சிவமயமாகட்டும் கதை!

/idhalgal/om/red-shit-story

நெனப்பு பொழப்பக் கெடுக்கும்' என்றொரு பழமொழி இருக்கிறது. நினைப்பு எப்படி பிழைப்பைக் கெடுக்கும்? எதுபோன்ற நினைப்பு எப்படி பிழப்பைக் கெடுக்கும்? நினைப்பு என்பது என்ன? ஒரு செயலைக் குறித்து எண்ணுவது (எண்ணம்) என்று பொருள்படுகிறது. எண்ணம் என்பது நொடிக்கு நொடி மாறக்கூடியது. மாறிக்கொண்டே இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் நாள் ஒன்றுக்கு 60,000 எண்ணங்கள் உடலினுள்ளே (மனதில்) செல்வதாக ஒரு நவீன ஆய்வு சொல்கிறது. உள்ளே செல்லும் எண்ணங்கள் 60,000 எண்ணங்களாக வெளியேறுகின்றன. இந்த 60,000 வகை எண்ணங்களிலும் இரண்டு விஷயங்கள்தான் ஒளிந்துகொண்டு இருக்கின்றன. அதாவது ஒன்று நேர்மறை (டர்ள்ண்ற்ண்ஸ்ங்) எண்ணம்; மற்றொன்று எதிர்மறை (சங்ஞ்ஹற்ண்ஸ்ங்) எண்ணம். நேர்மறை எண்ணம் நன்மையை விளைவிக்கும்; எதிர்மறை எண்ணம் தீமையை விளைவிக்கும். ஆகவே எண்ணம் நன்றாக இருப்பின் எல்லாம் நன்றாக இருக்கும். எண்ணமானது மனம் எனும் மாயையில் உதயமாகிறது. ஆனால் செயல்பட உள்ளம் உதவுகிறது. அதையே தெய்வப்புலவர், அறிவியல் ஞானி, வாழ்வியல் சித்தர் திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.

"உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.'

அதாவது ஒருவன் தன்மனதில் எண்ணக்கூடிய- நினைக்கக்கூடிய விஷயங்கள் யாவும் உள்ளன்போடு அப்பழுக்கில்லாமல் உயர்வானதாக, தெளிவான

நெனப்பு பொழப்பக் கெடுக்கும்' என்றொரு பழமொழி இருக்கிறது. நினைப்பு எப்படி பிழைப்பைக் கெடுக்கும்? எதுபோன்ற நினைப்பு எப்படி பிழப்பைக் கெடுக்கும்? நினைப்பு என்பது என்ன? ஒரு செயலைக் குறித்து எண்ணுவது (எண்ணம்) என்று பொருள்படுகிறது. எண்ணம் என்பது நொடிக்கு நொடி மாறக்கூடியது. மாறிக்கொண்டே இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் நாள் ஒன்றுக்கு 60,000 எண்ணங்கள் உடலினுள்ளே (மனதில்) செல்வதாக ஒரு நவீன ஆய்வு சொல்கிறது. உள்ளே செல்லும் எண்ணங்கள் 60,000 எண்ணங்களாக வெளியேறுகின்றன. இந்த 60,000 வகை எண்ணங்களிலும் இரண்டு விஷயங்கள்தான் ஒளிந்துகொண்டு இருக்கின்றன. அதாவது ஒன்று நேர்மறை (டர்ள்ண்ற்ண்ஸ்ங்) எண்ணம்; மற்றொன்று எதிர்மறை (சங்ஞ்ஹற்ண்ஸ்ங்) எண்ணம். நேர்மறை எண்ணம் நன்மையை விளைவிக்கும்; எதிர்மறை எண்ணம் தீமையை விளைவிக்கும். ஆகவே எண்ணம் நன்றாக இருப்பின் எல்லாம் நன்றாக இருக்கும். எண்ணமானது மனம் எனும் மாயையில் உதயமாகிறது. ஆனால் செயல்பட உள்ளம் உதவுகிறது. அதையே தெய்வப்புலவர், அறிவியல் ஞானி, வாழ்வியல் சித்தர் திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.

"உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.'

அதாவது ஒருவன் தன்மனதில் எண்ணக்கூடிய- நினைக்கக்கூடிய விஷயங்கள் யாவும் உள்ளன்போடு அப்பழுக்கில்லாமல் உயர்வானதாக, தெளிவானதாக இருக்கவேண்டும். மற்றவை எல்லாம் நீர்த்துப்போன விஷயத்திற்குச் சமம் என்கிறார்.

உயர்வான எண்ணங்கள் நம் மனதில் உண்மையாக நிலைபெற்று இருந்துவிட்டால் துன்பம் எனும் பேச்சுக்கே இடமில்லை. நற்குணங்களும், நற்பண்புகளும், நன்னடத்தையும் உடலுக்கும் மனதுக்கும் வலிமை சேர்க்கும். எண்ணக்கூடிய எண்ணங்கள் உள்ள விருப்பத்துடனும், உள்ளன்புடனும் இருக்கும்போது எல்லாமே, எப்போதுமே வெற்றிதான். இப்போது ஒரு நிகழ்வினைப் பார்ப்போம்.

வரலாற்றில் ஒரு கதையினைக் கேட்டிருப்போம். இதனைக் கதை என்போருக்கு கதையாக இருக்கட்டும். உண்மை என்று நம்புவோருக்கு வாழ்வியல் ஆதாரமாக இருக்கட்டும். புராண காலத்தில் "மார்க்கண்டேயன்' வரலாறு உண்டு. மிருகண்டு- விருத்தை தம்பதிக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை. அவர்கள் இருவரிடமும் குழந்தை வரம் பெற யோசனை ஒன்றைக் கூறுகிறார் நாரதர். அதன்படி தம்பதியர் இருவரும் சிவபெருமானை நோக்கி சிரத்தையோடு குழந்தை வரம் வேண்டித் தவமிருக்கின்றனர். அவர்களின் தவத்திற்கிணங்கி சிவபெருமான் காட்சிதருகிறார். உடன் நாரதரும் இருக்கிறார்.

sivan

தம்பதியர் சிவபெருமானிடம் உள்ளம் கசிந்து தங்கள் குறையை முறையிடுகின்றனர். ஈசன் "எவ்வாறான குழந்தை வேண்டும்?' என்று வினவுகிறார். "புத்தி பலம் பெற்ற குழந்தை வேண்டுமா? குழந்தை இருந்தால் போதுமா?' என்கிறார். புத்தி பலம் பெற்ற குழந்தையைக் கேட்கச் சொல்லி நாரதர் சைகையால் தம்பதிக்கு உணர்த்துகிறார்.

தம்பதியர் புத்தி பலம் பெற்ற குழந்தையை வரமாக அருளவேண்டுமென்று இறைவனிடம் இறைஞ்சுகின்றனர். அக்கணமே குழந்தை வரமருளி, அக்குழந்தைக்கு ஆயுள் (வயது) 16 வருடம் மட்டுமே என்றுகூறி மறைகிறார்.

தம்பதியர் செய்வதறியாது நாரதரிடம் புலம்ப, "கவலை வேண்டாம்' என்கிறார். குழந்தையும் பிறந்தது. அதற்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர். அவனை சிறந்த சிவபக்னாக வளர்க்கின்றனர். ஞானத்தில் சிறந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இனிதே வளர்கிறான் மார்க்கண்டேயன். சிவத் தலங்களில் பக்திப் பரவசத்தோடு பாடி சிவனை வழிபடுவதைத் தவமாகக் கருதுகிறான். காலம் விரைந்தோடுகிறது.

குமரனான மார்க்கண்டேயன் தனது 16-ஆவது வயதில் திருக்கடையூரில் அமையப்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்கிறான். தன் எண்ணத்திலும், உள்ளத்திலும் சிவசிந்தையே நினைப்பாக, உள்ளம் உருகிப்பாடியவாறு சிவாலயத்திற்குள் நுழைகிறான். அவனது ஆயுள் முடியும் நேரம் வந்துவிட்டதால் அங்கே எமன் தனது பாசக்கயிறுடன் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க துரத்துகிறான். மார்க்கண்டேயனோ சிவத்துதியை உச்சரித்தவாறு கர்ப்பக்கிரகம் இருக்கும் மூலஸ்தானத்தில் நுழைந்து மூலவரைக் கட்டிக்கொள்கிறான். எமனோ விடுவதாக இல்லை. பாசக்கயிறை கோபாவேசத்தோடு மார்க்கண்டேயன்மீது வீசுகிறான். கயிறானது மார்க்கண்டேயனோடு சிவலிங்கத்தையும் சேர்த்து இறுக்குகிறது. எமன் கயிறைச்சுருக்கி பலமாக இழுக்கிறான். கயிறோ எம்பெருமானையும் சேர்த்து இறுக்கி இழுக்கிறது. சிவபெருமான் கோபாவேசத்தோடு கடும் உக்கிரமாகத் தோன்றி, "என் குழந்தையின்மீதா கைவைத்தாய்' என்று கோபக்கனலோடு எமனை உதைத்து, மார்க்கண்டேயனைக் காத்து, "இனி உனக்கு மரணம் என்பதில்லை. இன்றுமுதல் நீ என்றும் 16 வயது மார்க்கண்டேயனாக இருப்பாய்' என்று ஆசிர்வதிக்கின்றார்.

அத்தனை நாட்களாக எமன் என்று அழைக்கப்பட்டவர் நீதியை நிலைநாட்டுவதில் உறுதியான எண்ணம் கொண்டிருந்தனால், அன்றுமுதல் எமதர்மராஜா என்று ஈசனால் ஆசிர்வதிக்கப்பட்டார். தென் தமிழகத்தில் இன்றும் எமதர்மராஜாவை குலதெய்வமாக வழிபடும் குடும்பங்கள் இருக்கின்றன. இதன்மூலம் நாம் அறியும் நீதி- நினைப்பு (எண்ணம்) நல்லதாக இருக்கும்போது பிழைப்பும் சிறப்பாகவே இருக்கும். எண்ணம் நலமாக இருக்க புலன்களின் ஒழுக்கம் மிக முக்கியமாகும். ஐம்புலன்களின் வழிச்செல்லாமல் ஒழுக்கநெறியோடு வாழ மாணிக்கவாசகரின் திருவாசகத்தைப் பார்ப்போம்.

"அடல் கரிபோல் ஐம்புலன்களுக்கு

அஞ்சி அழிந்த என்னை

விடற்கு அரியாய் விட்டிடுதி கண்டாய்

விழுத்தொண்டர்க்கு அல்லால்

தொடற்கு அரியாய் சுடர்மா மணியே

சுடு தீச் சுழல்

கடல் கரிது ஆôய் எழுநஞ்சு அமுது

ஆக்கும் கறைக் கண்டனே.'

மிகுந்த வலிமைகொண்ட மதயானையை அடக்கியாள முடியாது. அத்தகைய மதங்கொண்ட யானையைப்போல் எனது ஐம்புலன்களும் (கண், காது, மூக்கு, வாய், மெய்) பல்வேறு இச்சைகளுக்கு ஆசைப்பட்டு, அனுபவித்து, அதன்பின் அதற்கு அஞ்சி, பயந்து நடுங்கி அதிலேயே அமிழ்ந்து (மூழ்கி) அழியும் என்னை, பற்றுள்ளம் கொண்டு அன்பர்களின், அடியார்களின் மனத்தைவிட்டு அகலாத சிவபெருமானே, என்னைக் கைவிட்டுவிடாதே. உண்மைத் தொண்டர்களைத் தவிர மற்றவர்கள் அருகில் நெருங்க இயலாதவனே, ஜோதி மணிச்சுடரே, சுடுகின்ற நெருப்புத் தீயினைப் போன்ற திருப்பாற்கடலில் எழுந்த நஞ்சை உண்டு ஈரேழு லோகத்தையும் காத்தருளிய நீலகண்டப் பெருமானே, என்னைக் கைவிட்டுவிடாதே என்று உள்ளம் உருகுகிறார் மாணிக்க வாசகர்.

உண்மையான எண்ணங்கள் நம் மனதில் உறுதியாக இருந்து சிவவழிபாட்டில் ஈடுபடுவோமானால் நமது எண்ணம் நிறைவேறும். ஐஸ்வரியங்கள் எனும் அன்பு, கருணை, பாசம், ஆரோக்கியம், ஆனந்தம் என்பவை அனைத்தும் நம் வாழ்வில் எப்போதும் நிலைத்து நிற்கும்.

எனவே புலன்களின் இச்சைக்கு அடிமையாகாமல், இறைவழிபாட்டில் ஈடுபடும்போது நாமும் மார்க்கண்டேயனைப்போல சகல வரங்களையும் பெறமுடியும். உள்ளம் உண்மையாக இருக்கட்டும். உவகை பொங்கட்டும். சிந்தை எல்லாம் சிவமயமாகட்டும். அகிலமெல்லாம் சிவபெருமானின் அன்பெனும் அருள்ஒளி வீசட்டும்.

இதையும் படியுங்கள்
Subscribe