"தர்மம் தலைக்காக்கும்
தக்க சமயத்தில் உயிர்காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்... செய்த
தர்மம் தலைக்காக்கும்...'
இது கவிதையா? பாடலா? யார் பாடியது? யார் எழுதியது எனும் ஆராய்ச்சியை எல்லாம் விட்டுவிட்டு, இப்பாட−லுள்ள பொருளைப் புரிந்து, நாம் எதை உணர்கிறோம் என்பது முக்கியம். தானம் என்றால் என்ன? தர்மம் என்றால் என்ன? தானம் என்பது, துன்பத்திலிருக்கும் ஒருவருக்கு தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது வேறு ஒருவர்மூலம் அறிந்தோ செய்வது. தர்மம் என்பது, துன்பத்திலிருக்கும் ஒருவருக்கு அவர் கேட்காமலே, அவர் அறியாமலேயும் செய்யும் உதவி.
பிறர் துன்பத்தை அறிந்த நொடியில் அவர் கள் குறையைத் தீர்ப்பதே கர்ணனின் பிரதான செயலாகும். அத்தகைய உயர்ந்த தர்ம சிந்தனை கொண்டவனே கர்ணன். மகாபாரதத்தில் கிருஷ்ணர் வயோதிக வேடம்பூண்டு சில விஷயங்களைக் கர்ணனிடம் கேட்கிறார். வந்திருப்பது பகவான் என்பதை அறிந்தும், அவர் கேட்பதைக் கொடுத்தால் தன் உயிருக்கு ஆபத்து என்பது தெரிந்தும் அவர் கேட்டதைக் கொடுத்துவிடுகிறான். கர்ணனின் உயர்ந்த குணத்தினால் கிருஷ்ணர் கர்ணனை முக்தியடைச் செய்கிறார்.
"அறத்தினூஉங்கு ஆக்கமு மில்லை அதனை
மறத்த−ன் ஊங்கில்லை கேடு'
என்கிறார் வள்ளுவர்.
ஒருவருக்கு அறம் (உதவி, தர்மம்) செய்வதைக் காட்டிலும் மேம்பட்ட உயர்வோ, சிறப்போ வேறொன்றுமில்லை. அத்தகைய உயரிய அறத்தை ஒருவன் செய்யாதுவிடுவதைக் காட்டிலும் மேம்பட்ட க
"தர்மம் தலைக்காக்கும்
தக்க சமயத்தில் உயிர்காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்... செய்த
தர்மம் தலைக்காக்கும்...'
இது கவிதையா? பாடலா? யார் பாடியது? யார் எழுதியது எனும் ஆராய்ச்சியை எல்லாம் விட்டுவிட்டு, இப்பாட−லுள்ள பொருளைப் புரிந்து, நாம் எதை உணர்கிறோம் என்பது முக்கியம். தானம் என்றால் என்ன? தர்மம் என்றால் என்ன? தானம் என்பது, துன்பத்திலிருக்கும் ஒருவருக்கு தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது வேறு ஒருவர்மூலம் அறிந்தோ செய்வது. தர்மம் என்பது, துன்பத்திலிருக்கும் ஒருவருக்கு அவர் கேட்காமலே, அவர் அறியாமலேயும் செய்யும் உதவி.
பிறர் துன்பத்தை அறிந்த நொடியில் அவர் கள் குறையைத் தீர்ப்பதே கர்ணனின் பிரதான செயலாகும். அத்தகைய உயர்ந்த தர்ம சிந்தனை கொண்டவனே கர்ணன். மகாபாரதத்தில் கிருஷ்ணர் வயோதிக வேடம்பூண்டு சில விஷயங்களைக் கர்ணனிடம் கேட்கிறார். வந்திருப்பது பகவான் என்பதை அறிந்தும், அவர் கேட்பதைக் கொடுத்தால் தன் உயிருக்கு ஆபத்து என்பது தெரிந்தும் அவர் கேட்டதைக் கொடுத்துவிடுகிறான். கர்ணனின் உயர்ந்த குணத்தினால் கிருஷ்ணர் கர்ணனை முக்தியடைச் செய்கிறார்.
"அறத்தினூஉங்கு ஆக்கமு மில்லை அதனை
மறத்த−ன் ஊங்கில்லை கேடு'
என்கிறார் வள்ளுவர்.
ஒருவருக்கு அறம் (உதவி, தர்மம்) செய்வதைக் காட்டிலும் மேம்பட்ட உயர்வோ, சிறப்போ வேறொன்றுமில்லை. அத்தகைய உயரிய அறத்தை ஒருவன் செய்யாதுவிடுவதைக் காட்டிலும் மேம்பட்ட கேடும் வேறொன்றுமில்லை.
அறம் எனும் தர்மத்தின் சிறப்பை ஒரு வரலாற்று நிகழ்வின்மூலம் அறிந்து கொள்வோம். முன்பொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு பெரும் அரக்கர்கள் தாங்கள் பெற்றிருந்த தவவலிமையின் சக்தியால் உலக உயிர்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தி மகிழ்ந்தனர். இவ்விரு அரக்கர்களையும் சம்ஹாரம் செய்ய சிவபெருமானின் அருளாசிபெற்ற தேவி போருக்குக் கிளம்பினாள். அம்பிகையின் பேரழகைக் கண்ட நிசும்பன் அம்பிகையைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு தனது தூதுவர்களை தேவியிடம் அனுப்பி னான். அதனால் கடுஞ்சினம்கொண்ட தேவி தன்னைப் போரில் வெல்பவரையே மணம் முடிப்பேன் என்று தெரிவித்தாள். இதனால் அரக்கன் நிசும்பன் பெரும்படை திரட்டிவந்து தேவியுடன் கடும்போர் புரிந்தான். இந்திரன், நிருதி, குபேரன், வருணன், எமன், முருகன், திருமால் ஆகியோர் தேவிக்கு உதவியாக மகாசக்தியை அளித்தனர். அத்தகைய அளப் பரிய சக்தியைப்பெற்ற தேவி சும்பன், நிசும்ப அரக்கர்களை போர்புரிந்து கொன்றொழித் தாள். இந்த அரக்கர்களுக்கு உறுதுணை யாக ரக்தபீஜன் எனும் அசுரன் தேவிக்கு எதிராகப் போர்புரிந்தான். ரக்தபீஜனின் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் தரையில் விழுந்தாலும், அந்த துளிகள் ஒவ்வொன்றிலிருந்தும் பல அரக்கர்கள் தோன்றி போரிட்டுக் கொண்டே இருந்தார்கள். அதன் காரணமாக அசுரப்படையின் எண்ணிக்கை குறையவில்லை.
ரக்தபீஜனை அழிக்க தேவி காளியைத் தோற்றுவித்து, தான் கொல்லும்போது அவனது உடலிலிருந்து ஒரு சிறுதுளி ரத்தம் கூட தரையில் சிந்தவிடாமல் குடித்துவிடும் படிக் கூறினாள். தேவியின் வாக்கிற்கேற்ப ரக்தபீஜனின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தாள். அதனால் ரக்தபீஜன் அழிந்தான். இதனால் உமா மகேஸ்வரியான தேவி மகிழ்ந்து காளிக்கு "சண்டி' எனப் பெயரிட்டு சிவபெருமானின் அருகிலே எப்போதும் நடனமாடும்படியான வரத்தினை அளித்தாள்.
ரக்தபீஜனின் ரத்தத்தைக் குடித்ததால் காளிக்கு ஆக்ரோஷம் மிகுந்தது. தேவியின் வரத்தைப் பெற்றதால் அதிக கர்வமும், ஆணவமும் சேர்ந்து தனது நடனத்தால் உலகையே நடுங்கச் செய்தாள். அண்டம் முழுவதையும் சுற்றிவந்த காளி முடிவாக திருவாலங்காட்டை வந்தடைந்தாள். காளியின் கொடுமைகளைத் தாங்க முடியாத முனிவர்கள் ஒன்றுதிரண்டு சிவபெருமானி டம் முறையிட்டனர். சிவபெருமான் காலாக்னி உருத்ர தோற்றம் கொண்டு அங்குசம், சூலம், கபாலம், வாள், கேடயம், பாசம், வேல், மணி ஆகியவற்றை எட்டுக் கரங் களில் தரித்துக்கொண்டு பூதகணங்களுடன் திருஆலங்காட்டிற்கு வந்தார். எம்பெரு மானின் படைகளுக்கும், காளியின் படை களுக்கும் கடும்போர் நிகழ்ந்தது.
காளியின் படைகள் போரினால் முற்றிலும் அழிந்தன. காளி தோல்வி யடையும் நிலை உருவாகியது. இப்போது அவள் சிவ பெருமானை நடனப்போட்டிக்கு அழைத் தாள். இன்னிசை வாத்தியங்கள் முழங்கின. இறைவன் வேகமாக நடனமாட காளியும் அதற்கு ஈடுகொடுத்து ஆடினாள். அந்த சமயம் சிவபெருமானின் காதி−ருந்து ஒரு குழை கழன்று கீழே விழுந்தது. அந்தக் காதணியை விரைவு கதியில் நடனமாடியபடியே தனது காலால் எடுத்து காதில் பொருத்திக் கொண்டார். அவ்வாறு செய்ய இயலாததால் காளி தோல்வியுற்றாள். அதனால் அவளது கர்வமும் ஆணவமும் அடங்கியது.
காளி, உமா மகேஸ்வரியின் வரத்தைப் பெற்றவள். தர்மத்தை நிலைநாட்டுவதற்காக பராசக்தியால் தோற்றுவிக்கப்பட்டவள். அசுரர்களின் அழிவிற்குக் காரணமாக இருந்தாள். இதுபோன்ற சிறப்பு களைப் பெற்றிருந்தாலும் ஆணவப் போக்கோடு நடந்துகொண்டதால் அதனைத் தடுத்து அதற்கு தண்டனை அளிப்பதற்காகவே காளியைத் தோற்கச் செய்தார். இந்த நிகழ்வு எதனை உணர்த்து கிறது?
தர்மத்தை மறந்து அதர்மவழியில் செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இறைவனின் தீர்ப்புக்கு உட்பட்டே ஆகவேண்டும் என்பதையே உணர்த்துகிறது. யாராக இருந்தாலும் தர்மத்தின் வழி நடக்கும்போது இறைவனின் எல்லையற்ற கருணை மழை நம்மீது பொழிந்துகொண்டே இருக்கும்.
தர்மத்தின் தத்துவத்தை திருமந்திரத்தில் திருமூலர்-
"தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்தண்டம் செய்வதவ் வேந்தன் கடனே'
என்கிறார்.
அவரவர் வாழ்க்கைத் தகுதிக்கும், குறிக்கோள்களுக்கும் ஏற்ப, அவற்றை மேற்கொண்டு அதன்படி நடக்காதவர்களை சிவப்பரம்பொருள் எத்தகைய தண்டனைகள் வேண்டுமானாலும் தந்து துன்பத்தை அடையச் செய்வார். இது அடுத்த பிறவியிலும் தொடர்ந்து நடப்பதாக அமைந்துவிடும். எனவே இந்தப் பிறவியில் தரும நெறிப்படி நின்று, அதன்படி நடக்காதவர்களுக்கு உடல் வருந்தும்படியான தண்டனையைத் தருவது அரசனின் கடமை ஆகும். எனவே தர்மச் செயல்களை நெறி தவறாது செய்து வரவேண்டும்.
மேலும் ஒரு திருமந்திரப் பாடலில் திருமூலர் பின்வருமாறு கூறுகிறார்.
"அழுக்கினை ஒட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
இழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ் சீரே.'
ஆணவம் எனும் மன அழுக்கு ஒவ்வொருவரிடமும் நிரம்பிவழிகிறது. இதைப் போக்கி அழிக்கும் அறிவால் உங்கள் மனதை நிறைத்துக்கொள்ளாது இருக்கிறீர்களே. புகழ், செல்வம், இளமை, வசதி இவையெல்லாம் நிறைந்திருக்க, பெரும் வளம் உங்களைத் தழுவி நின்ற அந்த நாளில் தருமங்களைச் செய்யத் தவறி விட்டீர்களே.
நோய்நொடியால் மனித வாழ்வு குறைவதை- மறைவதைப் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம். அப்படி ஒரு நிலை நமக்கு வந்துவிட்டால் என்ன செய்வோம்?
என்றாவது ஒருநாள் நோய்க் கொடுமையோ, வினைக்கொடுமையோ மிகுந்து நம்மைக் கீழே தள்ளிவிடுமே- அன்று நம்மால் என்ன செய்யமுடியும்? அதையுணர்ந்து இப்போதே நல்லதைச் செய்ய நாட்டம் கொள்ளவேண்டும்.
தர்மம் செய்வதற்கு காலநேரங்கள் தடையில்லை. எனவே பேதமின்றி தருமம் செய்யவும், தர்மத்தைக் காக்கவும் உறுதி ஏற்போம். செயலாற்றுவோம். அண்ட சராசரங்களை ஆட்சிசெய்யும் தில்லை ஆனந்தனின் கோபத்திற்கு ஆளாகாமல், திருஆலங்காட்டானின் அன்பெனும் கருணைப் பார்வைக்கு சொந்தக்காரர்களாக மாறுவோம்...