காக்கும் கவசன் கடன்! - ஆர்.மகாலட்சுமி

/idhalgal/om/protective-shield-loan-r-mahalakshmi

ல யுகங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு சதுர் யுகத்தின் சத்திய யுகத்தில், தட்சப் பிரஜாபதிக்கு கத்ரு, வினதை என இரு அழகிய மகள்கள் இருந்தனர்.

அவர்கள் இருவரையும் கச்யப முனிவருக்கு மணம்செய்து தந்தார் தட்சப் பிரஜாதிபதி.

கச்யபர் தனது மனைவிகளிடம், "உங்களுக்கு விருப்பமானதைக் கேளுங்கள்'' என்று கூற, கத்ரு, "சம தேஜஸ் கொண்ட ஆயிரம் நாகங்கள் எனக்குப் பிள்ளைகளாகப் பிறக்கவேண்டும்'' என்று கேட்டாள். வினதை, "பல தேஜஸும் வீரமும் கத்ருவின் புதல்வர்களைவிட சிறந்த வலிமையும் கொண்ட இரண்டு புதல்வர்கள் வேண்டும்'' என்று கேட்டாள்.

அதன்பின் கத்ரு ஆயிரம் எண்ணிக்கையிலும், வினதை இரண்டு எண்ணிக்கையிலுமான முட்டைகளை ஈன்றனர். அவற்றைப் பணிப் பெண்கள் பாதுகாப்பாக பாத்திரங்களில் வைத்திருந்தனர். 500 ஆண்டுகளுக்குப் பிறகு கத்ரு வின் பிள்ளைகளான நாகங்கள் முட்டைகளைப் பிளந்துகொண்டு வெளிவந்தன.

gar

ஆனால் வினதையின் முட்டைகளிலிருந்து புதல்வர்கள் வெளிப்படவில்லை. எனவே விரக்தியடைந்த வினதை ஒரு முட்டையைக் கைகளால் உடைத்துவிட்டாள். அதற்குள் முழு வளர்ச்சி யடையாத மகனைக் கண்டாள்.

இதனால் அந்த மகன் கோபமடைந்து, "என்னை முழு உருவம் அடையவிடாமல் செய்து விட்டதால் உன் சகோதரியிடம் 500 ஆண்டுகள் அடிமையாக இருப்பாய்'' என சாபமிட்டதோடு, "இன்னும் 500 ஆண்டுகள் பொறுமையாக இருந்து பலமுள்ள இன்னொரு மகனைப் பெறுவாய். அவனே உன்னை இந்த சாபத்திலி-ருந்து மீட்பான்'' எனக்கூறி, சூரியனின் தேரோட்டியாக அமர்ந்து அருணன் என பெயர் பெற்றான்.

அருணோதயக் கதை சுவர்பானு எனும் அசுரன் தேவர் வடிவமெடுத்து தேவர்கள் வரிசையில் அமர்

அருணோதயக் கதை சுவர்பானு எனும் அசுரன் தேவர் வடிவமெடுத்து தேவர்கள் வரிசையில் அமர்ந்து அமுதம் பருகியபோது, சூரியனும் சந்திரனும் அதனை வெளிப்படுத்தினர்.

அதனால் மகாவிஷ்ணு சுவர்பானுவை வெட்ட, தலை வேறு உடல் வேறாகி, அவர்கள் ராகு- கேது என பெயர் பெற்றனர். அதன் காரணமாக ராகு சூரியனை மிகவும் துன்பப்படுத்தினார். சூரியனுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. அதனால் கோபமடைந்த சூரியன் உலகையே அழிக்க எண்ணி ஹஸ்தாசலம் என்னும் பாதாள உலகில் தங்கச் சென்றுவிட்டார். சூரியன் காணப்படாதபோதும் உலகை வெப்பமும் எரிச்சலும் வாட்டி வதைத்தது. இதனைக் கண்ட தேவர்களும் ரிஷிகளும் பிரம்மாவிடம் சென்று முறையிட, பிரம்மதேவர், கச்யபரின் இரண்டாவது மனைவியின் மகன் அருணனை சூரியனின் தேரோட்டியாக்கினார். இந்த அருணன் தேரோட்டியபடியே சூரியனின் அளவற்ற தேஜஸைக் கவர்ந்துகொள்வதால், சூரியனால் ஏற்படும் வெப்பம் தணியும்; உலகம் பாதுகாக்கப்படும் என்றார். இதனாலேயே சூரியன் உதிப்பதற்கு முன் நேரம் அருணோ தய காலம் எனப்படுகிறது.

வினதை அடைந்த அடிமைத்தனம் தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்த போது ஏராளமான ஐஸ்வர்யப் பொருட்கள் வெளிப்பட்டன. அவற்றிலொன்று உச்சை ஸ்ரவஸ் என்னும் குதிரை. அந்த குதிரையை கத்ரு, வினதை இருவரும் கண்டனர். கத்ரு வினதையிடம், "அந்த குதிரை வெள்ளை நிறத் துடன் கருமையான வாலைக் கொண்டுள் ளது'' என்றாள். ஆனால் வினதையோ, "அது முழுக்கவே வெண்மை நிறமுடையது. என்ன பந்தயம்?'' என்று கேட்டாள். தோற்பவர் வென்றவருக்கு அடிமையாக வேண்டுமென் பது நிபந்தனை.

கத்ரு தனது ஆயிரம் நாக வாரிசுகளிடம், "அந்த குதிரையின் வா-லில் சென்றிணைந்து, அது கருப்பாகத் தோற்றமளிக்குமாறு செய்யுங் கள்'' என்று ஆணையிட்டாள். அவ்வாறு செய்ய சர்ப்பங்கள் மறுத்துவிட, கோப மடைந்த கத்ரு, "ஜனமேஜயன் செய்யும் யாகத் தீயில் நீங்கள் பொசுங்கிவிடக் கடவீர்கள்'' என்று சாபமிட்டாள். பிரம்மா வும், அடக்கமுடியாத இந்த சர்ப்பங்கள் அழிவது நல்லது தான் என்றெண்ணி, அந்த சாபத்தை அங்கீகரித்து விட்டார். மற்றவர்களுக்குத் துன்பம் தருபவர்களை தெய்வ ஆணையே அழித்துவிடும் என்றும் கூறினார்.

இந்த சாபத்தினால் கலங்கிய கார்க்கோடகன் என்னும் நாகம் தன் தாயிடம், "அந்த உச்சைஸ் ரவஸ் குதிரையின் வாலைக் கருப்பாக மாற்று கிறேன்'' என்று கூற, கத்ருவும் மகிழ்ந்தாள். மறுநாள் கத்ருவும் வினதையும் குதிரையைப் பார்க்க, குதிரையின் வால் கருப்பாக இருந்தது.

இதனால் வினதை அடிமையானாள்.

கருடன் பிறப்பு

இதற்கிடையே தகுந்த நேரம் வந்ததும், வினதையின் இன்னொரு முட்டையிலி-ருந்து, கருடன் அதை உடைத்துக்கொண்டு பெரும் தேஜஸ்வியாக வெளிப்பட்டார். விரும்பிய வடிவெடுக்கக் கூடியவராகவும், மிக விரைந்துசெல்பவராகவும், திசைகளை ஒளிரச் செய்பவராகவும், தீக்குவியல்போல் பிரகாசம் கொண்டவராகவும், மின்னலைப் போன்ற கண்களை உடையவராகவும், பயங்கரமான குரலை உடையவராகவும், விசாலமான பறவைத் தோற்றம் கொண்ட வராகவும் அவர் விளங்கினார்.

கருடனைக்கண்டு அஞ்சிய தேவர்கள் அக்னி பகவானை சரணடைந்து அபயம் வேண்டினர். அவரோ, "கருடன் வினதைக்கு மகிழ்வைக் கொடுக்கப்போகும் கச்யபரின் புதல்வன். நாகர்களை அழிப்பவர். அவரை வணங்குங்கள்'' என்று கூற, தேவர்கள் கருட னைப் பலவாறு போற்றித் துதித்தனர். அவர் களின் துதியைக் கேட்டவுடன் கருடன் தன் பிரம்மாண்ட உடலை சுருக்கிக்கொண்டார். பின்னர் கருடன் தன் தாயின் அடிமைத் தனத்தை மீட்கும் வழி என்னவென்று நாகர் களிடம் கேட்க, அவை "எங்களுக்கு அமுதம் கொண்டுவந்து தந்தால் உமது தாய் அடிமைத் தனத்திலி-ருந்து மீள்வார்'' என்று கூறின.

தேவலோகத்தில் அமுதம் அதிக பாது காப்புடன் இருந்தது. அதை எடுக்க வந்த கருடனுடன் தேவர்கள், கந்தர்வர்கள், வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், அஸ்வினி குமாரர்கள், யட்சர்கள் என அனைவரும் போரிட்டனர். அனைவரையும் துவம்சம் செய்த கருடன், அமுதம் இருக்குமிடத்தை நெருங்கினார். அக்னிப் பிழம்பான கத்திகள் நாற்புறமும் அமைந்திருக்கும் சக்கரத்தின்கீழ், இரு பெரும் பாம்புகளுக்கிடையே அந்த அமுதம் இருந்தது. பார்த்தாலே எரித்து வடும் தன்மைகொண்ட அந்த பாம்புகளை கருடன் மண்ணைத் தூவிக் கொன்றார். பின் தன் உடலை வெகுவாக சுருக்கி, அந்த அமுதத்தை எடுத்துக்கொண்டு பறந்தார்.

அப்போது மகாவிஷ்ணு தோன்றி, கருடனின் அரிய செயலுக்காக வரமளிக்க விரும்பினார். விஷ்ணுவிற்கு மேலே தான் இருக்கவேண்டுமென்று கருடன் கூற, விஷ்ணு வும் கருடனைத் தன் கொடியாக்கிக்கொண் டார். மேலும் அவரைத் தன் வாகனமாகவும் கொண்டார். இந்த அமுதம் பருகாமலேயே மூப்பும் மரணமுமில்லாமல் இருக்க அருள வேண்டும் என கருடன் வரம் கேட்க, மகா விஷ்ணு அந்த வரத்தையும் அளித்தார்.

கருடன் அமுதத்தை எடுத்துச் செல்வதைக் கண்ட இந்திரன் அதனைத் தனக்குத் தருமாறு கேட்க, "என் தாயின் அடிமைத்தனத்தை நீக்கவே இதை எடுத்துச் செல்கிறேன். இதை எங்கு வைக்கிறேனோ அங்கு வந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக சர்ப்பங்கள் எனக்கு உணவாகும்படி வரம் கொடுங்கள்'' என்று கேட்டார். பின்னர் கருடன் நாகங் களிடம், "அமுதம் கொண்டுவந்து விட்டேன். நீங்கள் மங்கள நீராடிவிட்டு இந்த அமிர் தத்தை எடுத்துக்கொள்ளுங்கள்'' எனக் கூறி குடத்தின்மீது அமுதத்தை வைத்தார். நாகர்கள் நீராடிவிட்டு வருவதற்குள் இந்திரன் அதனைக் கவர்ந்து சென்றுவிட்டான். என்றாலும் கருடனின் தாய் வினதை அடிமைத்தளையி-லிருந்து விடுபட்டாள். மேலும் கருடன் சர்ப்பங்களை இரு நாக்குகள் கொண்டவையாக மாற்றிவிட்டார். பின்னர் தன் தாய் மனம் மகிழும்படி செய்தார்.

இந்தக் கதையைக் கேட்பவர்கள் மிகுந்த புண்ணியத்தை அடைவார்கள்.

கருடனை வணங்கவேண்டியவர்கள் யாருக்கெல்லாம் சர்ப தோஷம் உள்ளதோ அவர்கள் கருடனை வணங்கவேண்டும். எவ்வளவு அனுசரணையாக இருந்தாலும் மதிக்காத மகன்களைப் பெற்ற தாயார் கருடனை வணங்கலாம். எவ்வளவு பாசமாக இருந்தாலும் உதாசீனப்படுத்தும் தாயையுடைய பிள்ளைகளும் கருடனை வணங்கவும். தைரியம், பராக்கிரமம் வேண்டுவோர் கருடனை வணங்கலாம்.

முகப்பொலிவில்லாமல் சோம்பித் திரிபவர்கள் கருடனை வணங்கவும். தேவர்களின் தலைவன் இந்திரன்; பறவைகளின் தலைவன் கருடன். எனவே தலைமைப்பதவி வேண்டுவோர் கருடனை ஜெபிக்கலாம். நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் கிட்டாமல் வருந்துபவர்கள் கருடனை வணங்கலாம். நல்ல பார்வைத் திறன் வேண்டுவோர், கண் குறைபாடுள் ளோர் கருடனை வணங்கலாம். அடிமை வாழ்வு வாழ்பவர்கள் கருடனை வணங்கி அதிலி-ருந்து விடுபடலாம்.

செய்வினைக் குற்றமுள்ளதாக சந்தேகப் படும் நபர்கள்,

"ஓம் தத்புருஷாய வித்மஹே

சுவர்ண பட்சாய தீமஹி

தந்நோ கருட ப்ரசோதயாத்'

என்னும் கருட காயத்ரி மந்திரத்தைக் கூறி வர நிவர்த்தி கிட்டும்.

om010621
இதையும் படியுங்கள்
Subscribe