இந்தியாவிலுள்ள சைவ சமய ஆலய திருவிழாக்கள் அனைத்தும் நீரோடு சம்பந்தப்பட்டவை. கலசங்களில் புனித நீரை சேகரித்து அதை கொண்டுவந்து தீர்த்த சங்கர மணம் என்ற நிகழ்வுடன் ஆலய விழாக்களை தொடங்குகிறார்கள். திருவிழாவின் இறுதிநாளில் தீர்த் தவாரி என்ற சடங்குடன் விழாக்களை நிறைவு செய்கிறார்கள். பெரும் தெய்வம் சிறுதெய்வம் என அனைத்திற்கும் இந்த தீர்த்த திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. உதாரணமாக கிராமப்புறங்களிலுள்ள கிராம தெய்வங்களுக்கு திருவிழா ஆரம்பிக்கும் முதல்நாள் அருகிலுள்ள ஆற்றிலோ அல்லது குளத்திலோ ஊர்வலமாக சென்று கலசத்தில் நீர் எடுத்து பூஜை செய்து அதை கொண்டுவந்து தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து காப்பு கட்டி எட்டு நாள், பத்து நாள், 15 நாள் என திருவிழாக்களை நடத்துகிறார்கள். திருவிழா முடிவறும் நாளில் தீர்த்தவாரி திருவிழா பல வடிவங்களில் நடைபெறுகிறது. உதாரணமாக தெய்வங்களை தோளில் சுமந்துசென்று குளத்தில் இறங்கி கரையேறி வருவது பெரிய ஆலயங்களில் தீர்த்த குளத்தில் தெய்வங்களை அமர்த்துவதற்கு தனி மேடைகள் இருக்கும். அதில் அமர்த்தி இறைவன்முன்பு குளத்தில் இறங்கி பக்தர்கள் தீர்த்தவாரி கொண்டாடுவார்கள். கிராமங் களில் திருவிழாவின் இறுதிநாளில் மஞ்சள் நீர் தெளித்து திருவிழாவை நிறைவு செய்வார் கள். சடங்கு சம்பிரதாயங்களில் சிலசில மாற்றங் கள் இருக்கலாம். ஆனால் இவையனைத்தும் ஒரு விதத்தில் தண்ணீரோடு சம்பந்தப்பட்ட தீர்த்த திருவிழாதான்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஐந்தும் பஞ்சபூதங்கள். இந்த ஐந்தும் மனிதர்களின் வாழ்வியலோடு சம்பந்தப் பட்டவை. இவை ஐந்தையும் இறைவனுக் கான திருவிழாக்களில் சம்பந்தப்படுத்தி தான் திருவிழாக்களும் தெய்வ வழிபாடு களும் நடத்தப்படுகின்றன. நெருப்புடன் சம்பந்தப்பட்டது தீமிதி திருவிழா. நீருடன் சம்பந்தப்பட்டது தீர்த்த திருவிழா. விவசாயி கள் அறுவடை செய்த தானியங்களை சுத்தம் செய்ய காற்று தேவைபடும்போது பிள்ளையார் பிடித்துவைத்து தீபமேற்றி வாயு பகவானை வணங்குவது, பஞ்சம் வறட்சி ஏற்படும்போது வருணபகவானை வேண்டி (மழை) திருவிழாக் கள் நடத்துகிறார்கள். வீடுகட்ட, கிணறு தோண்ட, ஆரம்பிக்கும்போது வாஸ்து பகவானை வணங்கி பூமிதாய்க்கு பூஜை செய்தபிறகு பணிகளை தொடங்குகிறார்கள். பஞ்சபூதங்களை சம்பந்தப்படுத்திதான் மக்கள் தெய்வங்களுக்கான திருவிழாக்களை நடத்திக் கொண்டாடுகிறார்கள். அதேபோல் பல்வேறு கிராமங்களில் உள்ள தெய்வங்களை அருகிலுள்ள ஆற்றுக்கு கொண்டுசென்று தீர்த்தத்தை வாரி இறைத்து (புனித தீர்த்தம்) பூஜை செய்வார்கள். இதற்கு புனித நீர் வரித்தல் என்றும் உரிமை கொள்ளுதல் என்ற பொருளும் உண்டு. இந்த
இந்தியாவிலுள்ள சைவ சமய ஆலய திருவிழாக்கள் அனைத்தும் நீரோடு சம்பந்தப்பட்டவை. கலசங்களில் புனித நீரை சேகரித்து அதை கொண்டுவந்து தீர்த்த சங்கர மணம் என்ற நிகழ்வுடன் ஆலய விழாக்களை தொடங்குகிறார்கள். திருவிழாவின் இறுதிநாளில் தீர்த் தவாரி என்ற சடங்குடன் விழாக்களை நிறைவு செய்கிறார்கள். பெரும் தெய்வம் சிறுதெய்வம் என அனைத்திற்கும் இந்த தீர்த்த திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. உதாரணமாக கிராமப்புறங்களிலுள்ள கிராம தெய்வங்களுக்கு திருவிழா ஆரம்பிக்கும் முதல்நாள் அருகிலுள்ள ஆற்றிலோ அல்லது குளத்திலோ ஊர்வலமாக சென்று கலசத்தில் நீர் எடுத்து பூஜை செய்து அதை கொண்டுவந்து தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து காப்பு கட்டி எட்டு நாள், பத்து நாள், 15 நாள் என திருவிழாக்களை நடத்துகிறார்கள். திருவிழா முடிவறும் நாளில் தீர்த்தவாரி திருவிழா பல வடிவங்களில் நடைபெறுகிறது. உதாரணமாக தெய்வங்களை தோளில் சுமந்துசென்று குளத்தில் இறங்கி கரையேறி வருவது பெரிய ஆலயங்களில் தீர்த்த குளத்தில் தெய்வங்களை அமர்த்துவதற்கு தனி மேடைகள் இருக்கும். அதில் அமர்த்தி இறைவன்முன்பு குளத்தில் இறங்கி பக்தர்கள் தீர்த்தவாரி கொண்டாடுவார்கள். கிராமங் களில் திருவிழாவின் இறுதிநாளில் மஞ்சள் நீர் தெளித்து திருவிழாவை நிறைவு செய்வார் கள். சடங்கு சம்பிரதாயங்களில் சிலசில மாற்றங் கள் இருக்கலாம். ஆனால் இவையனைத்தும் ஒரு விதத்தில் தண்ணீரோடு சம்பந்தப்பட்ட தீர்த்த திருவிழாதான்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஐந்தும் பஞ்சபூதங்கள். இந்த ஐந்தும் மனிதர்களின் வாழ்வியலோடு சம்பந்தப் பட்டவை. இவை ஐந்தையும் இறைவனுக் கான திருவிழாக்களில் சம்பந்தப்படுத்தி தான் திருவிழாக்களும் தெய்வ வழிபாடு களும் நடத்தப்படுகின்றன. நெருப்புடன் சம்பந்தப்பட்டது தீமிதி திருவிழா. நீருடன் சம்பந்தப்பட்டது தீர்த்த திருவிழா. விவசாயி கள் அறுவடை செய்த தானியங்களை சுத்தம் செய்ய காற்று தேவைபடும்போது பிள்ளையார் பிடித்துவைத்து தீபமேற்றி வாயு பகவானை வணங்குவது, பஞ்சம் வறட்சி ஏற்படும்போது வருணபகவானை வேண்டி (மழை) திருவிழாக் கள் நடத்துகிறார்கள். வீடுகட்ட, கிணறு தோண்ட, ஆரம்பிக்கும்போது வாஸ்து பகவானை வணங்கி பூமிதாய்க்கு பூஜை செய்தபிறகு பணிகளை தொடங்குகிறார்கள். பஞ்சபூதங்களை சம்பந்தப்படுத்திதான் மக்கள் தெய்வங்களுக்கான திருவிழாக்களை நடத்திக் கொண்டாடுகிறார்கள். அதேபோல் பல்வேறு கிராமங்களில் உள்ள தெய்வங்களை அருகிலுள்ள ஆற்றுக்கு கொண்டுசென்று தீர்த்தத்தை வாரி இறைத்து (புனித தீர்த்தம்) பூஜை செய்வார்கள். இதற்கு புனித நீர் வரித்தல் என்றும் உரிமை கொள்ளுதல் என்ற பொருளும் உண்டு. இந்த புனித நீரை தெய்வங்களுக்கு தெளிப்பது அதே நீரை பொதுமக்கள்மீதும் தெளிப்பதால் தெய்வங்களின் அருளால் தாங்கள் தூய்மை பெறுவதாக கருதுகிறார்கள். புதிய ஆலயங் கள் எழுப்பி குடமுழுக்கு நடத்தும்போதும் பழைய கோவில்களை புனரமைப்பு செய்து குட முழுக்கு நடத்தும்போதும் இப்படிப்பட்ட புனித தீர்த்தத்தை மக்கள்மீது வாரி தெளிப்பதன் மூலம் இறைவன் அருளால் மக்கள் புனிதப்படுத்தப்படுவதாக கருதுகி றார்கள். இப்படி திருவிழாக்கள் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கு உதாரணமாக சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் நடந்த கும்பமேளா. இது எப்படி உருவானது என்பதற்கு ஒரு சுருக்கம். அமிர்தம் பெறுவதற்காக அரக்கர்களும் தேவர்களும் இணைந்து பாற்கடலை கடைந்தனர். அதிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தை தேவர்களும் அசுரர் களும் சமமாக பங்கிட்டு கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் அமிர்தம் கிடைத்தவுடன் அந்த கும்பத்தை (குடம்) அரக்கர்கள் தங்கள் பேராசை காரணமாகப் பற்றிக்கொண்டு ஓடினார்கள். தங்களுக்கும் மனித குலத்திற்கும் அழியாத தன்மையை பெறுவதற்காக கடைந்தெடுத்த அமிர்தத்தை அசுரர்கள் எடுத்துக்கொண்டு ஓடுவதை திரும்பப் பெறுவதற்காக தேவர்கள் கடவுளர்கள் அசுரர்களை பின்தொடர்ந்து சென்றனர்.
இதனால் வானில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்தது. இந்த பரலோகப்போர் தொடர்ச்சியாக பகல் 12.00 மணி மற்றும் இரவு 12.00 மணி நீடித்தது. இது நமது மனித இனத்தின் கணக்கின்படி 12 ஆண்டுகளுக்கு சமம் என்று கூறுகின்றனர். சாதுக்கள் இந்த மோதலின் போது விலை மதிப்பற்ற அமிர்தத்தின் சில துளிகள் அமிர்த கும்பத்திலிருந்து (குடம்) பூமியில் சில துளிகள் விழுந்தன. அப்படி விழுந்த இடங்கள் பிரயாக், அலகாபாத், அடுத்து ஹரித்துவார், உஜ்ஜயினி மற்றும் நாசிக். இந்த இடங்களில்தான் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை அமிர்த கலசத்தை கைப்பற்ற நடந்த போரில் விழுந்த அமிர்தத் துளிகளை புனித நாளாகக் கருதி கும்பமேளா நடைபெறு கிறது.
இங்கு நடைபெறும் கும்பமேளா மகாவிஷ்ணுவால் ஆசீர்வதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. புனிதமானது கும்பமேளா என்பதால் இது ஒரு திருவிழா மட்டுமல்ல; ஆழ்ந்த ஆன்மிகத்தின் நிகழ்வுகளாகவும் ஆன்மிக வழிகாட்டுதலின் முக்கியத்துவத் தையும் வெளிப்படுத்துகிறது. இந்த புனித மான கும்பமேளாவில் வந்து கலந்து கொள்ளும் பக்தர்கள், பொதுமக்கள் இரண்டு முக்கிய நோக்கங்களை அடைகிறார் கள். சாதுக்களின் போதனைகளை கேட்பது மற்றும் புனித நதிகளில் நீராடுவது புனிதமான சடங்குகளில் பங்கேற்பதன்மூலம் மனித ஆன்மாக்கள் சுத்தமாகும். பாவங்களைப் போக்கும். ஆன்மிக விடுதலையை மோட்ச மாகத் தரும். அப்படிப்பட்ட விழாக்களைத் தான் நாம் நம் பகுதிகளிலுள்ள ஆறுகளில், குளங்களின் தீர்த்த திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
தமிழகத்திலும் கும்பமேளாவை தீர்த்தவாரி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாத்தனூர் அணை நிரம்பி அதன் உபரி நீர்வெளியேறி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களை கடந்துசென்று கடலூர் அருகில் கலக்கிறது.
தென்பெண்ணை ஆற்றின் இருகரை நெடுகிலும் கடந்த 18-ஆம் தேதி வெகு விமரிசையாக ஆற்றுத் திருவிழா எனும் தீர்த்த திருவிழா கொண்டாடப் பட்டது. தேவர்களுக்கு தைமாதம் முதல் ஆனி மாதம்வரை உள்ள ஆறு மாதங்கள் பகல்பொழுது என்பதால் அதற்கு உத்திராயண புண்ணிய காலம் என்றும், ஆடி மாதம்முதல் மார்கழி மாதம்வரை உள்ள ஆறு மாதங்கள் தேவர்களுக்கு இரவு காலம் என்பதால் இதற்கு தட்சிணாயன புண்ணிய காலம் என்றும் பெயர். இந்த உத்தராயன காலத்தின் தொடக்க நாள் தைமுதல் நாளில் தொடங்குகிறது. பொங்கல் முடிந்து ஐந்தாவது நாள் மேற்படி பெண்ணையாற்றில் தீர்த்த திருவிழாக்கள் அமர்க்களமாக நடைபெறுகின்றன. இது ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் விழா. இந்த திருவிழாவில் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களிலுள்ள கோவில்களில் இருந்து உற்சவர் சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்து வாகனங் களில் ஊர்வலமாக கொண்டுவருகிறார்கள்.
உதாரணமாக கடலூர், ஆல் பேட்டை அருகே உச்சி மேட்டு புட்லாயி அம்மன், கங்கணாங்குப்பம் சேமக்களத்து மாரியம்மன், வில்வராய நத்தம் சுப்பிரமணியர், அதே போல் பண்ருட்டி அருகே உள்ள நல்லூர் பாளையம், மாளிகைமேடு, தட்டாம் பாளையம், திருத்துறையூர், பணிக்கன் குப்பம், கொக்கா பாளையம், ராஜா பாளையம், பக்கிரி பாளையம், விழுப்புரம் அருகே உள்ள சின்ன கள்ளிப்பட்டு களிஞ்சி குப்பம், மேட்டுப்பாளையம், பிடாகம், மரகதபுரம், அய்யூர் அகரம், பேரங்கியூர், ஏனாதிமங்கலம், அத்தியூர், திருவாதி, பில்லூர், திருக்கோவிலூர், ஆதிதிருவரங்கம், அரகண்டநல்லூர், அன்றாயநல்லூர், புதுப்பாளையம், மணலூர்பேட்டை உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சாமிகளை டிராக்டர்கள், மினி லாரிகள் போன்ற வாகனங்களில் வைத்து கிராமங்கள், நகரங்கள், வழியாக மேடதாளங்கள் முழங்க ஆட்டம், பாட்டம் என அமர்க்களமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ ஆற்றுப்பகுதியில் கொண்டு வந்து மிக நீண்ட வரிசையில் நிறுத்தி தீர்த்தவாரி திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், ஆதித்திருவரங்கம் அரங்கநாதப் பெருமாள், அரகண்டநல்லூர் அதுல்லிய நாதேஸ்வரர், கீழையூர் வீரடனேஸ்வரர், மற்றும் திருவண்ணாமலை, அண்ணா மலையார், உண்ணாமலை அம்மன் ஆகிய உற்சவதெய்வங்கள் மணலூர்பேட்டை அருகே பெண்ணையாற்றிற்கு கொண்டுவரப் பட்டு தீர்த்தவிழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீர்த்த திருவிழாவில் திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத் திலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீர்த்தவாரி திருவிழாவிற்கு கிராம மக்கள் தங்கள் ஊர் கிராம தெய்வங்களை ஆற்று திருவிழாவிற்கு கொண்டு வந்தனர். அதே போல் இந்த விழாவில் ஆறு இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு பக்தர்களும் பொதுமக்களும் திரண்டு வந்தனர். எங்கு திரும்பினாலும் மனித தலைகளாக காட்சி தந்தன. இந்த தீர்த்த திருவிழா தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த விழா வில் மகாவிஷ்ணுவான பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் விநாயகர், செல்லியம்மன், படைவீட்டம்மன் என அனைத்து தெய்வங் களும் தீர்த்தவாரியில் கலந்துகொண்டன. இந்த விழாவுக்கு வந்திருந்த சில பக்தர் களிடம் கேட்டோம். ஆற்றுத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் மக்கள்கூடி தெய்வங்களை மகிழ்வுடன் வணங்கி கொண்டாடுகிறோம். இதை பார்ப்பதற்கு மிகவும் புத்துணர்ச்சியாக வும் மகிழ்ச்சியாக வும் உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வகை தின்பண்டங்களும் விளையாட்டுப் பொருட்களும் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் உட்பட அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த திருவிழாவை காண மிகுந்த ஆவலோடு வருகை தந்துள்ளோம் என்கிறார் ஏனாதிமங்கலம் ரேவதி.
ஒரு ஆலயத்தின் மகிமையும், சிறப்பும்
அதன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது. இந்த மூன்றும் ஒரே தலத்தில் ஒருங்கிணைந்து சிறப்பாக இருப்பது என்பது மிகமிக அரிது. அத்தகைய பேறுபெற்ற தலம் திருவண்ணாமலை, அண்ணாமலையார் ஆலயம் ஆகும். இங்கு மூர்த்திக்கு நிகரான சிறப்பு தீர்த்தங்களுக்கும் இருக்கிறது. திருவண்ணாமலையில் கிரிவல பாதையிலும் மலையின் பல்வேறு பகுதிகளிலும் 300-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆதிகாலத்தில் நவகிரகங்கள், நட்சத்திரங்கள், முனிவர்கள், ரிஷிகள், மகான் கள், மன்னர்கள் தங்களது தோஷங்களையும், பாவங்களையும் நீக்கிக் கொள்ள தனித்தனி தீர்த்தங்களை உருவாக்கி அதில் தினமும் நீராடி அண்ணாமலையாரை வழிபட்டு பலன்களைப் பெற்று உள்ளனர். இத்தகைய சிறப்புடைய தீர்த்தங்களில் நீராடினால் நமது தோஷங்களை நீக்கி பலன் பெறமுடியும் என்பது ஐதீகமாகும். இதில் பக்தர்களுக்கு உதவும்வகையில் அண்ணாமலை யாருக்கு புனித குளங்கள் மற்றும் நதிகளில் நீராடி அருள்பாலிப்பது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது.
இறைவனின் நீராடலே தீர்த்தவாரி என்று அழைக்கப்படுகிறது. கோவில் குளங்கள், ஆறுகளில் தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.
அந்த வகையில் திருவண்ணாமலை ஆலயத் தில் நடத்தப்படும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் தமிழ் நாட்டில் எந்த சிவாலயத்தி லும் இல்லாத சிறப்பை பெற்றுள்ளன. திருவண்ணாமலை ஆலயம் அருகே உள்ள அய்யங் குளம், தாமரை குளம் ஆகியவற்றிலும் தீர்த்தவாரி நடத்தப்படுவது உண்டு. கோவில் குளங்களில் நடத்தப்படும். புண்ணிய நதிகளென கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்களை களைய சிவபெருமானிடம் வேண்டினார்கள். அதற்கு சிவபெருமான் "கும்பகோணத்தில் அக்னித் திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும்போது வரும் மக நட்சத்திரத்துடன்கூடிய பௌர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்'' என்றார்.
அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங் களைப் போக்கிக்கொண்டன என்பது தொன்மக் கதையாகும்.
எப்போதும் இல்லாத அளவில் பெஞ்சல் புயல் காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து மிரட்டியது. அதனால் இந்த ஆண்டு ஆற்று திருவிழா நடக்குமோ- நடக்காதோ என்று கவலையோடு இருந் தோம், அதையெல் லாம் கடந்து இந்த ஆண்டு ஆற்று தீர்த்தத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது அதிக அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் போது சிலரை மட்டுமே சந்திப்போம்.
ஆனால் இங்குவந்து தீர்த்தவாரி திருவிழாவில் கலந்து கொள்வதன்மூலம் பலதரப்பட்ட மக்களையும் தெய்வங்களையும் ஒரே இடத்தில் காண்பது பரவசமாக உள்ளது. அதிலும் பல ஊர்களில் இருந்து பலதரப் பட்ட பக்தர்கள் பொதுமக்கள் இங்குவருகை தந்து தெய்வங்களை தரிசிப்பது மனதுக்கு சந்தோஷத்தை நிம்மதியையும் அளித்துள்ளது என்கிறார். கணடரக்கோட்டை, ஏழுமலை, ஒரேநாளில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து உற்சவர் சிலைகளை திருவிழாவிற்கு கொண்டுவந்து ஆற்றோரம் நீண்ட வரிசையில் நிறுத்தி அர்ச்சகர்கள் தீர்த்த அபிஷேகம், ஆராதனை செய்து அந்த அபிஷேக நீரை மக்கள்மீதும் வாரி தெளித்தனர். இந்த தென்பெண்ணை, கெடில ஆறுகளில் விடைபெற்ற ஆற்று திருவிழா பக்தர்களை பெரிதும் பரவசப்படுத்தியும் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் கொடுத்துள்ளது. அடுத்த ஆண்டு எப்போது வருமென்று ஏக்கத்தோடு காத்திருக்கிறோம் என்கிறார்கள் தீர்த்த வாரிக்கு வருகை தந்திருந்த கிராம மக்கள்.