ன்புள்ள சாயி சொந்தங்களே! இந்த கடிதம் எழுதும்பொழுது, நமது சாயிநாதர் சித்தியடைந்த விஜயதசமி திருநாளை எதிர்நோக்கி இருக்கிறோம்! உலகெங்கிலும் உள்ள சாயி சொந்தங்கள் இந்த சமாதி தினம் எப்பொழுது வருமென்று காத்திருந்து, பால்குட ஊர்வலம் வந்து, பாபாவுக்கு அபிஷேகம் செய்து குளிர்வித்து, நாமும் குளிர்ச்சியாக- பாதுகாப்பாக வாழ அவரை வழிபடுகிறோம்! இந்த இதழ் நமது கைகளில் தவழும்பொழுது இந்த விழாவினை நாம் முடித்திருப்போம். சாயிபாபா நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் அற்புதங்கள் செய்துகொண்டுள்ளார். நேரடியாக வந்து உதவக்கூடிய கலிலியுக தெய்வம் நமது பாபா. கடந்த ஐந்து மாதமாக நம்மிடையே வந்த பிரார்த்தனைகளில், கொரோனா நோய் பயத்தோடும். அந்த நோய் வந்தவர்களும் செய்துகொண்ட பிரார்த்தனைகள் ஏராளம். அனைத்து பிரார்த்தனைகளையும் வெற்றியடையச் செய்து நம்மையெல்லாம் காப்பாற்றினார் சாயிநாதர்.

saibaba

எனக்கே ஒரு அற்புதம்!

எனக்கு கொரோனா வரவே வராது என்று மிகவும் தைரியமாக இருந்தேன். கடந்த 8-8-2020 அன்று என்னுடைய 60-ஆவது பிறந்தநாள் சஷ்டியப்த பூர்த்தி விழாவின் போது, வந்திருந்த சொந்தங்கள் அனைவரும் எங்கள்மேல் ஊற்றிய கலச நீர் அதிகமாக இருந்ததால், எங்கள் குடும்பத்தில் நான்கு பேருக்குமே கொரோனா வந்துவிட்டது! நாம் வணங்கும் சாயிபாபா எங்களுக்கும் அற்புதம் செய்து காப்பாற்றி, உயிர்ப்பிச்சை கொடுத்து மீண்டும் சாயிசேவை செய்ய வாய்ப்பளித்திருக்கிறார்! இதே நோய் வந்த எத்தனையோ தனவந்தர்கள், 2000 கோடி, 5000 கோடிக்கு அதிபர்கள்கூட பலியாகிவிட்டிருந்தாலும், நம்மை இன்னும் வாழவைத்துக் கொண்டுள்ள சாயிபாபாவிற்கு நன்றி சொல்லி, தஞ்சமடைவோம். எல்லாரும் நம்பிக்கையோடும், பொறுமையோடும் இருங்கள். பாபா தரிசனம் பாவ விமோசனம்; வியாழன் தரிசனம் விடியல் நிதர்சனம், வண்டலூர் வருபவர்கள் வலிலியெல்லாம் மறப்பீர்கள்.

இனி, பக்தர்கள் வாழ்வில் பாபா நிகழ்த்திய சில அற்புதங்கள்...

வலி தீர்க்கும் பாபா

என் பெயர் எம்.வி. ஆறுமுகம். கூடுவாஞ்சேரி அஞ்சல் அலுவலகத்தில் சுமார் 26 வருடங்கள் பணிபுரிந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்றேன். நான்கு வருடங்களுக்கு முன்பு என் பித்தப்பையில் வலி அதிகம் ஏற்பட்டு, கிட்டத்தட்ட ஒரு வருடம் பலவிதமான சிகிச்சைகளை மேற்கொண்டும் தற்காலிகமான சுகம்தான் கிடைத்தது. "ஆபரேஷன் செய்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்' என்று டாக்டர்கள் கூறினார் கள். 10 முதல் 15 லட்சம் செலவாகும் என்றார்கள். நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆபத்து, பயம் இரண்டும் சூழ்ந்துகொண்டன. அப்போது- அதாவது மூன்று வருடங்களுக்கு முன்னால், பொழிச்சலூரைச் சேர்ந்த ஆர். ஷண்முகம் (பாடகர்) அவர்களின் நட்பு கிடைத்தது.

அவர் வண்டலூர் வழித்துணை பாபா வின் பாதத்தில் எனது வலி, பயம், கவலையை வைக்கும்படி கூறினார். அவ்வாறே செய்தேன்.

சாய்ராம்ஜி அவர் களின் கூட்டுப் பிரார்த்தனைக் குழுவினரா லும், வண்டலூர் வழித்துணை பாபாவின் அருளாலும், பித்தப்பையில் நடக்கவேண்டிய ஆபரேஷன் சிறிய செலவில், ஆபத்தில்லாத முறையில் நல்லபடியாக நடந்தது. நான் மறுபிறவியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கி றேன். வண்டலூர் வழித் துணை பாபா ஆலயத்திற்கு வாருங்கள்; வலிலியெல்லாம் மறப்பீர்கள். வெற்றி, மகிழ்ச்சி கிடைக்கும்.

கருணை செய்த பாபா!

என் பெயர் பாத்திமா பேகம். துறையூரில் அறக்கட்டளை நடத்திக்கொண்டிருக்கிறேன். அறக்கட்டளையின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகட்டித் தரவேண்டும் என்பது நீண்டநாள் கனவு. ஆகவே அறக்கட்டளைக்கு பணம் கொடுத்து உதவும் நன்கொடையாளர்களைத் தேடி, அடிக்கடி சென்னைக்கு வந்து சென்றுகொண்டிருந்தேன். ஆனால் தோல்வியில்தான் முடிந்தது. அதற்காக, இந்த வேலைகளைச் செய்து முடிக்க முகவர்களை நாடினேன். ஒரு முகவர் அமைந்து, அதற்கான வேலைகளை மும்முரமாகச் செய்துகொண்டி ருந்தார்.

ஒரு நாள் முகவரிடமிருந்து தொலைபேசி வந்தது. "உங்கள் அறக்கட்டளையின் திட்டத்திற்கு நன்கொடையாளர் (உர்ய்ர்ழ்) ஒருவர் கிடைத்திருக்கிறார். ஆகவே நீங்கள் உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டு வாருங்கள்' என்றார். நாங்களும் சென்னைக்கு வந்து ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். மறுநாள் காலை முகவர் எங்களை அழைத்து, "நீங்கள் தயாராக இருங்கள்; உங்களைக் காண நன்கொடையாளர் தங்கும் விடுதிக்கு வருகிறார்' என்றவுடன், எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவரும் முகவரும் எங்களைக் காண விடுதிக்கு வந்தார்கள். பிறகு எங்கள் அறக் கட்டளையின் திட்டங் களைக் கேட்டறிந்து "இது ஒரு நாள் திட்டம்தான்; அதற்கான நன்கொடை நான் தருகிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

நாங்களும் சந்தோஷமாக ஊருக்குப் புறப் பட்டுப்போகும் வழியில், பெருங்களத்தூரை அடுத்து இரணியம்மன் ஆலயம் அருகில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, வெளியே வந்து காரில் அமர்ந்து புறப்படவிருந்த வேளையில், அருகிலுள்ள பாபாவின் திருவுருவம் கண்டு மிகவும் சந்தோஷமடைந்து, "என்னுடைய கோரிக்கைகளை சீக்கிரமாக முடித்துக் கொடுங்கள் பாபா' என்று வேண்டிக்கொண்டு புறப்பட்டுச் சென்றுவிட்டேன். பிறகு ஆறு மாதங்கள் கழிந்துவிட்டன. நன்கொடை யாளர், முகவரிடமிருந்து ஒரு நல்ல செய்தியும் வரவில்லை. ஆறு மாதங்கள் கொரோனா காலமாக இருந்ததால் எந்தவொரு தொழிலும் நடைபெறவில்லை.

மீண்டும் ஒருமுறை சென்னைக்கு வந்தோம். வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம் வழியாக எங்களுடைய கார் கடந்து சென்றுகொண்டிருந்தபொழுது, நன்கொடையாளர் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். "கடந்த ஆறு மாதங்கள் ஊரடங்கு காலமாக இருந்ததால் நான் தொடர்புகொள்ள முடியவில்லை. இப்பொழுதுதான் நல்ல வேளை வந்திருக் கிறது. உங்களிடம் தொடர்பு கொண்டேன். நீங்கள் பயப்படவேண்டாம். உங்களுக்கு வந்துசேரவேண்டிய தொகை குறித்த நேரத்தில் வந்துசேரும்' என்று கூறினார்.

எது நடக்காது என்று எண்ணி இருக்கிறோமோ, அதையெல்லாம் வண்டலூர் வழித் துணை பாபா செய்து காட்டுகிறார். அவரது கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.

கல்வி தந்தார்!

என் பெயர் இராம்குமார், தாம்பரத்தில் வசித்து வருகிறேன். பல வருடங்களாக வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தில் சேவை செய்து வருகிறேன். பாபா பலருக்கு பல அற்புதங்கள் செய்துகொண்டிருக்கிறார். எனக்கு இரட்டை யர்களாகப் பிறந்த மகனும் மகளும் உள்ளனர். அவர்கள் இருவரும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11-ஆம் வகுப்பில் சேரவேண்டும் என்ற நிலையில், கொரோனா நோய்த் தாக்கத்தினால் இறுதித் தேர்வு நடை பெறவில்லை. ஆனால் காலாண்டு, அரையாண் டுத் தேர்வின் அடிப்படை யில் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. மகள் 400 மதிப்பெண்கள் பெற்று அவள் விரும்பிய "குரூப்' கிடைத்துவிட்டது. ஆனால் மகனுக்கு சற்று மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால், அவன் விரும்பிய "கம்யூட்டர் சயின்ஸ்' குரூப் தரவியலாது என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறிவிட்டார்கள். நான் இரண்டுமுறை பள்ளிக்குச் சென்று, அதன் செயலாளரை சந்தித்துப் பேசிவிட்டு வந்தேன்.

பிறகு வழித்துணை பாபாவிடம் பிரார்த் தனை வைத்தேன். எல்லாரும் என்னுடைய குழந்தைக்காக வேண்டிக்கொண்டார்கள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தேன். மகனை ஒரு பள்ளிக்கும், மகளை வேறொரு பள்ளிக்கும் அனுப்புவது சிரமமான காரியம். ஒரு வாரம் கழித்து, வியாழக்கிழமை காலை நான் வண்டலூர் கூட்டுப் பிரார்த் தனை கோபுரத்தில் சேவை செய்துகொண்டி ருந்தேன். அப்பொழுது பாபா எனக்கு ஒரு அற்புதத்தைச் செய்தார். திடீரென்று பள்ளி யிலிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. "உங்கள் மகனுக்கு என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நான், "அவன் "கம்யூட்டர் சயின்ஸ்' குரூப்தான் வேண்டுமென்று கூறுகிறான். என்ன செய்வ தென்று தெரியவில்லை' என்றேன். அதற்கு அவர் "உங்கள் மகனுக்கு "கம்யூட்டர் சயின்ஸ்' குரூப் தருகிறேன். கவலைப்படவேண்டாம். நாளை அவனை பள்ளிக்கு அழைத்து வந்து முதல்வரை சந்தித்து 11-ஆம் வகுப்பில் சேர்த்து விடுங்கள்' என்றார்.

இதைதான் பாபாவின் மகிமை என்கிறோம்.

நமக்கு எப்பொழுது அற்புதம் செய்ய வேண்டுமென்று அவருக்குத் தெரியும். நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்.

பாபா கொடுத்த இனிப்புக் கடை என் பெயர் பூ. பெருமாள். எனக்கு பாபா தொடர்ந்து பல அற்புதங்களைச் செய்துகொண்டிருக்கிறார். தற்போது எனது உறவினர் மகன் ஆனந்தசெல்வத்திற்கு ஒரு அற்புதம் நிகழ்த்தியுள்ளார்.

ஆனந்தசெல்வம் செஞ்சிவளத்தி அருகிலுள்ள இரும்புலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. இவர் சென்னையில் உள்ள பிரபல இனிப்புக் கடையில் சுமார் 15 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். கொரோனா வைரஸ் நோய் வந்தபிறகு வேலை போய்விட்டது. வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல் சென்னையிலிருந்து வீட்டைக் காலிலி செய்து விட்டு வந்துவிட்டார்.

நான் அவரிடம் ஒரு வியாழனன்று பாபா ஆலயத்திற்கு வரும்படி கூறினேன்.

கடந்த மாதம் கோவிலுக்கு வந்து ஆரத்தியில் கலந்துகொண்டார். என் தம்பி ஆனந்தசெல்வம் சொந்தமாக ஒரு இனிப்புக்கடை திறக்கவேண்டும் என்று சாய்ராம்ஜி அப்பாவிடம் சொல்லி, கூட்டுப் பிரார்த்தனையின்மூலம் வேண்டிக் கொண்டோம். தம்பியின் கோரிக்கையை பாபா ஏற்றுக்கொண்டார். தற்போது செஞ்சி பைபாஸ் சாலையில், வளத்தி என்ற ஊரில் சொந்தமாக ஒரு இனிப்புக்கடையை 30-9-2020 அன்று ஆரம்பித்தார். அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரே வந்து கடையைத் திறந்து வைத்தார். அவரும் பாபாவின் பக்தர். கோரிக்கை வைத்து இரண்டே மாதங்களில் பாபா எனது தம்பிக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொடுத்தார். பாபாவை மனதார நம்புங்கள். நம் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும்.

சென்னை வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம்,

அலைபேசி: 86087 00700

(தொடரும்)