ஸ்ரீராகவேந்திர விஜயம்! 18

/idhalgal/om/ragahavendra-vijayam-18

மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!

அரக்கோணம் கோ.வீ. சுரேஷ்

இரண்டாம் பாகம்

18

""யக்ஞோபவீதம்கூட இல்லை. புதிதாய் வாங்க வேண்டும். இந்த கம்மலுக்கு ஈடான பணம் கொடு'' என பிராமணர் கேட்டதை, எங்கோ யாரோ யாரிடமோ பேசுவதாய் சீனப்ப நாயக்கிற்குத் தோன்றியது.

""என்ன ஸ்வாமி... நான் பேசுவது ஏதும் உமது செவியில் ஏறவில்லையோ? பணம் வந்தவுடனே நான் பல வேலைகளைப் பார்க்க வேண்டியுள்ளது. நிறைய பணம். அது வந்தவுடன் நான் இந்த குடும்ப விழாவை தடபுடலாய்ச் செய்ய நினைக்கிறேன். வாத்தியாருக்கும் நிறைய சம்பாவனை மரியாதை செய்யவேண்டும். பருப்பு, நெய்யுடன் பலவகை பலகாரங்களுடன் அனைவரையும் அழைத்து வயிறார உணவிட வேண்டும். முடிந்தால்... முடிந்தால் என்ன... முடியும்! பலருக்கும் நல்ல நல்ல தானங் கள் செய்யவேண்டும். மனதில் இன்னும் என்னென்ன செய்யத் தோன்றுகிறதா அனைத் தையும் செய்துவிட வேண்டும். அதுதான் நிறைய பணம் வரப்போகிறதே...'' அவர் பட்டியலை அடுக்கிக்கொண்டேயிருக்க... சீனப்ப நாயக்கின் மனது...

ஒருவேளை இவர் இல்லம் புகுந்து திருடியிருப்பாரோ. ஆம்... அப்படிதான் இருக்கவேண்டும். ஒற்றைக் கம்மல். இந்தப் பொழுது ஒற்றைக்கம்மலை யாரும் கொடுக்க வாய்ப்பில்லை. மேலும் இது என் மனைவி யுடையது. "இதைப்போன்று இன்னொன்றை அந்த பொற்கொல்லர் செய்யவில்லை' என்று தனது மாமனார் கூறியது அவருக்கு ஞாபகம் வர, ஒரு முடிவுக்கு வந்தவர்...

""அன்பரே... நீர் கூறுவது உண்மைதான். இதற்கு நிறையவே பணம் தரவேண்டியுள்ளது. எனது வீட்டிற்குச் சென்று கொண்டு வருகிறேன். அதுவரை நீர் உள்ளே அறையில் இளைப்பாறிக்கொண்டிருங்கள். வருகிறேன்'' எனக் கூறி, அவருக்குத் தெரியாதபடிக்கு அறைக்கு வெளியில் பூட்டிவிட்டு, அந்த ஒற்றைக்கம்மலை ஒரு பெட்டிக்குள் வைத்து, அதையும் மற்றொரு பெட்டிக்குள் வைத்து- இப்படி பத்து பெட்டிக்குள் வைத்துப் பூட்டி வியர்க்க விறுவிறுக்க வீட்டிற்கு வந்தவர்... மனைவியைப் பதட்டத்துடன் அழைத்தார்.

""லட்சுமி... இங்கே வா...'' என்ற கணவரது குரல் கேட்டு ஓடிவந்தவள், ""இன்னும் சமையல் முடியவில்லை ஸ்வாமி. சற்று ஓய்வெடுங்கள். வந்துவிடுகிறேன்'' என்றாள்.

""நான் அதற்காக வரவில்லை. எங்கே உனது காதணிகள்? வெறுமனே இருக்கின்றனவே'' என்ற கணவரின் கேள்விக்கு பெரும் பதட்டமானாள்.

"ஸ்ரீமன் நாராயணா! இதென்ன சோதனை? தானமும் கொடுக்கச் செய்து என்னை சங்கடத்தில் ஆழ்த்தியதோடல்லாது, அன்பான கணவரிடம் பொய்யுரைக்க வேண்டுமோ...'

""என்ன... பதிலே இல்லை?''

""ஸ்நானம் செய்யும்போது எண்ணெய் இறங்கிவிடும் என்று கழற்றி வைத்துள்ளேன்.''

""சரி, அதைக்கொண்டு வா...''

"நாராயணா... இதென்ன சோதனை? இத்தனை நாள் இல்லற வாழ்வில் அறம் மீறாது ஒன்றிணைந்து, இல்லறதர்மம் மீறாத அன்பான கணவரிடம் பொய்யுரைத்து நான் உயிர் வாழலாகாது' என நினைத்த லட்சுமிபாய், ஒரு காதணியிலிருந்த வைரத்தைப் பொடித்து பாலில் கலந்து அருந்த நினைத்து கம்மலை எடுக்க, அது நழுவிப்பாலில் விழுந்தது. விரல் விட்டு எடுக்க முயல, ஆச்சரியம்! கைகளில் இரண்டு கம்மல்களாக வந்தன. லட்சுமிபாய்க்கு ஆனந் தக் கண்ணீர் வந்தது. "ஆண்டவா! நன்றி நன்றி' என்று கையெடுத்து வணங்கியவள் வேகமாக வெளியில் சென்று கணவரின் கரங்களில் சேர்ப்பித்தாள். சீனப்ப நாயக் நெற்றி சுருக்கினார்.

""நீ வெகுநேரம் கழித் தல்லவா வெளியில் வந்தாய்? சொல் லட்சுமி... என்மீது ஆணை. உண்மையைச் சொல். இதேபோன்ற ஒற்றைக்கம்மலை எப்படி ஒருவர் எனது கடைக்குக் கொண்டுவர இயலும்? சொல்... சொல்...'' என்றவரின் குரல் உ

மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!

அரக்கோணம் கோ.வீ. சுரேஷ்

இரண்டாம் பாகம்

18

""யக்ஞோபவீதம்கூட இல்லை. புதிதாய் வாங்க வேண்டும். இந்த கம்மலுக்கு ஈடான பணம் கொடு'' என பிராமணர் கேட்டதை, எங்கோ யாரோ யாரிடமோ பேசுவதாய் சீனப்ப நாயக்கிற்குத் தோன்றியது.

""என்ன ஸ்வாமி... நான் பேசுவது ஏதும் உமது செவியில் ஏறவில்லையோ? பணம் வந்தவுடனே நான் பல வேலைகளைப் பார்க்க வேண்டியுள்ளது. நிறைய பணம். அது வந்தவுடன் நான் இந்த குடும்ப விழாவை தடபுடலாய்ச் செய்ய நினைக்கிறேன். வாத்தியாருக்கும் நிறைய சம்பாவனை மரியாதை செய்யவேண்டும். பருப்பு, நெய்யுடன் பலவகை பலகாரங்களுடன் அனைவரையும் அழைத்து வயிறார உணவிட வேண்டும். முடிந்தால்... முடிந்தால் என்ன... முடியும்! பலருக்கும் நல்ல நல்ல தானங் கள் செய்யவேண்டும். மனதில் இன்னும் என்னென்ன செய்யத் தோன்றுகிறதா அனைத் தையும் செய்துவிட வேண்டும். அதுதான் நிறைய பணம் வரப்போகிறதே...'' அவர் பட்டியலை அடுக்கிக்கொண்டேயிருக்க... சீனப்ப நாயக்கின் மனது...

ஒருவேளை இவர் இல்லம் புகுந்து திருடியிருப்பாரோ. ஆம்... அப்படிதான் இருக்கவேண்டும். ஒற்றைக் கம்மல். இந்தப் பொழுது ஒற்றைக்கம்மலை யாரும் கொடுக்க வாய்ப்பில்லை. மேலும் இது என் மனைவி யுடையது. "இதைப்போன்று இன்னொன்றை அந்த பொற்கொல்லர் செய்யவில்லை' என்று தனது மாமனார் கூறியது அவருக்கு ஞாபகம் வர, ஒரு முடிவுக்கு வந்தவர்...

""அன்பரே... நீர் கூறுவது உண்மைதான். இதற்கு நிறையவே பணம் தரவேண்டியுள்ளது. எனது வீட்டிற்குச் சென்று கொண்டு வருகிறேன். அதுவரை நீர் உள்ளே அறையில் இளைப்பாறிக்கொண்டிருங்கள். வருகிறேன்'' எனக் கூறி, அவருக்குத் தெரியாதபடிக்கு அறைக்கு வெளியில் பூட்டிவிட்டு, அந்த ஒற்றைக்கம்மலை ஒரு பெட்டிக்குள் வைத்து, அதையும் மற்றொரு பெட்டிக்குள் வைத்து- இப்படி பத்து பெட்டிக்குள் வைத்துப் பூட்டி வியர்க்க விறுவிறுக்க வீட்டிற்கு வந்தவர்... மனைவியைப் பதட்டத்துடன் அழைத்தார்.

""லட்சுமி... இங்கே வா...'' என்ற கணவரது குரல் கேட்டு ஓடிவந்தவள், ""இன்னும் சமையல் முடியவில்லை ஸ்வாமி. சற்று ஓய்வெடுங்கள். வந்துவிடுகிறேன்'' என்றாள்.

""நான் அதற்காக வரவில்லை. எங்கே உனது காதணிகள்? வெறுமனே இருக்கின்றனவே'' என்ற கணவரின் கேள்விக்கு பெரும் பதட்டமானாள்.

"ஸ்ரீமன் நாராயணா! இதென்ன சோதனை? தானமும் கொடுக்கச் செய்து என்னை சங்கடத்தில் ஆழ்த்தியதோடல்லாது, அன்பான கணவரிடம் பொய்யுரைக்க வேண்டுமோ...'

""என்ன... பதிலே இல்லை?''

""ஸ்நானம் செய்யும்போது எண்ணெய் இறங்கிவிடும் என்று கழற்றி வைத்துள்ளேன்.''

""சரி, அதைக்கொண்டு வா...''

"நாராயணா... இதென்ன சோதனை? இத்தனை நாள் இல்லற வாழ்வில் அறம் மீறாது ஒன்றிணைந்து, இல்லறதர்மம் மீறாத அன்பான கணவரிடம் பொய்யுரைத்து நான் உயிர் வாழலாகாது' என நினைத்த லட்சுமிபாய், ஒரு காதணியிலிருந்த வைரத்தைப் பொடித்து பாலில் கலந்து அருந்த நினைத்து கம்மலை எடுக்க, அது நழுவிப்பாலில் விழுந்தது. விரல் விட்டு எடுக்க முயல, ஆச்சரியம்! கைகளில் இரண்டு கம்மல்களாக வந்தன. லட்சுமிபாய்க்கு ஆனந் தக் கண்ணீர் வந்தது. "ஆண்டவா! நன்றி நன்றி' என்று கையெடுத்து வணங்கியவள் வேகமாக வெளியில் சென்று கணவரின் கரங்களில் சேர்ப்பித்தாள். சீனப்ப நாயக் நெற்றி சுருக்கினார்.

""நீ வெகுநேரம் கழித் தல்லவா வெளியில் வந்தாய்? சொல் லட்சுமி... என்மீது ஆணை. உண்மையைச் சொல். இதேபோன்ற ஒற்றைக்கம்மலை எப்படி ஒருவர் எனது கடைக்குக் கொண்டுவர இயலும்? சொல்... சொல்...'' என்றவரின் குரல் உச்சத்திற்குச் சென்றது.

""என்னை மன்னித்து விடுங்கள் ஸ்வாமி'' என்றவள் அனைத்தும் கூற, ஆச்சரிய மானவர் உடனே தனது கடைக்கு ஓடினார். பூட்டைத் திறந்து பார்க்க, உள்ளே பெரியவர் இல்லை. அவர் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு வெளிச்சக் குவியல் குழுமி யிருக்க, கண்கலங்க நெக் குருகி வணங்கினார். ""இறைவா!

இது எதற்கான திருவிளையா டல்? என் மனைவி பற்றி எனக்கறிவிக்கவா. எனக்குப் பாடம் கற்பிக்கவா. என்னை மன்னித்தருளுங்கள். ஏனிந்த பாராமுகம்... ஆண்டவனே, இதுநாள்வரை உன்னையா நான் அலைகழித்தேன்! இந்த அற்பனிடம் ஏனிந்த நாடகம்...'' என்று தலையைத் தரையில் மோதிக் கதறியழுதார்.

அப்போது அசரீரி வாக்கு, ""சீனப்பா, உன்னை ஆட்கொள்ளவே யாம் வந்தோம். நீ தெய்வாம்சம் பொருந்தியவன். ஜென்ம வினை காரணமாகவே கருமித்தனம் கொண்டிருந்தாய். நிலையற்ற செல்வம்மீது நீ கொண்ட பற்றை நீக்கி நிலையாமையை உணர்த்தினோம். பூர்வ புண்ணியம் காரணமாக குருவானவர் உன்னை உனக்கு உணர்த்துவார். செல்வம் நிலையற்றது. இதையுணர்ந்து, இறை யுணர்ந்து, இனி நீ எல்லாருக்கும் இறை யுணர்த்து'' என்றது.

""ஆஹா... இறைவா! எனக்காகப் பேசினாயா? இதுதான் உனது குரலா? எனக் காக என் பொருட்டு மனதிரங்கினாயா. இந்த அசடனை அன்பால் இளக்கினாயா. நான் எப்பேற்பட்ட பாக்கியசாலி. இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு. இந்த அனுபவமே போதும் இந்தப் பிறவி முழுக்க...''

அன்றே அனைத்து அபரிதமான செல்வங் களையும் முழுமையாக தானமளித்தார். இயற்கையிலேயே பாடும் ஆற்றல்பெற்ற சீனப்ப நாயக், கையில் தம்பூரா ஏந்தி வீதியில் இறங்கி இறைநாமத்தின் பெருமைகளைக் கேட்பவர்கள் மெய்யுருகப் பாடி உஞ்சவிருத்தி செய்யலா னார்.

வழியில் எதிரே பெரும் பக்தர் கூட்டம் சூழ, தாசர் கள் பின்தொடர வந்த பெரும் துறவியினைக் கண்ணுற்றவர், அனிச்சையாக அவர் பாதம் பணிந்தார். கோடி சூரியப் பிரகாச தேஜஸில் ஜொலித்த அந்தத் துறவி வியாஸராஜ தீர்த்தராவார்.

அவரது பாதம் ஸ்பரிசித்தவுடன் சீனப் பரின் மேனி சிலிர்த்தது. வியாஸராஜ தீர்த்தர் நாயக்கின் சிரசைத்தொட, முன்ஜென்ம ஞாபகம் உணரப்பட்டது. இரண்ய கசிபுவின் மனைவி லீலாவதி கர்ப்பத்தில் இருந்த சிசுவுக்கு நாரதராய் தான் போதிப்பதை உணர்ந்தார்.

""அந்தப் பிறவியில் நான் சிசுவாய் இருந்து பெற்ற கடனை இந்தப் பிறவியில் போதித்து சமன்செய்ய இறைவன் செய்த திருவிளையாடல் இது. வாழ்வில் இறை யுணர்வைத் தவிர ஏதும் நிரந்தரமில்லை என புரிந்ததா புரந்தரா'' என்றழைத்து, அவரை சீடனாக ஏற்றுக்கொண்டார் வியாஸராஜ தீர்த்தர். சீனப்ப நாயக் அன்றிலிருந்து புரந்தர தாஸர் என்ற திருநாமத்துடன் அழைக்கப் பட்டார். அவர் இயற்றிய அபங்கங்கள் பக்திப்பெருக்குடன் இன்றளவில் கன்னட தேசத்தில் போற்றிப் பாடப்படுகின்றன. அவர் பாடிய நூற்றுக்கணக்கான அபங்கங்கள் தமிழகத்தில் பாடப்படும் பல சக்திவாய்ந்த கீர்த்தனைகளுக்கு நிகரானவை. வியாஸராஜ தீர்த்தரின் அற்புதங்கள் அநேகம் அநேகம். சக்தி வாய்ந்த அந்த மகானின் வரலாறு படிப்பதும் கேட்பதுமே மகாபுண்ணியம். இத்தொடரின் முடிவிற்குள்ளாக ஒருசில சிறப்பான, சிலிர்ப்பான நிகழ்வுகளைக் காண்போம்.

நவாப் சித்திக் மசூத் கானுக்கு ஸ்ரீராகவேந்திரர் திருவுளம்கொண்டு நிகழ்த்திய அற்புதம்கண்ட நாளிலிருந்து, அவர் ஸ்வாமிகள்மீது அளவற்ற மரியாதையும் பக்தியும்கொண்டு, அவரை தரிசிப்பதை ஆவலுடன் எதிர் நோக்கலானார். மக்கள் மனதில் தனக்கிருந்த உயர்வான எண்ணம் தன் தவறான செய்கையால் மாசுபடவிருந்த நிலையில், அந்தச் சூழலை ஸ்வாமிகள் லாவகமாக எதிர்கொண்டு பழுதில்லாமல் காப்பாற்றினார் என்பதனை எண்ணி யெண்ணி மனதுள் நன்றியுடன் தொழலானார்.

அன்று காலை தனது அலுவல்களை முடித்துக்கொண்டிருந்த திவான் வெங்கண்ணரிடம் வந்த சேவகன், "ஸ்ரீராக வேந்திரர் அனுப்பியதாக அவரது சீடர் அப்பண்ணாச்சாரியார் வெளியில் காத்திருக்கிறார்' என்று சொல்ல, ஓடோடி வந்து அவரை வரவேற்று ஆசனமளித்தார் திவான்.

""தங்கள் வரவு எனக்கு வெகு மகிழ்ச்சி யளிக்கிறது அப்பண்ணா அவர்களே. ஏதேனும் அருந்துகிறீர்களா?'' என்றவர் வெதுவெதுப்பான பால் கொண்டுவரப் பணித்தார். ""ஸ்வாமிகள் தங்கள்மூலம் என்னை

அழைத்த காரணம் என்னவென்று நான் அறியலாமா அப்பண்ணா அவர்களே...''

""என்னவென்று தெரியவில்லை. காலை பூஜை முடித்தவுடனேயே என்னை அழைத்து தங்களை நேரில் காணவேண்டுமென்ற தகவலை மட்டும் சொல்லிவரப் பணித்தார் திவான் அவர்களே'' என்றார்.

"ஏதேனும் பயணம் மேற்கொள்வாரோ. அதற்கான ஏற்பாடோ. நான் ஸ்வாமிகள் இன்னும் வெகுகாலம் தங்கியிருந்து அருள்பாலிக்க வேண்டுமென்று ஆசையில் இருந்தேன். மன்னருக்கும் ஸ்வாமிகள்மீது அபாரமான பக்தியும் அபரிதமான மரியாதை யும் மேலோங்கி இருக்கிறது. அவருக்கும் "ஸ்வாமிகளின் புறப்பாடு' என்ற வார்த்தை யினைக் கேட்டாலே போதும். துக்கமடைந்து விடுவார். என்னவாக இருக்குகம்?' நெற்றியில் சிந்தனை வரிகள் மெல்லமெல்ல உருவாக கவலையானார்.

""நீங்கள் நினைக்கும்படிக்கு புறப்பாடு இருக்காது என்பது என் எண்ணம்'' என்றார் அப்பண்ணா.

""எப்படிச் சொல்கிறீர்கள்?''

""நேற்று ஸ்வாமிகள் போதிப்பிற்குப் பிறகு பூஜைக்குப் பூக்கொய்யும் சீடன் ஸ்வாமிகளிடம், "இங்கு வெகு சொற்பமாகத் தான் துளசி கிடைக்கிறது. ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்வித்தால் பூஜைக்கு கால தாமதமாகாது' என்று கோரிக்கை வைத்தான். அதற்கு ஸ்வாமிகள், "கவலைப்படாதே. ஒரு மூன்று மாத காலம் பொறுத்துக்கொள். நாமே சிறிதளவு விதை தூவி வைப்போம். மூன்று மாதங்களில் நன்கு செழித்து கிளைத்துவிடும். முடிந்தால் செம்பருத்தி மற்றும் பிற மலர்ச்செடிகளையும் சிறிது வளர்க்க முயற்சி' என்று சொன்னார்.''

""அதனால்...''

""மூன்று நான்கு மாதங்களுக்குப்பிறகு மட்டுமல்ல; சற்றேறக்குறைய ஒரு வருட மேனும் ஸ்வாமிகள் இங்கு தங்கியிருப்பார். காரணம்...''

""காரணம்... காரணம் என்ன?''

rvv

""ஒரு வருட முடிவுக்குள் துளசி வனத்தை நான் பார்க்க முடியுமல்லவா என்ற அவரின் விழிகளில் விகசிப்பு மின்னியதை நான் கண்டேன் வெங்கண்ணரே. அந்த வருங்காலக் காட்சியினை நிகழ்காலத்திலேயே அவர் கண்டுவிட்டார். அந்த காட்சியில் பிழையில்லை என்ற பூரணத்துவத்தை அந்த சுந்தர முகத்தில் கண்டேன். எனவே ஸ்வாமிகள் இன்னும் ஒரு வருடமேனும் இங்கு தங்கியிருப்பார் என்பது தெளிவுறத் தெரிகிறது திவான் அவர்களே.''

""நல்ல செய்தி சொல்லியிருக்கிறீர்கள் அப்பண்ணா. இந்தப் பிரதேசமே சுபிட்சமும் சந்தோஷமும்கொண்டு இலங்கப்போகிறது. அனைத்து மங்களங்களும் அவர் அருளாலே. சரி... சரி... நான் உங்களுடனே வந்துவிடுகிறேன்'' என்றவர் தான் தரித்திருந்த "டர்பன்' என்கிற தலைப்பாகையினைக் கழற்றிவிட்டு அவருடன் புறப்பட ஆயத்தமானார்.

""மனித மனதுள் ஏற்படும் எண்ணங்கள் பல பரிமாணங்களாக அழைக்கப்படுகின்றன. எந்த ஒரு தனிப்பட்ட நபரும் அடுத்தவரின் வாழ்க்கையை முடிவுசெய்ய இயலாது. ஆண்டவன் ஒருவனே அனைத்திற்கும் நீதிபதி. நாம் அனைவருக்குமே இறைவன் "விதி' என்ற பொதுவான தலைப்பின் அடிப்படையிலேயே கண்காணிக்கிறான்.

எல்லாருமே அவனுக்குப் பொது. யாரையும் பாரபட்சம் கொண்டு அவன் படைத்துவிடுவதில்லை. நல்ல விழிகளையும் செவிகளையும் செவ்வாயினையும் அவன் நமக்குக் கொடுத்திருப்பது நல்லதைக் கண்டு, அதன் மொழிகளைக் கேட்டு, நமது நா மூலமாக சத்தியமான நல்லனவற்றையே கூறவேண்டும் என்ற வாத்சல்யமான எண்ணம் கொண்டவன். ஆனால் நம்மில் எத்தனைப்பேர் அதன்படி நடக்கின்றனர்.

தீயவற்றைக் கண்டு புளங்காங்கிதம் அடைகி றோம். அதே தீயவற்றைக் கேட்டுக் கிளர்ச்சி யடைகிறோம். தீயவற்றைப் பேசிப்பேசி திருப்தியடைகிறோம். உடல் வலிமை யைக்கொண்டு ஆதிக்கம் செலுத்தி அடக்கு வது வலிமையன்று. நாவடக்கமும், மனவலிமையும் கொண்டவரே உலகத்தில் மிகச்சிறந்த வலிமை பெற்றவர். சொல்லால், பார்வையால்- ஏன் புன்னகையால்கூட ஒருவரை காயப்படுத்த நினைக்காத மனிதரே ஞானவான் ஆவார்.

மாதம் மும்மாரி என்பது இயற்கையையும் தர்மத்தையும் பின்புலமாகக் கொண்டது. வானுயர்ந்த மலைகளும் மரங்களும் தர்மங்களும் பாதுகாக்கப்படும்வரையில் ஒரு நாட்டின் சீரும் செழுமையும் என்றென் றும் நிலைபெற்றிருக்கும். அங்கே பவித்ரம் நிலைபெற்றுவிடும். நம் ராமச்சந்திர மூர்த்தி பவித்ரமானவன். நம் மூலராமன் பவித்ரமானவன். அவன் நாமம் பவித்ரம். ராமம் பவித்ரம். அவன் நாமஜெபம் மகாபவித்ரம். கலியுகத்தில் நாம சங்கீர்த்த னமே பிரதான பக்தி. ஆகவே மகா ஜனங்களே, எப்போதும் ராம நாமத்தையே உச்சரித்து உச்சரித்து பவித்ரமாகுங்கள். ராமா... ராமா... ராமா...'' என்று உச்சரித்துக்கொண்டே கண்மூடித்திறந்து வான்நோக்கி வணங்கினார் ஸ்ரீராகவேந்திரர்.

அந்த மாளிகையின் பெரிய சபாமண்டபம் போன்ற கூடத்தில், சற்று அகன்ற பெரிய மேடையில் மூலராமர் பூஜை முடிந்திருக்க, எதிரில் முழுக்க அமர்ந்திருந்த ஜனக் கூட்டத்தின் முன்னிலையில் ஸ்வாமிகள் பெரிய உரை நிகழ்த்தி முடிக்க, பக்திப் பரவசத்தில் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஒரு ரீங்காரத்தின் வாசனையை செவிவழியே உணர்ந்து மெய்ம்மறந்திருக்க, உள்வந்த வெங்கண்ணரும் அப்பண்ணாவும் அங்ங னமே ஆயினர்.

எல்லாரையும்போலவே வெங்கண்ணர் ஸ்வாமிகளிடம் மந்த்ராட்சதை பெற்றுக் கொண்டார். மலர்ந்த முகத்துடன் இருந்த ஸ்வாமிகளை நமஸ்கரித்த திவான், ""ஸ்வாமிகள் என்னை அழைத்தீர்கள் என்று அப்பண்ணா கூறினார். தாங்கள் எனக்குக் கட்டளையிட்டிருந்தால்...'' எனும்போதே இடைமறித்த ஸ்வாமிகள்-

""ராஜப்பிரதிநிதியிடம் நான்... ஒரு எளிய சந்நியாசி கட்டளையிடுவதா. எதற்கும் முறை என்று ஒன்றிருக்கிறது'' என்றார்.

""இந்த ராஜபதவியே தாங்களின்

அருட்பிச்சையாயிற்றே ஸ்வாமி.''

""எல்லாம் மூலராமனின் பேராற்றல் வெங்கண்ணரே. உங்களால் எனக்கொரு உதவி தேவைப்படுகின்றது.''

""ஸ்வாமிகள் மறுபடியும் என்னை மன்னிக்கவேண்டும். உதவி என்றெல்லாம் கூறவேண்டாம். தங்களின் கட்டளை அல்லது விருப்பம் எதுவானாலும் என்னிடம் தெரிவித்தால் நான் பணிவுடன் செய்து முடிக்கிறேன்.''

""இந்த எளிய சந்நியாசிக்கு ஒரு பேராசை வந்திருக்கிறது. அது... நான் இங்கே ஆற்றங் கரையோரமாக ஆசிரமம் அமைக்க சிறிது இடம் கொடுத்தால்...''

""ஆஹா... தன்யனானேன். எப்பேற்பட்ட பாக்கியம். இந்த ஒற்றை வார்த்தையில் எனக் குப் பெரிய வரமல்லவா அளித்துவிட்டீர்கள்! சொல்லுங்கள் குருவே, எங்கே வேண்டும்?''

""முதலில் மன்னரின் அனுமதியைப் பெற்று வாருங்கள். அல்லது அவரை நான் பார்க்க விரும்புவதாகக் கூறினால் நல்லதென்று நினைக்கிறேன்.''

திவான் வெங்கண்ணர் காலம் தாழ்த்தாது அக்கணமே ஆதோனி நவாப் சித்திக் மசூத்கானைக் கண்டார்.

""வாருங்கள் திவான் அவர்களே. சுவாமிஜி எங்ஙனமுள்ளார்? அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தவறாது செய்துகொடுங்கள். சட்டம் மீறித்தான் செய்ய வேண்டியிருந்தால்கூட சொல்லுங்கள். நாம் திருத்தம் செய்து அந்த மகானுக்குச் செய்ய முயற்சிப்போம்.''

""உண்மைதான் நவாப் அவர்களே. எனது குருநாதர்மீது தாங்கள் வைத்திருக்கும் பக்திக்கு இதைவிட உன்னதமேதும் இருந்துவிடப்போவதில்லை. ஆனால் பாருங்கள். நீங்கள் இப்போது பேசியது ஏதேச்சையாக இருந்தாலும், உண்மையில் ஸ்வாமி ராகவேந்திரர் தங்களிடம் அனுமதி கோரி, தங்களின் பரந்த ராஜ்ஜியத்தில் என்றென்றும் சாஸ்வதமாக- சூரியசந்திரர் உள்ளவரை பேசப்படுகின்ற பாக்கியத்தை தங்களுக்குத் தரப்போகிறார்.''

""தங்களது நீண்ட விளக்கம் எனக்குப் புரியவில்லை. ஆனால் ஏனோ மனதுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடைய விஷயத்தைப் பேசப்பேச நான் சிறுவனாக மாறிப்போவதாய் உணர்கிறேன்'' என்றார் உற்சாகமாய். ""ம்.. ஸ்வாமிகள் என்ன கேட்கிறார்?''

""முதலில் தங்களது அனுமதியைக் கேட்கிறார்.''

""அல்லாவே! என்ன இது. பெரிய பெரிய வார்த்தையெல்லாம் இந்த நீசனிடம்... நாமிப்போதே அவரை சந்தித்து அதனை உடனடியாகப் பூர்த்தி செய்வோம்.''

உடனே நவாப்பும் திவானும் ஸ்ரீராகவேந்திரரை சந்திக்க, ஸ்வாமிகள் இருவரையும் மலர்ந்த முகத்துடன் வரவேற்று மந்த்ராட்சதை கொடுத்து ஆசிர்வதித்தார்.

""ஸ்வாமிகள் என்னை வரச்சொல்லி ஆணை யிட்டிருந்தால் நானே வந்திருப்பேனே. தங்களின் உள்ளக்கிடக்கையினை அறிந்து பூர்த்திசெய்தாலன்றி நான் தங்களுக்கு இழைக்கவெண்ணிய பாவத்திலிருந்து மீளவியலாது. சொல்லுங்கள் ஸ்வாமிகள்...''

""நான் சிலகாலம் தங்கியிருக்கும்வரை தங்கள் ராஜ்ஜியத்தில் ஆசிரமம் அமைக்க அனுமதியும் இடமும் வேண்டும்.''

""இந்த ராஜ்ஜியமே தங்களுக்கானது ஸ்வாமிஜி. எந்த இடம் வேண்டும்?''

""அந்த மாஞ்சலை கிராம ஓரப்பகுதி சிறிது...''

""அடடா... அது மிகமிக வறண்ட பிரதேசம். தாங்கள் எந்த சிரமமும் இல்லாமல் கடமையாற்ற செழுமையான பூமி பல இருக்கின்றனவே.''

""வேண்டாம் நவாப் அவர்களே. வளமான பகுதிகளின் உரிமையாளர்கள் மனது நோக அவற்றை நான் கேட்பது முறையன்று. மேலும் சந்நியாசிக்கு வளமானது எதற்கு? எனக்கு பூஜையும் ஜபமும் செய்ய அமைதியான அந்த இடம் போதுமானது. அதுமட்டுமின்றி யுகத் தொடர்பான, தெய்வீகமான, ஸ்ரீமன் நாராயண அவதாரத்து நிகழ்வின் யாக பூமி இங்குதான் இருக்கிறது. குறிப்பாக, நான் அத்திருவிடத்தை கண்டடையவே விரும்புகிறேன்.''

""ஆஹா... அல்லாவே நன்றி. இந்த குருஜி என்னென்னவோ சொல்கிறார். கேட்கக்கேட்க நான் மகிழ்ந்துவிடுகிறேன். எனக்கு விளக்கமாய்ப் புரியாவிடினும், ஏதோ நன்மைக்காக நான் பயன்படப்போகின்றேன் என்பது மட்டும் அப்பட்டமாக விளங்குகிறது. திவான் அவர்களே... ஸ்வாமிகள் கேட்ட இடத்தின் பரந்த பூமி முழுக்க அவருக்கு தானம் செய்ய சாசனம் தயார் செய்யுங்கள். நான் ஒப்பமிடுகிறேன். இன்றே ஆரம்பியுங்கள்.''

""உத்தரவு நவாப் அவர் களே.''

நீர் ஆதாரம் இருக்கும் படியும், ஸ்வாமிகள் தினசரி நீராட வசதி யாகவும் துங்கபத்ரா நதி அருகே வரும் படியாக நிலம் தேர்ந்தெடுங்கள். மேலும் அங்கு மக்கள் குடியிருப்புகள் இல்லை. அப்படி இருந்தால் அதற்கு மாற்றாகவும் ஈடாகவும்- இல்லையில்லை... அதிகப்படியான இழப்பீடுகளை அவர்களுக்கு அள்ளி வழங்கி மகிழ்ச்சிப்படுத்தி அந்த இடத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.''

கடகடவென்று மன்னர் கூறக்கூற, அப்பண்ணா நவாப்பினை மனதுள் வாழ்த்தி னார். முரட்டு நவாப் பலா போல... கடுமை வெளியில்தானே தவிர உள்ளே தேன் சுவை சுளையின் சுவை போன்ற சுபாவம் கொண்டதாக அவரின் மென் மனதை ஸ்ரீராகவேந்திரர் மாற்றிய அற்புதத் தின் பெருமையை நினைத்து சிலிர்த்துக் கொண்டார்.

om010819
இதையும் படியுங்கள்
Subscribe