றி கள் தொடர வாழ்த்தி விடைபெற்றோம்.

திரு.சரணவகுமரன் தொடர்பு கைபேசி எண்: 73735 06888.

om010724
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe