சிருஷ்டியில் விந்தையையும் சூட்சுமத்தையும் ஆண்டவன் ஒருங்கே வைத்திருப்பது அந்த அண்டங்களுக்கே விளங்காத ரகசியம். நாம் பிறக்கப்போகின்ற தினம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. அக்காலம் நாம் சிசு ஜனனம். இறக்கப்போகும் தினமும் தெரியாது.
அந்த மரணம் நோயையோ, வயோதிகத்தையோ, விபத்தையோ அடிப்படையாகக் கொண்டு நிகழ்ந்துவிடுகிறது. அந்த அடிப்படையையும்கூட நம்மால் முன்கூட்டி அறியமுடியாத பிரம்ம ரகசியம்தான் நமது ஆயுள்முடிவான மரணம். மரண நாள் ஒருவனுக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டால் அவன் தினமுமல்லவா செத்துக் கொண்டிருப்பான். அது சூட்சுமம் மட்டுமல்ல; ஸ்ரீமன் நாராயணன் நம்மீது வைத்துள்ள வாத்சல்யம்; கருணை. என்றேனும் மரணம் நிச்சயம் என்றாலும், அது வரும்வரை நீ போகும்வழிக்குப் புண்ணியம் சேர்த்துக் கொள். தர்மம் செய். தர்மத்தைப் பிறருக்கும் கூறு; உனது சந்ததிக்கும் கற்றுக்கொடு. உனது மரணம்கூட அழகாகும்; போற்றப்படும். மரணத்தை யாரும் விரும்புவதில்லை. ஞானிகள் மட்டுமே- சத்குருக்கள் மட்டுமே தங்கள் வாழ்நாளின் கடைசியினை அவர்களே தீர்மானித்து, அதை மகிழ்வுடன் வரவேற்று எதிர்கொள்கின்றனர்.
அன்று துங்கையில் கங்கையின் பிரவாகம் தெரிந்தது. பிட்சாலயாவில் ஸ்நானம் செய்து, சந்தியா வந்தனம் முடித்து, நீரில் அர்க்கியம் விட்டு கரையேறிய அப்பண்ணாவுக்கு மனதுள் ஏதோ பதைபதைப்பு நிறைந்து, இறுக்க மும் கணமும் கூடியது. சூரிய சூடு இன்னும் தேகம் உணரமுடியாத காலைப்பொழுது. அங்கிருந்த மேடை போன்ற ஈரமான பாறை மீது அமர்ந்து கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தார். மனது அதில் முழுதாய் லயிக்க வில்லை. உள்ளுக்குள் மட்டும் ஒரு குரல் எழுந்தது. "ஒரு உன்னதம் பெறப்போகிறாய்.
முழுமை உன்னை ஆட்கொண்டுவிடப் போகிறது' என்று மனதுள் குரல் கமழ்ந்து கொண்டேயிருந்தது. கண்மூடி அமர்ந்திருந்த அவரது நெற்றியில் சுருக்கங்கள் தோன்றி யும் பிறகு மறைந்தும் அவரின் சஞ்சலத்தையும் கேள்வியையும் பிரதிபலித்ததை, சற்றருகில் கைகட்டி நின்றிருந்த அவரது அணுக்க மாணவன் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தான்.
கும்பகோணம் ஸ்ரீமடத்தில் லக்ஷ்மி நாராயணன் ஸ்ரீராகவேந்தி ரரிடம் பவ்யமாய், ""ஸ்வாமி, அடியேன் மட்டு மல்ல; அனைவருமே இந்த அற்புதம் கண்டு அதிர்ந்து நிற்கிறோம். இந்த நிகழ்வு எதையோ சூசகமாக உணர்த்துவதாக...''
""ஆஹா. சரியாகத்தான் சொன்னாய் குழந் தாய்'' என்றார். ""நிச்சயம் நீங்கள் அனைவருமே இந்த நிகழ்வைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை இது. சற்று முன்னர் வானமார்க்கமாக நீங்கள் அனைவரும் கண்டது ஸ்ரீகிருஷ்ண துவைபாயனர் என்ற மகானின் திருக்கரங்களாகும். அவர் எனது சமகாலத்தவர் என்றாலும் என்னிலும் மூத்தவர். வானமார்க்கமாக சென்றுகொண்டி ருக்கிறார். அவர் இவ்விடத்தைக் கடப்பதை எனக்கு ஞானதிருஷ்டியில் உணர்த்தி விட்டதாலேயே நான் முன்கூட்டி அறிந்து காத்திருந்தேன். எனக்கான- இவ்வுலகத்துக் கான எனது மானுடரூப கடைசி நாளைக் கணித்துத் தர உள்ளெறி பயணத்தில் கேட்ட தற்கு அவர் இவ்வாறாக பதிலளித்தார்.''
""ஸ்வாமி, எங்களுக்கு கலக்கமாக இருக் கிறது. கடைசி நாள், மானுடரூபத் தொடர்பு என்றெல்லாம் கூறுவது கலக்கமாக இருக்கிறது.''
""சூரியன் கிழக்கில் உதயம்; மேற்கில் அஸ்த மனம் என்பது மாற்றவே முடியாத- அண்ட சராசரத்திற்கும் பொதுவான சத்திய நியதி.
இவ்வுலகில் ஜனனம் என்று ஆரம்பித்த வுடனேயே மரணம் என்பதும் உடனடியாகத் தீர்மானிக்கப்பட்ட ஒன்று.
பூவுலகில் பூமி மாதாவை சிரமப் படுத்தாதபடிக்கு ஜனனமும் மரணமும் சரிசமமாக நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. இதில் யாருக்கும் சலுகைகள் என்பதில்லை. ஈடுஇணையற்ற அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும் ஸ்ரீகிருஷ்ணரும் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களானாலும், அவர்கள் வந்துதித்த மனித ரூபத்தின் சத்ய தர்மத்திற்குக் கட்டுப்பட்டு, மானுட தர்மத்தைப் பின்பற்றி தங்களது அவதார நோக்கம் முடிந்தபிறகு, தங்களுக்கான இறுதி நாட்களை ஏற்றுக்கொண்ட உறுதியான அவதார புருஷர்கள். நானோ சாதாரண மானுடன். எனக்கான கடைசி நாளான அந்த திருநாளைத்தான் ஸ்ரீகிருஷ்ண துவைபாயனர் இரண்டு வருடங்கள், இரண்டு மாதங்கள், இரண்டு நாட்கள் இருக்கின்றன என்பதனை வான மார்க்கத்திலிருந்து காண்பித்து அருளினார். எனவே அன்பர்களே... என்மீது அன்பானவர்களே... எனது அனைத்து ஸ்ரீமடத்துப் பொறுப்பு களையும் கடமைகளையும் இன்றிலிருந்து உரியவர்களிடம் ஒப்படைத்து, பிறகு எனக்கான தீர்மானிக்கப்பட்ட இடத் தைத் தேர்ந்தெடுக்கப்போகிறேன். அந்த திசை நோக்கி நகர இருக்கிறேன். ஸ்ரீமடத் துப் பொறுப்பிலிருக்கும் ஸ்ரீசாரங்கபாணி- ஸ்ரீசக்கரபாணி திருக்கோவில்களின் பொறுப் பினையும் பிரித்துத் தனியே நிர்வகிக்கவும், காஞ்சிபுரம் சங்கரமடத்திலும் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்கப்போகிறேன். யாரும் கலங்க வேண்டாம். வருந்த வேண்டாம்.''
கூடியிருந்தோர் அனைவரின் முகத்திலும் சோகமும் துக்கமும் பெரும் சுமையாய் கவிழ்ந்தது. கண்களில் சோகக்கண்ணீர். பலரின் நிலையோ சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்து மயங்கியும் விழுந்தனர்.
ஸ்ரீராயர் வழக்கம்போல முகத்தில் பொலிவான புன்னகையோடு அனைவருக்கும் அட்சதை அளித்து ஆசிர்வதித்தார்.
பிறகுதான் தனது சீடர்களுக்கும் மாணவர்களுக்கும் வகுப்பெடுக்கும் அந்த விசாலமான இடத்திற்கு நடந்து சென்று அமர்ந்தார். அவரின் முன்னே பெரிய சம்புடத்தில் அட்சதை நிரப்பி வைக்கப் பட்டது. ஸ்ரீராயர் சாரங்கபாணி- சக்கரபாணி கோவில்களின் அனைத்து விவகாரங்களையும் கோவிலின் முக்கியஸ்தர்களை அழைத்துப் பேசலானார். இதுவரை நடந்த விழாக்கள், அதன் முக்கிய நிகழ்வுகள், இனி புதியதான திட்டங்கள் மற்றும் சிதிலமடைந்த வாகனங் களுக்கு மாற்று வாகனங்கள், கோவிலுக்குத் தேவையான பிற்கால திட்டங்கள் அனைத் தும் கலந்து ஆலோசிக்கப்பட்டு, காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமட நிர்வாகத்திடம் ஒப்படைக்க அனைத்து முக்கியஸ்தர்களும் கண்ணீருடன் ஒப்புக்கொண்டு, ஸ்ரீராயரின் பாதம் பணிந்து ஆசிபெற்றனர்.
அன்றிரவு ஸ்ரீமடத்தில் ஸ்ரீராயரைத்தவிர அனைவருமே பெரும் துயரத்தோடு இருந்தனர். பலர் உணவையும் உட்கொள்ளாது பெரும் துக்கத்தோடு கண்ணீர் மல்க இரவைக் கழித்தனர்.
சூரியோதயத்தில் ஸ்ரீராயரின் குடந்தை மடம் பக்திப் பொலிவுடன் ஆரம்பித்தாலும், கணமான மனத்தோடே, சோகம் கவ்விய, லாவண்யம் இழந்த முகத்தோடே நடமாடினர்.
அனைவரின் முகத்திலும் சோபை தவறி யிருந்ததை மடத்திற்கு வந்திருந்த பிற பக்தர்களும் மக்களும் கவனிக்கத் தவறவில்லை. அன்றைய ஸ்ரீமடத்துப் பூஜை திவ்யமாக இருந்தது. தற்போது கும்பகோணம் எனப் படும் குடந்தையானது சூரியோதயத்தில் திளைத்தாலும், மென்காற்றுடன் ஈரச் சுமையில் இதமாயிருந்தது. மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லப்பட்ட பசுக்கள் ஸ்ரீமடத்து வீதிகளில் குதிநடை போட்டதுபோய், இன்று தளர்நடையுடன் ஸ்ரீமடத்து வாயிலைப் பரிதாபமாய் நோக்கி, முரண்டு பிடித்து முரண்டு பிடித்து நகர மறுத்தன. குயில்களும் கிளிகளும் தங்கள் குதூகலம் மறந்து ஸ்ரீமடத்துச் சுவர்களிலும், சுற்று வேலிகளிலும், உள்ளிருக்கும் மரங்களிலும் அமர்ந்து பதட்டமாய் குரல் எழுப்பிக்கொண்டிருந்தன. விஷயம் நன்கு பரவிவிட்டபடியால், ஊர் மக்கள் ஸ்ரீமட தரிசனத்திற்குப் பெருகி வந்திருந்தனர். தஞ்சை மன்னரது பிரதானிகள் விஷயமறிந்து ஓய்வெடுக்காது புரவியில் புயல்வேகத்தில் வந்திருந்தனர். அனைவரும் ஸ்ரீராயரது பூஜை முடியக் காத்திருந்து, பிறகு மந்த்ராட்சதையினை உதடுகள் விம்ம, கண்களில் நீர்வழிய வரிசையில் வந்து பெற்றுக்கொண்டனர். ஸ்ரீராகவேந்திரர் மக்களைப் பார்த்து தனது அருளுரையைத் தொடங்கினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ragavender_4.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
""ப்ரியமான பக்தர்களே. நீங்கள் என் மீது வைத்திருக்கும் அபரிதமான அன்பு என்னை மெய்மறக்கச் செய்கிறது. நீங்கள் அன்புமயமானவர்கள். எதை நீங்கள் செய்கிறீர்களோ அதுவே உங்களுக்குத் திரும்ப வரும் என்பது கீதையின் அடிப்படை. ஆகவே அன்போடு இருங்கள். அனைத்தையும் அன்போடு செய்யுங்கள். தர்மம், நேர்மை, தைரியத்தை உங்களது ஜீவனாய் நீங்கள் நினைத்தல் வேண்டும். பார்ப்போரை மட்டுமல்ல; பகையாளிக்கும் அன்பு செலுத்துங்கள். அந்த நன்மைகள் பெருகிப் பலவாகி அவை உங்களையே வந்தடையும். நான் உங்களைவிட்டு எங்கும் செல்லமாட்டேன். எனது எண்ணமும் மனமும் குடந்தையிலேயே குவிந்திருக்கும். எனது குருநாதரின் பூரண ஆசி நிறைந்த குடந்தை மங்காத புகழோடு என்றும் விளங்கும். நான் பிருந்தாவனம் ஏற்கப்போவது உங்களுக்கு பெரும் வருத்தமாக இருக்கலாம். அதைப் பற்றிய விஸ்தாரமான செய்திகள் உங்களை வந்தடைந்துகொண்டேயிருக்கும். சரியான இடம், நேரம் எதுவென்று நான் தங்களுக்கு முன்னரே தகவல் தருவேன். இப்போது எனக்கு விடைகொடுத்து வழியனுப்புங்கள். ஸ்ரீமடத்து நிர்வாகம் என்றும் தொடரும். அதற்கான உங்களது பங்களிப்பைத் தொடர்ந்து நல்குங்கள். இதோ, இப்போது தஞ்சை மற்றும் இன்னும் பிற முக்கிய பிரதேசங்களிலிருந்து வந்திருக்கும் ராஜப் பிரதானிகளும் பிரமுகர்களும் மடம் என்றும் செழித்திருக்க உங்களது நித்ய பங்களிப்பை விடாது தொடரும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. கன்னட தேச எல்லைவரை என்பது உள்ளுணர்வு. மக்களே, என்றும் ஸ்ரீமன் நாராயணன் உங்களின் பக்திக்கு மெச்சி பூரண அருளளிப்பார். ஹரியே சர்வோத்தமன்; வாயு ஜீவோத்தமன். சுபமஸ்து சுபமஸ்து'' என்றவர் வான் நோக்கி கைகுவித்து வணங்கினார்.
அன்று தம்மை நாடிவந்த பந்துகளில் வயதில் மற்றும் அனுபவத்தில் முதிர்ந்த வர்களைத் தேர்ந்தெடுத்தார்.
""இந்த ஸ்ரீமடம் க்ஷேத்திரம் போன்றது. மக்களின் பக்தி மட்டுமல்ல; நம்பிக்கையின் ஆணிவேரே இந்த ஸ்ரீமடத்தின் அடிப்படை சக்தி. எனவே மடத்துக்கு வரும் எவரும் கவலைகள் தொலைய நீங்களும் நேர்மையில் நின்று சேவையினை மதியுங்கள். நான் இன்றே பயணிக்க முடிவு செய்துள்ளேன்'' என்றவர் சற்றே திரும்ப, ஓர் ஓரமாக சிறு குழுவாக இருந்த சிலர் தலைவணங்கி தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். முன்னிரவே அவர்களுக்கு தகவல் சென்றுவிட்டதனால் பயணத்திற்குத் தயார் நிலையில் இருந்தனர். ஸ்ரீராயர் மெல்ல மேடைவிட்டுக் கீழிறங்கி தனது மரத்தாலான பாதரட்சையை அணிந்து திரிதண்டம் ஏந்தியவுடன் மக்களுக்குப் புரிந்துபோயிற்று. அவர் நடக்க நடக்க மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.
"ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ' என்ற அந்த கோஷத்தில் உற்சாகத்திற்கு பதிலாய் சோகம் பதிவாகியது. சூரியன் பவனிக்குப் புறப்பட, மேகங்கள் அதனைத் தொடர்வது போன்று, ஸ்ரீராயர் சூரியப் பிரகாசத்துடன் தனது பயணத்தைத் தொடர, மேகமாய் மக்கள் எல்லைவரை சென்று வழியனுப்பினர்.
அவரும் அவரின் சீடர் குழாமும் கண்ணுக்குத் தெரியும்வரை பார்த்துக்கொண்டேயிருந்த னர். உயரமான ஒரு சீடரின் தலை யில் ஸ்ரீமூலராம பூஜாவிக்ரகங்கள், ஒரு பெரியதொரு ஓலைப்பெட்டியில் அசைந்து அசைந்து நகர்ந்துகொண்டே... மெல்ல மெல்ல பார்வையிலிருந்து காட்சி கரையத் தொடங்கி மறைந்தது.
ஸ்ரீராகவேந்திரர் மௌனமாய் நடந்துகொண்டே இருந்தார். உள்ளுள் ஸ்ரீமன் நாராயணனை நினைத்து துதித்துக் கொண்டே நடந்தார். ஸ்ரீராம நாம மந்திரத்தை அவரின் உதடுகள் உச்சரித்துக் கொண்டேயிருந்தன. உணவுக்காக ஆங்காங்கே தங்கியதைத் தவிரவும், காலை அனுஷ்டானங்களைப் பெரும்பாலும் நீர்சூழ்ந்த பகுதிகளில் நடத்திக்கொண்டும், பூஜையினை முடித்துக்கொண்டும் ஸ்ரீராகவேந்திரர் தனது பயணத்தை நில்லாது தொடர்ந்து கொண்டேயிருந்தார்.
அப்பண்ணாச்சார்யார் அன்று காலையிலிருந்தே நதியோரமாக நடந்து வந்துகொண்டிருந்தார்.
அவர் மனதுள் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்து. ஜபதபங்களில் ஈடுபட்டு ஈடுபட்டு மனதை வெள்ளையாக வைத்திருப்பவர்கள், கபடு இல்லாதவர்களிடம் எழு கின்ற உள்ளுணர்வு மெய்யாக அமையும். துங்கபத்ரா மிகமிகத் தெளிவாக, களங்கமின்றித் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது. வெகு தொலைவு நடந்து வந்த களைப்பு நீங்க துங்கையில் இறங்கி ஸ்நானம் செய்யலானார். குனிந்து மூழ்கி முழ்கி எழும்போது அவரது கைகளில் ஏதோ ஒன்று சிக்கியது. மெல்ல நீரிலிருந்து கைதூக்க, ஒரு அழகிய கமண்டலம் படுசுத்தமாய் மின்னியது. அப்பண்ணா விழியுயர்த்திப் பார்க்க, நதிக்கரை தள்ளி காவியுடுத்திய உருவம் சிறுபாறையில் அமர்ந்திருக்க, எதிரில் ஏதோ பெட்டியிலிருந்து சிறுசிறு பொருட்கள் எடுத்து வைத்துக்கொண்டிருப்பதும், அது ஒரு பூஜைக்கான ஆயத்தம் என்பதும் அவருக்கு விளங்கியது. இது அவர்களுடையதாக இருக்குமோ என்ற உணர்வில் நீரிலிருந்து வெளியேறி வேகமாக அவ்விடம் நடந்து சேர, தெய்வீக மூர்த்தங்கள் எடுத்து வைக்கப்பட்டிருக்க, தேஜோமயமான ரூபம் அவற்றுக்கு மலர்களை சாற்றிக் கொண்டிருக்க, ஒரு சீடன் மட்டும் பட படப்புடன் நின்றுகொண்டிந்தான். பூஜை ஆரம்பத்திற்கு அறிகுறியாக தட்டில் திரிகளில் நெய் தோய்க்கப்பட்டு தீபத்திற்கு ஆயத்தமாயிருக்க, அங்கே அப்பண்ணா இடை புகுந்தார். ""மன்னிக்க வேண்டும். இந்த கமண்டலம் துங்கையில் என் கரங்களில் சேர்ந்தது. தொலைவே கண்ணுற்று அநேக மாய் அது தங்களுடையதாய் இருக்குமென கொண்டுவந்தேன்'' என்று கூறவும், பதட்டமுடன் இருந்த சீடன்- ""ஆஹா! நன்றி ஐயா. ஸ்வாமிகளின் கமண்டலம் சுத்தம் செய்கையில் நீரோடு சென்றுவிட்டது என்ற பதைபதைப்பில் இருந்தேன். இப்போதுதான் உயிரே வந்தது. இந்த பத்து வருட சீடப்பணியில் இது தவறியிருந்தால் எப்பேற்பட்ட இழுக்கு எனக்கு வந்திருக்கும்... நன்றி ஐயா நன்றி'' என்றான்.
""நன்றி எதற்கு ஐயா. இது தானாக எனது கரங்களில் வந்துசேர்ந்தது. பாருங்கள், ஒரு அதிசயம் என்னவென்றால் துங்கை வேகத்தில் கமண்டலம் இந்நேரம் எங்கோ அல்லவா சென்றிருக்கும்? எப்படியோ ஏதோ இன்றே எனது கரங்களில் வந்தது உண்மையில் ஆச்சரியமே. இந்தாருங்கள் ஐயா... அது சரி... தேஜோமயமாகத் தெரிகிறாரே... அவர் யாரென்று நான் அறியலாமா?'' ""ஆஹா... ஜகம் போற்றும் ஜகத்குரு ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள். இவரை அறியாதவர்கள் யாரிருக்கிறார்கள்?'' ""என்ன... என்ன கூறினீர்கள்? நான் தேடும் ஆத்மகுரு ஸ்ரீராகவேந்திரரா இவர்? என் உள்ளுள் எழுந்துகொண்டிருக்கும் குரலுக்கான விடையா இன்று கிடைத்தது! ஆஹா... தன்யனானேன். தன்யனானேன்'' என்று கூறி ஓடோடி சென்று ஸ்வாமிகள் முன்பாக பாதம் பணிந்தார். ""குருவே சரணம்... குருவே சரணம்... குருவே சரணம்... குருவே சரணம்... குருவே சரணம்...'' சாஷ்டாங்கமாக விழுந்தவர் அரற்றிக்கொண்டேயிருந்தார்.
ஜெபித்துக்கொண்டிருந்த ராகவேந்திரர் விழிமலர்ந்து புன்னகைத்தார். ""எழுந்தி ருப்பா... எழுந்திரு'' என்று ஸ்வாமிகள் கூறியது அவர் காதில் விழாதபடிக்கு அப்பண்ணா வின் நாம ஸ்மரணை சப்தமாக இருக்கவே, அருகேயிருந்த அயரது சீடன் அப்பண்ணா வைத் தொட்டு எழுப்ப, தலைநிமிர்த்தியவர் தன் நிலை உணர்ந்து எழுந்துநின்று முதுகு வளைந்து கைகுவித்து வணங்கினார்.
ஸ்ரீராகவேந்திரர் பக்தியால் நடுங்கிக்கொண்டி ருக்கும் மேனி முழுக்க மணல் பதிந்திருந்தது. நெற்றி, நாசி நுனி, கன்னங்கள், விழி, இமைகள், நெஞ்சு, வயிறு என்று மணல் போர்த்திய அப்பண்ணாவைக் கண்ட ராயர் மெல்ல சிரித்துக்கொண்டார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
""என்ன, மணல் சுட்டதா?'' என்றார்.
""எனக்குத் தெரியவில்லை ஐயனே.''
""ஏனப்பா, மேனி உணர்ந்திருக்குமே'' என்றவர் மறுபடி சிரித்தார்.
""இல்லை ஐயனே. எனக்கு அந்த உணர்வேயில்லை. நான் ஆனந்தமயமாய் ஆட்கொள்ளப்பட்டுவிட்டேன்.''
""நல்லது. இன்றோடு உனது தேடல் முடிந்துவிட்டது. அருகில் வா அப் பண்ணா'' என அவர் பெயரிட்டு அழைக்க, அனைவருக்குமே ஆச்சரியமாகிப் போனது.
தன்னை அருகில் வந்து நமஸ்கரித்த அப்பண்ணாவை இன்னும் அருகழைத்து நெற்றி மணலை அகற்றினார். வாத்சல்ய மாக தன் திருக்கரத்தை நெற்றி, சிரசும் சேர்த்துத்தொட்டு ஆசிர்வதிக்க, ஸ்ரீராக வேந்திரரின் கர ஸ்பரிசம் உள்ளுக்குள் ஏதேதோ செய்தது. மேனி முழுக்க ஜில்லிட் டது. பிறகு மெல்லிய தென்றல் வருடியது. உள்ளெல்லாம் வாசம் எழுந்தது. தேகம் எடை உதிர்ந்து கனமற்றுப்போனது. கால்களின் கீழே எந்த தாங்குதலின்றி வெற்றாக இருந்தாலும், சரிந்து கீழே செல்லாது அந்த ரத்தில் பஞ்சு மிதப்பாய் இருந்தது. அவர் கட்டுப்பாட்டில் இல்லாது மேனி ஏனோ உதறிக்கொண்டேயிருக்க, தன்முனைப்பின்றி கண்ணீர் வந்துகொண்டேயிருக்க மெல்ல கரம் எடுத்தார். அப்பண்ணா மெல்லமெல்ல தன்னிலை வந்துணர்ந்தார்.
""உனது எனக்கான காத்திருப்பு அந்த ஸ்ரீராமனே தீர்மானித்தது அப்பண்ணா. காரணமின்றி காரியமில்லை. காரியமின்றி காரணமில்லை அப்பண்ணா.''
""தன்யனானேன் ஸ்வாமி தன்யனானேன்'' என்றார் அப்பண்ணா.
""சீடர்களே... இன்றிலிருந்து அப்பண்ணா உங்களில் ஒருவர். எனது சீடர்களில் அணுக்கமானவர்.
பயணத்தில் ஸ்ரீமூலராமரின் பூஜா விக்ரக ஓலைப்பெட்டியினை அப் பண்ணாவின் தோள் சுமக்கும்'' என்று ஆக்ஞை பிறப்பித்தார்.
அப்பண்ணாவால் ஸ்ரீராயரின் அன்பான ஆசிர்வாதம் பெருமிதமாய் உணரப்பட்டது.
""சரி; இங்கிருந்து ஆதோனி எத்தனை தூரம் பயணம்? இரவு கடந்து விடுமென்றால் நாளைக் காலை செல்லலாம். அதற்குமுன் தகவல் தெரிவிக்க விஷயம் தெரிந்தவர் எவரேனும் இருந்தால் அவர்கள்மூலம் அரண் மனைக்குச் செல்லுதல் வேண்டுமே'' என்றார் ஸ்ரீராயர்.
""ஐயனே, என்ன தகவல் என்று தெரிந்தால்... நானும் இந்த பிரதேசத்தில் வசிப்பவன் என்ப தால், நானே முயற்சிக்க தாங்கள் ஆணையிட் டால் இந்த எளியவனுக்கு பாக்கியமாயிருக்கும்.''
""சரியப்பா. இங்கு ஆதோனி அரண்மனை யில் எனது பழைய சீடர் ஒருவர் இருக்கிறார் என்று கேள்வியுற்றேன். அவரால் அடுத்து வருகின்ற தினங்களில் பல நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன.''
""அவர் பெயர்...'' என்று அப்பண்ணா வினவ- ""திவான் வெங்கண்ணர்... வெங்கண்ணா பந்த்'' என்றார் ஸ்ரீராகவேந்திரர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-05/ragavender-t.jpg)