Advertisment

கலியை விரட்டும் ஒரு நாமம் ராமா என்னும் திருநாமம்! -ராமசுப்பு

/idhalgal/om/rama

லரும் எப்பொழுது பார்த்தாலும் "கஷ்டம் கஷ்டம்' என்று துன்பத்தையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். துன்பமென்பது சொல்லிக்கொண்டு வராது. அதேபோன்று "சுகம்' என்று சொல்லக்கூடிய இன்பமும் "இதோ வருகிறேன்' என்று தெரிவித்துக்கொண்டு வராது. சிலருக்கு தொடர்ந்து அடுக்கடுக்காகத் துன்பங்கள் வரும். "ஐயா... இன்றைய கால கட்டத்தில் பயமுறுத்தும் விலைவாசி ஒருபுறம்; குழந்தை வளர்ப்பு, பள்ளிக்கட்டணம், மருத் துவச்செலவு போன்றவை ஒருபுறம் என்று செலவு கூடிக்கொண்டே போகிறது. வரவுக்கு மீறிய செலவு நம்மை நிலை தடுமாற வைக்கிறது. என்னசெய்வதென்றே புரியவில்லை' என்று புலம்புகிறார்கள்.

Advertisment

குறுக்கு வழியில் கொள்ளையடித்துப் பணம் சேர்த்தவருக்கு இந்தத் துன்பம் தெரிவதில்லை. அப்பன், பாட்டன் வைத்துவிட்டுப்போன சொத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவருக்கு துன்பம் என்பதே தெரியாது. "ஓஹோ' வென்று வாழ்க்கை நடத்த முடியாவிட்டாலும், ஓரளவு வாழ்க்கையை நடத

லரும் எப்பொழுது பார்த்தாலும் "கஷ்டம் கஷ்டம்' என்று துன்பத்தையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். துன்பமென்பது சொல்லிக்கொண்டு வராது. அதேபோன்று "சுகம்' என்று சொல்லக்கூடிய இன்பமும் "இதோ வருகிறேன்' என்று தெரிவித்துக்கொண்டு வராது. சிலருக்கு தொடர்ந்து அடுக்கடுக்காகத் துன்பங்கள் வரும். "ஐயா... இன்றைய கால கட்டத்தில் பயமுறுத்தும் விலைவாசி ஒருபுறம்; குழந்தை வளர்ப்பு, பள்ளிக்கட்டணம், மருத் துவச்செலவு போன்றவை ஒருபுறம் என்று செலவு கூடிக்கொண்டே போகிறது. வரவுக்கு மீறிய செலவு நம்மை நிலை தடுமாற வைக்கிறது. என்னசெய்வதென்றே புரியவில்லை' என்று புலம்புகிறார்கள்.

Advertisment

குறுக்கு வழியில் கொள்ளையடித்துப் பணம் சேர்த்தவருக்கு இந்தத் துன்பம் தெரிவதில்லை. அப்பன், பாட்டன் வைத்துவிட்டுப்போன சொத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவருக்கு துன்பம் என்பதே தெரியாது. "ஓஹோ' வென்று வாழ்க்கை நடத்த முடியாவிட்டாலும், ஓரளவு வாழ்க்கையை நடத்துவதற்கே இன்றைய நாகரிக உலகில் கணிசமான வருமானம் தேவைப் படுகிறது. கணவன்- மனைவி இருவரும் வேலைக்குச்சென்று சம்பாதித்தால் ஓரளவு நிம்மதியாக இருக்கலாமென்றால், அதிலும் சிரமம் வருகிறது. இருவரும் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டால், "குடும்பம்' என்ற வாழ்க்கை தடம்மாறிப்போவதை நாம் கண்கூடாகக் காணமுடிகிறது.

Advertisment

இதுபோன்ற இன்னல்களிலிருந்து நம்மை விடுவிக்கத்தான் நமக்கு இறைவன் என்ற ஒருவன் இருக்கிறான். அவனை நாம் மறந்து விடுகிறோம். நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள். தந்தையிடம் கேட்டுப்பெற "குழந்தை' என்ற ஒரு தகுதி போதுமே! அவனிடம் கேட்கலாமே. கருணைமயமான அவனிடம் பிரார்த்தனை செய்து கேட்டால் எத்தகைய துன்பங்களையும் அவன் போக்கிவிடுவான்.

அதற்கு அவனை நாம் மகிழச் செய்யவேண்டும். அப்போது அவன் குழந்தைகளான நமக்கு அருளை அள்ளிக்கொடுத்துவிடுவான். ஆனால் அவனை மகிழ்விப்பது எப்படி என்பதுதான் கேள்வி.

rr

இது கலிகாலம். கலிபுருஷனின் ஆட்சி கொடி கட்டிப் பறக்கிறது. எதெல்லாம் கெடுதலோ அதெல்லாம் அவன் ஆட்சியில் நல்லவை. எதெல்லாம் நல்லதோ அது கூடாவே கூடாது என்பதுதான் அவன் கொள்கை. நியாயம், நீதி, தர்மம் நிலைத்து நிற்கக்கூடாது. அதர்மம் தலைதூக்கி நிற்கவேண்டும். இதுதான் அவனுக் குப் பிடித்தது. இப்பொழுது இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் மக்களாகிய நமக்கு துன்பத்திற்குமேல் துன்பம் வருகிறது. படாதபாடு படுகிறோம். முதலில் நாம் கலியை நமது வீட்டிற்குள்ளிருந்து விரட்டவேண்டும். அவன் நம் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டால் நமக்கு நடப்பதெல்லாம் நன்மையே.

"ராமா' என்ற பெயரைக் கேட்டாலே கலி புருஷனுக்கு பயம் வந்துவிடும். எத்தனையோ இறைநாமங்கள் இருந்தாலும், கலி பயப்படக்கூடிய பெயர் "ராமா' என்பதுதான். அந்தப் பெயருக்கு அப்படியொரு வலிமை, மகிமை இருக்கிறது. எனவே, ஒவ்வொரு நாளும் காலையில்- "ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே- ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' என்னும் பகவந்நாமாவை உச்சரித்தால், கலி நம்மைவிட்டு விலகிவிடுவான் என்று சைதன்ய மகாப்பிரபு கூறுகிறார்.

பகவானின் மகிழ்ச்சியைப்பெற நாம் யாகம், ஹோமம், தவம் ஏதும் செய்யவேண்டாம். இந்த நாமத்தைச் சொல்லி பகவானிடத்தில் பக்தி செலுத்தினாலே போதும்; அவன் மகிழ்ச்சியடைந்துவிடுவான். இந்தப் பெயரை உச்சரிப்பதற்கு செலவேதுமில்லை. மிகவும் சிரமப்படவேண்டாம். எங்கும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சொல்லலாம். இதற்கென்று விதிமுறை, கட்டுப்பாடு எதுவுமில்லை. மிகவும் சுலபமான வழி!

துன்பம் வரும்போது பகவானின் பெயரைக் கூவி அழைத்தாலே போதும்; அவன் வேகமாக வந்து நம் துன்பத்தைப் போக்குவான். உதாரணத் திற்கு, திரௌபதியின் துயிலை துச்சாதனன் உருவியபோது, அவள் யாகம் செய்யவில்லை; தவம் செய்யவில்லை; ஹோமம் செய்யவில்லை. "கோவிந்தா' என்று பகவான் பெயரை உச்சரித்துக் கூவியழைத்தாள். குரல் கேட்டதும் பகவான் ஓடிவந்து அவள் மானத்தைக் காப்பாற்றினார் என்று மகாபாரதம் கூறுகிறது.

"ஹரே ராமா ஹரே கிருஷ்ணா...' என்பதை நாம் எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தாலே போதும்; துன்பமே வராது. ஏனெனில் "நாமா'வே தான் பகவான்; பகவானே அவன் நாமா. (பெயர்). பகவானின் பெயரை ஒருவர் நம்பிக்கை யுடன் சொல்லும்போது அவனுடன் பகவான் இருக்கிறார். அதனால் பிற பிரார்த்தனைகளை விட, நம்பிக்கையுடன் அவனது திருப்பெயரை நமது நாக்கு உச்சரிக்குமானால், அதுவே பிரார்த்தனைகளில் உயர்ந்த பிரார்த்தனை.

உங்கள் வாழ்க்கையில் இந்த பிரார்த்தனையைத் தொடர்ந்து சொல்லிவாருங்கள். துன்பம் தீர்ந்துவிடுகிறதா இல்லையா என்பதை சோதித்துப் பாருங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

துன்பப்படும் ஏழைகளுக்கு காசு பணம் எவ்வளவு தேவையோ- அப்படி கஷ்டப்படும் மக்களுக்கு துயரம் தீர்க்க ஒரே வழி- சுலபமான வழி- பகவந்நாமாவை உச்சரிப்பதுதான்!

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே/

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே//

om010820
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe