ஒரு குடும்பம் என்றால் அதில் முக்கிய பங்கு குடும்பத் தலைவியான மனைவிக்குத்தான் உண்டு. "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.' "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்' என்பது அந்தக் காலத்துப் பழமொழி.
ஒரு மனைவிக்கு குடும்ப சுமை அதிகமாக இருக்கும். அவளிடம் பணிவு, மரியாதை, சகிப்புத் தன்மை நிறைந்திருக்கவேண்டும். பாசம், பரிவு, ஈ.வு இரக்கம் எல்லாமே இருந்தால்தான் மனைவி என்பவள் போற்றப்படுவாள். எங்கோ பிறந்தவள், யாருக்கோ வாக்கப்பட்டு இங்கேவந்து இணைகிறாள். பிறந்த வீட்டை மறந்து புகுந்த வீட்டிலே குலவிளக்காய் திகழ்கிறாள். சிலசமயம் தியாகத்தின் திருவுருமாகவே மாறிவிடுகிறாள்.
காலமெல்லாம் கணவன், குழந்தைகள் என்றே காலத்தைக் கழிக்கிறாள். கன்னியாக இருந்தபோது கற்பு, மானம் என்று கட்டுப்பாட்டோடு இருக்கிறாள். திருமணம் முடிந
ஒரு குடும்பம் என்றால் அதில் முக்கிய பங்கு குடும்பத் தலைவியான மனைவிக்குத்தான் உண்டு. "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.' "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்' என்பது அந்தக் காலத்துப் பழமொழி.
ஒரு மனைவிக்கு குடும்ப சுமை அதிகமாக இருக்கும். அவளிடம் பணிவு, மரியாதை, சகிப்புத் தன்மை நிறைந்திருக்கவேண்டும். பாசம், பரிவு, ஈ.வு இரக்கம் எல்லாமே இருந்தால்தான் மனைவி என்பவள் போற்றப்படுவாள். எங்கோ பிறந்தவள், யாருக்கோ வாக்கப்பட்டு இங்கேவந்து இணைகிறாள். பிறந்த வீட்டை மறந்து புகுந்த வீட்டிலே குலவிளக்காய் திகழ்கிறாள். சிலசமயம் தியாகத்தின் திருவுருமாகவே மாறிவிடுகிறாள்.
காலமெல்லாம் கணவன், குழந்தைகள் என்றே காலத்தைக் கழிக்கிறாள். கன்னியாக இருந்தபோது கற்பு, மானம் என்று கட்டுப்பாட்டோடு இருக்கிறாள். திருமணம் முடிந்து கணவன் வீடு சென்றபின்பு குடும்பத்தலைவி என்று பொறுப்பேற்கி றாள். இறைவனின் கருணையினால் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். அவர்களை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கி உயர்ந்த இடத்திலே வைக்கி றாள். இதெல்லாம் குடும்பத்தில் மனைவி என்பவளுக்கு ஏற்படுத்தப்பட்ட இலக்கணம்.
அந்தக் காலத்து மனைவிமார்கள் "கண் அவன்' என்று கணவனைப் பேணிப் பாதுகாத்துவந்தாள். கணவனுக்கு சேவை செய்வதையே பெரும் பேறாக அதாவது "பாக்கியமாகக்' கருதி னாள். அதன்படி சேவைகளைச் செய்தும்வந்தாள். அதில் ஆனந்தமும் கொண்டாள் இது ஆண்டவனின் கருணையென்று அமைதி கொண்டாள். பள்ளியறை செல்லும்போது மனைவியாக, கணவன் பாதை மாறிப் போகும்போது மந்திரியாக, குழந்தைகளை வளர்ப்பதில் குருவியாக, உள்ளம் பெருகிவரும் இரக்கத்தில் வள்ளலைப் போல இருந்தாள். எந்த நேரத்தில் கணவன் சிரிக்க வைப்பான், எந்த நேரத்தில் அவன் கலங்கவைப்பான் என்று தெரியாமலே, புரியாமலே வாழ்வாள். தண்டவாளம் இரண்டின்மீது ரயில் ஓடும். அது தனித்தனியாகப் பிரிந்துபோனால் தடுமாறும், விபத்து நேரும். இருவரும் இணைந்து சேர்ந்துவாழ்ந்தால் துன்ப மில்லை என்பதை உணர்ந்து தெரிந்து வாழ்க்கையை நடத்துவாள். இப்படிப்பட்ட குலமகள் வாழும் இனிய குடும்பத் தலைவி யாக இருந்தாள். "தாரம்' என்பவள் இல்லற வாழ்வின் ஆதாரம். இப்படி மனைவி மார்களை நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
புராணத்தைப் புரட்டிப் பார்த்தால் சத்தியவான் சாவித்திரி, எமனிடத்தில் போராடி அவளது கணவனை மீட்டுக் கொண்டுவந்தாள் என்பது தெரிகிறது.
காவியத்தைப் படித்துப் பார்த்தால், கோவலன் என்பவன் அவனுடைய செல்வங் களை யெல்லாம் மாதவி யிடம் இழந்துவிட்டு, அவனுடைய மனைவி யான கண்ணகியிடம் மீண்டும் வந்து நிற்கிறான்.
அப்போது கண்ணகி கொஞ்சமும் முகம் சுளிக்காமல், கோவலனை அன்பாக வரவேற்று உபசரித்தாள் என்பது தெரிகிறது.
சமீபகாலத்தில் புகழ் பெற்ற கவிஞர் ஒருவர் பகல் பன்னிரண்டு மணிக்குத் தன் மனை வியை அழைத்து, அவருடைய சக நண்பர்கள் பத்து பேர் விருந்துண்ண வருவதாகவும், அவர்களுக் குரிய விருந்தை ஏற்பாடு செய் என்று உத்திரவிட்டார். பன்னிரண்டு மணிக்குப் பிறகு பத்துபேருக்கு சமைக்க வேண்டுமா? என்று அவருடைய மனைவி வியப்படையில்லை. மாறாக மளமள வென்று உணவைத் தயாரித்து பின் விருந்து படைத்தாள். அவள் கொஞ்சமும் முகம் சுளிக்கவில்லை.
ஆக, இப்படியெல்லாம் அந்தக் காலத்து மனைவிமார்கள் இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் எல்லாம் தெய்வங்கள்.
காலம் மாறிப்போய்விட்டது. கணவனை- மனைவி மதிப்பதே இல்லை. கணவன் காலையில் வீட்டில் சமையற்காரனாக இருக்கிறான். அடுத்து அவனே "சாப்ட்வேர் இன்ஜினியராக' அலுவலகத்தில் பணிபுரிகி றான். கணவன் எதிரிலேயே மனைவி கால்மேல் கால் போட்டுக்கொண்டு மரியாதை இல்லாமல் நடந்துகொள்கிறாள்.
கவியரசு கண்ணதாசன் ஒரு பாடலிலே "ஆலம் விழுதுகள்போல ஆயிரம் உறவுகள் இருந்தென்ன? என் தேவையை யாரறிவார். உன்போல் தெய்வம் ஒன்றே அறியும்'' என்று மனைவியை தெய்வம் என்று பாடுகிறார்.
கணவனின் தேவை என்ன என்பதை மனைவி மட்டுமே அறிவாள். அறிந்து செயல்படுவாள்.
ஆக, மனைவி என்பவள் தெய்வத்தின் தெய்வம். குடும்பத்தின் குலவிளக்கு. தயவுசெய்து ஆண் பிள்ளைகளே நீங்கள் மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடிக்காதீர்கள். மனைவி என்பவள் அடுத்த வீட்டிலிருந்து வந்தவள்.
அவளை அடிக்க உங்க ளுக்கு உரிமை இல்லை. தெரிந்துகொள்ளுங்கள். தன் கணவன் "தருதலை' என்று மனைவிக்கு தெரிந்தாலும், இன் னொருவர் அவனைத் "தருதலை' என்று சொன்னால், சொன்னவரை விடமாட்டாள். சண்டைக்குப் போய் விடுவாள். அப்படிப்பட்ட பாசமிகு குணம் கொண்டவள் மனைவி.
மனைவி ஒரு மாதர்குல மாணிக்கம்; மறந்து விடாதீர்கள்.