Advertisment

இராமானுஜர் மணிமண்டபம்

/idhalgal/om/ramanujar-mani-mandapam

சேலம் மாநகர புதிய பேருந்து நிலையத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில், கொண்டலாம்பட்டி- சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் பெருமா பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அந்த இயற்கை எழில் சூழ்ந்த கிராமத்தினுள்ளே சென்றால், வைணவர்களால் உடையவர் என்று கொண்டாடப்படுபவரும் ஆன்மிகத்தில் பெரும் புரட்சி செய்தவருமான பகவத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு மணிமண்டபத்தில், இராமானுஜரை தரிசித்து மகிழலாம்.

Advertisment

rr

2012-ஆம் ஆண்டில் திருத்தண்டத ஐயர் ஸ்வாமிகள் உள்ளிட்ட பெரியோர்கள், ஆன்மிக வழிகாட்டிகள் முன்னிலை யில் திருக்கோவில் மணிமண்டப பூமிபூஜை போடப்பட்டு, 2017-ஆம் ஆண்டு இராமானுஜரின் திருநட்சத்திர நாளில் மண்டபம் கட்டி முடிக்கப்பெற்றது. சிறப்பாக குடமுழுக்கும் நடைபெற்றது. சுற்றியுள்ள நான்கு பெருமாள் திருக்கோவில்களும் திறக் கப்பட்டன. 90 சதவிகித கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டாலும், இன்னும் பத்து சதவிகிதப் பணி

சேலம் மாநகர புதிய பேருந்து நிலையத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில், கொண்டலாம்பட்டி- சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் பெருமா பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அந்த இயற்கை எழில் சூழ்ந்த கிராமத்தினுள்ளே சென்றால், வைணவர்களால் உடையவர் என்று கொண்டாடப்படுபவரும் ஆன்மிகத்தில் பெரும் புரட்சி செய்தவருமான பகவத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு மணிமண்டபத்தில், இராமானுஜரை தரிசித்து மகிழலாம்.

Advertisment

rr

2012-ஆம் ஆண்டில் திருத்தண்டத ஐயர் ஸ்வாமிகள் உள்ளிட்ட பெரியோர்கள், ஆன்மிக வழிகாட்டிகள் முன்னிலை யில் திருக்கோவில் மணிமண்டப பூமிபூஜை போடப்பட்டு, 2017-ஆம் ஆண்டு இராமானுஜரின் திருநட்சத்திர நாளில் மண்டபம் கட்டி முடிக்கப்பெற்றது. சிறப்பாக குடமுழுக்கும் நடைபெற்றது. சுற்றியுள்ள நான்கு பெருமாள் திருக்கோவில்களும் திறக் கப்பட்டன. 90 சதவிகித கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டாலும், இன்னும் பத்து சதவிகிதப் பணிகள் பாக்கி இருக்கின்றன. இந்த மணிமண்டபத் திருக்கோவில் கட்ட இதுவரை எட்டுகோடி ரூபாய் செலவாகியுள்ளது.

ஆன்மிக ஈடுபாடு கொண்ட பக்தர்கள், பொதுமக்களிடம் நன்கொடை பெற்றே இராமானுஜரின் ரம்மியமான இந்த மணிமண்டபத் திருக்கோவில் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் பக்தர்களின் நன்கொடை பெற்றே மீதமுள்ள கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன.

சேலத்தில் புகழ்பெற்ற வழிபாட் டுத் தலமாக இது அமைந்துள்ளது. நான்கு பெருமாள் கோவில்களுக்கு நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கும் மணி மண்டபத்தின் படிக்கட்டுகளில் ஏறிச்சென்று, பதினெட்டு அடி உயர பகவத் இராமனு ஜரைக் காணும்போது மெய்சிலிர்த்துவிடும். "ஸ்ரீராமானுஜரே... தங்கள் பாதங்களே சரணம்' என்று விழுந்து கும்பிட வைத்துவிடுவார். இராமானுஜருக்குக் கீழே இடலி வலமாக அவரது பிரதான சீடர்கள் கூரத்தாழ்வார், முதலியாண்டான் உள்ளனர்.

வருடந்தோறும் பவித்ரோற்சவம் நான்கு நாட்கள் சிறப்பு ஹோமத்துடன் நடத்தப்படுகிறது.

இராமானுஜர் மணிமண்டப வளாகத்தில் 74 தென்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இராமானுஜர் வைணவ சமயத்தைப் பரப்புவதற்காக 74 ஆச்சார்யார்களை நியமனம் செய்தார். அவர்களுக்கு சிம்மாச னாதிபதிகள் என்று பெயர். அவர்களை பக்தர்கள் நினைவுகூர்வதற்கே இந்த 74 தென்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

இராமானுஜருக்கு உகந்த நான்கு திவ்ய தேசங்களான திருப்பதி, திரு நாராயணபுரம், ஸ்ரீ ரங்கம், காஞ்சிபுரம் ஆகிய நான்கு பெருமாள் கோவில்களும் இங்கே பக்தர்கள் பரவசப்படும்படி சிறப் பாக அமைந்துள்ளன.

இராமானுஜரைக் காணவரும் பக்தர்களுக்கு தரிசிக்கும் முறை இருக்கிறது. அதன்படி முதலில் மலைக்கோவில்போல் அமைந்திருக்கும் மணிமண்டபத்தில் குரு இராமானுஜரை தரிசித்து மனமார பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் செய்துவிட்டு, பிறகு தரைத்தளத்திலுள்ள வரம்தரும் காஞ்சி வரதராஜரை வணங்கவேண்டும். அதன்பின்னர் கலியுகக் கண்கண்ட தெய்வமாய் விளங்கிடும் திருப்பதி ஏழுமலையான் சந்நிதி சென்று தரிசித்து, பின் செல்வங்களை வழங்கும் மேல்கோட்டை செல்வநாராயணப் பெருமாள் சந்நிதி சென்று சேவித்து, இறுதியாக முக்தியை வழங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் சந்நிதி சென்று வணங்கி நிறைவு செய்யவேண்டும். இவ்வாறு வழிபட்டால் ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அறிவு, புகழ்பெற்ற வாழ்வை உறுதியாக நாம் பெற்றுவிடலாம். ஒரு லட்சம் சதுர அடியில் இந்த மணிமண்டபத் திருக்கோவில் அமைந்துள்ளது. வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் ஸ்ரீராமானுஜர் மணிமண்ட பம் செல்ல "லிப்ட்' வசதி உள்ளது. கீழேயுள்ள நான்கு பெருமாள் திருக்கோவில் சென்று தரிசிக்க "பேட்டரி கார்' வசதி யும் உள்ளது.

நித்தியப்படி பூஜைகள், பெருமாளுக்கு உகந்த உற்சவங்கள், யாகங்கள், அன்ன தானங்கள் அனுதினமும் முறைப்படி செய்யப்பட்டு வருகின்றன. கோசாலை யும் சிறப்பாகப் பராமரிக்கப் பட்டுவருகிறது.

சந்நிதிகளில் வரிசை, தரிசனக் கட்டணம் என எதுவும் இங்கில்லை. பக்தர்கள் மனம் விரும்பி அன்னதானம் மற்றும் கோவிலின் திருப்பணிகளுக்கு அளிக்கும் நன்கொடைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள்.

கோவர்த்தன கிரி கிருஷ் ணர், குழந்தைகள் விளையாட சறுக்குமரம், ஊஞ்சல் போன்றவையும் இங்கிருப்பதனால் சேலம் மற்றும் பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, இறைவழிபாட்டுடன் குதூகலமான சுற்றுலாபோலவும் கொண்டாடுகிறார் கள். இங்கு காளிங்க நர்த்தனர் சந்நிதி உருவாகிவருகிறது.

ஸ்ரீராமானுஜர் மணிமண்டபம் திருக் கோவில் சேலம் ஸ்ரீ பகவத் இராமானுஜ கைங்கர்ய சொஸைட்டியால் செயல்படுகிறது. இதன் தலைவராக சேலம் ஆடிட்டர் எஸ். ஸ்ரீராமன், சேலம் ஸ்ரீ முரளி பிரின்டர்ஸ் ஜி.ஆர். முரளிதரன் (செயலாளர்) மற்றும் ஐம்பது உறுப்பினர்களும் சிறப்பாக செயல் பட்டுவருகிறார்கள்.

இராமானுஜர் மணிமண்டபத் திருக் கோவில் காலை 6.00 மணிமுதல் பகல் 12 மணிவரையும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையும் திறந்திருக்கும்.

மேலும் விவரங்களுக்கு 98947 66501 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

om011221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe