Advertisment

கரும்போடு பொங்கட்டும் பொங்கச்சோறு!

/idhalgal/om/pongachoru-bursting-black-pepper

"கரும்பு தின்னக் கூலியா?' என்றுதான் வழக்கு மொழி இருக்கிறது.

மாம்பழம் தின்னக் கூலியா? பலாப்பழம் தின்னக் கூலியா? வாழைப்பழம் தின்னக் கூலியா? என்றெல்லாம் அந்தக்கால மக்களின் அனுபவமொழி சொல்லவில்லை!

Advertisment

கரும்புக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு தரப்பட்டது?

சிற்றின்பத்தின் கடவுளான மன்மதன் தன் கையில் கரும்பு வில் வைத்திருந்ததாக புராணம் சொல்கிறது.

Advertisment

பட்டினத்தாரின் கையிலிருந்த கரும்பு பேரின்பத்தை குறியீடாகக் கொண்டதென ஆன்மிகம் சொல்கிறது.

நமக்மெல்லாம் கரும்பு என்றால் பொங்கல் நினைவுக்கு வரும். பொங்கல் என்றால் கரும்பு நினைவுக்கு வரும்.

எத்தனையோ இயற்கை விளை பொருட் கள் இருந்தும் பொங்கல் திருநாளில் கரும்பு தனித்துவமாகவும், மகத்துவமாகவும் போற்றப்படுகிறது.

சில ஊர்களில் பொங்கல் நாளின் இரவில் கரும்புகளால் பந்தல் அமைத்து, அதன் கீழ் தங்கள் குடும்ப முன்னோரில் தியாகத் துடன் வாழ்ந்து

"கரும்பு தின்னக் கூலியா?' என்றுதான் வழக்கு மொழி இருக்கிறது.

மாம்பழம் தின்னக் கூலியா? பலாப்பழம் தின்னக் கூலியா? வாழைப்பழம் தின்னக் கூலியா? என்றெல்லாம் அந்தக்கால மக்களின் அனுபவமொழி சொல்லவில்லை!

Advertisment

கரும்புக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு தரப்பட்டது?

சிற்றின்பத்தின் கடவுளான மன்மதன் தன் கையில் கரும்பு வில் வைத்திருந்ததாக புராணம் சொல்கிறது.

Advertisment

பட்டினத்தாரின் கையிலிருந்த கரும்பு பேரின்பத்தை குறியீடாகக் கொண்டதென ஆன்மிகம் சொல்கிறது.

நமக்மெல்லாம் கரும்பு என்றால் பொங்கல் நினைவுக்கு வரும். பொங்கல் என்றால் கரும்பு நினைவுக்கு வரும்.

எத்தனையோ இயற்கை விளை பொருட் கள் இருந்தும் பொங்கல் திருநாளில் கரும்பு தனித்துவமாகவும், மகத்துவமாகவும் போற்றப்படுகிறது.

சில ஊர்களில் பொங்கல் நாளின் இரவில் கரும்புகளால் பந்தல் அமைத்து, அதன் கீழ் தங்கள் குடும்ப முன்னோரில் தியாகத் துடன் வாழ்ந்து மறைந்தவரை குடும்பத் தெய்வமாக போற்றி வணங்கும் பழக்கம் இருக்கிறது.

பொங்கல் பண்டிகை என்பது ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்தது. காரணம் அந்த பண்டிகையின் நோக்கமே நன்றி தெரிவித்தல்தான்.

உயிர்களும், பயிர்களும் வளர ஒளி உணவு கொடுக்கும் சூரியனுக்கும், உழுது களைக்கும் கால்நடைகளுக்கும், நதி, பூமி உள்ளிட்ட இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவே உழவர் திருநாளான பொங்கல் கொண்டாடப்படுகிறது!

இந்த கொண்டாட்டத்தில், உழைப்பின் பெருமையை சாறாக தன்னுள் கொண்ட கரும்பு கட்டாயம் இடம்பெறும்!

சுவேதாரண்யர், திருவெண்காடர் என அழைக்கப்பட்ட; காவிரிப்பூம்பட்டினத்தில் அரசனைப்போல் செல்வ வளத்துடன் 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சுவேதாரண்யர்.

அக்காலத்திலேயே கடல் வாணிபம்மூலம் பெரும் செல்வம் ஈட்டினார். அவருக்கு குழந்தை இல்லை. ஒரு குழந்தையை தத்தெடுத்து "மருத பிரான்' என பெயரிட்டு வளர்த்துவந்தனர்.

பொன்னாசை, பொருளாசை யாரை விட்டது?

மகன் மருதபிரானை கடல்வழி வாணிபத் திற்கு அனுப்பினார். வெறுங்கையோடு ஒரு நாள் வீடு திரும்பிய மகனை கண்டபடி திட்டினார்.

"காதற்ற ஊசியும்

வராது காண்

கடை வழிக்கே...'

என ஒரு ஓலையில் எழுதி, தன் தாய் சிவகலையிடம் கொடுத்துவிட்டு எங்கேயோ போய்விட்டார் மருதபிரான்.

அதைப்படித்த திருவெண்காடர் "நமக்கு மகனாக வந்தவன் ஈசன்' என உணர்ந்தார்.

பொருட்கள் மீதான ஆசையைத் துறந்தார்;

துறவறம் பூண்டார்; ஊர் ஊராய் ஞானம் தேடி அலைந்தார். பட்டினத்தார் ஆனார்.

திருவிடைமருதூரில் இறைவனின் அசரீரியால் பட்டினத்தார் கையில் வெள்ளை நிற கரும்பு ஒன்று கிடைத்தது.

"எந்த இடத்தில் பேய்க் கரும்பு உனக்கு

இனிக்கிறதோ...

அந்த இடத்தில் உனக்குமுக்தி கிடைக்கும்' என இறைவனின் அசரீரி கேட்டதாம்.

ss

சென்னை திருவொற்றியூர் வந்து சிவனை வணங்கி விட்டு கடற்கரைக்கு சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார் பட்டினத்தார். எதிரே இருந்த கரும்புத் தோட்டத்தில் ஒரு கரும்பு பிடுங்கி உண்ண ஆரம்பித்தார்.

கரும்பின் மேற்பகுதி எப்போதும் துவர்ப்பும் உவர்ப்புமாக இருக்கும். ஆனால் பட்டினத்தாருக்கு இனித்தது பேய்க்கரும்புவான நுனிக்கரும்பு! அங்கே சுயசமாதியானார்.

இன்று அந்த சமாதிக் கோவில் புகழுடன் திகழ்கிறது!

கரும்பில் தோகை எனப்படும் சோகைப் பகுதி கைகளை அறுக்கும் தன்மை கொண்டது. அதை பக்குவமாக அகற்றிவிட்டால் அடுத்து பேய்க் கரும்பாகிய நுனிக்கரும்பு! அது உவர்ப் பும், துவர்ப்புமானது. அதை நீக்கிவிட்டால் கரும்பு கணுக்கணுவாக இணைந்திருக்கும். மனிதன் வாழ்கையில் பல கட்டங்களை தாண்டவேண்டும் என்பதை குறிப்பதாக அமைந்திருக்கும்.

பிறகு கரும்பை உண்ண உண்ண சுவை கூடிக்கொண்டேதான் இருக்கும். அதிலும் அடிப்பகுதியை நெருங்க நெருங்கு கூடுதல் பாகுச் சுவை கிடைக்கும்.

உழைப்பும், அதனால் சிந்தப் படும் வியர்வையும் நுனிக்கரும்புபோல் சலிப்பைத் தந்தா லும், அந்த உழைப் பின் பலன் அடிக் கரும்பாய் இனிக்கும்.

அந்த உழைப்பின் தத்துவத்தை உள்ளடக்கியிருப்பதாலேயே இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும். பொங்கல் நாளில் கரும்பு வைத்து படைக்கிறோம்!

"பாபு' படத்திற்காக, சிவாஜி நடிப்பில், எம்.எல். விஸ்வநாதன் இசையில் வாலியின் வரிகளில் டி.எம்.எஸ். குரலில் "இதோ எந்தன் தெய்வம்' பாடலை கேட்டிருப்பீர்களே...

அதன் கடைசி சரணம்...

தன் வியர்வையிலும்

உழைப்பினிலும் வாழ்வை

கண்டு தொழில் புரிந்து

உயிர் வளர்க்கும் ஏழை

அவன் இதழ் மலரும்

சிரிப்பொலியைக் கேட்டேன்

அந்த சிரிப்பினிலே

இறைவனை நான் பார்த்தேன்!

-பேய்க்கரும்பு இனிக்கும் செயல் ஞானியர்க்கு சாத்தியம்! நமக்கு அடிக்கரும்பு இனித்தாலேபோதும்!

உழைப்பதனால் கஷ்டங்களிலிருந்து பிழைத்துக்கொள்ளலாம். அதனால் தான் "உழைப்பை' பிழைப்பு என்றார்கள்.

உழைக்கும் உழவர் திருநாளாம் தைப் பொங்கல் நாளை-

புத்தாடையுடன்

பொங்கல் சோறுடன்

காளைகளுடன்

கரும்புடன்

கொண்டாடுவோம்!

ப்

om010124
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe