மகேசன் சேவையைவிட மகத்தான சேவை! - முனைவர் இரா. இராஜேஸ்வரன்

/idhalgal/om/rajaeshwaran

"தாயிற் சிறந்த கோயிலும் இல்லை

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை

அன்னை தந்தையே அன்பின் எல்லை'

என்னும் இந்தத் தமிழ்த் திரைப்பாடல் வரிகள் 1972-ஆம் ஆண்டு வெளிவந்த "அகத்தியர்' படத்தில் இடம்பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் பாட்டு நம் பெற்றோர்களின் சிறப்பையும், அவர்களின் தன்னிகரில்லாத தியாகத்தின் பெருமையையும் உணர்த்தும் வண்ணம் பாடப்பெற்றது.

மாணிக்கவாசகர் சிவபெருமானை, "அம்மையே, அப்பனே' என பெற்றோர்களாக நினைத்துப் பாடியுள்ளார்.

"மாதா, பிதா, குரு, தெய்வம்' என்னும் நம் இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவம், வேறெந்த மதத்திலும் இல்லாத ஒன்றாகும். தைத்திரீய உபநிஷத்தும் "தாய், தந்தையைக் கடவுள்போல எண்ணி வழிபடு' என்றுதான் சொல்கிறது.

"பிதாஹம் அஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ'- பகவத்கீதையில் (9:17) கிருஷ்ண பரமாத்மா, "இவ்வுலகில் வாழ்பவர்களுக்கு நானே தாயும் தந்தையுமாக இருக்கிறேன்' என கூறுகிறார். இப்பூவுலகில் வாழ நமக்கு உயிரும் உடலும் தந்த தாய்- தந்தையர் என்றும் நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள்.

வேத மந்திரமும் "மாத்ரு தேவோ பவ: பித்ரு தேவோ பவ: ஆசார்ய தேவோ பவ: அதிதி தேவோ பவ' என்றுதான் கூறுகிறது. தாய், தந்தை, குரு என்கிற மூவரும் கடவுளின் பிரதிநிதிகள் என்றுகூடச் சொல்லலாம். பெற்றோர்களின் சிறப்பையும், தம் பக்தர்களின் பெருமையையும் உலகிற்கு உணர்த்த ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டுரங்கன் வடிவில் ஒரு நாடகத்தை நடத்திக் காட்டினார்.

முன்னொரு காலத்தில் மகாராஷ்டிரத்தில் வாழ்ந்த ஜக்குனு, சத்யவதி என்கிற தம்பதி யருக்கு நீண்டநாட்களாகப் பிள்ளைப்பேறு இல்லை. இறைவனைத் தொடர்ந்து வேண்டிக்கொண்டதன் பயனாக ஒரு ஆண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு புண்டரீகன் என்று பெயர் சூட்டினர். புண்டரீகம் என்பதற்கு பகவானின் திருநாமத்தைச் சொல்லுதல் என்னும் பொருளும் உண்டு.

தவமிருந்து பெற்ற பிள்ளையாதலால் அக்குழந்தைமீது அளவற்ற பாசம் வைத்து வளர்ந்துவந்தனர். அதேபோன்று புண்டரீகனும் தன் பெற்றோர்களிடம் அன்பும், மரியாதையும் கொண்டவனாக இருந்தான். முறைப்படி கல்வி யைக் கற்ற பின்னர் ஒரு தொழிலைச் செய்துவந்தான். தக்க வயதை

"தாயிற் சிறந்த கோயிலும் இல்லை

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை

அன்னை தந்தையே அன்பின் எல்லை'

என்னும் இந்தத் தமிழ்த் திரைப்பாடல் வரிகள் 1972-ஆம் ஆண்டு வெளிவந்த "அகத்தியர்' படத்தில் இடம்பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் பாட்டு நம் பெற்றோர்களின் சிறப்பையும், அவர்களின் தன்னிகரில்லாத தியாகத்தின் பெருமையையும் உணர்த்தும் வண்ணம் பாடப்பெற்றது.

மாணிக்கவாசகர் சிவபெருமானை, "அம்மையே, அப்பனே' என பெற்றோர்களாக நினைத்துப் பாடியுள்ளார்.

"மாதா, பிதா, குரு, தெய்வம்' என்னும் நம் இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவம், வேறெந்த மதத்திலும் இல்லாத ஒன்றாகும். தைத்திரீய உபநிஷத்தும் "தாய், தந்தையைக் கடவுள்போல எண்ணி வழிபடு' என்றுதான் சொல்கிறது.

"பிதாஹம் அஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ'- பகவத்கீதையில் (9:17) கிருஷ்ண பரமாத்மா, "இவ்வுலகில் வாழ்பவர்களுக்கு நானே தாயும் தந்தையுமாக இருக்கிறேன்' என கூறுகிறார். இப்பூவுலகில் வாழ நமக்கு உயிரும் உடலும் தந்த தாய்- தந்தையர் என்றும் நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள்.

வேத மந்திரமும் "மாத்ரு தேவோ பவ: பித்ரு தேவோ பவ: ஆசார்ய தேவோ பவ: அதிதி தேவோ பவ' என்றுதான் கூறுகிறது. தாய், தந்தை, குரு என்கிற மூவரும் கடவுளின் பிரதிநிதிகள் என்றுகூடச் சொல்லலாம். பெற்றோர்களின் சிறப்பையும், தம் பக்தர்களின் பெருமையையும் உலகிற்கு உணர்த்த ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டுரங்கன் வடிவில் ஒரு நாடகத்தை நடத்திக் காட்டினார்.

முன்னொரு காலத்தில் மகாராஷ்டிரத்தில் வாழ்ந்த ஜக்குனு, சத்யவதி என்கிற தம்பதி யருக்கு நீண்டநாட்களாகப் பிள்ளைப்பேறு இல்லை. இறைவனைத் தொடர்ந்து வேண்டிக்கொண்டதன் பயனாக ஒரு ஆண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு புண்டரீகன் என்று பெயர் சூட்டினர். புண்டரீகம் என்பதற்கு பகவானின் திருநாமத்தைச் சொல்லுதல் என்னும் பொருளும் உண்டு.

தவமிருந்து பெற்ற பிள்ளையாதலால் அக்குழந்தைமீது அளவற்ற பாசம் வைத்து வளர்ந்துவந்தனர். அதேபோன்று புண்டரீகனும் தன் பெற்றோர்களிடம் அன்பும், மரியாதையும் கொண்டவனாக இருந்தான். முறைப்படி கல்வி யைக் கற்ற பின்னர் ஒரு தொழிலைச் செய்துவந்தான். தக்க வயதை அடைந்ததும் பெற்றோர்கள் புண்ட ரீகனுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்குப்பின் பெற்றோர்களிடமிருந்து சற்று விலகி, மனைவியின் பேச்சுக்கே முக்கியத்துவம் தர ஆரம்பித்தான். முற்பிறவி யின் வினையால் அவனுக்கு சில தீய பழக்க- வழக்கங்களும் வந்துசேர்ந்தன.

தாங்கள் ஆசையாக வளர்த்த பிள்ளை தற்சமயம் மனைவிக்கே முக்கியத்துவம் தருவதை நினைத்து புண்டரீகனின் பெற்றோர் மனம்வெதும்பினார்கள். பெற்றோர்களிடம் நிறைய வேலை வாங்கியதுமட்டுமின்றி, வீட்டினுள்ளே தங்கவிடாமல் வெளியே தங்கும்படியும் கட்டளையிட்டான். தன் கருவறையில் தங்க இடம்கொடுத்த தாய்க்கு வீட்டில் ஒரு இருட்டறையில்கூட இடம்தர மனமில்லை அவனுக்கு.

குடும்பத்தின் மூத்தவர்கள் சிலர், "காசிக்குச் சென்றுவந்தால் மகன் மனம் மாறும்' எனக் கூறினர். அதனால் இருவரும் காசிக்குப் புனித யாத்திரை செல்ல ஆயத்தமானார் கள். அப்போது புண்டரீகன் தானும் மனைவியுடன் காசிக்கு வருவதாகக் கூறினான்.

எப்படியோ அவன் மனம் திருந்தி குடும்பத்தை நல்லமுறையில் நடத்தினால் சரி என்னும் எண்ணத்தில் அவர்களையும் உடனழைத்துச் சென்றனர்.

அந்த காலத்தில் வாகன வசதியில்லை. புண்டரீகன் தனக்கும் தன் மனைவிக்குமென இரண்டு குதிரைகளை ஏற்பாடு செய்து கொண்டான். பெற்றோர்களை கால்நடை யாகவே நடந்துவரும்படிச் செய்தான். இந்தச் செயல் வயதான பெற்றோர்களுக்கு மேலும் மனவேதனை தந்தது. இருப்பினும் "பெற்ற மனசு பித்து; பிள்ளை மனசு கல்லு' என்னும் வழக்கச் சொற்படி, தங்களின் வருத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஆங்காங்கே தங்கியிருந்து களைப்பு தீர்ந்த பின்னர் பயணத்தை மேற்கொண்டனர்.

இப்படியே நடந்துசென்ற வேளையில், ஒருநாள் ஒரு காட்டில் மாலை நேரத்தில் குக்கூட (குக்குட) முனிவரின் ஆசிரமத்தின் அருகே பயணக் களைப்பு தீர அனைவரும் ஒன்றாகத் தங்கினார்கள்.

சூரியன் மறையும் நேரத்தில், அந்த முனிவரின் ஆசிரமத்திற்கு அருவருக்கத்தக்க- அலங்கோலமான வடிவில் மூன்று பெண்கள் சென்றனர். அப்பெண்மணிகள் ஆசிரமத்தைத் தூய்மை செய்வது, மகரிஷிக்குப் பணிவிடை செய்வது, ஆசிரமத்தை அலங்கரிப்பது போன்ற எல்லா வேலைகளையும் வேகமாகச் செய்துவிட்டு சூரிய உதயத்திற்கு முன்பாக வெளியே வந்தனர். ஆசிரமத்திற்குள் நுழையும்போது அலங்கோலமாக இருந்த அந்தப் பெண்மணிகள் வெளியே வரும்போது சர்வ லட்சணம் பொருந்திய அழகான பெண்களாக இருந்தனர். இதை கவனித்த புண்டரீகன் மிகவும் ஆச்சரியப்பட்டான். இந்த மூன்று பெண்மணிகளும் எப்படி மாறுகி றார்கள்- ஏன் இப்படி வேலைகளைச் செய் கிறார்கள் என்னும் உண்மையை அறிய அங்கேயே தங்கியிருந்து, மறுநாள் எதிர்ப் பட்ட அந்தப் பெண்மணிகளிடம் தன் சந்தேகத் தைக் கூறி தெளிவுபடுத்துமாறு கேட்டான்.

ra

அதற்கு அவர்கள், ""நாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளின் தேவதைகள். தினமும் பாவங்களைச் செய்த பலரும் நீராடும்போது அவர்களின் அந்த பாவங்களையும் தோஷங்களையும் எங்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் தூய்மையடைந்து செல்கிறார்கள். யார் யாரோ செய்த பாவங்களை நாங்கள் தினமும் ஏற்று அதை சுமக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பாவங்களை ஏற்கும் நாங்கள், எங்களுடைய பொலிவையும் தெய்வீகத் தன்மையையும் இழக்காமலிருக்க, தன் தவ வாழ்க்கைக்கு இடையேயும் தமது பெற்றோர்களை கண்ணிமை காப்பதுபோல காத்து, அவர்களுக் கான நித்திய பணிவிடைகளை இன்முகத் துடன் தவறாமல் செய்துவரும் இந்த குக்கூட முனிவரின் ஆசிரமத்தைத் தூய்மை செய்கிறோம். அதன்மூலம் எங்களை நாங்களே சுத்திகரித்துக் கொள்கிறோம்.

பெற்றோர்களை மதித்து, தினமும் மரியாதையைச் செய்யும் இந்த முனிவர்தான் எங்களின் புனிதத் தன்மைக்குக் காரணமானவர்'' எனக் கூறினர்.

பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்து அவர்களை மதிப்பதால் ஏற்படும் பயனையும், அவ்வாறு செய்யத் தவறினால் ஏற்படும் பாவங்களையும் அவனுக்கு எடுத்துரைத்தனர்.

நதி தேவதைகள் சொன்ன அறவுரை புண்டரீகனின் மனதை மாற்றியது. தான் இதுவரை செய்துவந்த தவறை உணர்ந்தான். உடனே பெற்றோர்களிடம் சென்று மன்னிப்பு கேட்டான். காசி யாத்திரை முடிந்த பின்னர் சொந்த ஊருக்கு (மகாராஷ்டிரா) சென்றவு டன் பெற்றோர்களை நன்கு கவனிக்கத் தொடங்கினான். இதனால் பெற்றோர்களின் மனம் குளிர்ந்தது.

இந்நிலையில், துவாரகையிலிருந்த கிருஷ்ண பரமாத்மாவை தரிசனம்செய்ய நாரத மகரிஷி சென்றார். அவரிடம் கிருஷ்ண பரமாத்மா, ""தினமும் என்னை தரிசிக்கப் பலர் வருகிறார்கள். ஆனால் நான் சென்று தரிசிக்கும் அளவுக்கு ஒரு நல்ல மனிதர் உள்ளாரா? அப்படியிருந்தால் அவரை சென்று தரிசிக்கவேண்டுமென்ற ஆவல் எனக் குள்ளது'' எனக் கூறினார். எப்போதும் பல இடங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நாரத மகரிஷியிடம் கிருஷ்ண பரமாத்மா இவ்வாறு கேட்டவுடன், அவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் நாரதர்.

தற்போதைய பண்டரீபுரம் வந்தவுடன், இரவு நேரத்தில் ஒரு சிறிய குடிசை வீட்டை யடைந்து அதன் கதவைத் தட்டினார் நாரதர்.

அந்த சமயத்தில் மழை பெய்துகொண்டி ருந்ததால் வீட்டைச்சுற்றி தண்ணீரும் சேறுமாக இருந்தது. நீண்டநேரமாகத் தட்டியும் கதவு திறக்காததால் சற்று பலமாக மீண்டும் தட்டினார். உடனே உள்ளேயிருந்து ஒரு ஆண் குரல், ""தயவுசெய்து சத்தம் போடா தீர்கள். என் பெற்றோர் இப்பொழுதுதான் தூங்க ஆரம்பித்துள்ளனர். நான் அவர்களுக்கு விசிறியால் வீசிக்கொண்டிருக்கிறேன்'' என்றது. அதற்கு நாரத மகரிஷி, ""வெளியே மழை பெய்கிறது. சேற்றில் நிற்கமுடியவில்லை. கதவைத் திறக்கவேண்டும்'' என ஜன்னல் வழியாக மெல்லிய குரலில் கூறினார். உள்ளே இருந்தவர், ""சற்றுப் பொறுங்கள். நீங்கள் சேற்று நீரில் நிற்காமலிருக்க ஒரு செங்கல் லைத் தருகிறேன். அதன்மேல் ஏறி நின்று கொண்டிருங்கள்'' எனச் சொல்லி, ஒரு செங்கல்லைத் தூக்கி ஜன்னல்வழியாகப் போட்டான். நாரதர் ஜாடை செய்ய, கிருஷ்ண பரமாத்மா அந்த செங்கல்மீது கதவு திறக்கும் வரை பொறுமையாக நின்றுகொண்டிருந்தார். சற்று நேரத்தில் உள்ளே இருந்த நபரான புண்டரீகன் வாயிற்கதவைத் திறந்து, கிருஷ்ண பரமாத்மாவைப் பணிவுடன் உள்ளே அழைத் துச்சென்று அமரவைத்து, அவர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான். பெற்றோர் களுக்குச் சேவை செய்துகொண்டிருந்த காரணத்தால் இறைவனையே காக்கவைக்கும் படி நேர்ந்ததைச் சொல்லி கண்ணீர் சிந்தினான்.

அவனைத் தேற்றிய கிருஷ்ணர், ""பெற்றோர் களுக்கு சேவை செய்வதைவிட இறைவனுக்கு சேவை செய்வது ஒன்றும் பெரிதல்ல. நான் எனது பெற்றோர்களுக்கு இதுபோன்று சேவை செய்ய காலத்தின் கொடுமையால் முடிய வில்லை. ஆனால் எனது பக்தனான நீ இது போன்று சேவை செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது'' என கூறினார்.

அருகிலிருந்த நாரதரை, சரியான நபரைக் காண தன்னை அழைத்து வந்ததற்குப் பாராட்டினார். புண்டரீகன் வேண்டும் வரத் தையும் தருவதாகச் சொன்னார். (ருக்மணி தேவி யுடன் கிருஷ்ணர் வந்ததாகவும் கூறுவதுண்டு).

புண்டரீகன் தன் பெற்றோர்கள் நீராடுவதற்கு வசதியாக பீமா நதியை வீட்டிற் கருகில் வருமாறு செய்யவேண்டுமென வேண்டிக்கொள்ள, அதன்படியே பீமா நதியை பிறைச்சந்திரன் வடிவில் அவனது இல்லத்திற்கு அருகே வரச்செய்தார். இதனால் இந்த நதிக்கு சந்திரபாகா நதி என்னும் பெயரும் உண்டு. தற்சமயம் எழுந்தருளிய இந்த இடம் பக்தர்களுக்காக ஒரு புண்ணியத் தலமாக மாறவேண்டும் என இரண்டாம் வரத்தைக் கேட்க, அதற்கும் கிருஷ்ண பரமாத்மா ஒப்புக்கொண்டு, புண்டரீகன் கொடுத்த செங்கல்மீது நின்ற கோலத்தில், இரண்டு கைகளை இடுப்பில் வைத்தவண்ணம் விட்டலனாக இருக்க சம்மதித்தார்.

தன் பக்தனின் தூய சேவையையும், பெருமையையும் உலகிற்கு எடுத்துக்காட்ட அன்று கிருஷ்ணலீலை நடந்த அந்த இடமே இன்று ஒரு புண்ணியத் தலமாக வும், முக்தித் தலமாகவும் மாறிவிட்டது. "விட்டல விட்டல ஜே! பாண்டுரங்கா ஜே!' என்னும் பக்தி கோஷமும், பஜனை களும் ஆடல் பாடல்களுடன் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டிருக்கும் பண்டரீபுரம், மகாராஷ்டிரா மாநிலம், சோலப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பண்டரீ நாதனுக்கு அருகே ருக்மணி தேவிக்கு தனிக்கோவில் உள்ளது. ருக்மணி தேவியும் நின்ற கோலத்தில், இடுப்பில் கையை வைத்தவண்ணம் பக்தர்களுக்கு அருள்புரிகிறான். கர்ப்பக்கிரகத்துக்குள் வீற்றிருக்கும் விட்டலனின் (பாண்டுரங்கன்) திருவடியை சாதி, இனம், மொழி என எந்த பாகுபாடுமின்றி அனைவரும் தொட்டு வழிபடலாம் என்கிற சமத்துவம் இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

இந்தக் கதைமூலம் நாம் உணரவேண்டிய உண்மை என்னவென்றால், பெற்றோர் களை மதிக்க வேண்டும்; அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வயதான காலத்தில் செய்யவேண்டும் என்பது மட்டுமல்ல- இன்று நம்மைப் பார்த்து நம் பிள்ளைகள் நாளை நம்மையும் இதுபோன்றுதான் செய்வார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். (சிலருக்கு மனம் இருக்கலாம். ஆனால் பெற்றோர் உயிரோடு இருக்கமாட்டார்கள்). இது கதையல்ல; வாழ்க்கையின் யதார்த்தம். அப்பொழுதுதான் முதியோர் இல்லத்திற்கு மூடுவிழா வரும்.

om010619
இதையும் படியுங்கள்
Subscribe