Advertisment

ஏழேழு ஜென்ம பாவங்கள் நிவர்த்தியாகும் ரதஸப்தமி வழிபாடு! ஆர் மகாலட்சுமி

/idhalgal/om/rathasaptami-worship-remove-seven-birth-sins-r-mahalakshmi

பிப்ரவரி 16 ரத ஸப்தமி

சூரியபகவான், ஒவ்வொரு மாதமும். ஒவ்வொரு ராசிக்கு மாறுவார். சூரியன் மேஷ ராசிக்கு வரும் மாதம் சித்திரை எனப்படும். ரிஷப ராசியில் சூரியன் இருக்கும் மாதம் வைகாசி எனக் கூறுவர். இவ்விதம் வருடத்தின் 12 மாதங்களில், 12 ராசிக்கும் பெயர்ந்து, 12 மாதப் பிறப்பை யும், மாதப் பெயர்களையும் சூரிய நகர்வு உண்டாக்குகிறது.

சூரிய பகவானின் தேர்

Advertisment

இதன்மூலம் சூரியனின் பயணம் எத்தணை முக்கியத் துவம் வாய்ந்தது என புலனாகி றது. சூரியபகவான், ஏழு குதிரை கள் பூட்டிய தேரில் பயணம் செய்கிறார். ஏழு குதிரைகளும், ஏழு வண்ணங்களைக் கொண் டுள்ளது. இது வாரத்தில் ஏழு நாட்களைக் குறிக்கிறது. மேலும் சிலர் இந்த 7 எனும் எண், சங்கீத ஸ்வரத்தில் ஏழு ஸ்வரங்களை குறிக்கிறது என்றும், ஆயுர் வேதத்தில் உடலில் 7 திசுக்கள் உள்ளதைக் குறிப் பிடுகிறது என்றும் கூறுகிறார்கள். சூரியனின் தேர் சக்கரத்தில் 12

பிப்ரவரி 16 ரத ஸப்தமி

சூரியபகவான், ஒவ்வொரு மாதமும். ஒவ்வொரு ராசிக்கு மாறுவார். சூரியன் மேஷ ராசிக்கு வரும் மாதம் சித்திரை எனப்படும். ரிஷப ராசியில் சூரியன் இருக்கும் மாதம் வைகாசி எனக் கூறுவர். இவ்விதம் வருடத்தின் 12 மாதங்களில், 12 ராசிக்கும் பெயர்ந்து, 12 மாதப் பிறப்பை யும், மாதப் பெயர்களையும் சூரிய நகர்வு உண்டாக்குகிறது.

சூரிய பகவானின் தேர்

Advertisment

இதன்மூலம் சூரியனின் பயணம் எத்தணை முக்கியத் துவம் வாய்ந்தது என புலனாகி றது. சூரியபகவான், ஏழு குதிரை கள் பூட்டிய தேரில் பயணம் செய்கிறார். ஏழு குதிரைகளும், ஏழு வண்ணங்களைக் கொண் டுள்ளது. இது வாரத்தில் ஏழு நாட்களைக் குறிக்கிறது. மேலும் சிலர் இந்த 7 எனும் எண், சங்கீத ஸ்வரத்தில் ஏழு ஸ்வரங்களை குறிக்கிறது என்றும், ஆயுர் வேதத்தில் உடலில் 7 திசுக்கள் உள்ளதைக் குறிப் பிடுகிறது என்றும் கூறுகிறார்கள். சூரியனின் தேர் சக்கரத்தில் 12 ஆரங்கள் உள்ளது. இந்த 12 ஆரங்களும் 12 ராசிகளைக் குறிக்கிறது. சூரிய தேர் பாகன் அருணன் ஆவார். எனவேதான் அதிகாலையில் சூரிய உதய நேரத்தை அருணோ தய காலம் என்று கூறுகின்றனர்.

சூரியபகவானின் பிறப்பு

சூரியபகவான், மாசி மாதம், சப்தமி திதியில், அஸ்வினி நட்சத்திரத்தில், ஞாயிற்றுக் கிழமையன்று, காஸ்யப கோத்திரத்தில் அவதரித் தார். இவரது தந்தை காஸ்யப முனைவர் தாய் அதிதி என்றும் புராணம் குறிப்பிடுகிறது.

உத்தராயண கால சிறப்பு

சூரியபகவானுக்கு உத்தராயண காலமே, பலமிக்கதாக கருதப்படுகிறது. உத்தரம் என்பது வடக்கு. அயனம் என்பது செல்லுதல் அல்லது பயணித்தல். உத்தராயணம் என்பது தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மகர ராசிமுதல் மிதுன ராசிவரை யிலான காலகட்டமாகும். மகர ராசியில், சூரியன் பிரவேசிக்கும் நேரத்தை, தை மாதப் பிறப்பு என்றும் தை பொங்கல் என்றும் கொண்டாடுகிறோம். உத்தராயண காலத்தில், பகல்பொழுது அதிகமாகவும், இரவுப்பொழுது குறைவாகவும் இருக்கும்.

Advertisment

dd

இந்த உத்தராயண காலத்தை, முன்னோர் கள் பெரும் பாக்கியமாக கருதினார்கள். எனவேதான் அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மரும், இந்த உத்தராயண கால தொடக் கத்திற்கு காத்துக்கொண்டிருந்தார். இது போல கௌதம புத்தரும் இந்த உத்தராயண நேரத்தை பயன்படுத்திக்கொண்டார்.

அதுவும் குறிப்பாக, சப்தமியன்று அவரது தேர் சக்கரம் முழுமையாக திருப்படுகிறது என சாஸ்திரம் பகிர்கிறது. எனவே அதனை ரத ஸப்தமி என விஷேசமாக கொண்டாடு கிறார்கள்.

பூஜை முறை

இந்த ரதஸப்தமியன்று விடியற்காலை யில் எழுந்து, சூரிய உதயத்திற்குமுன் ஸ்நானம் செய்யவேண்டும். சில பிரிவினர் எருக்கம் இலைகளை வைத்து ஸ்நானம் செய்வர். பெண்கள் சிறிது மஞ்சளையும் சேர்த்து குளிப்பர். பின் சூரியனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யவேண்டும். முக்கியமாக சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் பூஜைசெய்வது சிறப்பு. வாசலில் ரதம் போன்று கோலமிடவேண்டும்.

ரதஸப்தமி பூஜையின் பலன்

இந்த ரதஸப்தமி பூஜைசெய்வதால், ஏழு ஜென்ம பாவங்களும் நிவர்த்தியாகும். இதில் சில பாவங்களைத் தெரியாமல்கூட செய்திருப்போம். அதுவும் இந்த பூஜை பல னால் கரைந்துவிடும். இந்த பூஜையை, ஆரோக்கிய ஸப்தமி எனும் பெயரிலும் கூறுவர். இந்த பூஜையால், நமது பிணிகள் அகன்று நல்ல உடல் நலமும், ஆரோக்கியமும் பெறலாம். உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நலம் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகி, மனதுன்பம் ஏற்பட் டுக்கொண்டிருந்தால், அவர் கள் கண்டிப்பாக ரதஸப்தமி விரத மிருங்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், உண்ணாவிரதம் இருப் பது. முடிந்தவர்கள், முழுமை யான விரதம் இருங்கள். கூடிய மட்டும் அனைவரும் அன்று சூரிய உதயம்முதல் சூரிய அஸ்த மனம் வரையிலாவது விரத மிருப்பது நல்லது. அன்று விரத மிருந்து, சூரிய அஷ்டோத்ரம். காயத்ரி விரதம், ஆதித்ய ஹ்ருதய பாராயணம் சிறப்பு.

சூரியபகவானுக்குரிய கோவில்கள்

தஞ்சாவூர்- சூரியனார் கோவில், திருக்கண்டியூர்- வீரட்டம், பனங்காட்டூர்,

கோனார்க்- சூரியனார் கோவில் மற்றும் ஆந்திராவிலுள்ள ஸ்ரீ காகுளம்- அரச குளம் கோவில் ஆகும். ஏழு தலைமுறை பாவம் தீர்க்கும் அவினாசியப்பரையும் வணங்கலாம். காரைக்கால்- திருத்தெளிச்சேரி.

பூஜா பலன்

ரதஸப்தமியன்று சூரிய பகவானை வணங்கு வதும், கோதுமை சார்ந்த உணவுப் பொருட் கள் தானம் செய்வதும் நல்லது. இவ்வாறு வணங் கும்போது கண் பிரச்சினைகள் சரியாகும். எப்போதும் உடல்நலம் கெட்டு, சுணங்கி இருப் பவர்கள் சுறுசுறுப்படைவர். சிலர் எத்தனை முயன்றும் முன்னேற்ற வெளிச்சத்திற்கு வர இயலாமல் முடங்கி இருப்பர். அவர்களும் இந்த ரதஸப்தமியை கொண்டாட, அவர்கள் திறமை பளிச்சிட்டு, வெளியுலகினரால் பாராட்டப் படுவர்.

இந்த 2024-ஆம் ஆண்டு, பிப்ரவரி 16, மாசி மாதம் 4-ஆம் தேதியன்று வருகிறது. விரத மிருந்து வணங்கி வளம்பெறுங்கள்.

bala010224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe