நஞ்சுண்ட நாதர்! -மகேஷ் வர்மா

/idhalgal/om/poisoned-nathar-mahesh-verma

ஸ்ரீகாந்தேஸ்வரர் சிவன்கோவில் கர்நாடக மாநிலம், நஞ்சன்குடா என்னுமிடத்தில் இருக்கிறது. மைசூரிலிருந்து 23 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது.

இந்த ஆலயத்திற்கு தட்சிண காசி- அதாவது தென்காசி என்றும் பெயருண்டு. கபிலா நதிக்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

nb

தேவாசுரர்கள் அமிர்தம் பெற பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் அதிலிருந்து ஆலகாலம் எனும் கொடிய நஞ்சு வெளிப்பட்டது. அனைத்துயிர் களையும் காக்கும் பெருங்கருணையால் அந்த நஞ்சை சிவபெருமான் உண்டார். அது அவரது

ஸ்ரீகாந்தேஸ்வரர் சிவன்கோவில் கர்நாடக மாநிலம், நஞ்சன்குடா என்னுமிடத்தில் இருக்கிறது. மைசூரிலிருந்து 23 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது.

இந்த ஆலயத்திற்கு தட்சிண காசி- அதாவது தென்காசி என்றும் பெயருண்டு. கபிலா நதிக்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

nb

தேவாசுரர்கள் அமிர்தம் பெற பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் அதிலிருந்து ஆலகாலம் எனும் கொடிய நஞ்சு வெளிப்பட்டது. அனைத்துயிர் களையும் காக்கும் பெருங்கருணையால் அந்த நஞ்சை சிவபெருமான் உண்டார். அது அவரது கழுத்தில் தங்க, அவர் நீலகண்டன் எனப்பட்டார். அவரே இத்தலத் தில் காந்தேஸ்வரர் என்னும் பெயரில் கோவில் கொண்டுள்ளார். அவர் நஞ்சை உட்கொண்ட இடம் இதுவென்பதால் இத்தலம் நஞ்சன்குடா எனப் படுகிறது.

கௌதம முனிவர் இப்பகுதியில் வாழ்ந்திருக்கிறார். அவர் ஒரு சிவலிங்கத்தை இங்கு உருவாக்கியிருக் கிறார்.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் கங்க வம்சத்தினர் இந்த ஆலயத்தைக் கட்டினார்கள். திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில், இத்தலத்தின் பெயரை "ஹக்கீம் நஞ்சுடா' என்று மாற்றினார். அவரது யானையின் உடல்நலம் பாதிக்கப்பட, இந்த ஆலயத்திற்கு வந்து அவர் வேண்டிக்கொண்டார். அதன்பின்னர் யானையின் உடல்நலம் சரியாகிவிட்டது. அதனாலேயே அவர் "ஹக்கீம்' என்று மாற்றியிருக்கிறார்.

அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்வகையில் திப்புசுல்தான், மரகத லிங்கத்தையும் பச்சைக்கல் மாலையையும் காணிக்கை செலுத்தினார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத் திற்கு வந்து வழிபட்டால், நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கு பழமையான ஒரு வில்வமரம் இருக்கிறது. அதன் வயது என்னவென்று யாருக்கும் தெரியாது.

ஆண்டுக்கு இருமுறை இங்கு பல்லக்குத் திருவிழா சிறப்பாக நடைபெறும். அச்சமயம் ஸ்ரீகாந்தேஸ்வரர், பார்வதி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வர் ஆகியோரை தனித்தனிப் பல்லக்குகளில் எடுத்துச்செல்வார்கள்.

இப்பகுதியில் பரசுராமருக்கு ஒரு கோவில் இருக்கிறது.

புராண காலத்தில், தன் தாயின் தலையை வெட்டிய பாவத்திற்கு வருந்தி பரசுராமர் இங்கு தவம் செய்தாராம். அப்போது தரைப்பகுதியை சமன் செய்ய கோடரியால் அகழ்ந்தபோது, பூமிக்குள்ளிருந்து குருதி வெளிப்பட்டது. அது சிவலிங்கத்தின் தலையிலிருந்து வந்த குருதி. அதன்மூலம் இன்னொரு பாவத்தைச் செய்துவிட்டோமே என்று. பதைபதைப்பு அடைந்தார். அப்போது சிவன், "வருத்தப்படாதே. இந்த இடத்தில் நீ எனக்கொரு கோவிலை உண்டாக்கு' என்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து பரசுராமர் சிவனுக்கு அங்கொரு கோவிலைக் கட்டினார். "இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பரசுராமரையும் வழிபடவேண்டும்' என்று அப்போது சிவபெருமான் அருளினாராம்.

om010421
இதையும் படியுங்கள்
Subscribe