Advertisment

ராமேஸ்வரம்! அரிய தகவல்கள் 120 - பி.கவிதா சென்ற இதழ் தொடர்ச்சி.....

/idhalgal/om/rameswaram-rare-information-120-pkavitha-0

ராமேஸ்வரம் பற்றி 70 தகவல்களைக் கடந்த இதழில் கண்டோம். மற்றவற்றை இங்கு காண்போம்.

Advertisment

71. மத்திய அரசு 1951-ல் இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்ததால், ராமேஸ்வரம் கோவிலுக்குச் சொந்தமான பல்லாயிரம் கோடி சொத்துகள் பறிபோயின.

73. ராமேஸ்வரம் கோவில் ஆலய நிர்வாகத்தை 1959-ஆம் ஆண்டு தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறை ஏற்றது.

74. ராமேஸ்வரம் கோவிலுக்கு லட்சக் கணக்கான மக்கள் வந்துசெல்கிறார்கள். ஆனால் உண்டியல் வசூல் மிகவும் குறைவாகவே வருகிறது.

Advertisment

75. ராமேஸ்வரம் கோவிலில் சுமார் 300 பேர் நிரந்தர ஆலய ஊழியர்களாக உள்ளனர்.

76. ராமேஸ்வரம் கோவிலுக்கு சேதுபதி மன்னர்கள் செய்த சேவையை கௌரவிக்கும் வகையில் அவர்களது பெயர், நட்சத்திரங்கள் இன்றும் மூலவர் முன்பு சங்கல்பத்தில் ஓதப்படுகிறது.

77. ராமேஸ்வரத்திலுள்ள ஜோதிர்லிங்கம், இந்தியாவிலுள்ள ஜோதிர்லிங்கங்களில் 7-ஆவது லிங்கமாகக் கருதப்படுகிறது.

78. ராமேஸ்வரம் தலத்திலுள்ள நடராஜர் சந்நிதியில் இன்னும் பதஞ்ச- முனிவரின் ஜீவசமாதியில் நெய்யூற்றி விளக்கை எரியவைத்தால் ராகு- கேது தோஷம் நீங்கும்.

79. ராமேஸ்வரம் கோவிலில் வைணவ ஆலயங்களில் கொடுப்பதுபோல தீர்த்தம் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.

80. நேபாளநாட்டு பக்தர் ஒருவர், ஒரு லட்சம் ருத்ரங்களாலான ருத்ராட்சப் பந்தல் ஒன்றை இத்தலத்தில் அமைத்துக் கொடுத்துள்ளார்.

81. ஐதீகப்படி ராமேஸ்வரத்தில் வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

82. 1935-ஆம் ஆண்டு, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவின் வெள்ளி விழா ஆண்டாகும். அப்போது ராமேஸ் வரம் கோவில் இந்திய அஞ்சல் தலைகளில் பொறிக்கப்பெற்றது.

83. இதிகாச புராண காலத்திலிருந்தே ராமேஸ்வரம் புனிதபூமி என்று இந்தியா முழுவதும் பேசப்பட்டது.

84. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புலவர்கள் பாடியவற்றைச் சங்க இலக்கியம் என்று தொகுத்தார்கள். அதில் அகநாநூறு தனுஷ்கோடி பற்றிப் பேசுகிறது.

85. சேது என்ற சொல்லுக்கு பாலம் என்பதுதான் பொருள். அந்தப் பாலத்தையே ஒரு பாலத்தின்மூலமாக நாம் கடக்கிறோம்.

86. தமிழ்நாட்டில் பிறந்து வாழ்பவர் களைவிட வடந

86. தமிழ்நாட்டில் பிறந்து வாழ்பவர் களைவிட வடநாட்டுக்காரர்களே மிகுதி யாக ராமேஸ்வரத்தை தரிசிக்கிறார்கள்.

ஆண்டுதோறும் இங்கு வருவதை ஓர் ஆன்மிகப் பயணமாகவே வடமாநிலத்த வர்கள் எண்ணியுள்ளார்கள்.

87. முத்துப்பேட்டைக்கு அருகிலுள்ள திருவான்மியூரிலும், இராமர் இலங்கை போகும்போது இறைவனை வணங்கி வழிகேட்டிருக்கிறார். அந்த இடம் திரு உசாத்தானம் என்று அழைக்கப்படுகிறது.

88. காசியிலும், சிதம்பரத்திலும் பத்து மாதம் தங்கிய பலனையும், நைமி சாரண்யம், திருப்பதி, ஸ்ரீபர்வதம், மதுரை, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, குடந்தை, திருவிடை மருதூர், மயிலாடு துறை, வேதாரண்யம், திருவாரூர், திருவெண்காடு, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருமுதுகுன்றம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக் காளத்தி ஆகிய பகுதிகளில் ஓராண்டு தங்கிய பலனையும் தனுஷ்கோடியில் நீராடி ராமநாதரை வணங்கினால் மூன்றே நாளில் பெறலாம் என்பர்.

89. காசியில் இறப்பது முக்தி தரும். பாணலிங்கம் பல திரளும் நர்மதையில் விரதமிருப்பது முக்தி தரும். பொறாமையால் போர்க்களமாகிய குருசேத்திரத்தில் பிறருக்கு தானம் செய்வதே முக்தி தரும். அந்த மூன்று பலனையும் ஒன்றாக்கித் தரும் பெருமை ராமேஸ்வரத்திற்கே உண்டு.

ra

90. இந்திய நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் சி.வி. மாவ்லங்கர், ராமேஸ்வரம் கோவில் இந்திய தேசியச் சொத்து எனவும், ஒருமைப்பாட்டுக்கு உதவும் சாதனம் எனவும் கூறியதைக் கோவில் குறிப்பேடுகளில் காணலாம்.

91. மண்ணினால் லிங்கம் செய்தாள் சீதை. அதனால் ராமேஸ்வரத்தில் யாரும் மண்ணை உழுது பயிர்செய்வதே இல்லை.

92. ஆவுடையாராக நிலமே இருக்க, பாண லிங்கமாக மட்டுமே இருக்கும். ராமலிங்கத் தைப்போல் இருப்பதால், செக்கை ஆட்டி எண்ணெய் எடுப்பதும் இவ்வூரில் இல்லை.

93. 1925-ல் முதல் குடமுழுக்கும், 27-2-1948-ல் இரண்டாவது குடமுழுக்கும், 5-2-1975-ல் மூன்றாவது குடமுழுக்கும் நடந்தன.

94. ராமேஸ்வரம் கோவிலிலுள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடியவுடன் உடம்பில் மின்சக்தி பாய்ந்ததுபோல் ஒரு சுறுசுறுப்பு உணர்வைப் பெறமுடிகிறது.

95. புத்திரகாரகனாகிய குருவுக்குப் பகையான கிரகம் சுக்கிரன். புத்திரஸ்தானத் தில் விரோதமானதாகக் கருதப்படுபவர் சூரியனும் செவ்வாயும் ஆவர். எனவே மகப் பேறு விரும்பியவர்கள் மேற்கூறிய கிரகங்களுக் குரிய ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் நீராடுவது கூடாது என்று விலக் கினார்கள். என்றா லும் சேதுவில் இக்காரணத் திற்காக இந்த நாட்களில் நீராடினால் தவறில்லை என்று கூறப்பட்டுள்ளது.

96. பிரேதத்திற்கு நீர்க்கடன் செய்யாதவன், கருவுற்ற மனைவியை உடையவன் வேறு தீர்த்தங்களில் நீராடுவதற்கு உரிமையில்லை. ஆனால் சேதுவில் நீராடுவதற்கு இவர்களுக் கும் தடையில்லை. காரணம் நீர்க்கடனுக்குரிய காசியின் பலனை சேது தரும். மேலும் மகப் பேறு தருவதில் இத்தலம் சிறந் திருக்கிறது.

97. தீர்த்தமே தெய்வமாயிருப்பதால் கடல் நீராட்டிற்கு விதிக்கப்பட்ட திதி, கிழமை, நட்சத்திரம் முதலிய நியமங்களை மீறியும் இங்கே என்றும் எப்போதும் நீராடலாம். பாதி உதயம், முழு உதயம் என்றெல்லாம் பார்க்காமல் நீராடலாம்.

98. பலதீபிகை என்னும் ஜோதிட நூல் கர்ம நாசத்துக்கு நாகப்பிரதிட்டை செய்வதற்குச் சேது உரியது என்று கூறுகிறது.

99. புத்திரதோஷம் எதுவாயினும் சேது வில் நீராடினால் மறையும்.

100. காசிக்கு மட்டும் போய்வந்தால் போதாதாம். ராமேஸ்வரம் சென்று நீராடி வணங்கி, கடலில் மண்ணெடுத்துக் காசிக்குப் போய், கங்கையில் அதனைக் கொட்டி, காசி யிலிருந்து மீண்டும் ராமேஸ்வரம் போய், காசியிலிருந்து கொண்டுவந்த கங்கை நீரால் ராமநாதருக்கு அபிஷேகம் செய்தால்தான் காசியின் பலன் பூர்த்தியாகக் கிடைக்கும். இந்த மரபுதவறி காசிக்கு மட்டும் போய் வந்தால் பயனுமில்லை. இதைத்தான் காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது என்ற பழமொழி கூறுகிறது.

101. காசி முக்திக்குச் சிறப்புடையது. அதனால்தான் உயிரை உடனே விட விரும்பாமல் வேறெதையாவது விட்டுவிட்டு வருகிறார்கள். ராமேஸ்வரமோ உரிய காலத்தில் போகமும், பிற்காலத்தில் முக்தியும் அருளும் பாக்கியமுடையதாகும்.

102. மிகுந்த சிறப்புடையது ராமேஸ்வரம் என்றாலும், தனுஷ்கோடிக்குப் போய்விட்டு தான் பிறகு ராமேஸ்வரம் வரவேண்டும்.

103. பாம்பன் நீர் இணைப்பை வில் நாணாக வும், சுற்றிலும் வளைந்த கடல்நீரை வளைந்த வில்லாகவும் கற்பனை செய்தால், அந்த வில்லில் நாண்பூட்டி நிற்கும் அம்புபோலவே ராமேஸ்வரமும் தனுஷ்கோடியும் ஆகாயத் தில் நின்று பார்க்கும்போது தெரியும் என்பர்.

104. 1964-ல் அடித்த புயலில் ரயில் ஒன்று தனுஷ்கோடியில் தடம் புரண்டது. ஆயிரக் கணக்கானவர்கள் இறந்தனர். இரும்புப் பாதை மண் மூடிப்போனது. ராமேஸ்வரம் கோவில் அகதிகள் புகலிடமானது. மீனவர்களைத் தவிர வேறு யாரும் தனுஷ்கோடிக்குப் போய் மீண்டும் வாழ்வதற்கு இன்றுவரை துணியவில்லை.

105. நம்பு நாயகியம்மன் என்னும் மாரியம் மன் கோவிலும் முன்பு தனுஷ்கோடியில்தான் இருந்தது. புயல் அழிவுக்குப்பின் நடராஜ புரத்தில் இருக்கிறது. ராமேஸ்வரத்தின் காவல் தெய்வங்களில் இதுவும் ஒன்று.

106. சித்தப்பிரமை கொண்டோர் சேது வால் குணம் பெறுவர்.

107. ராமேஸ்வரத்திற்குப் பழைய பெயர் கந்தமாதன பர்வதம் என்பதே ஆகும். இராமருக்குப் பின்தான் பெயர் மாறியது.

108. சிவனும் உமாதேவியும் ராமேஸ் வரத்தில் தினமும் வெளிப்படத் தோன்றிய படியுள்ளனர் என்று சேது தல புராணம் சொல்கிறது.

109. தனுஷ்கோடிக்குப் போனாலும் போகா விட்டாலும் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத் திற்குப் போய் நீராடாமல் எந்த யாத்திரிகரும் திரும்பமாட்டார். இன்றைய நிலையில் அக்னி தீர்த்தத்தில் நீராடுவதே நடைமுறையில் அதிகமாகி உள்ளது.

110. 78 அடி உயரமான மேற்கு கோபுரத்தை சேதுபதிகள் முழுவதும் கருங்கல்லாலேயே கட்டிவிட்டார்கள். பெரும்பாலும் நிலையும் மேல்தளமும் மட்டுமே கருங்கல்லாக இருப்பது வழக்கம். இவர்களோ கலசம்வரை கருங்கல்லாகக் கட்டியது சிறப்பேயாகும்.

111. கீழ்க் கோபுரம் கட்டிய தேவகோட்டை ஜமீன்தார் ஏ.எல்.ஏ.ஆர். செட்டியார் குடும்பத்தினரும், 128 அடி உயரமாக அதே போல் கருங்கல்லாய்க் கட்டிவிட்டார்கள். இந்த கீழ்க்கோபுரம் 1649-ல் சேதுபதியால் தொடங்கப்பட்டுக் கைவிடப்பட்டதால், 1879 முதல் 1904-க்குள் ஜமீன்தார் இதைக் கட்டியிருக்கிறார். இலங்கை வடகரையில் நெடுந்தீவில் நின்று பார்த்தால் இக்கோபுரம் தெரியும்.

112. இராமன் நிறுவிய லிங்கம், அனுமன் லிங்கம், விசாலாட்சி, பர்வதவர்த்தினி, நடராசர் ஆகிய ஐவர்க்கும் தனி விமானங் கள் உள்ளன. கோவில் பதினைந்து ஏக்கர் பரப்புள்ளது. நீளம் 865 அடியும், அகலம் 657 அடியும்கொண்ட கோவில் இதுவாகும். சில உத்திரங்கள் 49 அடி நீளமுடையவை; ஒரே கல்லால் ஆனவை.

113. வைணவத்தில் கருடசேவையும் சைவத்தில் ரிஷபவாகன காட்சியும் முக்தி தரும் என்பார்கள். அதுவும் கோபுர தரிசனமாகும்போதுதான் இக்காட்சிகள் மிகவும் சிறப்புக்குரியதாகக் கருதப்படும்.

அதற்கேற்ப மண்டப உச்சியில் ரிஷபவாகனக் காட்சியும், பின்புறம் கீழைக் கோபுரம் இருப் பதும் முக்திதரும் தலத்தில் சிறந்த ராமேஸ் வரத்திற்கு மிகவும் உரியதாய் விளங்குகின்றன.

114. விஜயரகுநாத சேதுபதி (கி.பி. 1711-1725) நாள்தோறும் குதிரையில் வந்து ராமேஸ்வரத்தை வழிபட்டபிறகே இரவு உணவுண்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

115. ராமேஸ்வரம் பகுதி பாண்டியர், சோழர்கள், சிங்களவர், விஜயநக ரமன்னர், மதுரை நாயக்கர்கள், மறவர் சீமை அதிபதி களான சேதுபதிகள் ஆகிய பல்வேறு அரசு களின் ஆட்சிப் பகுதியாக இருந்தது.

116. ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவு முதலில் மதுரை பாண்டிய மன்னர்களது ஆட்சிப் பகுதியாக இருந்தது.

118. கி.பி. பத்தாவது நூற்றாண்டில் பாண்டிய மண்டலத்தைக் கைப்பற்றிய பராந்தக சோழன் ராமேஸ்வரம் திருக்கோவிலில் துலாபாரம் நிகழ்த்தி அவனது நிறைக்குரிய பொன்னைக் கோவிலுக்கு அளித்தான் என்று கி.பி. 932-ஆம் ஆண்டு வேளஞ்சேரி செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

118. மூன்றாம் பிராகாரக் கட்டுமானப் பணியைத் தொடங்கியவரும், மிகச்சிறந்த சிவத்தொண்டராகவும் விளங்கிய முத்துவிசய ரெகுநாத சேதுபதி (கி.பி. 1713-1725) திருவாரூர் தச்சர்களைக்கொண்டு அழகிய தேர் ஒன்றை செய்து கோவிலுக்கு வழங்கினார். அத்துடன் அந்தத் தேரோட்டத்தை வடம்பிடித்து அவரே தொடக்கிவைத்தார்.

119. வைணவரான இராமர் சைவக் கடவுளான ஈஸ்வரனை சிவலிங்க வடிவத் தில் வழிபட்டதால், சைவர்களும் வைணவர் களும் நாடு முழுவதிலுமிருந்து வந்து வழிபடும் முக்கியத் தலமாக உள்ளது ராமேஸ்வரம்.

120. கருவரையில் நுழைந்தவுடனேயே இனம்புரியாத பக்திப் பரவசத்தில் திளைக்க லாம். இது இங்குவரும் அனைத்து பக்தர் களின் அனுபவப்பூர்வமான உண்மை!

om010422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe