Advertisment

மறுபிறவியில்லா நிலையருளும் கருவி- சற்குணநாதேஸ்வரர்! - கோவை ஆறுமுகம்

/idhalgal/om/reincarnated-instrument-sargunanatheswarar-coimbatore-arumugam

"வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.'

-திருவள்ளுவர்

தமக்குப் பிறகு எஞ்சி நிற்கக்கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.

Advertisment

ஒருவர் வாழும்பொழுது அவரது செயல்களுக்கேற்ப புகழுண்டு. அவர் வாழ்ந்து மடிந்தபிறகு பொய்யுடம்பு அழிந்துவிடுகிறது. அதன்பிறகு அவரு டைய புகழே இசையாக இவ்வுலகில் எஞ்சுகிறது.

Advertisment

ஒருவர் புகழ்பட வாழவில்லை யென்றால் அவரைப் பற்றி ஏதும் எஞ்சாது. வாழும்போது இருந்த அவரைப் பற்றிய வசைகளே இறந்த பின்பும் எஞ்சும். அதனால்தான் ஹிட்லரை இன்றும் கொடுமையானவனாக இவ்வுலகம் ஏசுகிறது. ஆதலால் ஒருவர் புகழ்பட வாழ வேண்டும். இல்லையேல் வசைக்கு ஆளாக நேரும். பழிச் சொல்லுக்கு அஞ்சி புகழ்பட வாழவேண்டும்.

ஒரு ஊரில் அறிவாளி ஒருவர் இருந்தார்.

அவருக்கு கடவுள் பக்தி அதிகம். அடிக்கடி கோவிலுக்குப் போய் கடவுளை வணங்குவார். பிறகு காட்டுக்குப் போய் விறகுவெட்டி விற்பனை செய்வார். ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதைவைத்து நிம்மதி யாக வாழ்க்கை நடத்திவந்தார்.

ஒருநாள் காட்டுக்குப் போகும் வழியில் ஒரு நரியைப் பார்த்தார். அதற்கு முன்னங் கால்கள் இரண்டுமே இல்லை.

"இந்த நரிக்கு இரண்டு கால்கள் இல்லை.

ss

அப்படி இருக்கும்போது இது எப்படி வேட்டையாடி தன் பசியைப் போக்கிக் கொள்ளமுடியும்' என்று யோசிக்க ஆரபித்தார்.

அச்சமயம் அந்த பக்கமாக ஒரு புலி வந்தது. அதைப் பார்த்தவுடன் ஓடிப்போய் மரத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு என்ன நடக்கிறது என கவனிக்க ஆரம்பித் தார். பெரிய மானை அடித்து இழுத்துவந்த புலி, சாப்பிட்டது போக மீதியை அங்கேயே போட்டுச்சென்றது.

புலி போனபின் காலில்லாத நரி, மெதுவாக நகர்ந்துவந்து மிச்சமிருந்ததை சாப்பிட்டுத் திருப்தியானது. மரத்துக்குப் பின் நின்றிருந்தவர் இதை கவனித்து யோசிக்க ஆரம்பித்தார். "இரண்டு கால்கள் இல்லாத நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடுகிறான். அப்படி இருக்கும்போது தினமும் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடும் நமக்கு சாப்பாடு போடாமல் விட்டுவிடுவானா. எதற்கு வெயிலிலும் மழையிலும் சிரமப்படவேண்டும்? வியர்வை சிந்தி விறகு வெட்டவேண்டும்?' என்று யோசிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் கோடரியைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டார். அவ்வப்போது கோவிலுக்குச் சென்று, "கடவுள் நம்மைக் காப்பாற்றுவார். அவர் நமக்கு வேண்டிய உணவைக் கொடுப் பார்' என்று நம்பி கண்ணை மூடி மண்டபத்தூணில் சாய்ந்து உட்கார்ந்து விடுவார்.

நாட்கள் கழிந்தன. சாப்பாடு வந்த பாடில்லை. பசியால்வாடி உடம்பு துரும்பாக இளைத்து எலும்பும் தோலுமாக மாறினார்.

ஒருநாள் இரவு நேரம் கோவிலில் யாருமே இல்லை. அவர் மெதுவாகக் கண்ணைத் திறந்து, "ஆண்டவா! என் பக்தியில் உனக்கு நம்பிக்கையில்லையா? நான் இப்படியே பட்டினி கிடந்து சாக வேண்டியதுதானா... காட்டில் நரிக்கு புல

"வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.'

-திருவள்ளுவர்

தமக்குப் பிறகு எஞ்சி நிற்கக்கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.

Advertisment

ஒருவர் வாழும்பொழுது அவரது செயல்களுக்கேற்ப புகழுண்டு. அவர் வாழ்ந்து மடிந்தபிறகு பொய்யுடம்பு அழிந்துவிடுகிறது. அதன்பிறகு அவரு டைய புகழே இசையாக இவ்வுலகில் எஞ்சுகிறது.

Advertisment

ஒருவர் புகழ்பட வாழவில்லை யென்றால் அவரைப் பற்றி ஏதும் எஞ்சாது. வாழும்போது இருந்த அவரைப் பற்றிய வசைகளே இறந்த பின்பும் எஞ்சும். அதனால்தான் ஹிட்லரை இன்றும் கொடுமையானவனாக இவ்வுலகம் ஏசுகிறது. ஆதலால் ஒருவர் புகழ்பட வாழ வேண்டும். இல்லையேல் வசைக்கு ஆளாக நேரும். பழிச் சொல்லுக்கு அஞ்சி புகழ்பட வாழவேண்டும்.

ஒரு ஊரில் அறிவாளி ஒருவர் இருந்தார்.

அவருக்கு கடவுள் பக்தி அதிகம். அடிக்கடி கோவிலுக்குப் போய் கடவுளை வணங்குவார். பிறகு காட்டுக்குப் போய் விறகுவெட்டி விற்பனை செய்வார். ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதைவைத்து நிம்மதி யாக வாழ்க்கை நடத்திவந்தார்.

ஒருநாள் காட்டுக்குப் போகும் வழியில் ஒரு நரியைப் பார்த்தார். அதற்கு முன்னங் கால்கள் இரண்டுமே இல்லை.

"இந்த நரிக்கு இரண்டு கால்கள் இல்லை.

ss

அப்படி இருக்கும்போது இது எப்படி வேட்டையாடி தன் பசியைப் போக்கிக் கொள்ளமுடியும்' என்று யோசிக்க ஆரபித்தார்.

அச்சமயம் அந்த பக்கமாக ஒரு புலி வந்தது. அதைப் பார்த்தவுடன் ஓடிப்போய் மரத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு என்ன நடக்கிறது என கவனிக்க ஆரம்பித் தார். பெரிய மானை அடித்து இழுத்துவந்த புலி, சாப்பிட்டது போக மீதியை அங்கேயே போட்டுச்சென்றது.

புலி போனபின் காலில்லாத நரி, மெதுவாக நகர்ந்துவந்து மிச்சமிருந்ததை சாப்பிட்டுத் திருப்தியானது. மரத்துக்குப் பின் நின்றிருந்தவர் இதை கவனித்து யோசிக்க ஆரம்பித்தார். "இரண்டு கால்கள் இல்லாத நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடுகிறான். அப்படி இருக்கும்போது தினமும் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடும் நமக்கு சாப்பாடு போடாமல் விட்டுவிடுவானா. எதற்கு வெயிலிலும் மழையிலும் சிரமப்படவேண்டும்? வியர்வை சிந்தி விறகு வெட்டவேண்டும்?' என்று யோசிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் கோடரியைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டார். அவ்வப்போது கோவிலுக்குச் சென்று, "கடவுள் நம்மைக் காப்பாற்றுவார். அவர் நமக்கு வேண்டிய உணவைக் கொடுப் பார்' என்று நம்பி கண்ணை மூடி மண்டபத்தூணில் சாய்ந்து உட்கார்ந்து விடுவார்.

நாட்கள் கழிந்தன. சாப்பாடு வந்த பாடில்லை. பசியால்வாடி உடம்பு துரும்பாக இளைத்து எலும்பும் தோலுமாக மாறினார்.

ஒருநாள் இரவு நேரம் கோவிலில் யாருமே இல்லை. அவர் மெதுவாகக் கண்ணைத் திறந்து, "ஆண்டவா! என் பக்தியில் உனக்கு நம்பிக்கையில்லையா? நான் இப்படியே பட்டினி கிடந்து சாக வேண்டியதுதானா... காட்டில் நரிக்கு புலிமூலமாக உணவைக் கொடுத்தாயே... அதைப் பார்த்துதானே நானும் இங்கேவந்தேன். என்னை இப்படி தவிக்க விட்டுவிட்டாயே... இது நியாயமா?' என்று புலம்பினார். அப்போது அசரீரி ஒலித்தது.

ss

"முட்டாளே... நீ பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது நரியிடமில்லை. புலியிடமிருந்து. புலிபோல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமாகக்கொடு. யாரிடம் பாடம் கற்றுக்கொள்ளப் போகிறோம் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். ஒருவன் செய்யவேண்டியது அறம் மட்டுமே. அதுபோல ஒழிக்கவேண்டியது பழி தரும் சோம்பலான செயல்களைத்தான்...' என்று அறிவுறுத்தியது அசரீரி.

மனிதர்களாகிய நம் அனைவர் மனதிற்குள்ளும் "நீண்டநாள் வாழவேண்டும். உறவோடும் நட்போடும் உல்லாசமாய்ப் பொழுதுபோக்க நூறாண்டுகாலம் வாழ்ந்தால்தான் நிம்மதி' என்னும் எண்ணம் பொதுவாக இருக்கிறது.

பிறந்தநாள் விழா, திருமண வைபவம், புதுமனைப் புகுவிழா போன்ற கொண்டாட்டங் களில் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிபெறும் பொழுது, அவர்கள் "நூறாண்டுகாலம் வளமும் நலமும் பெற்று வாழ்க' என்றுதான் வாழ்த்தி மகிழ்கிறார்கள். பேரன், பேத்தி அமைந்த வயதானவர்களும் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திடவே எண்ணுகிறார்கள்.

பிறந்தவர்கள் அனைவரும் ஒருநாள் இறக்கத் தான் வேண்டும் என்பதே பிரபஞ்ச உண்மை. மறைவுதான் இவ்வுலகில் மாறாத சத்தியம் என்கின்றனர் மகான்கள். மனிதன் மரணடையும்போது அவன் வாழ்நாளில் சம்பாதித்த பொருட்களோ, அன்புடன் பழகிய உறவுகளோ, ஆசையாய்க் கொஞ்சிய மழலைகளோ எதுவுமே அவன்கூட வருவதில்லை. மூடிய வைவிரல்களோடு பிறந்த அவன் விரித்த கையோடு வெறுமையாக விண்ணுலகம் செல்கிறான். ஆனால் அவன் அவசியம் ஒன்றை இவ்வுலகில் விட்டுச் செல்லவேண்டுமென்று வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

ss

சமுதாயத்தில் வாழும்போது தான் சம்பாதித்த நற்பெயரையும் புகழையும் எவர் விட்டுச் செல்கிறாரோ அவரே வாழ்வாங்கு வாழ்ந்தவராக மதிக்கப்படுவார்; துதிக்கப்படுவார். நிலையாமை என்பதையே தன் நிலையான கொள்கையாகக்கொண்டு, வினாடியும் நிற்காமல் விரை வாகச் சுற்றிக்கொண்டே இருக்கிறது இந்த உலக உருண்டை. இவ்வுலகில் என்றென்றும் வாழ்வது புகழ் ஒன்றே என்கிறார்கள் சான்றோர்கள்.

அறத்தினை நிலைநிறுத்தி, பழிதரும் சோம்பலான செயல் களை அறவே அகற்றி, புகழ் சார்ந்த வாழ்வைத் தரவல்ல தொரு உன்னதமான திருத்தலம் தான் கருவேலி சற்குணநாதர் திருக்கோவில்.

இறைவன்: சற்குணநாதேஸ்வரர்.

இறைவி: சர்வாங்கசுந்தரி.

புராணப் பெயர்: கருவிலிக்கொட்டிடை, திருக்கருவிலி.

ஊர்: கருவேலி (சற்குணேஸ்வரபுரம்).

தீர்த்தம்: எமதீர்த்தம்.

தலவிருட்சம்: பலா மரம்.

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இவ்வாலயம் சுமார் 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சிவனின் தேவாரப் பாடல்பெற்ற 274 தலங்களில் 126-ஆவது தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களில் 63-ஆவது தலமாகவும் திகழ்கின்றது.

"வாடி நீர்வருந் தாதே மனிதர்காள்

வேட னாய்விச யற்கருள் செய்தவெண்

காட னாருறை கின்ற கருவிலிக்

கோடு நீள்பொழிற் கொட்டிடை சேர்மினே.'

-அப்பர்

அரசலாற்றின் வடகரையிலும் காவிரி தென்கரையிலும் அமைந்துள்ள இத்தலம் அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்ட தலங்களில் ஒன்றாகத் திகழ்வதோடு, மூர்த்தி, தலம், தீர்த்தம் என முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு தலமாக விளங்குகிறது. இத்தலத்தைச் சுற்றி அஷ்ட திக் பாலகர்கள் வழிபட்ட தலங் களும் உள்ளன.

இந்திரன்- நாகம்பாடி.

அக்னி- வன்னியூர்.

எமன்- கருவிலி.

நிருதி- வயலூர்.

வருணன்- சிவநகரம்.

வாயு- அகாலங்கன்.

குபேரன்- எஸ், புதூர்.

ஈசானன்- நல்லாவூர்.

இந்த எட்டு தலங்களில் எமன் வழிபட்ட தலம்தான் கருவிலி.

தல வரலாறு

முற்பிறவியில் ஒரு தீயவனுக்கு மகளாகப் பிறந்த பாவத்திற்காக ஈசன் மனைவியே மறுபிறவி எடுக்கவேண்டி வந்தது. அவள் மறுபிறவியில் இறைவனை அடைந்ததால் பிறவாநிலை பெற்றாள். அதுபோலவே இத் தலத்து இறைவனைக் காண்போருக்கு மறுபிறவி யில்லை. அதாவது அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் கரு இல்லை என்னும் பொருளில் கருவிலி எனப்படுகிறது. காலப்போக்கில் கருவேலி என மருவியது. கருவுக்கு வேலி என்றும் பொருள்கொள்ளலாம்.

இத்தலத்தின் முக்கிய பெருமை நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீயகுணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதுவுமாகும். எனவே இவ்வூர் இறைவன் "சற்குணேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

சற்குணன் என்னும் மன்னன் இக்கோவிலில் வழிபட்டு திருப்பணிகள் செய்து குறைகள் நீங்கப்பெற்று, பிறவிக்கடலைக் கடந்து மோட்சமும் பெற்றான் என்று கல்வெட்டு செய்திகள் கூறுகிறது.

தட்சனின் யாகத்தின்போது நடந்த கோர நிகழ்வால் தாட்சாயிணியை இழந்த ஈசன் பித்துப் பிடித்தாற்போல ஊர் ஊராக சுற்றித்திரிந்து இறுதியில் அமர்ந்த இடம் கருவிலி என புராணம் கூறுகிறது. அப்போது ஈசனுடன் சேர்வதற்கு அன்னை பார்வதி அழகே உருவாக மீண்டும் தோன்றிய இடம், கருவிலி ஆலயத்தி லிருந்து அரைகிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அம்பாச்சிபுரம் என்று சொல்கிறது புராணம். இறைவனுடன் சேர அம்மை தங்கி அர்ச்சித்த இடமே அம்பாச்சிபுரம். முப்புரமும் எரித்த ஈசன் ஆனந்தக் களிப்பில் கொடுகொட்டி என்னும் ஆட்டத்தை இத்தலத்தில் நிகழ்த்தினார். எனவே இத்தலம் கொட்டிடை என்றழைக்கப் படுகிறது.

திருக்கடையூரில் எமன் மார்க்கண்டேய னுக்கு பாசக்கயிற்றை வீச, சிவபெருமான் தடுத்தார். இதனால் பயந்த எமதர்மனை, கருவிலி வந்து நீராடி தன்னை வணங்குமாறு ஈஸ்வரன் பணித்தார். எமன் இங்குவந்து நீராடி வணங்கி தன் பாவம் நீங்கப் பெற்றான். இக்குளத்தில் நீராடினாலும், தலையில் தெளித்துக்கொண்டாலும் எமபயம் போகும்.

சிவன் கோவில்களில் மூன்றுவிதமாக அம்மன் சந்நிதிகளை அமைக்கலாம் என்று ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதாவது ஸமான வீஷணம், அனுக்கிரஹ வீஷணம், அபிமுக வீஷணம் என்பர்.

சிவன் சந்நிதி (கிழக்கு அல்லது மேற்கு) எந்த திசை நோக்கி அமைக்கப்பட்டிருக்கி றதோ, அந்த திசை நோக்கியே அம்மனையும் பிரதிஷ்டை செய்வது- அதாவது சுவாமியும் அம்பாளும் ஒரே திசை நோக்கிக் காட்சி தருவதை "ஸமான வீஷணம்' என்பர். சில கோவில்களில் சுவாமிக்கு வலப்புறம் அம்மன் சந்நிதியும் சில கோவில்களில் சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சந்நிதியும் அமைந்திருக்கும். சுவாமிக்கு வலப்பக்கம் அம்மன் சந்நிதி இருப்பதை திருமணக்கோலம் என்றும், சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சந்நிதி இருப்பதை அர்த்தநாரீஸ்வர கோலம் என்றும் கூறுவர்.

சிவன் சந்நிதி கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைந்திருக்கும். இருப் பினும் அம்மன் சந்நிதி தெற்கு நோக்கியே அமைந் திருக்கும். இதனை "அனுக் கிரஹ வீஷணம்' என்பர். இந்த முறையில் சுவாமியை தரிசிக்கும்ரீதியில் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பாள். சுவாமியின் அனுக் கிரஹத்தைப் பெற்று அம்பாள் நமக்கு அருள் புரிவதாக ஐதீகம். பெரும்பாலான சிவாலயங் களில் இந்த முறையிலான அமைப்பே காணப் படுகின்றது.

சுவாமி சந்நிதி மேற்கு நோக்கி அமைந்திருந்தால் அம்பாளின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். சுவாமியும் அம்பாளும் நேரெதிரே பார்த்துக்கொள்ளும் நிலையான இதனை "அபிமுக வீஷணம்' என்பர். "எதிர்காட்சி என்று சொல்லப்படும் இந்தநிலை மிகவும் அபூர்வமானது. திருக்கடையூர், காளஹஸ்தி போன்ற தலங்களில் இந்த அமைப்பினை தரிசிக்கலாம்.

மேற்கூறிய வகைகளில் "ஸமான வீஷணம்' என்னும் சாஸ்திரப்படி சுவாமியும் அம்பாளும் ஒரே திசையான கிழக்கு நோக்கி, சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சந்நிதி அர்த்தநாரீஸ்வர கோலம் என்னும் அமைப்பில் கருவிலி தலத்தில் அமைந்துள்ளது சிறப்பம்சம் வாய்ந்த ஒன்று.

இறைவனுடன் சேர்வதற்கு அம்பாள், அம்பாச்சிபுரம் என்னும் இடத்தில் சிலகாலம் தங்கி, பின் உலகத்து அழகையெல்லாம் ஒன்றுதிரட்டிய சர்வாங்க சுந்தரியாக இறைவனின்முன் நின்றாளாம். அம்பாளை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. இவளை தரிசித்த இளம்பெண்களின் திருமணம் காலதாமதமின்றி, தடையின்றி நடப்பதோடு, குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தைப் பேறும் கிடைக்கிறதென்று பயனைடந்தவர்கள் கூறுகின்றனர்.

சிறப்பம்சங்கள்

● இத்தலத்தில் குடிகொண்டுள்ள தெய்வங்களை வணங்கும் பேறுபெற்றவர்கள் இனி எந்தவொரு கருவிலும் பிறக்க வேண்டியதில்லை என்னும் வரம் கிடைக்கும்.

● இந்திரனும், தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறுபெற்றுள்ளனர்.

● "உய்யக்கொண்டான் வளநாட்டு, வெண்ணாட்டு, குலோத்துங்க சோழ நல்லூராகிய கருவிலிக் கொட்டிடை' என்னும் கல்வெட்டுச் செய்தி இரண்டாம் ராஜாதிராஜன், ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டதற்குரிய ஆதாரமுள்ள இத்தல மூலவர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கி றார்.

● சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் முறைப்படி ஆலய நிர்வாகக் குழு, அறநிலையத்துறையின் கண்காணிப்பில் சிறப்பாக நடைபெறுகிறது.

● தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கும், பிரதோஷ வழிபாடும் விமரிசையாக நடக்கும்.

● மூல நட்சத்திரம் மற்றும் சனிக் கிழமைகளில் சஞ்சீவி ஆஞ்சனேயருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

● வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ராகுகால வேளையில் துர்க்கை, சிம்மவாஹினிக்கு வழிபாடு நடைபெறும்.

● எமதீர்த்தக் குளத்தில் கங்கையை சடையில்கொண்ட ஈசனின் சிற்பம் அமைந் துள்ளது சிறப்பான ஒன்று.

"கோவில்கள் நிறைந்த கும்ப கோணத்திலுள்ள அனைத்து கோவில் களையும் தரிசித்த பலன் இந்த ஒரு கோவிலை தரிசித்தாலே கிடைத்துவிடும்' என்று பெருமித்ததுடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான குமார் குருக்கள்.

அரசலாற்றின் வடகரையில் உள்ளதுதான் கருவிலி. ஊரின் மையத்தின் வயல்வெளிகளுக்கு நடுவே இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது ஆலயம்.

ஜாதகத்தில் குருவுடன் சர்ப்ப கிரகங்களான ராகு அல்லது கேது இணைந்தால் குரு சண்டாள யோகம் ஏற்படும். 7-ஆமிடத்தில் ராகு- கேது இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும். அதனால் திருமணத்தடை, சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் பிரிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

அத்தகையவர்கள் கருவேலி தலத்திற்கு வந்து மூலவர், அம்பாளை தரிசனம் செய்து, சுவாமி சந்நிதியிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு புதுவஸ்திரம் சாற்றி அபிஷேக அர்ச்சனை செய்தால் நல்லதீர்வு கண்டு நலமுடன் வாழலாம்.

"இத்தலத்தில் நவகிரகங்கள் கிடையாது. அனைத்து வேலைகளையும் ஈசனே பார்த்துக்கொள்வதுதான் சிறப்பு. இத்தல தட்சிணாமூர்த்தி வலக்கையில் பாம்புடன் காட்சிதருவது அபூர்வமான அமைப்பு' என்கிறார் திருக்கோவில் மேலாளர் கார்த்திகேயன்.

மேலும் அவர் கூறுகையில் "கும்பாபிஷேகம் கண்டு பொலிவுடன் திகழும் கருவேலி இறைவனை தரிசிப்பதற்கு நமக்கு பிராப்தம் இருந்தால்தான் கிட்டும்' என்கிறார்.

மறுபிறவியில்லா நிலையுடன் மட்டற்ற மகிழ்வைத் தந்தருளும் கருவேலி சர்வாங்க சுந்தரி உடனாய சற்குணேஸ்வரரைத் தொழுவோம். தொடர் வெற்றிகளை சந்தித்து மகிழ்வோம்.

காலை 6.30 மணிமுதல் பகல் 12.30 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

தொடர்புக்கு: மேலாளர், அருள்மிகு சர்வாங்க சுந்தரி உடனுறை சற்குணேஸ்வரர் திருக்கோவில், கருவிலி (சற்குணேஸ்வரபுரம்) அஞ்சல், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம். 609 501.

மேலாளர் கார்த்திகேயன், அலைபேசி: 94429 32942. ஈ.வி. குமார் குருக்கள், அலைபேசி: 99627 11005, 86680 22997.

அமைவிடம்: கும்பகோணம்- நாச்சியார் கோவில்லி எரவாஞ்சேரிலி பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்தால், அங்கிருந்து அரசலாற்றின் வடகரையில் உள்ளது கருவேலி. (கும்பகோணம்- கருவேலி 22 கிலோமீட்டர்; நாச்சியார் கோவில் கருவேலி 11 கிலோமீட்டர்; பூந்தோட்டம் கருவேலி 10 கிலோமீட்டர். பஸ் வசதி, ஆட்டோ வசதி உண்டு.

படங்கள்: போட்டோ கருணா

om010822
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe