Advertisment

ராதா - கிருஷ்ண திருமணத் தலம்!

/idhalgal/om/radha-krishna-wedding-venue

"ராதா கிருஷ்ண விவாக ஸ்தலி' என்னும் ஆலயம் மதுரா வுக்கு அருகில் இருக்கிறது. உத்தரப் பிரதேசத்திலுள்ள பான்ட் தொகுதியைச் சேர்ந்த பிந்திர்வன் என்னும் கிராமத்தி லுள்ள ஆலயமிது. பிரம்ம வைவர்த்த புராணம், கர்க்க சம்ஹிதா ஆகிய நூல் களில் இந்த ஆலயத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Advertisment

பிரம்மதேவர் சாட்சியாக இருந்து, அவர் புரோகித ராக செயல்பட, கிருஷ்ணருக் கும் ராதாவுக்கும் இந்த ஆலயம் இருக்குமிடத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அதனால், இந்த இடத்தை அந்தப் பகுதியில் வாழும் மக்கள் புனிதத் தலமாக நினைக்கின்றனர்.

Advertisment

இங்கு வேணு தீர்த்தம் என்னும் பெயரில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றைத் தன் புல்லாங்குழலால் கிருஷ்ணர் உண்டாக்கியதாக வரலாறு. இங்கு இரு ஆலமரங்கள் அருகருகில் இருக்கின்றன. அந்த ஆலமரங்களுக்கு அருகில் ராதா கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது. அதற்குப் பக்கத்தில் பலராமருக்கு ஒரு ஆலயம் இருக்கி

"ராதா கிருஷ்ண விவாக ஸ்தலி' என்னும் ஆலயம் மதுரா வுக்கு அருகில் இருக்கிறது. உத்தரப் பிரதேசத்திலுள்ள பான்ட் தொகுதியைச் சேர்ந்த பிந்திர்வன் என்னும் கிராமத்தி லுள்ள ஆலயமிது. பிரம்ம வைவர்த்த புராணம், கர்க்க சம்ஹிதா ஆகிய நூல் களில் இந்த ஆலயத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Advertisment

பிரம்மதேவர் சாட்சியாக இருந்து, அவர் புரோகித ராக செயல்பட, கிருஷ்ணருக் கும் ராதாவுக்கும் இந்த ஆலயம் இருக்குமிடத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அதனால், இந்த இடத்தை அந்தப் பகுதியில் வாழும் மக்கள் புனிதத் தலமாக நினைக்கின்றனர்.

Advertisment

இங்கு வேணு தீர்த்தம் என்னும் பெயரில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றைத் தன் புல்லாங்குழலால் கிருஷ்ணர் உண்டாக்கியதாக வரலாறு. இங்கு இரு ஆலமரங்கள் அருகருகில் இருக்கின்றன. அந்த ஆலமரங்களுக்கு அருகில் ராதா கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது. அதற்குப் பக்கத்தில் பலராமருக்கு ஒரு ஆலயம் இருக்கிறது.

mm

அந்த வனப்பகுதியில் தன் நண்பர்களுடன் அமர்ந்து கிருஷ்ணர் உணவு சாப்பிடுவார் என்பது வரலாறு. பொதுமக்களே இல்லாமல் கிருஷ்ணருக்கும் ராதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்தத் திருமணத்தில் கிளிகள், மயில்கள், பசுக்கள், குரங்குகள் உள்ளிட்ட பறவைகள், விலங்கு கள் லட்சக்கணக்கில் கலந்து கொண்டன. மேலும் கிருஷ்ணரின் தோழிகளான கோபியர்களும் அதில் பங்குபெற்றிருக்கின்றனர்.

உடல் சுகத்திற்காக நடைபெற்ற திருமணமல்ல அது. அதனால், அந்தத் திருமணம் யாருமறியாமல் நடந்தது. இதைப்பற்றி புராணத்தில் கூறப்படும் கதை இது...

ஒருநாள் கிருஷ்ணரின் வளர்ப்புத் தந்தையான நந்தகோபன் பால கிருஷ்ணனுடன் அந்த வனப் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த ஒரு மரத்திற்குக் கீழே அமர்ந்து அவர் ஓய்வெடுத்தார்.

அந்தச் சமயத்தில் தன் தோழி களுடன் ராதா அங்கு வந்தாள். பார்ப்பதற்கு மிகவும் பிரகாசமாக அவள் இருந்தாள். நந்தகோபன் தன் கையிலிருந்த குழந்தை கிருஷ்ணனை ராதாவிடம் தந்து, "உனக்கு கிருஷ்ணனை மிகவும் பிடிக்கும் என்ற விஷயம் எனக் குத் தெரியும். அதை கர்க்க ரிஷி என்னிடம் கூறியிருக்கிறார்'' என்று கூறினார்.

தொடர்ந்து, "நீ இந்த குழந்தையுடன் விளையாடிவிட்டு, இவனை என் மனைவி யசோதை யிடம் கொடுத்துவிடு'' என்று கூறினார். அப்போது ராதா, கிருஷ்ணனை முத்தமிட்டாள்.

அப்போது திடீரென அங்கொரு அரண்மனை தோன்றியது. ரத்தினம், மாணிக்கம் ஆகியவற்றால் அந்த அரண்மனை ஒளிர்ந்தது.

அப்போது குழந்தை ராதாவின் மடியிலிருந்து மறைந்துவிட்டது. திடீரென அவளுக்கு முன்னால் ஒரு இளைஞன் வந்து நின்றான். நகைகள் பளபளக்க நின்றுகொண்டிருக்கும் அந்த இளைஞன் வேறு யார்? பகவான் கிருஷ்ணன்தான்.

கிருஷ்ணனைப் பார்த்து, "நான் உன்னில் பாதி'' என்று கூறினாள் ராதா. அதற்கு, "நீ பொறுமையாக இரு. ஒருநாள் நாம் ஒன்றுசேருவோம்'' என்று புன்னகைத்தவாறு கிருஷ்ணர் கூறினார்.

அந்தச் சமயத்தில் பிரம்மா அவர்களுக்கு முன்னால் தோன்றி, இரு மாலைகளை அவர்களிடம் தந்தார்.

அவற்றை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளும்படி கூறினார்.

நெருப்பை சாட்சியாக வைத்து வேத மந்திரங்களை பிரம்மா கூற, கிருஷ்ணருக்கும் ராதாவுக்குமிடையே திருமணம் நடந்துமுடிந்தது. இந்தத் திருமணம் "காந்தர்வ மணம்' என்று புராணத்தில் குறிப்பிடப்படு கிறது. அதைத் தொடர்ந்து கிருஷ்ணரும் ராதாவும் அங்கு சந்தோஷமாக இருந்தனர்.

மீண்டும் சில நிமிடங்களிலேயே கிருஷ்ணர் குழந்தை வடிவத்திற்கு மாறினார். "நான் மீண்டும் இந்த இடத்திற்கு வருவேன்'' என்று கூறிய ராதா, குழந்தையை அன்னை யசோதை யிடம் கொண்டுபோய் ஒப்படைத் தாள்.

பிரபலாசுரன் என்ற அரக்கனை, கிருஷ்ணரையும் அவரின் அண்ணன் பலராமரையும் தாக்குவதற்கு கம்சன் அனுப்பிவைத்ததாகவும், அவனை பலராமர் வதம்செய்ததாகவும் புராணம் கூறுகிறது. அந்தச் சம்பவம் இந்த இடத்தில்தான் நடந்திருக்கிறது.

கம்சன் தன் ஆட்களை அங்கு அனுப்பி, முழு வனத்தையும் எரித்து விடுமாறு கூறினான். அங்கு பசுக்களை மேயவிட்ட கிருஷ்ணரின் நண்பர்கள் கிருஷ்ணருடன் சேர்ந்து விளையாடி பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தனர். அப்போது கம்சனின் ஆட்கள் வைத்த நெருப்பால் வனம் பற்றி எரிந்தது.

அனைவரையும் கண்களை மூடிக் கொள்ளும் படி கூறினார் கிருஷ்ணர். எரியும் நெருப்பை கிருஷ்ணர் உட்கொண்டார். அதன் மூலம் அந்த வனத்தை நெருப்பிலிருந்து காப்பாற்றினார்.

இந்தச் சம்பவம் புராணத்தில் கூறப்பட்டிருக்கி றது. அந்த வனம் இப்போதும் இருக்கிறது. கிருஷ்ணருக்கும் ராதாவுக்கும் திருமணம் நடை பெற்ற அந்த இடத்தை நீங்கள் பார்க்க விரும்பு கிறீர்களா? சென்னையிலிருந்து மதுராவுக்குப் பயணம் செய்யுங்கள். பயண தூரம் 2,041 கிலோ மீட்டர். பயண நேரம் 32 மணிகள். மதுராவிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்தில் இந்த "விவாஹ ஸ்தலி' இருக்கிறது.

விமானத்தில் பயணம் செய்வதாக இருந்தால், சென்னையிலிருந்து டில்லிக்குச் சென்று, அங்கிருந்து மதுராவிற்குச் செல்ல வேண்டும்.

om010423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe