Advertisment

பிள்ளை குறை தீர்க்கும் பாப்பேஸ்வரி!

/idhalgal/om/popeswari-solves-childrens-grievances

ஜெகன்மாதாவான அந்த ஆதிசக்தி, பக்தர்களின் குறைபோக்க பல்லாயிரம் தலங்களில் கோவில்கொண்டு அருள்பாலித்து வருகிறாள். அவள் சந்நிதியைத் தேடிச்சென்று சரணடைவோருக்கு அடைக்கலம் தந்து, எல்லையற்ற கருணை காட்டி வாழ்வாங்கு வாழச் செய்கிறாள். அத்தகைய அம்மன் அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் பாப்பேஸ்வரி தேவி கோவில்.

Advertisment

சதி தேவியின் உடல் பாகங்கள் பூமியில் விழுந்த இடங்கள் சக்தி பீடங்களாக விளங்கு கின்றன. அவற்றுள் முதுகுப்பகுதி விழுந்த இடம்தான் இது. இந்த தலத்தில் தேவியானவள் சுயம்பு வடிவமாய்த் திகழ்கிறாள்.

யாருக்கும் தெரியாமலிருந்த தேவியின் சிலாரூபம், ஒரு அதிசய சம்பவத்தின்மூலம் அனைவருக்கும் தெரியவந்தது.

முன்னொரு காலத்தில் அனுபுஜ்ஜி என்னும் மன்னன் இப்பகுதியை ஆண்டுவந்தான். அவனுக்கு ஒரேயொரு ம

ஜெகன்மாதாவான அந்த ஆதிசக்தி, பக்தர்களின் குறைபோக்க பல்லாயிரம் தலங்களில் கோவில்கொண்டு அருள்பாலித்து வருகிறாள். அவள் சந்நிதியைத் தேடிச்சென்று சரணடைவோருக்கு அடைக்கலம் தந்து, எல்லையற்ற கருணை காட்டி வாழ்வாங்கு வாழச் செய்கிறாள். அத்தகைய அம்மன் அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் பாப்பேஸ்வரி தேவி கோவில்.

Advertisment

சதி தேவியின் உடல் பாகங்கள் பூமியில் விழுந்த இடங்கள் சக்தி பீடங்களாக விளங்கு கின்றன. அவற்றுள் முதுகுப்பகுதி விழுந்த இடம்தான் இது. இந்த தலத்தில் தேவியானவள் சுயம்பு வடிவமாய்த் திகழ்கிறாள்.

யாருக்கும் தெரியாமலிருந்த தேவியின் சிலாரூபம், ஒரு அதிசய சம்பவத்தின்மூலம் அனைவருக்கும் தெரியவந்தது.

முன்னொரு காலத்தில் அனுபுஜ்ஜி என்னும் மன்னன் இப்பகுதியை ஆண்டுவந்தான். அவனுக்கு ஒரேயொரு மகன் இருந்தான். விதிவசத்தால் அவன் திடீரென இறந்து விட்டான். இளவரசனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டபோது இரவாகிவிட்டது. மயானத்தை நோக்கி அனைவரும் நடந்து கொண்டிருந்தபோது, துக்கத்தை தாங்க முடியாத மன்னன் அருகிலிருந்த வேப்ப மரத்தினருகே சென்று கதறியழுதான். இதைக் கண்டு ஊர்வலத்தினர் திகைத்து நின்றுவிட்ட னர். மன்னன் அருகில் செல்லவும் யாருக்கும் துணிவில்லை.

Advertisment

ff

அப்போது அங்குவந்த மூதாட்டி, "ஏனப்பா இப்படி அழுகிறாய்? அப்படி என்ன பெரிய துன்பத்தை நீ சந்தித்துவிட்டாய்?'' என்று கேட்டாள்.

"அம்மா, இதோ நிற்கிறதே ஊர்வலம். அதில் பிணமாகக் கிடப்பவன் என் ஒரே மகன். எனக்குப்பின் இந்த நாட்டை ஆள வேண்டியவன். எனக்கு இறுதிக்கடன் செய்யவேண்டிய அவனுக்கு, நான் செய் யும் நிலை வாய்த்ததே. புத்திர சோகத்தை விட பெரிய துன்பம் வேறென்ன இருக் கிறதம்மா!'' என்று புலம்பினான்.

அவனைத் தேற்றிய மூதாட்டி, "உன் சோகம் தீர ஒருவழி சொல்லுகிறேன்; கேட்கிறாயா?'' என்றாள்.

"இந்த சோகத்தை எந்த வழியாலும் தீர்க்கமுடியாது தாயே.''

"உன் மகன் உயிர்பெற்று எழுந்து விட்டால் அந்த சோகம் தீராதா?''

"அம்மா, நீங்கள் சொல்லவருவது என்ன?''

"நான் சொல்லும் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் உன் மகன் உயிர்பிழைக் கும் வழியைக் கூறுகிறேன்.''

"எதுவானாலும் சொல்லுங்கள் தாயே.

என் உயிர் வேண்டுமானாலும் சம்மதமே.''

"அது தேவையில்லை. இங்கே ஒரு

சுயம்பு விக்ரகம் இருக்கிறது. அதைப்

பிரதிஷ்டை செய்து கோவில் கட்டுவாயா?''

"இப்போதே செய்கிறேன் தாயே.''

"அப்படியென்றால் சரி. அதோ,

அங்கிருக்கும் ஊற்று நீரை எடுத்துப் போய் உன் மகனின் முகத்தில் தெளி'' என்றாள் மூதாட்டி.

மன்னன் பேராவலோடு ஓடிச்சென்று, ஊற்றுநீரை அள்ளிப்போய் மகன் முகத்தில் தெளித்தான். அடுத்தநொடி உறக்கம் கலைந்து எழுபவன்போல கண்விழித்தான் இளவர சன். அனைவரும் பேரானந் தத்தில் மூழ்க, மன்னன் அந்த மூதாட்டியைத் தேடினான். எங்கும் காண வில்லை. அம்மனே தன்னை இனங்காட்ட முதியவ ளாக வந்தாள் என்பதை உணர்ந்த மன்னன், அங்கிருந்த சுயம்பு விக்ரகத் தைக் கண்டு, அப்போதே திருப்பணியைத் தொடங்கினான். நீரூற்று இருந்த இடத்தில் மிகப்பெரிய குளத்தை அமைத்தான்.

இவ்வாறு தோன்றியதுதான் பாப்பேஸ்வரி தேவி கோவிலும், அதன் எதிரேயுள்ள பெரிய குளமும். பக்தர்கள் இந்தக் குளத்தில் நீராடிவிட்டு தேவியை மனமுருக வழிபடுகிறார்கள். ஜரிகை வேலைப்பாடு அமைந்த சிவப்பாடையை அணிந்து தங்கள் பிரச்சினைகளை அம்மனிடம் முறையிடுகிறார்கள். அது தீர்ந்ததும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள். பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டால், இங்குவந்து வழிபட்டால் உடனே குணமடைவதாக பக்தர் கள் கூறுகிறார்கள்.

ஆஞ்சனேயர், காளிதேவியின் சந்நிதி களும் இங்குண்டு. பல சித்தர்கள் வழிபட்டமை யால் இது சித்தர் பீடமாகவும் விளங்குகிறது. நவராத்திரி விழா மிகச் சிறப்பாக இங்கே கொண்டாடப்படும். தினமும் ஆயிரக்கணக்கா னோர் வந்து வழிபட்டுச் செல்லும் ஆலயமாக இது விளங்குகிறது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில், அயோத்திக்கு அருகேயுள்ளது ஃபைசாபாத் நகரம். இதன் அருகேதான் உள்ளது பாப்பேஸ்வரி ஆலயம். சென்னையிலிருந்து பாராபங்கி என்னும் ஊருக்குச் சென்று (32 மணி நேர ரயில் பயணம்), அங்கிருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஃபைசாபாத் கன்டோன் மென்ட் ஸ்டேஷன் சென்று ஆலயத்துக்குச் செல்லலாம்.

om010523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe