17
மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!
இரண்டாம் பாகம்
நவாப் சித்திக் மசூத்கான் என்ற அந்த குறுநில மன்னனுக்கு, திவான் வெங்கண்ணர் முதன்முதலில் தனக்கு வந்த வெற்றி லிகிதத்தைப் படித்தது மகான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் பேரருளால்தான் என்பதை ஏனோ இன்றுவரைகூட நம்பவே இல்லை. அதெப்படி படிப்பறிவே இல்லாதவன் அட்சரம் பிசகாது அழகாகப் படிக்கமுடியும்? அடிக்கு பயந்து அடிபணிந்து படித்ததாகவே அந்த முரட்டு முஸ்லிம் மன்னர் நினைத்துக்கொண்டிருந்தார்.
நிர்வாகம் முறையாக நடந்து, வரிவசூலும் தடையின்றி கிடைத்தால்தான் நலப்பணிகளை சுணக்கம் ஏற்படாது தொடர்ந்து செய்ய இயலும் என்பதில் உறுதி கொண்டவர். வெங்கண்ணரை சந்தித்த முதல் நிகழ்விலேயே அரசை நிர்வாகிக்கும் லாவகம் இவனுக் குண்டு என்ற அபிப்ராயத்தை ஆணித்தரமாய்ப் பதித்துக் கொண்டதோடல்லாது, உடனடி யாக அவருக்கு திவான் என்கின்ற பெரிய அந்தஸ்தையும் கொடுத்து கௌரவித்தார். வெங்கண்ணர் தனது ஆற்றலாலும் அறிவாலும் அரசுக்கு வரவேண்டிய வருவாயைப் பெருக்கலானார். அதற்கான ஆக்கப் பூர்வ திட்டங்களைத் தீட்டி, மன்னர் வசம் அனுமதி பெற்று நடைமுறைப் படுத்தி, அதில் வெற்றியும் கண்டார்.
மன்னர் மசூத்கானுக்கு திவான் மீது பெருத்த நம்பிக்கை இருந்தா லும், ராகவேந்திரரின் அற்புதத்தின் மீது மட்டும் இன்றளவும் ஆழ் மனதில் சந்தேகம் வளர்ந்துகொண்டே இருந்தது. அதை சோதித்துப் பார்க்க ஸ்வாமிகளுடனான சந்திப் பைப் பயன்படுத்திக்கொள்ள மனதில் கருவிக்கொண்டார். "அந்த சந்நியாசியின் கபடத்தை இன்றே மக்களின் பார்வைக்குக் கொண்டு சென்று நிரூபிக்கிறேன்' என்று மனதுக்குள் திட்டம் உருவாக்கினார்.
""அப்துல்... இங்கே வா. நாளைக் காலை வெங்கண்ணர் மாளிகைக்குச் செல்கையில், நீ நான் சொல்லும் வெள்ளித்தட்டில் முழுக்க முழுக்க..'' என்றவர்' அவனை அருகழைத்து காதில் ரகசியமாக ஏதோ கூற, அவன் பெரிதாய் தலையாட்டினான்.
ஸ்ரீராகவேந்திரர் நேற்றிரவு தங்கள் ஊருக்கு விஜயம்செய்து திவானின் மாளிகையில் தங்கியிருக்கும் செய்தி கேட்டு மக்களுக்கு பேரானந்தம் ஏற்பட்டது. வீதியெங்கும் நீர்தெளித்து, கூட்டித் தூய்மைசெய்து சாணமிட்டு மெழுகி, கோலமிட்டு, தோரணம் கட்டி அலங்கரித்தி ருந்தனர். அந்த கருணையுள்ள மகானைக் காண மக்கள் ஆவலுடன் காத்திருக்க முடிவு செய்து திவான் மாளிகையின் வெளியில் கூடினர்.
மன்னர் சித்திக் மசூத்கான்மீது மக்கள் பெருமதிப்பு கொண்டிருந்தனர். வேற்று மதத்தினர் என்ற பாகுபாடின்றி, மக்களைத் துன்புறுத்தாது, நன்மைதரும் திட்டங் களுடன் அரசாட்சி மேற்கொண்டு, மக்களுக்கு அரண்மனைமூலமாக நேரில் பல சலுகைகளும் உதவிகளும் கிடைக்கப் பெற்றதனால் மக்கள் நலமுடனேயிருந்தனர். சமஸ் தானத்தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் மதவேறுபாடின்றி பழகி இணக்கமாகவே இருந்தனர்.
மன்னரும் மகானைக் காண வருவதைக் கேள்விப்பட்டவர்கள் அவருக்காகவும் ஆவலுடன் காத்திருக்க, அந்த அரேபிய குதிரையில் கம்பீரமாக வந்திறங்கினார் நவாப். சிறு பல்லக்குகளில் அரண்மனை முக்கிய பெண்டிர்களும், சற்று நேரத்தில் நவாப்பின் மனைவியும் சிறு படை சூழ வந்திறங்க, மக்கள் "வாழ்க மன்னர்... வாழ்க அரசி... இளவரசர் வாழ்க!'' என்ற ஜெய கோஷமிட்டனர். அதைக் கேட்டவுடன் மன்னர் குதூகலமானார். மக்களை நோக்கி சந்தோஷத்துடன் கையசைக்கலானார். பிறந்து சில மாதங்களான தனது வாரிசை மக்கள் ஏற்று வரவேற்றது அவருக்கு பெருத்த மகிழ்ச்சியாகவே இருந்தது.
மாளிகையினுள் ஸ்ரீராகவேந்திரர் மூலராமர் பூஜைக்கு ஆயத்தமாக இருந்தார். அனைத்து ஏற்பாட்டினையும் பிசகாது வெங்கண்ணர் செய்திருந்தார். மன்னர் மாளிகையில் நுழைந்தவுடன் அவரைப் பணிந்து வரவேற்ற வெங்கண்ணர், ஸ்வாமிகளை நேரில் தரிசிக்க அழைத்துச் செல்ல, மன்னர் மசூத்கானின் கரங்கள் அவரையும்மீறி வணங்கலாயிற்று.
""வாருங்கள் மன்னரே... தங்களைக் கண்டதும் பெ

""வாருங்கள் மன்னரே... தங்களைக் கண்டதும் பெரிய மகிழ்ச்சி என்னுள் எழுகிறது'' என்று வரவேற்று ஆசனமளித்தார். ""ஸ்வாமிகளின் சாந்தமான முகம், அருள்மழை பொழியும் கருணைமிகுந்த நயனங்கள், சாந்த சொரூபம், நல்லதாய் மட்டுமே வாழ்த்தி வரம் தரும் அதரங்கள் என்று அவரை அங்குலம் அங்குலமாய்க் கண்ட மன்னருக்கு மனதுள் ஏனோ பயம் எழுந்தது. "இந்த அற்புத ஞானியிடம் ஏதோ அபாரமான சக்தி இருக்கத்தான் செய்கிறது. அவரது கண்களை நேருக்குநேராய் என்னால் பார்க்க இயலாது தலை தானாய்க் கவிழ்கிறது. பேச நா எழவில்லை' முதுகுத்தண்டில் ஏதோ ஊர்ந்து எழ, தேகம் தன் வசமிழப்பதை அவரால் உணரமுடிந்தது. பெரிய பிரம்மாண்டத்தில் ஒடுங்கி ஒதுங்குவதையும், அதில் ஒரு நிம்மதியையும் உணரமுடிந்தது. கருணைமிகுந்த அந்த தேஜஸிலிருந்து ஒரு புன்னகை பிறந்தது.
""மன்னர் தன் குடிமக்களை நிம்மதியுடன் அரசாட்சி செய்வதை மக்களின் மகிழ்ச்சியைக்கொண்டு தீர்மானிக்க முடிகிறது. திரளான கால்நடைகள், நல்ல வேளாண்மை... இவையே ஒரு நாட்டின் லட்சுமி கடாட்சம். அந்த கடாட்சத்தை நான் இங்கு பார்க்கிறேன். மக்களுக்கு தாங்கள் செய்துவரும் பல நல்ல காரியங்களும் அற்புதமானவை'' என மனதார பாராட்டலானார். ஸ்வாமிகளின் ஷேம விசாரிப்பு மன்னனுக்கு பெரிதும் குற்ற உணர்வை உருவாக்கியது. "ஆஹா! எவ்வளவு அற்புதமான மகான். கருணையுள்ள பெரியவர். இவரைப்போய் சோதிக்க முற்பட்டோமே. எங்கே... எங்கே... எங்கே அந்த அப்துல்... அவனிடம் ஸ்வாமிகளுக்குப் பரிசு கொடுத்து பரிகாசம் செய்யச் சொல்லியிருப்பதை யாருக்கும் தெரியாது மறைத்து நிறுத்திக் கொள்வோம்' என நினைத்து அவனைத் தேட, அந்த மெய்க்காப்பாளன் தான் அந்த குறிப்பிட்ட வெள்ளித்தட்டை அங்கு வைத்துவிட்டதை உறுதிப்படுத்தவே வினவுகிறார் என தப்பாகப் புரிந்துகொண்டு, தான் வைத்துவிட்டதாக கண்மூலம் ஜாடை காட்டி உணர்த்தினான். மன்னர் பதட்டமுடன் தலையசைத்து மறுக்க, அவன் குழப்பமானான்.
ஒருவேளை தன்னை ஊர்ஜிதப்படுத்தச் சொல்கிறாரோ என நினைத்து, மெல்ல பரிசுப்பொருட்கள் வரிசைப்படுத்தியிருந்த இடத்தை அடைந்து சிவப்புப்பட்டு போர்த்தி யிருந்த வெள்ளித்தகட்டினை மெல்ல சிறிதளவே திறந்து காண்பித்து மறைத் தான். அப்பண்ணாவின் நேர்பார்வையில் சிக்கிய அந்த காட்சி அவரை நிலைகுலையச் செய்துவிட்டது. "அடப்பாவிகளா! இதென்ன விபரீத விளையாட்டு? எனது குருவை சோதிக்க இப்படி கீழ்த்தரமாகவா இறங் குவது? எத்தகைய கயமை? எல்லாம்வல்ல ஸ்ரீமன் நாராயணா... இந்த நிகழ்வு எத்தகைய பாதகத்தை உருவாக்கப்போகிறதோ' என எண்ணிக் கலங்கினார். ஸ்வாமிகளிடம் சொல்லிவிடலாமா என்று அப்பண்ணா தவிக்கலானார்.
"இந்த மடையன் நான் சொல்வதைப் புரிந்து கொள்ளவேயில்லை. என்ன மெய்க் காப்பாளன் இவன். என் முகக்குறிப்பைப் படிக்கத்தெரியாத இவனெல்லாம்... நான் என்ன செய்வேன். அல்லாகூட என்னை மன்னிக்க மாட்டாரே. இந்த குடிமக்கள் என்மீது வைத்திருக்கும் அபிமானம் இன்றோடு போய்விடுமே. மன்னன் வேற்று மதத்தின்மீது துவேஷம் கொண்டவன் என்ற எண்ணமல்லவா மக்கள் மனதில் ஆழப் படிந்துவிடும்! அருமையான குருவை அவமதித்து நான் அபவாதம் தேடிக் கொள்ளப்போகிறேன்.' மனது நடுங்கத் தொடங்கியது. நெஞ்சு வறண்டது. பலமான எடையுள்ள நீண்ட வாட்களைத் தூக்கிப் போரிட்ட கரங்கள் நியாயம் உணர்ந்து நடுங்கத் தொடங்கின. "அல்லாவே... என்னை மன்னித்துவிடுங்கள்... மன்னித்துவிடுங்கள்.'
ஸ்ரீராகவேந்திரர் கண்மூடி தியானித் துக்கொண்டிருந்தார். அவர் எதிரே மூலராமர் விக்ரகரூபியாக பூஜையை ஏற்றுக் கொண்டிருந்தார். நிமிடங்கள் மணிக்கணக் காய் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிய... ஸ்ரீராயர் திருவிழி மலர்ந்தவர், தன் வலக்கரத்தில் தீர்த்தம் ஏந்தி தன் சிரம் வளைத்து மந்திரம் ஜெபித்து தன்னெதிரே இருந்த காணிக்கைப் பொருட்கள்மீது தெளித்து ""ராம்... ராம்'' என்றவர், ""அப்பண்ணா... அருகில் வாருங்கள்'' என்றார்.
""ஸ்வாமி...'' என்றவர் குறிப்பறிந்து மந்த்ராட்சதை சம்புடத்தை எடுத்து ஸ்வாமிகளிடம் ஏந்த, ஸ்வாமிகள் புன்னகையுடன் அட்சதையை எடுத்து பரிசுப்பொருட்கள்மீது சந்தோஷமுடன் தூவியபிறகு, ""அப்பண்ணா... அதோ அந்த பரிசுகளின் நடுவே பட்டு போர்த்திய தட்டை துணிவிலக்கி என்னருகில் கொண்டு வா'' என்றார். அவர் முகத்தில் புன்னகை மாறாதிருந்தது.
""ஸ்வாமி... அது...'' என்று அப்பண்ணா தயங்க...
""மன்னரது காணிக்கையை மூலராமன் அருளால் சபையறிய ஏற்றுக்கொள்ள வேண்டியது துறவியின் கடமையல்லவா. இதற்கும்மேல் காலந்தாழ்த்தி குரு கட்டளையைமீறிய அபவாதத்தைத் தேடிக் கொள்ளலாகாது'' என்றதும், வேறுவழியின்றி அப்பண்ணா அசூயையுடன் அந்தப் பட்டுத் துணியை விலக்கியவர் அதிர்ந்தார். ""ஸ்வாமி!'' என்று சந்தோஷக்குரல் கேட்டு பார்வையை செலுத்திய மன்னரும் பரவசமானார். "ஆஹா! எப்பேற்பட்ட அற்புதம். ஜகத்குரு என்ற அவரின் பட்டம் மிகவும் போற்றுதலுக் குரியதே. எப்பேற்பட்ட சக்தி. இந்த பிரபஞ்சமே இந்த சக்திக்கு ஈடாகுமா? எனக்கு...
இல்லை... நான் அறியாமையால் அபவாதம் செய்து அவமானப்பட இருந்ததை மாற்றிய மகானே... தங்களைப்போய் இந்த சிற்றறிவன் சோதிக்க நினைத்தேனே!'
""ஸ்வாமிகள் என்னை மன்னிக்க வேண்டும்'' என்று மண்டியிட்டு வணங்கினார் மன்னர்.
""தாங்கள் தவறிழைத்தால் அல்லவா மன்னிக்க?''
""தங்கள் பெருந்தன்மை இது மகானே. பச்சை மாமிசத்தைக் கொடுத்து தங்களைப் பரிகாசம் செய்ய இருந்தேனே. எவ்வளவு ஈன புத்தி எனக்கு...''
""மலர் போன்றது தங்களது மனது என்பதாய் அனைத்தையும் மலர்களாக்கி எனது மூலராமர் ஏற்றுக்கொண்டானே. கவலை வேண்டாம் மன்னா...''
""அனைத்தும் தாங்கள் அறிந்ததே. ஆஹா... அற்புதங்களின் பொக்கிஷம் நீங்கள். என்னை மன்னித்துவிடுங்கள்... மன்னித்துவிடுங்கள்!'' மன்னர் தலை கவிழ்ந்து மன்னிப்பு கேட்க....
""இதுகூட மூலராமனின் திருவிளையா டலோ என்னவோ. காளஹஸ்தியில் கண்ணப்ப நாயனார் அன்பின் மிகுதியால் மிருக மாமிசம் படைக்கவில்லையா. ஈசன் திருவிளையாடல் செய்து அதை இந்த உலகம் அறியச்செய்தாரே! என் அபிமான ராமன் சபரியின் எச்சில் இலந்தையை சுவைக்கவில்லையா. இங்கு அவர்களின் அன் பின் மிகுதியான அறியாமையை பக்தியின் பரிமாணமாய் இறைவன் உலகறியச் செய்யவில்லையா மன்னரே. அதுபோலவே தங்களின் அறியாமைகூட இங்கே பக்தியாகப் பரிமளிக்கச் செய்யப்பட்டுவிட்டது'' என்ற ஸ்ரீராகவேந்திரர் புன்முறுவலுடன் மன்னரின் பரிவாரங்களை ஏறிட்டார்.
பலப்பல அளப்பரிய புண்ணியங்களை மலையளவு பெற்றதனாலேயே பக்த பிரகலாதர் மறுபடி மறுபடி இந்த பூவுகை உய்விக்க ஸ்ரீமன் நாராயணனின் பேரருட்கடாட்சத்தைப் பெற்று முப்பிறவி கண்டு, இந்த கலியுகத்தில் ஸ்ரீராகவேந்திரராக அவதரித்தாலும், தனது முற்பிறவியான வியாஸ ராயதீர்த்தர் அவதாரத்தில் அவர் நிறுவிய ஆஞ்சனேயர் திருவுருவங்கள் 700-க்கும் அதிகம். ராகவேந்திரராய்ப் பிறப் பெடுத்தபோது தனக்கான பிருந்தாவனங் கள் நாடெங்கும் உருவாக வேண்டியதென அவர் திருவாக்கால் நிர்ணயித்தது 700. வியாஸராயருக்கும் பிரிய தெய்வம் அனுமன்.
ராகவேந்திரரும் பஞ்சமுக அனுமனை தரிசித்ததோடல்லாமல் தனது ஜீவ பிருந்தா வனம் எதிரிலேயே தான் வழிபடவும், நாம் வழிபடவும் அனுமனை ஸ்தாபித்துக் கொண்டார். அந்த ஜென்மாந்திர தொடர்பு அதற்கும் முந்தைய பிறவியில்- அதாவது பிரகலாதராய்ப் பிறப்பெடுக்கவும் நாராயண பக்தியில் தான் சிறந்தோங்கவும் காரண கர்த்தாவான ஸ்ரீநாரத மகரிஷி இருந்ததா லேயே, அந்தப் பயனை- அந்த ஜென்மக் கடனைத் தான் வியாஸராயராய்ப் பிறப் பெடுத்தபோது தீர்த்துக்கொண்டார்.
இரண்ய பத்தினி சுமந்த கருவே ஹிரண்ய வதத்திற்குக் காரணமானது. அதை ஸ்திரப் படுத்த பிண்டமாய் உருப்பெற்றதுமே நாராயண மந்திரத்தை உபதேசித்து உபதேசித்து, அந்த சிசு மந்திர ரூபமாகவே ஜனிக்கக் காரணமான ஸ்ரீநாரத மகரிஷிக்கு, தான் பெற்ற உபதேசக் கடனை அடுத்த பிறவியில் வியாஸராய தீர்த்தராய் அவதரித்து, நாரதருக்கு எப்படி திரும்ப அளித்து சமன் செய்தார் என்பது கேட்கக்கேட்க மிகச்சிலிர்ப் பாக இருக்கும்.
அந்த கன்னட தேசத்தில் வளமான பகுதியில் சீனப்ப நாயக் என்ற பெரும் செல்வந்தர் வாழ்ந்திருந்தார். அவர் நாடாளும் மன்னருக்கே கடன் தரும்படியான செல்வ வளத்தைப் பெற்றிருந்தார். ஆயினும் அவர் மகா கருமி. அவருக்கு வாழ்க்கைப்பட்ட இல்லாள் மிக நல்லாள். லட்சுமிபாய் என்னும் நற்பெயர் கொண்ட தர்மபத்தினி. அடகுத்தொழில் செய்து பெருமளவு செல்வம் குவித்த சீனப்ப நாயக்கிற்கு ஒரு மகவு இல்லாதது குறையாய்த் தெரிந்த தில்லை. லட்சுமிபாய்க்கோ அதுவே பெரிய துயராய்ப் போனது. ஆனாலும் கணவருக்குச் செய்கின்ற கடமையை தெய்வ காரியம் போன்று பக்தியுடன் செயலாற்றினார். கணவருக்கு அடுத்தேதான் ஆண்டவனையே ஆராதித்தாள். சீனப்ப நாயக்கரும் தன் மனைவியை உயிராய் நினைப்பவர். கறாரும் கஞ்சத்தனமும் நிறைந்த அவருக்கு பூர்வ ஜென்ம வாசனையை, ஸ்ரீமன் நாராயணன் திருவிளையாடல் செய்து உணர்த்த திருவுளம் கொண்டார்.
தினசரி தனது வியாபாரத்தினை அதிகாலையிலேயே துவங்கிவிடும் நல்ல பழக்கத்தைக்கொண்ட சீனப்ப நாயக்கிற்கு அன்று காலை வெகுநேரமாகியும் ஓரிரு பரிவர்த்தனையும் நடக்கவில்லை. மாறாக ஒரு ஏழை பிராமணர் மட்டும் கடைமுன்பாக வளர்ந்திருந்த மரநிழலில் நின்று பரிதாப மாகப் பார்த்துக் கொண்டிருந்தார். நேரம் கடந்துகொண்டிருக்க, அந்த பிராமணர் தயங்கித்தயங்கி அவரிடம் வந்தார். அழுக் கடைந்த வெள்ளை உடை, சவரம் காணாத தாடைகளில் வெள்ளை முடிகள். தலை சீராக வாரப்பட்டு இறுக்கமாய் குடுமி முடிச்சிடப்பட்டிருந்தது. கண்கள் குழிந்து வயிறு ஒட்டி மிகமிக மெலிந்த தேகம். அவரைப் பார்க்கும் எவரும் அவர் உணவுண்டு பல நாட்கள் ஆகியிருக்கும் என்பதனை சரியாய் யூகித்துவிடுவர்.
""ஐயா'' என்றார் அந்த பிராமணர். ஏதேனும் தன்னிடம் உதவி கேட்டு வந்திருக்கிறானோ என்ற கடுகடுப்பில் காது கேளாதது போலிருந்த சீனப்ப நாயக்கை, மற்றொருமுறை ""ஐயா'' என்ற பலமான குரல் திரும்ப வைத்தது.
""என்ன இது... காலையிலேயே யாசகமா?''
""யாசகம்தான். ஆனால் அதுபோலில்லை'' என்றார் பெரியவர்.
""பிச்சையில்கூட பிரிவுகள் உண்டோ?''
""பிச்சையாய் இருந்தால்தானே... நான் தங்களிடம் வந்திருப்பதே, எனது ஒரே மகனுக்கு உபநயனம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உதவி கேட்டு வந்துள்ளேன். இந்த ஏழை பிராமணனுக்கு இரக்கம் காட்டக்கூடாதா. உபநயனத்திற்கு உதவுவது மகாபுண்ணியமென்று வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் நான்...''
""அதனால்...''
""அதனால் இது தானத்தைவிட சிறந்தது. நானோ பரம ஏழை. என் மகனுக்கு இதைக்கூட செய்ய முடியாதபடிக்கு மிகுந்த ஏழ்மையிலுள்ளேன். அதற்கான பொருளுதவி செய்து, அந்த மகாபுண்ணியத்தை நீங்கள் ஏன் அடையக்கூடாது?''
"என்ன... ஏழை என்கிறான். பிராமணன் என்கிறான். உபநயன உதவி, புண்ணியம் என்றெல்லாம் கூறுகிறான். சரி, இன்று வியாபாரமில்லை அல்லவா. நாளை வரச்சொல்லி வைப்போம்.'
""சரி சரி... இன்று வியாபாரமேயில்லை. நாளை வந்து பார்'' என்று சொல்ல, ""நல்லது. நான் மகிழ்ச்சியுடன் இல்லம் செல்கிறேன். வருகிறேன் ஸ்வாமி'' என்று புறப்பட்டார் அவர்.
அடுத்த நாள்... காலையிலிருந்தே அன்று நல்ல லேவாதேவி. மூச்சுவிட நேரமில்லை. காலையிலிருந்தே அந்த பிராமணரும் பொறுமையுடன் காத்திருந்தார். மாலை நெருங்கியது.
""ஸ்வாமி நான்...''
""அட சொல்லப்பா... என்ன விசேஷம்?''
""என் மகனுக்கு உபநயனம் என்று நேற்று தங்களிடம் உதவி கேட்டு வந்தேன்.''
""அட ஆமாம். இன்று இப்போதுதான் கணக்கை முடித்துவிட்டு வைத்தேன். எனக் கும் மறந்தே போனது. மாலை வந்து விளக்கு வைத்தாகிவிட்டது. கடை கட்டும் நேரம்... நீ என்ன செய்கிறாய். ம்... நாளைக் காலை வாயேன்'' என்றார்.
""சரி ஸ்வாமிகளே... தங்கள் சௌகர்யம். நான் வருகிறேன்.''
மறுநாள் காலை கடைதிறந்தவுடன் வந்து நின்றுவிட்டார். சற்று பொறுமை யாயிருந்தார். முதலிரண்டு வியாபாரம் நடந்தவுடன் இவர் எதிரே போய் நின்றார்.
""ஏனப்பா, உனக்கு கொஞ்சம்கூட மனசாட்சி இல்லையா. காலையிலேயேவா கையேந்துவது...'' அந்த வார்த்தையைக் கேட்டதும் அவர் முகம் வாடிப்போனது.
பதட்டமுடன், ""மன்னிக்கவேண்டும். நான் தங்கள் மனதைப் புண்படுத்தி கோபப் படுத்தியிருந்தால் பெரிதும் வருந்துகிறேன். நான் காத்திருக்கிறேன்.''
""வேண்டாம். நாளை வா...''
அந்த பிராமணர் பல நாட்கள் இப்படி யாக அலைக்கழிக்கப்பட்டார். ஒரு காலணா வும் பெயரவில்லை. மிகவும் மனது சோர்ந்து விட்டார். சரி; காலையில் அவர் இல்லம் சென்றேனும் இதற்கொரு தீர்வு கண்டே தீரவேண்டுமென்று நினைத்து, காலைவேளை அவர் இல்லம் சென்று அவர் மனைவியிடம் தனது பிரயாசையைக் கூறினார்.
""தாயே. தங்களது கணவரிடம் எனது நிலையைக்கூறி எனக்குப் பொருளுதவும் படி வேண்டினேன். பல நாட்கள் என்னை அலைக்கழித்து இன்றுவரை பெரும் பிரயாசைக்கு உட்படுத்தி நான் மனவேதனைக்கு ஆட்பட்டேன். இது உன் கணவன் என்ற கணவானுக்கு அழகா? இது முறையா... இதில் பரிகாசம் செய்து சொல்லால் அவமதிப்பதும்... இது நல்லதா. பிராமண தர்மம் என்று கூறி ஏமாற்றி மறுப்பது மகாபாவமல்லவா. இந்த அவமானத்தால் நாங்கள் குடும்பத்தோடு மாய்ந்து போனால் அந்த பிரம்மஹத்தி தோஷமும் பாவமும் உன் கணவனைத்தானே சேரும்...'' துக்கத்துடன் பெரியவர் பேசப்பேச லட்சுமிபாய் துணுக்குற்றாள்.
""ஐயா, மன்னிக்கவேண்டும். தாங்கள் எத்தனைப் பெரியவர். இப்படி சபிப்பது போன்று பேசலாமா. எனது பதி வேலைப்பளுவால் ஏதோ மறந்திருப்பார். இதோ பொறுங்கள் வருகிறேன்'' என்று வீட்டினுள்ளே சென்றவள் தான் வணங்கும் பெருமாள் திருவுரு முன்பாக வணங்கினாள். "என் தெய்வமே! எனது கணவருக்குத் தெரியாது இதுவரை ஏதும் செய்ததில்லை. இன்று நான் செய்ய நினைப்பதும் அவருக்கு களங்கம் ஏதும் ஏற்படலாகாது என்ற காரணத்தி னாலேயே. அவர் நலன்பொருட்டே இதை முயல்கிறேன். நீயே காவலிருந்து காப்பாற்றுவாய் என் நாராயணா' என்றவள், தான் அணிந்திருந்த விலையுயர்ந்த நவரத்தினக் காதணியைக் கழற்றிக் கொணர்ந்து அந்த பிராமணரிடம் கொடுத்து, ""பாருங்கள் ஐயா. இது எனது தாய்வீட்டு சீதனம். இந்த ஒரு காதணியைக்கொண்டு ஒரு தேசத்தை விலைக்கு வாங்கலாம். அத்தனை உயர்ந்தது. இதனைப் பெற்றுக்கொண்டு புதல்வனின் உபநயனம் நடத்துவதோடு மட்டுமல்லாது, குறைவின்றி பல தலை முறைக்கு நீர் உட்கார்ந்து உண்ணலாம். இதைப் பெற்றுக்கொண்டு என் பதியை வாழ்த்துங்கள்'' என்றாள்.
""ஆஹா... என்னே உனது பதிபக்தி. இன்னும் பல்லாண்டு தீர்க்கசுமங்கலி யாய் ஜொலிப்பாய் மகளே. தீர்க்கசுமங் கலி பவ. வாழ்க தாயே வாழ்க...'' மகிழ் வாய்ப் பெற்றுக்கொண்டவர், அடுத்து சீனப்ப நாயக்கின் கடைக்கு மறுபடி சென்றார்.
""என்ன ஸ்வாமி... காலை கடை திறந்து வியாபாரம் ஆயிற்றா? இன்றும் நேற்றைய பதிலையே சொல்வீரா அல்லது புதிய வார்த்தைகளைத் தேடுவீர்களா?'' என்றார்.
""என்ன பிராமணரே... பேச்சில் எகத்தாளம் அதிகம் தெரிகிறது? பொருளுதவி பெறும் எண்ணம் இல்லையா?''
""உண்டு உண்டு. இதோ இந்த பொருளுக்கு நிகரான பணத்தை உம்மால் கொடுக்க இயலுமா? முதலில் இதற்கு பதில் சொல்லப்பா'' என்றவர், அந்த ஒற்றைக் கம்மலை அவர்முன் வைக்க, அதைப் பார்த்த சீனப்ப நாயக் அதிர்ந்தார். அதே கற்கள்; அதே வரிசை.
""இது... இது... இந்த கம்மல்...''
பெரியவரிடம் கேலி தொக்கி நின்றது.
""ஆம்... கம்மல். அதற்கென்ன இப்போது? சரிசரி. இதற்கு ஈடாகப் பொருள் உம்மிடம் உண்டா. ஒரு தேசத்தையே விலை பேசலாமாம். கொடுத்தவர்கள் சொன்னார்கள். எனவே குறைவில்லாது இதற்கு ஈடானதைத் தந்துவிடு. எனக்கு இனி நிரம்ப வேலைகள் இருக்கின்றன. பல இடங்களுக்குச் செல்ல வேண்டும். யக்ஞோபவீதம் முதற்கொண்டு வாங்க வேண்டியதிருக்கின்றதப்பா; சீக்கிரம்...'' என்றார்.
(தொடரும்)