Advertisment

பேரரருள் புரியும் பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர்! -எஸ்.பி.சேகர்

/idhalgal/om/pralayakaleshwarar-woman-who-understands-greatness-sp-shekhar

ண்டைக் காலத்தில் காவிரிக்கு வடக் கிலுள்ள பகுதிகளை வடகரை நாடு, நடுநாடு, தொண்டை நாடு, துளுவநாடு, வடநாடு என தமிழகத்தை பத்து பாகங்களாகப் பிரித்து, அப்பகுதியில் ஆண்ட மன்னர்கள் ஆலயங் களை அமைத்தும் பராமரித்தும் வந்தார்கள்.

Advertisment

அந்த வரிசையில் நடுநாடு என்று சொல்லக் கூடிய கடலூர் மாவட்டம் பெண்ணாடம் எனும் பெண்ணாவுகடம் என்ற ஊரில் அமைந் துள்ளது பிரசித்திபெற்ற பிரளயகாலேஸ்வரர் ஆலயம். இங்குள்ள அம்பாள் அழகிய காதலியம்மன், ஆமோதனாம்பாள் என்றழைக்கப்படுகிறாள்.

Advertisment

ss

பெண்- ஆவு- கடம் என்று இந்த ஊருக்கு எப்படி பெயர் உருவானது? புராணகால சம்பவங்களே அதற்குக் காரணம்.

இப்போது ஆலயம் அமைந்துள்ள பகுதி முற்காலத்தில் மிக அழகிய சோலைவனமாக விளங்கியுள்ளது. அமைதி தவழ்ந்த அந்த சோலையில், எல்லாம்வல்ல இறைவன் எம்பெருமான் ஈசன் திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது வெளிப்பட்ட நஞ்சை உட்கொண்டாரல்லவா? அதனால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிப்பதற்காக வந்து அமர்ந்துள்ளார். அதே காலகட்டத்தில் தேவலோகத் தலைவன் இந்திரன் சிவபூஜை செய்வதற்காக தேவ கன்னிகைகளை பூலோகத்திற்கு அனுப்பி மலர்களைப் பறித்து வரச்சொன்னான்.

மலர் பறிக்க வந்த தேவ கன்னிகள், ஈசன் இந்த சோலைவனத்தில் அமர்ந்திருந்த காட்சியைக் கண்டு மகிழ்ச்சியில் தங்களை மறந்து இறைவனுக்கு பூஜைசெய்து வந்தனர்.

நீண்டநேரம் தேவகன்னிகள் பூக்களைக் கொண்டுவராததால் சந்தேகமடைந்த தேவேந்திரன் தனது காமதேனுவை அனுப்பி பார்த்துவரச் சொன்னான். பூலோகத்திற்கு வந்த காமதேனுவும் ஈசனைக் கண்டு தன்னை மறந்து தன் மடியிலிருந்த பாலை இறைவன் மீது பொழிந்து பூஜைசெய்தது. கன்னிகளை தேடிச்சென்ற காமதேனுவையும் காணோமே என்று வருத்தமடைந்த தேவேந்திரன் தனது வாகனமான ஐராவதத்தை (யானை) அனுப்பி னான், பூலோகம் வந்த ஐராவதம் அங்கே இறைவனுக்கு தேவ கன்னிகளும் காமதேனு வும் பூஜைசெய்வதைக் கண்டது. அதுவும் தன்னை மறந்து இறைவனுக்குப் பூஜை நடைபெற்ற அதே இடத்தில் மாட விமானமாக நின்று காத்து சிவனை வழிபட்டது. யாரும் திரும்பி வராததைக் கண்ட தேவேந்தி ரன் தானே நேரடியாக பூலோகம் வந்தான்.

ss

அங்கே பூத்துக்குலுங்கும் மலர்ச்சோலை யில் குடிகொண்டிருக்கும் ஈசனை தேவ கன்னிகளும் காமதேனுவும் ஐராவதமும் பூஜைசெய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த தேவேந்திரன், தானும் இறைவனை வழிபட்டான். இப்படி இவர்கள் அனைவராலும் பூஜிக்கப்பட்ட இறைவன் சுயம்பு லிங்கேஸ்வரராக சதுர வடிவ பீடத்தில் இங்கே குடிகொண்டிருக்கிறார். இந்திரன் வழிபட்டதால் இந்த ஊருக்கு மகேந்திரபுரம் என்ற பெயரும் உண்டு.

தேவ கன்னிகைகள் என்ற பெண்கள், காமதேனுவாகிய பசு, ஐராவதம் என்ற வெள்ளை யானை, இறைவனை வழிபட்ட தால் பெண்- (தேவ கன்னிகள்), ஆவு- (பசு) கடம்+ (யானை) ஆகியவற்றை ஒன்றுசேர்த்து பெண்ணாவுகடம் என்ற பெயர் உருவானது. காலப்போக்கில் தற்போது பெண்ணாடம் என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் அமர்ந்துள்ள கற்பக விமானமாக ஐராவதம் நின்றதால், அதன்படிவமாக இக்கோவில் யானை வடிவில் தூங்கானை மாடக்கோவில் வடிவில் அமர்ந்துள்ளது. ஆதிகாலத்தில் கடந்தையூர் என்றும் அழைக்கப் பட்டிருக்கிறது. காரணம், கடந்தையார்கள் என்ற சமூகத்தினர் இங்கே வாழ்ந்த

ண்டைக் காலத்தில் காவிரிக்கு வடக் கிலுள்ள பகுதிகளை வடகரை நாடு, நடுநாடு, தொண்டை நாடு, துளுவநாடு, வடநாடு என தமிழகத்தை பத்து பாகங்களாகப் பிரித்து, அப்பகுதியில் ஆண்ட மன்னர்கள் ஆலயங் களை அமைத்தும் பராமரித்தும் வந்தார்கள்.

Advertisment

அந்த வரிசையில் நடுநாடு என்று சொல்லக் கூடிய கடலூர் மாவட்டம் பெண்ணாடம் எனும் பெண்ணாவுகடம் என்ற ஊரில் அமைந் துள்ளது பிரசித்திபெற்ற பிரளயகாலேஸ்வரர் ஆலயம். இங்குள்ள அம்பாள் அழகிய காதலியம்மன், ஆமோதனாம்பாள் என்றழைக்கப்படுகிறாள்.

Advertisment

ss

பெண்- ஆவு- கடம் என்று இந்த ஊருக்கு எப்படி பெயர் உருவானது? புராணகால சம்பவங்களே அதற்குக் காரணம்.

இப்போது ஆலயம் அமைந்துள்ள பகுதி முற்காலத்தில் மிக அழகிய சோலைவனமாக விளங்கியுள்ளது. அமைதி தவழ்ந்த அந்த சோலையில், எல்லாம்வல்ல இறைவன் எம்பெருமான் ஈசன் திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது வெளிப்பட்ட நஞ்சை உட்கொண்டாரல்லவா? அதனால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிப்பதற்காக வந்து அமர்ந்துள்ளார். அதே காலகட்டத்தில் தேவலோகத் தலைவன் இந்திரன் சிவபூஜை செய்வதற்காக தேவ கன்னிகைகளை பூலோகத்திற்கு அனுப்பி மலர்களைப் பறித்து வரச்சொன்னான்.

மலர் பறிக்க வந்த தேவ கன்னிகள், ஈசன் இந்த சோலைவனத்தில் அமர்ந்திருந்த காட்சியைக் கண்டு மகிழ்ச்சியில் தங்களை மறந்து இறைவனுக்கு பூஜைசெய்து வந்தனர்.

நீண்டநேரம் தேவகன்னிகள் பூக்களைக் கொண்டுவராததால் சந்தேகமடைந்த தேவேந்திரன் தனது காமதேனுவை அனுப்பி பார்த்துவரச் சொன்னான். பூலோகத்திற்கு வந்த காமதேனுவும் ஈசனைக் கண்டு தன்னை மறந்து தன் மடியிலிருந்த பாலை இறைவன் மீது பொழிந்து பூஜைசெய்தது. கன்னிகளை தேடிச்சென்ற காமதேனுவையும் காணோமே என்று வருத்தமடைந்த தேவேந்திரன் தனது வாகனமான ஐராவதத்தை (யானை) அனுப்பி னான், பூலோகம் வந்த ஐராவதம் அங்கே இறைவனுக்கு தேவ கன்னிகளும் காமதேனு வும் பூஜைசெய்வதைக் கண்டது. அதுவும் தன்னை மறந்து இறைவனுக்குப் பூஜை நடைபெற்ற அதே இடத்தில் மாட விமானமாக நின்று காத்து சிவனை வழிபட்டது. யாரும் திரும்பி வராததைக் கண்ட தேவேந்தி ரன் தானே நேரடியாக பூலோகம் வந்தான்.

ss

அங்கே பூத்துக்குலுங்கும் மலர்ச்சோலை யில் குடிகொண்டிருக்கும் ஈசனை தேவ கன்னிகளும் காமதேனுவும் ஐராவதமும் பூஜைசெய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த தேவேந்திரன், தானும் இறைவனை வழிபட்டான். இப்படி இவர்கள் அனைவராலும் பூஜிக்கப்பட்ட இறைவன் சுயம்பு லிங்கேஸ்வரராக சதுர வடிவ பீடத்தில் இங்கே குடிகொண்டிருக்கிறார். இந்திரன் வழிபட்டதால் இந்த ஊருக்கு மகேந்திரபுரம் என்ற பெயரும் உண்டு.

தேவ கன்னிகைகள் என்ற பெண்கள், காமதேனுவாகிய பசு, ஐராவதம் என்ற வெள்ளை யானை, இறைவனை வழிபட்ட தால் பெண்- (தேவ கன்னிகள்), ஆவு- (பசு) கடம்+ (யானை) ஆகியவற்றை ஒன்றுசேர்த்து பெண்ணாவுகடம் என்ற பெயர் உருவானது. காலப்போக்கில் தற்போது பெண்ணாடம் என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் அமர்ந்துள்ள கற்பக விமானமாக ஐராவதம் நின்றதால், அதன்படிவமாக இக்கோவில் யானை வடிவில் தூங்கானை மாடக்கோவில் வடிவில் அமர்ந்துள்ளது. ஆதிகாலத்தில் கடந்தையூர் என்றும் அழைக்கப் பட்டிருக்கிறது. காரணம், கடந்தையார்கள் என்ற சமூகத்தினர் இங்கே வாழ்ந்துள்ளனர்.

ss

ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் இங்கு வாழ்ந்த கடந்தையார் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகளாக இருந்துள்ள னர். மேலும் வட்டாரப்பணி காவல் அதிகாரி யாகவும் அரசனால் நியமிக்கப்பட்டனர், அப்படிப்பட்ட கடந்தையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது வெள்ளாற்றைக் கடந்து அரியலூர் மாவட்ட எல்லையிலுள்ள சிறுப்பனூர், சேந்தமங்கலம், கிராமங்களில் பெருமளவில் வாழ்கிறார்கள்.

காலப்போக்கில் தொழில், வேலை வாய்ப்புக்காக புலம்பெயர்ந்த கடந்தை யார்கள் இப்பகுதியிலுள்ள இருங்களா குறிச்சி, முள்ளுக்குறிச்சி, தெத்தேரி பெரிய நாகலூர், மருங்கூர், கீழப்பெரும்பலூர், குடிக்காடு, செங்கமேடு, திட்டக்குடி ஆகிய ஊர்களிலும், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, விழுப்புரம், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். கடந்தையார்கள் என்றழைக்கப்படும் குடும்பங்களில் பெண் கொடுப்பது- எடுப்பதில்லை. காரணம் கடந்தையார் என்ற பட்டப் பெயரோடு உள்ளவர்கள் பங்காளிகள் என்பதால், கவுண்டர், வன்னியர், படையாச்சி போன்ற சமூகத்தில் பெண் எடுப்பது- கொடுப்பது என்ற சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இவர்கள் குலதெய்வம் இந்த பிரளயகால ஈஸ்வரர்தான். தங்கள் குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சிகளை நடத்தினாலும் முதலில் இங்குவந்து ஈஸ்வரரை வழிபட்டபிறகு, காவல் தெய்வமாக- எல்லை தெய்வமாக விளங் கும் சிலுப்பனூர் அருகிலுள்ள கருப்பைய னாரையும் வழிபட்டபிறகே, அனைத்து சுப காரியங்களையும் நடத்துகிறார்கள்.

தற்போதும் பிரளயகால ஈஸ்வரருக்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திரு விழாவின்போது ஏழாம் நாள் திருவிழாவை கடந்தையார் வம்சத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலுப்பனூரிலிருந்து வந்து நடத்துகிறார்கள். அப்போது நடைபெறும் தேரோட்டத்தில் கடந்தையார் வம்சத்தினர் தேர் வடத்தைத் தொட்டுக் கொடுத்தபிறகே திருத்தேர் ஊர்வலம் புறப்படுகிறது.

ss

இவ்வாலய இறைவனுக்கு ஆலயம் உருவானது எப்படி? இந்த நடுநாட்டுப் பகுதியை சேதுபந்தன மகாராஜா என்பவர் ஆட்சிசெய்து வந்துள்ளார். அப்போது ஒருநாள் மன்னரின் கனவில் இறைவன் தோன்றி, தனக்கொரு கோவில் அமைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஐந்து ஏக்கர் பரப்பளவில் நீண்ட மதில் சுவர்களுடன்கூடிய இந்த ஆலயத்தை அந்த மன்னர் எழுப்பியுள்ளார். மன்னர் கனவில் தோன்றிய அம்மன், இறைவனுக்கு ஆலயம் எழுப்பிய மன்னனே, எனக்கு ஏன் ஆலயம் எழுப்பவில்லை? என்னை மறந்துவிட் டாயே என்று கூற, இறைவனுக்கு இடப்புறம் அம்மன் அழகிய காத லிக்கு தனிக் கோவில் அமைத்து வழிபட்டுள் ளார் சேதுபந்தன மகாராஜா.

ஆலய இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்ற பெயர் எப்படி உருவானது? ஊரை அரவணைத்து ஓடும் வெள்ளாற்றில் பெருவெள்ளம் பெருகி ஊருக்குள் புகுந்தது. மக்கள் அச்சமடைந்தனர். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவோம் என்று பயந்த மக்கள் ஆலயத்தை நோக்கி ஓடினார்கள். இறைவனிடம் மண்டியிட்டு முறையிட்டார்கள். அப்போது இறைவன் தனது வாகனமான நந்தியை அழைத்து, பெருகிவரும் பிரளயத்தை உறிஞ்சிவிடுமாறு ஆணையிட்டார். எப்போதும் இறைவனை நோக்கி மேற்கு முகமாக அமர்ந்திருக்கும் நந்தி கிழக்கு முகமாகத் திரும்பி, பெருகிவந்த பிரளயம் முழுவதையும் உறிஞ்சிக் குடித்தார். அதன் அடையாளமாக இக்கோவில் நந்தி அப்போதுமுதல் கிழக்கு முகமாக திரும்பி அமர்ந்துவிட்டார். இவர் அதிகார நந்தி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

ஆலயத்திற்கு எதிர் திசையில் இதுபோன்று நந்திகள் அமர்ந்திருப்பது அபூர்வமானது. ஐந்து ஊர்களில் நந்திகள் இவ்வாறு அமைந்துள்ளன. அதில் ஒன்று பெண்ணாடம். வினைதீர்த்த விநாயகர் தனிச் சிறப்புடன் விளங்குகிறார் அன்னை பார்வதி இவ்வாலய இறைவனைக் கண்டு பூஜை செய்ததால் இவ்வூருக்கு பார்வதிபுரம் என்ற பெயரும் உண்டு. ஆலயத்தைச் சுற்றிலும் இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமய தீர்த்தம், நிருதி தீர்த்தம், மரண தீர்த்தம், குபேர தீர்த்தம் ஆகிய பல தீர்த்தக்குளங்கள் இருந்துள்ளன காலப்போக்கில் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. கோவிலுக்கு எதிரில் ஒரு குளம் மட்டும் உள்ளது. அதுவும் கழிவுநீர்க் குளமாக மாறியுள்ளது.

தற்போது குளத்தையும் ஆலயத்தையும் சீர்படுத்தி கோவிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்தவேண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சி.வி. கணேசன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கவனத்திற்குக் கொண்டுசென்று, அவரது உத்தரவின் பெயரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சமீபத்தில் அமைச்சர் சி.வி. கணேசன் கலந்துகொண்டு கோவில் திருப்பணிக் கான வேலைகளைத் தொடங்கிவைத்தார்.

ss

இவ்வாலயத்தினை ஒட்டி சிறுமலை உருவாகி, அதன்மீது அமர்ந்து இன்னுமொரு சிவபெருமான் அருளாட்சி செய்கிறார், அதுவும் ஒரு வித்தியாசமான கோவில். பிரளயகால ஈஸ்வரர், ஆலயத்தை ஒட்டி 50 அடி உயரத்தில் சதுரமான மலைக்கோவில் அமைந்துள்ளது. அந்த ஈஸ்வரனுக்கு சௌந்தரேஸ்வரர் என்று பெயர். காரணம், ஊருக்கு மூன்று கிலோமீட்டர் தொலைவில் வெள்ளாற்றங்கரையில் அமைந்திருந்தது ஒரு சிற்றூர். அந்த ஊரைச் சேர்ந்த சௌந்தரவல்லி என்ற அம்மையார் மிகுந்த சிவபக்தி உள்ளவராக இருந்துள்ளார். அவர் தினமும் ஆற்றைக் கடந்து வந்து பிரளயகால ஈஸ்வரரை வழிபட்டுச் செல்வது வழக்கம். ஒருமுறை வெள்ளாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது அக்கரையில் குடியிருந்த சௌந்தரவல்லி

அம்மையாரால் வெள்ளத்தைக் கடந்து வரமுடியவில்லை. இதனால் வருத்தமடைந்த அந்த அம்மையார் அக்கரையில் இருந்தபடியே கண்களை மூடி பிரளயகால ஈஸ்வரரை தியானித்தார். தனது பக்தையின் பக்தியைக் கண்டு மகிழ்ச்சியுற்ற இறைவன் தன் இருப்பிடத்திலிருந்து உயர்ந்து நின்று அந்த அம்மையாருக்குக் காட்சி கொடுத்துள்ளார். இறைவன் தனக்காக உயர்ந்து நின்று காட்சியளித்ததை கண்டு சௌந்தர்வல்லி

அம்மையார் மெய்சிலிர்த்து கண்ணீர் வழிய இறைவனை வணங்கினார். அதனால் அந்த அம்மையார் வசித்த ஊருக்கு சௌந்தர சோழபுரம் என்ற பெயர் உருவானது.

இதற்கு இன்னொரு புராண தகவலும் கூறப்படுகிறது அப்பகுதியில் வசித்துவந்த தேவதாசி இனத்தைச் சேர்ந்த சௌந்தரவல்லி அம்மையார் அங்கிருந்தபடியே இறைவனை தரிசிக்கவேண்டுமென்று சோழ மன்னரிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சௌந்தரீஸ் வரர் சந்நிதியை உயர்த்திக் கட்டியதாகவும் கூறப்படுகிறது. எது உண்மையாக இருந்தா லும், இறைவன் தன்னை நினைந்து உருகும் பக்தர்களுக்கு காட்சிகொடுப்பார்; காத்து நிற்பார் என்பதற்கு இவ்வாலய இறைவனே சாட்சி என்கிறார்கள் சிவனடியார்கள்.

இவ்வாலய இறைவனை ஏழாம் நூற்றாண் டில் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தம், நேரில் வந்து பதிகம் பாடி புகழ்ந்துள் ளனர். இதன்மூலம் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான ஆலயம் என்பதை பெண்ணாடத் தைச் சேர்ந்த எழுத்தாளர் இந்து செல்வா, "பெண்ணாடம்' என்ற தமது புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வூரில் 63 நாயன்மார்களில் ஒருவரான கலிக்கம்ப நாயனார், பிறந்து வாழ்ந்துள்ளார். சிறந்த சிவபக்தரான கலிக்கம்ப நாயனார், அவரது துணைவியார் இருவரும் தினசரி தங்கள் வீட்டில் சிவனடியார்களை அழைத்து விருந்து படைத்து வந்தனர். ஒருநாள் இறைவனே அவர்கள் வீட்டுக்கு அடியாராக வந்தார். எப்படி? கலிக்கம்ப நாயனாரி டம் ஏற்கெனவே கூலிக்கு வேலைசெய்து, வேலையைவிட்டுச் சென்றுவிட்ட ஊழியர் கோலத்தில் வந்துள்ளார். அப்போது நாயனாரின் மனைவி அனைவருக்கும் பாத பூஜை செய்யும்போது, தனது பணியாளர் கோலத்தில் வந்தவருக்கு பாத பூஜைசெய்ய தயங்கியுள்ளார். சிவனடியாராக வந்தவர் யாராக இருந்தாலும், எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைத்து பணிவிடைகளையும் செய்யவேண்டும் என்ற எண்ணம்கொண்ட கலிக்கம்பர், மனைவியின் தயக்கத்தைக் கண்டு கோபம்கொண்டு அரிவாளை எடுத்து மனைவியின் கையை வெட்டித் துண்டாக்கி னார்.

தனது பழைய பணியாளராக வந்த சிவனடியாருக்கு எந்தவித தயக்கமுமின்றி கலிக்கம்பர் பாதபூஜை செய்து அமுது படைத்தார். கலிக்கம்பரின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த இறைவன் அவர்களுக்குக் காட்சிகொடுத்தார். வெட்டுண்ட கலிக்கம்பர் மனைவியின் கை மீண்டும் பொருந்தியது. இறைவனின் தரிசனம் தம்பதிகளை பரவசமடையச் செய்தது.

அதேபோல் இதே ஊரைச் சேர்ந்த அச்சுதக்களப்பாளர் என்பருக்கு ஒரு தெய்வக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் தாய்- தந்தை இருவரும் சிவபதவி அடைந்தனர். குழந்தையை அவரது தாய்மாமன் காங்கேய பூபதி என்பவர் தனது ஊரான திருவெண்ணொய்நல்லூர் கொண்டுசென்று வளர்த்துவந்தார். அப்போது பரஞ்சோதி முனிவர் தனது ஞானதிருஷ்டியால் குழந்தையின் சிறப்பையறிந்து அந்தக் குழந்தைக்கு ஞான உபதேசம் செய்தார்.

அவரே மெய்கண்ட நாயனார். ராஜகோபுரத்தின் பின்புறத்தில் இரு பக்கமும் மெய்கண்ட நாயனார், கலிக்கம்ப நாயனார் இருவரின் உருவங்களும் நிறுவப்பட்டுள்ளன, ஆலயத்தின் வரலாற்றை திருக்கடந்தை புராணம் என்ற பெயரில் சிவஞானபிரான் பிள்ளை அவர்கள் 13 சருக்கங்களில் 435 பாடல்களில் பாடியுள்ளார்.

பிற சிவாலயங்களில் செய்த பாவம். சுயம்புலிங்க ஆலயங்களில் மாயும். சுயம்புலிங்க ஆலயங்களில் செய்த பாவம். குடந்தையில் அழியும். குடந்தையில் செய்த பாவம் கடந்தையில் அழியும். என்று இவ்வாலய இறைவனின் மகிமைகள் திருக்கடந்தை புராண நூலில் இடம்பெற்றுள்ளது. இவ்வாலயத்தில் நந்திதேவர், இடப வாகனத் தில், சண்டிகேஸ்வரர், மூஞ்சூறு வாகனத் தில் விநாயகர், பிய்சாடனர், உமையம்மை சிவலிங்க வழிபாடு செய்தல் ஆகியவை சிற்பக் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன.

அதேபோல் மேற்கு கோட்டத்தில் திருமால் கருட வாகனத்தில் எழுந்தருளும் காட்சி, கஜேந்திரன் இறைவனிடம் அருள்பெரும் காட்சி, வடக்கு கோட்டத்தில் பிரம்மதேவர் சிவபூஜை செய்யும் காட்சி, தேவகன்னிகள், உமாமகேஸ்வரர், சம்பந்தர் ஆகியோரது சிற்பங்களும் பொறிக்கப்பட்டுள்ளன ஆலயத்திலும் ஊருக்கு மேற்கிலுள்ள பரிமள ரங்கநாதர் ஆலயத்திலும் 40 கல்வெட்டுகளை தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

இக்கோவிலை கோட்செங்கணான் எனும் சோழ மன்னன் கற்றளி மாடக்கோவிலாக கட்டியதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. இக்கோவிலில் தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. மற்றும் பிரதோஷ வழிபாடுகள் மிக விமரிசையாக நடைபெறுகின்றன. மாதந்தோறும் கிருத்திகை, கார்த்திகை தீபத் திருவிழா, அன்னாபிஷேகம், ஆடிப்பூர திருக்கல்யாணம், சதுர்த்தி, நவராத்திரி, நடராஜர் அபிஷேகம் ஆகியவை தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரத்தில் கோவில் வடபுறத் திலுள்ள துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்படுகிறது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொள்கிறார் கள்.

கலிக்கம்ப நாயனாருக்குக் காட்சிகொடுத்த ஈசன் குடிகொண்டிருக்கும் இக்கோவிலில் கை, கால்வலி, முறிவு, போன்ற உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்குவந்து இறைவனை வழிபட்டு சுகமடைகிறார்கள். மாதந்தோறும் வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி ஆகிய நாட்களில் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகளோடு சகஸ்ரநாம பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களின் வேண்டுதல்களை உடனுக்குடன் இறைவன் நிறைவேற்றுகிறார் என்பதை அனுபவத்தில் கண்டறிந்த பக்தர்கள் கூறுகின்றனர்.

மேலும் பஞ்சமி திதியில் ராஜகோபுரத்தின் மேலே ஆகாயத்தில் நட்சத்திர வெளிச்சம் தெரிகிறது. இது அதிசயமான ஒன்று. அதை பலரும் பார்த்து வணங்குகிறார் கள். கங்காதேவியும் இங்கு ஈசனை வழிபட்டு பாவச்சுமை நீங்கப் பெற்றாள்.

அப்படிப்பட்ட இவ்வாலய இறைவனும் அம்பாளும் ராகு- கேது தோஷ நிவர்த்தி தெய்வங்களாகவும் விளங்கிவருகிறார்கள். அம்பாள் அழகிய காதலியம்மனை நேரில் பார்க்கும்போது அவளது முக அழகின் தோற்றத்தைக் காணும் பக்தர்கள் மெய்ம் மறந்து அன்னையை வணங்குகிறார்கள். இவளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவோர் திருமணத்தடை நீங்குகிறது, குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்கிறார்கள் கோவில் அர்ச்சகர்கள் ஜெ. கார்த்திகேய குருக்கள், கண்ணன் குருக்கள். ம. கார்த்திகேய குருக்கள். ஜானகி ராமன், அஸ்வின், கோவில் பணியாளர்கள் ராமசாமி , ஆனந்த், சுகுமார், காந்தம், குமுதம் ஆகியோர்.

இவ்வூரில் சமயப் பேரவை, கடந்தை உழவாரத் தொண்டர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பக்தி நெறியைப் பரப்புவதிலும் சிவத்தொண்டு புரிவதிலும் பெரும் பங்காற்றிவருகின்றனர்.

தீங்குகள் நீங்க வேண்டுமானால் தூங்கானைமாட சுடர்க் கொழுந்தீஸ்வரரை வணங்கினால் போதும் என்பதை பெரியபுராணத்தில் பாடியுள்ளார் சேக்கிழார். தமிழகத்தில் சிவபிரானுக்கும் உமையமைக்கும் எண்ணிலடங்காத ஆலயங்கள் உண்டு. அவற்றில் மிகவும் வித்தியாசமான- அனைவரும் வழிபட வேண்டிய ஆலயங்களில் பெண்ணாடம் ஆலயமும் ஒன்று.

அமைவிடம்: விருத்தாசலம்- தொழுதூர் நெடுஞ்சாலையில் மையப்பகுதியிலும், சென்னை- திருச்சி ரயில் பாதையில் பெண்ணாடம் ரயில் நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. தொடர்புக்கு, 9600317946, 9994088359.

om010623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe