ஸ்ரீராகவேந்திர விஜயம்! 13

/idhalgal/om/ragahvender

13

மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்

இரண்டாம் பாகம்

அரக்கோணம் கோ.வீ. சுரேஷ்

"அவர்களும் வரலாமல்லவா'' என்று நரசிம்மாச்சார்யாரின் அனுமதி வேண்டுதலுக்கு ராயர் புன்முறுவலுடன் ஆமோதித்தார். முதலில் குருராஜனும், பிறகு சிறுவயது கடந்து இருபது வயதிற்குள் இருக்கும் இருவரும் உள்நுழைந்தனர்.

தனது பூர்வாஸ்ரமத் தமையனைக் கண்டவுடன் ஸ்வாமிகள் தன்னையுமறி யாது எழுந்து நிற்க, அவருக்கு அடுத்து அவகாசம் அளிக்காது குருராஜன் ராயர் பாதம் பணிந்தார். அவருடன் வந்த இருவரும் விழுந்து நமஸ்கரித்தனர். எழுந்து நின்ற இருவரில் ஒருவன் மட்டும் தலைகவிழ்ந்திருந்தான். ராயர் பார்வை அவன் மீது வாஞ்சையுடன் பதிந்தெழுந்தது.

""தாங்கள் நலமா'' என குருராஜனை நலன் விசாரித்தார்.

""அந்த ஸ்ரீஹரியான வேங்கடவனின் அருளாலும் ஸ்ரீமடத்தின் கருணையாலும் நலம்தான்.''

""ஸ்ரீமடம் தங்களுக் கென்று ஏதும் செய் வதில்லை என்றபோது, தாங்கள் ஸ்ரீமடத்தை பெருமைப்படுத்தும்படி கௌரவமான வார்த்தை கள் உதிர்ப்பது எனக்கு மிகையாகத் தோன்றுகிறது.''

அப்போது இடைபுகுந்த நரசிம்மாச்சார்யார், ""குருராஜன் சொல்ல வருவது யாதெனில், எங்களது சாஷ்டிக வம்சத்திலிருந்து ஸ்ரீமடத்திற்கு யதிகளாகச் சென்றதனால், அந்த புண்ணிய நிகழ்வினையே ஸ்ரீமடத்துக் கருணை என்று சொல்கிறான்...'' என்றார்.

ஸ்ரீராகவேந்திரருக்கு தனது பூர்வாஸ்ரம சொந்தங்கள் தன் முன்பாக நின்றிருந்தாலும், பலகாலம் கழித்து சந்திப்பு நிகழ்ந்தாலும், பல்வேறு விதமான உணர்வுகள் பரஸ்பரம் எழுந்தாலும், சந்நியாசிக்கே உரிய கடமையும் நியாயமும் உணர்ந்தே தனது இயல்பிலிருந்து மீளாதிருந்தார்.

""வித்யா குருவாயிருந்த கம்பீரம் தாங்கள் இப்போது வயோதிகம் காரணமாக கம்பூன்றுவது தங்களின் நடை யின் தளர்ச்சியை வெகுவாய் கூட்டிக் காண்பிக்கிறது. தாங்கள் ஓய்வெடுத்து, உணவு முடித்து வருதல் வேண்டும்'' என்றார் ஸ்வாமிகள்.

""நன்றி ஐயனே. அப்படியே ஆகட்டும். அதற்குமுன் யதிகளிடம் நேரில் விண்ணப்ப மும் அனுமதியும் பெறவேண்டியுள்ளது.''

""என்னவென்று தெரிவிக்கலாமே'' என்றார் ஸ்ரீராயர்.

""இதோ, இந்த இருவரையும் தாங்கள் ஸ்ரீமடத்தில் சேர்த்துக்கொண்டு, தர்க்கம், சாஸ்திரம், வேதங்களைப் பரிபூரணமாகக் கற்க அனுமதிக்க வேண்டும்.''

""ஆஹா... அப்படியே ஆகட்டும். எனது அனுமானம் சரியெனில் நீங்கள்தான் இருவருக்கும் வித்யா குருவாயிருந்திருப்பீர்கள். எனவே கற்பது எளிதென...''

""உண்மைதான். இதோ இவன் பெயர் வெங்கண்ணா. இவன் இயல்பிலேயே நல்ல நல்ல செய்யுள்களை இயற்றுவதில் வல்லவன். குருராஜனது பேரன்.''

""ஆஹா... அப்படியா. தாங்கள் போதிப்பில் எல்லாருமே பரிமளிப்பது இயற்கைதானே. நல்லது நல்லது.''

""நன்றி யதிகளே. இதோ, வந்ததிலிருந்து தலைகுனிந்து மௌனமாய் இருக்கும் பிள்ளை எனது இன்னொரு முத்து. இவன்... குருராஜனின் தம்பி மகன். அதாவது...''

""நீங்கள் சொல்வது... இந்தப் பிள்ளை?'' ஸ்வாமிகளிடம் படபடப்பு ஏற்பட்டது. ஏதோ ஆர்வமாய்... ""இது... இந்தப் பிள்ளை?''

""லக்ஷ்மி நாராயணன்... ஆம்... சரஸ்வதியின் மகன்'' என்றார் வெகு நாசூக்காய். நேரிடையாகவோ மறைமுகமாகவோ "வேங்கட நாதன் மகன் இவன்' என்று சொல்லாது, அந்த உணர்ச்சிகரமான சூழ்நிலை யைத் தனது திறமையான அனுபவத்தால் கையாண் டார். தலைகவிந்திருந்த லக்ஷ்மி நாராயணன் தனது சிரம் உயர்த்தி யதிகளை நேருக்குநேர் பார்த்து வணங்கினான். கண்கள் கலங்கியிருந்தன. வெகுவாய் அழுதிருந்தான். அந்த அழகிய முகத்தில் நிரந்தரமாக ஒரு சோகம் குடிகொண்டிருந்ததை ஸ்ரீராகவேந்திரர் பரிபூரணமாக உணர்ந்தார்.

அபரிதமான மனஅழற்சி காரணமாக, அவரால் நிற்க இயலாது தடுமாற்றத்துடன் தனது ஆசனத்தில் அமர்ந்தார்.

மனித மனம் விசித்திரமானது. பாசம், நேசம், முழுக்க அன்பு, கருணை, வாத்சல்யம், இரக்கம், துயரம், சந்தோஷம் ஆகியவற்றைக் கூட்டாய் அகத்துள் கொண்டதே

மனித மனம் விசித்திரமானது. பாசம், நேசம், முழுக்க அன்பு, கருணை, வாத்சல்யம், இரக்கம், துயரம், சந்தோஷம் ஆகியவற்றைக் கூட்டாய் அகத்துள் கொண்டதே மனித மனம். அதிலும் கருணை தாங்கிய கனவான்கள் என்றால் சொல்லத் தேவையேயில்லை. எந்த நேரத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் லஜ்ஜையின்றி பொங்கிப் பிரவகிக்கும். பசுவுக்கு கன்றின்மீதான பாசம், பறவைக்கு குஞ்சுகளுக்கு உணவூட்டும் பொறுப்பான தாய்மை, ஆபத்துகளிலிருந்து தன் பிள்ளைகளைக் காப்பாற்றி அரவணைக்கும் பரிவு போன்றவை படைப்பிற்கேயுரிய பெருமைகள்.

நிரம்பப் படித்த ஆச்சார்யார்கள் இடம், பொருள் அறிந்து பேசுபவர்கள். அதுவும் காலமறிந்தே தங்கள் பேச்சுகளை புரளவைப்பார்கள். அதில் ஆழ்ந்த அனுபவமும் நைச்சியமும் தேர்ச்சியும் நிரம்பக் கொண்டவர்கள். லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் பேச்சில் கண்ணியத்தையும் கையாள்வதில் வல்லவர். மாத்வ மதம் பரந்துவிரிந்த சாத்வீக சாமராஜ்யம். அதன் பீடத்தின் தலைமைப் பொறுப்பென்பது மிக உயரிய ஒன்று. ஆண்டவனுக்கு நிகரான அந்தஸ்தைக் கொண்டது. மகாபவித்திரமான, பூர்வஜென்ம புண்ணியப் பலன்களைக் கணக்கற்றுப் பெற்று, தெய்வங்களது ஆசிபெற்றவருக்கே பீடத்தின் பொறுப்பேற்கும் மகா பாக்கியம் அமையும். தன்னிடம் பயின்ற அளப்பரிய சக்திகொண்டு விசேஷ ஞானம் பெற்ற மகாஞானியிடம் உரையாடுகிறோம் என்ற கவனமான உணர்வோடு பேசுகையில், "உங்களது புதல்வன்' என்பதை நேரிடையாகச் சொல்வதைத் தவிர்த்து "சரஸ்வதியின் மைந்தன்' என்று திறம்பட உறவை வெளிப்படுத்தினார்.

ஆனாலும்கூட சூழ்நிலை மற்றும் பேச்சு, அதனூடே நிலவும் பந்தம், உறவென்பது ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஒன்றனா லும், என்னதான் பீடாதிபதியாக இருப்பினும், எதிரே ஒரு பிள்ளையை நிற்கவைத்து தன் மகன் என்ற உறவு நிலையை சூசகமாக உணரவைத்தது ஸ்வாமிகளை சட்டென்று தடுமாற வைத்தது. தாயுமின்றி தகப்பனுமின்றி இந்த பிள்ளை, புத்தி யோசிக்கிற வயதில் வதைபடும் மனோநிலையை ஸ்ரீராயர் மட்டுமல்ல; லக்ஷ்மி நரசிம்மாச்சார்யாரும் உணர்ந்தே இருந்தார் அந்த கையறு சூழ்நிலை மிக கவனமான மற்றும் கனமானதொன்றாகிவிட்டது.

""சரி ஆச்சார்யரே. மடம் இவர்களின் வித்யா விலாசத்தை மேம்படுத்தும். ஆனால் இங்கு பாரபட்சம் காட்டப்படாது என்பது முக்கிய விதி. ஆண்டவன் போன்றதே கல்வியும். அதற்குரிய மரியாதை கொடுப்பதிலும் அனைவரும் போஷிக்கப்பட வேண்டுமென்பது மாறாத ஒன்று. சலுகைகள் காட்டப்படாது.

ஆனால் வித்யா மேன்மை பெறும் எவர் ஒருவராக இருந்தாலும், அதற்குரிய மரியாதையை மடம் நிச்சயம் கொடுத்து கௌரவிக்கும். அனைத்தும் அனைவருக்கும் சமம். இதை பயிலவரும் மாணாக்கர்கள் தனது மனதில் உணர்ந்து நடப்பது இங்கு காலம் காலமாக நடந்தேறிவருகிறது. ஆச்சார்யார் ஸ்ரீமத்வரின் காலத்திலிருந்து இது மாறாத விதி. மேலும் எத்தனை மாணவர்கள் வந்தாலும் மடம் அவர்களை ஏற்றுக்கொள்ளும்!'' என்றார் ஸ்ரீராயர்.

""ஆஹா. எவ்வளவு சிரேஸ்டமான வார்த்தைகள். நான் தங்களோடு வெகு காலம் இருந்தபோதும், இவ்வளவு அற்புதங் கள் தங்களுக்குள் புதைந்துள்ளதை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிகிறது. தங்களது அந்த நேரத்து அண்மையைப் பெற, அந்த ஸ்ரீஹரி எனக்கு அனுக்கிரகம் செய்ததை நான் பெரும் பாக்கியமாய் எண்ணுகிறேன். உயரிய அந்தஸ்தினில் செல்லச்செல்ல, அனைத்துமே தங்களிடம் கனிந்து, பேச்சினில் அதை வெளிப்படுத்தும் பாங்கில் தராசின் தன்மை... ஆஹா... ஆஹா! ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ... ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ'' என்று பெரும் உணர்ச்சிவசத்தில் மறுபடி தனது சாஷ்டாங்க நமஸ்காரத்தைச் செலுத்தினார் நரசிம்மாச்சார்யார். ஸ்ரீராயர் கரங்களைத் தூக்கி ஆசிர்வதிக்க, விழிகள் மெல்ல மூட, தான் இந்த மட பீடாதிபதி என்ற அந்த ஒற்றை உணர்வை மட்டுமே யோசனையில் தாங்கி, மனதை ஸ்ரீமன் நாராயணனிடம் கொண்டுசென்று தியானத் தில் ஆழ்ந்துபோனார்.

அவரது பூர்வாஸ்ரம தமையனா ரான குருராஜாச்சார்யார் கண்கலங்கினாலும், அதில் பெருமிதம் கலந்தி ருக்க, தன்னருகே நின்றிருக்கும் மற்றவர்களுக்கும் சைகை செய்து தன்னோடு ஸ்ரீராக வேந்திரரை வணங்கி எழுந்தார். ஸ்ரீராகவேந்திரரின் விழிகள் இன்னும் மூடியபடியே இருந்தது. சந்நியாச தர்மத்திற்குத் தன்னை அர்ப்பணித்துவிட்ட அந்த கருணா பர்வதம் சற்று சில நொடி கலங்கினாலும் தன் நிலையில் எப்போதும் விழிப்புடன் இருந்ததனால் பிசிறளவும் பிசகாது நிலைநின்றார். அன்றிலிருந்து தன் பிருந்தாவனப் பிரவேசம் வரையிலான நாட்கள்வரை உறவுகளுக்கு சலுகை காட்டாது விலகியே வலம்வந்தார்.

அன்றைய காவிரி விரிந்து அகன்று நீண்டு பிரவகித்து, தன்னிரு கரைகளிலும் உள்ள பூமியை வளப்படுத்தும் செயலை தாயுள்ளத்தோடு தடங்கலின்றி செய்து வந்தாள். ஸ்நானம் செய்யவும், தாகம் தீர்க்கவும், அபிஷேகத்திற்கும் அர்க்கியம் விடவும், உழவுக்கும், சமையலுக்கும் என்று அந்த தூய காவிரி பல பரிமாணங்களில் பயன்களை அள்ளியள்ளித்தந்து கொண்டே யிருந்தாள்.

ஸ்ரீராகவேந்திரரின் புகழ் தேசம் கடந்திருந்தது. மதம் கடந்திருந்தது. மனம் கடந்திருந்தது. அவரைப் பற்றிப் பேசாத பட்டினமில்லை என்கின்றபடிக்கு, அவரது ஞானவீச்சு பிரம்மாண்டமானதாயிருந்தது. ஸ்வாமிகளின் பேரருளை நேரில் காண பல தேசங்களிலிருந்தெல்லாம் மக்கள் வந்து அவரது தரிசனம் கண்டு, அவரின் பேரருளில் மூழ்கி திக்குமுக்காடித்தான் போயினர்.

அன்று கன்னட தேசத்திலிருந்து மூன்று அந்தணர்கள் தமிழகம் வந்து, குடந்தையில் ஸ்ரீராகவேந்திரரை தரிசிக்க வந்திருந்தனர்.

நெடுந்தொலைவிலிருந்து பயணப்பட்டு வந்திருந்தவர்கள் தங்கள் களைப்பை காவிரியில் குளித்து கரைத்துக் களித்தனர்.

அவர்கள் மனதினில் ராகவேந்திரரை தரிசிக்கப்போகும் மகிழ்ச்சியும் ஆவலும் மேலோங்கியிருந்தது. அப்போது அருகில் நீரில் மூழ்கி எழுந்தவரிடம் மூன்று அந்தணர் களில் ஒருவர் கேட்டார்: ""ஸ்ரீராகவேந்திரர் மடம் வெகுதொலைவா நண்பரே!''

""இல்லை. நீங்கள் இப்பகுதியைச் சேர்ந்தவர் இல்லையென்று நினைக்கிறேன். பேசும் தமிழும் தடுமாற்றமாயிருக்கிறதே.''

""ஆம். நாங்கள் கன்னட தேசத்திலிருந்து ஸ்ரீராயரைக் காணும் ஆவலில் இங்கு வந்துள்ளோம். ஐயனை இன்று தரிசிக்க முடியுமா?''

""முடியும் முடியும். ஸ்வாமிகள் தற்போது எங்கும் பயணப்படவில்லை. தஞ்சை சென்று திரும்பி சில மாதங்களேயாயிற்று.''

""நல்லது நல்லது. தாங்கள் எங்களுக்கு மடம் செல்ல வழிகாட்ட இயலுமா?''

""அதற்கு வாய்ப்பில்லாதபடிக்கு ஸ்வாமிகளின் சீடரே அதோ வந்து கொண்டிருக்கிறார். ஸ்வாமிகளின் காஷாய வஸ்திரத்தைத் துவைத்து, அவரும் குளித்து மடியுடன் கரையேறுவார். அவரைத் தொடர்ந்தாலே மடம் சென்றடையலாம்.''

ragavender

""நன்றி. நல்ல நேரத்தில் உங்களது பேச்சு உதவியாய் இருந்தது. ம்... சரி. அந்த சீடர் குளித்துத் துவைத்துக் கரையேறும்முன் நாம் தயாராய் இருந்தால் அவருடனேயே நடந்துவிடலாம்'' என்றார் ஒரு அந்தணர்.

மற்றொருவர், ""சரியப்பா... ஸ்ரீராகவேந்திரர் அபரோஷித ஞானி; முக்காலம் உணர்ந்தவர் என்றெல்லாம் பேசுகிறார்களே. நாம் அவரின் சக்தியை நேரில் உணர்ந்ததும் இல்ல; கண்டதுமில்லை. நாமே அதை சோதித்துப் பார்த்தால்தான் என்ன?'' என்றார்.

""இதென்ன விபரீதப் போக்கு. விளை யாடுகிறாயா? ஸ்வாமிகளை சோதிக்குமளவு நீ உயர்ந்தவனா. வாயை மூடு.''

""அடடா... நீ தவறாக எண்ணிவிட்டாய். அவரின் அற்புதத்திற்கு நாமும் பாத்திர மாவோம் என்ற அடங்காத ஆவலில்தான் நான் கேட்டது. அவரைப்போய் நான் பரீட்சித்துப் பார்க்க எனக்கேது அருகதை?''

""நீ என்னதான் சொல்ல வருகிறாய்?''

""நான் சொல்வது சிறுபிள்ளைத்தனமாகக்கூட இருக்கலாம். ஆனால் விடை கிடைத்து அதன்மூலம் வெளிப்படும் அற்புதம் பேரானந்தம். அதைப் பெறும் நாம் பரமானுக்கிரகம் பெறும் பாக்கியசாலிகள். நான் சொல்லவருவது புரிகிறதா?''

""சுற்றிவளைத்து மூக்கைத் தொட வேண்டாம். சீக்கிரமாகக் கூறு.''

""நாம் இப்போது மடம் செல்லப் போகிறோம். நண்பகல் நெருங்கிவிட்டது. உணவு வேளையாய் இருப்பதால் நாம் அங்கேயே பிரசாத உணவு எடுத்துக் கொள்வோம். நாம் மூவரும் தனித்தனியே மூன்றுவகையான பட்சணங்களை மனதுள் நினைத்துக்கொள்வோம் அது மடத்தில் நமக்குப் பரிமாறப் படுமா என பார்ப்போம்.''

""நீ பேசுவது ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இல்லையே.''

""நீ ஏன் அப்படி நினைக்கி றாய்? மகான் அதை எப்படியேனும் தொடர்புப்படுத்திவிடுவாரல் லவா. எனக்குப் பிடித்ததை நான் நினைத்துக் கொள்கிறேன்.''

""நானும் நினைத்துக் கொள்கிறேன்''

என்றார் மற்றொருவர். ""எனக்குப் பிடித்ததை நானும் நினைத்துக்கொண்டேன்'' என்றார் இன்னொருவர்.

""ஆஹா! நீங்கள் எண்ணியபடியே உங்களுக்கு உணவில் அவை கிடைக்கும்'' என்ற உரத்த குரல் கேட்டது. மூவரும் திரும்பிப் பார்க்க, பேசுவது கேட்காத தொலைவில் காவிரி நீரில் ஸ்வாமிகளின் வஸ்திரத்தை அலசிப்பிழிந்து கொண்டிருந்த அந்த சீடன்தான் அங்கிருந்து சப்தமிட்டான் என்று தெரிய, மூவரும் விழித்தனர். சீடன் தோளில் ஈர வஸ்திரத்தைச் சுமந்து கரையேறி துணிகளை உதறிப் பரப்பினான். அருகில் சென்ற மூன்று அந்தணர்களும், ""நாங்கள் பேசியதை நீங்கள் கேட்பதற்கு வாய்ப்பில்லை. தூரமும் ஒரு முக்கிய காரணம். மெல்லிய குரலில் பேசினோம் என்பதும் முக்கியமான ஒன்று. அப்படி யிருக்க சரியாக எப்படி உங்களால்...''

""இருங்கள். நீங்கள் என்ன பேசினீர்கள்? நான் என்ன சொன்னேன்? விளங்கவில்லையே'' என்றவன் மறுபடி காவிரியில் இறங்கிக் குளிக்கலானான்.

இவர்கள் ஏதும் புரியாது வாயடைத்து நிற்க, குளித்துக் கரையேறிய சீடன் வஸ்திரத்தை பக்தியுடன் மடித்துவைத்து கிளம்பும்முன், ""நீங்கள் நினைத்துக்கொண்டபடியே பட்சணங்கள் உங்களுக்குக் கிடைக்கும்'' என்று கூறியபடி கிளம்ப, இவர்கள் மறுபடி ஆச்சரியமானார்கள். அப்போதுதான் ஒன்று அவர்களுக்கு விளங்கியது.

குருராயரின் வஸ்திரத்தை அவன் ஸ்பரிசித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவனால் இப்படி துல்லியமாக தீர்க்கமுடன் பேசமுடிந்ததென்று எண்ணி வாயடைத்துப் போனார்கள். சீடனைத் தொடர்ந்து சென்றவர்கள் மடத்தை அடைந்தனர். நேரே ஸ்வாமிகளின் தரிசனம் காண பிரதான மண்டபத்தைக் கண்டு உள்செல்ல, அங்கு ஸ்வாமிகள் மூலராமர் பூஜையினை முடித்து ஆரத்திக்கு ஆயத்தமாகிக் கொண்டி ருந்தார்.

நெற்றியில் சந்தனக்கீற்று. மேனியினில் ஆங்காங்கே திருச்சின்னங்கள். காவி வண்ண உடையணிந்து அவர் பூஜிப்பது, ராமசூரியனை ராகவேந்திர சூரியன் பூஜிப்பதுபோல இருந்தது. மங்களாரத்தி முடித்து தீர்த்தமும் மந்த்ராட்சதையும் கொடுக்கலானார். மூவரும் கூட்டத்துடன் வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர். ஸ்ரீராயர் அவர்களை நிமிர்ந்து பார்த்தவர் மெல்லியதாய்ப் புன்னகைத்தார்.

அனைத்து பக்தர்களும் மடத்தினினுள் அன்னதானம் நடந்துகொண்டிருந்த இடத்தில் சென்று அமர்ந்தனர். அந்த மூன்று அந்தணர்களும் அடுத்தடுத்து வரிசையாக உட்கார, இலை போடப்பட்டது. என்ன ஆச்சரியம்! மூவரும் எண்ணிய பட்சணங்கள் முறையே லட்டும் ஜிலேபியும் போளியும் அவரவர்க்கு தனித்தனியாகப் பரிமாறப்பட்டது. அவர்கள் சந்தோஷத்தில் அதிர்ந்தனர். எங்கோ தூர தேசத்திலிருந்து வந்திருந்த- சுவாமிகளின் முகத்தைக்கூட பார்த்ததேயிராத அந்த அந்தணர்கள் ஸ்ரீராகவேந்திரரின் மகிமையை நேரில் அனுபவித்து உணர்ந்து கையெடுத்து வணங்கினர். காவிரிக்கரையில் ஸ்வாமி களின் காஷாய வஸ்திரத்தைத் தொட்டுக் கொண்டிருந்த சீடன், இவர்கள் மனதுள் நினைத்ததை அக்கணத்திலேயே அசரீரி போன்று கூறியபோதே ஆச்சரியப்பட்டுப் போனவர்கள், இப்போது உணவில் அவரின் அருள் நேரில் வெளிப்பட்டதைத் தங்களின் பாக்கியமாகக் கருதினர். பந்தி நடந்துகொண்டிருந்த அவ்விடத்தில் ஸ்வாமிகள் நேரில் வந்து, அன்னவிசாரம் செய்து நடந்து வந்தார். இவர்களது அருகில் வந்தவர் நின்று நிதானித்து, ""என்ன, திருப்தியாயிற்றா? நீங்கள் விரும்பிய படி உணவில் திருப்தியானது கிடைத்ததா? சந்தோஷம்தானே?'' என்றார். ஆனந்தக் கண்ணீர் மல்க, ""எங்களை மன்னித்துவிடுங்கள் ஸ்வாமி'' என்று சாஷ்டாங்கமாக வணங்கினர்.

""அடடா... நீங்கள் ஏதும் தவறிழைக்க வில்லையே. அபரோக்ஷித ஞானத்தைப் பற்றிய விளக்கத்தை நீங்கள் எளிய முறையில் கேட்க மனதுள் நினைத்துக் கொண்டேயிருந்தீர்கள். அதை உணவின் மூலமாக உணர்த்திவிட்டேன். அவ்வளவே'' என்றவர் சிரித்தபடி இருகரம் தூக்கி ஆசிர்வதித்தார்.

""நீங்கள் கள்ளம் கபடமற்றவர்கள். மிகவும் இளகிய மனத்தவர்கள். அகங்காரமும், ஆரவாரமும் இல்லாதவர்கள். நான் எனது கடமைகளை முடித்து, ஜீவனுடன் பிருந்தாவனத்துள் அமரபோகும் காலத்திற்குப்பின், அதனைப் பூஜிக்கும் உரிமையினை உங்களுக்கு அளிக்கின்றேன்'' என்றவர், அதனை சாசனமாக பட்டயம் எழுதிக்கொடுக்க, அவர்களுக்குப் புளங்காகிதமாகிப் போனது.

அதற்குள் இந்த அற்புதம் ஊரெங்கம் பரவியது. ஸ்வாமி களின் மகிமை பரவசமாகப் பேசப்பட்டாலும், அவர் ஜீவனுடன் பிருந்தாவனம் அமரப் போகும் விஷயம் மக்கள் நடுவில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. மக்கள் அந்த விஷயத்தை முதலில் புரளி என எண்ணினர்.

பிறகு ஊர்ஜிதமானதும் பெரிதும் துக்கமாயினர். ஸ்வாமிகளிடமும் இதுபற்றிக் கேட்க மரியாதை நிமித்தம் தயங்கி னாலும், அவர் திருமுகத்தை மறுபடி மறுபடி காண மனதுள் ஆவல் பெருக, தினம் தினம் மடத்திற்கு வரலாயினர். ஜனத் திரள் அதிகமாயிற்று. அன்று கூட்டம் கட்டுக்கடங்காது இருந்தது. ஸ்வாமிகள் எல்லாருக்கும் மந்த்ராட்சதை கொடுத்தபிறகு அருளுரையாற்றினார்.

""என் அருமை பக்தர்களே, அன்பான மக்களே. ஒரு எறும்புக்கும் ஈக்கும் உள்ள உயிர் என்பது மனிதனுக்கும் உண்டு. உயிர் பொதுவானது. ஸ்ருஷ்டியில் உயிர் பேதமில்லை என்பதை மனதுள் உணர்வீர் களாக. உங்களுக்குள் இருக்கும் உயிர்தான் எறும்புக்கும் உண்டு. அதனுள் இருக்கும் உயிர்க்காற்று யானைக்கும் உண்டு.

அதன் உயிர்க்காற்று சிறகடிக்கும் தேனீக்கும் உண்டு. தேக மாற்றம் மட்டும் உண்டேதவிர உயிரில் பேதமல்லை. இப்பிறவில் ஒருவர் ஆணாக இருக்கலாம். அடுத்த பிறவியில் அந்த உயிர்க்காற்று பெண்ணின் தேகத்தைத் தாங்கலாம். ஆண்டவன் புண்ணியங்களின் அடிப்படையிலேயே பிறவியினை நிர்ணயிக்கிறான். இந்த மனிதப் பிறப் பென்பது மகாசிரேஷ்டமானது.

வந்துவிட்டதும் வரமுடியாததும், தந்துவிட்டதும் தரவே முடியாததும், வந்துபோனதும் வரப்போவதும், தரப்போவதும் தராமல் போவதும், தீர்ந்து போவதும் தீர்க்கவே முடியாததும், கொடுக்கப்பட்டதும் கொடுக்க முடியாததும், பெறப்பட்டதும் பெறவே முடியாததும், கண்டுவிட்டதும் காணவே முடியாததும், கிடைத்துவிட்டதும் கிடைக்கப் போவதும் கிடைக்காமல் போவதும், இழந்துவிட்டதும் இனி இழக்கப்போவதும் இழக்காமல் போவதும் என்று வாழ்க்கையில் பற்பல நிலைப்பாடுகள் மாறிக் கொண்டேதான் இருக்கும். வாழும் நாட்களில் ஒவ்வொரு வார்த்தையும் அந்தந்த நேரத்திற்கு மாறுகின்ற அர்த்தங்கள் அல்லது முனைந்து மாற்றுகின்ற சொற்கள் பலரை வியப்பாக்கலாம். அதில் பல புதிர்களை நம்மையறியாமல் நாமேதான் உருவாக்கிக்கொள்கிறோம். ஸ்ரீமன் நாராயணனான அந்த ஹரி ஸர்வோத்தமர் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார். இதில் ஒவ்வொருவரின் துல்லியமான விஷயங்கள் அவர் அறியாததல்ல. அவரவர் நற்செயல்களுக்கான காலக்கணக்கு அவருக் குத் தெரியும். அதன்படிக்கு ஒவ்வொருவருக் கான விடையினையும் அவர் முன்கூட்டியே அடுத்த பிறவிக்கு, அது அவரவர்களுக்கென்று விதியாய்த் தீர்மானித்து நிர்ணயம் செய்கின் றார் என்பதனை உணர்ந்து, வாழ்க்கையினை சத்தியத்துடன் நகர்த்துங்கள். சத்தியத்தோடு ஒவ்வொரு நாளும் வாழுங்கள். அந்த உண்மைத் தன்மையே ஆண்டவன் அருகில் உங்களை உட்கார வைத்துவிடும்.''

ஸ்ரீராகவேந்திரரின் அன்றைய அருளுரை மிகவும் ஆழமாகவும், பெரும் தத்துவங்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது. வாழ்நாள் முழுக்க ஒருவன் எப்படி இருக்கவேண்டுமென்ற சகல லட்சணங் களையும் போதிப்பதாக இருந்தது.

om010319
இதையும் படியுங்கள்
Subscribe