குழந்தையாய்ப் பிறந்ததும், யார் நம்மைப் படைத்தது? யாருக்காகப் பிறந்திருக்கிறோம்?
நாம் ஏன் பிறந்தோம் என்று நமக்கு நாமே சிந்திக்கமாட்டோம். குழந்தைப் பருவத்தில், நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மைப் பற்றி யார் என்ன பேசினாலும் அதனைப் பற்றி யோசிப்பதில்லை. மறுபடி மறுபடி நினைத்துப் பார்ப்பதில்லை. யார் என்ன நினைத்தாலும், யார் என்ன சொன்னாலும் அதனை மனதிற்குள் கொண்டு செலுத்தி நேரத்தை வீணாக்கிக் காரணம் தேடாத ஒரு தெளிவான மனநிலை இயற்கையாகவே எல்லா குழந்தைகளுக்கும் இருக்கும். நல்லவன்- கெட்டவன், நண்பன்- பகைவன், சொந்த பந்தம் என எதையும் பாராமல் கண்முன் யாருக்காவது ஆபத்தென்றால் ஓடி உதவும் மனம் சிறுவயதில் இருக்கும். அதன் பெயர்தான் மனிதம்.
அந்த வயதில் சந்திக்கும் நபர்கள், பார்க்கும் நிகழ்வுகள், கூறப்படும் அறிவுரைகள், பழக்க வழக்கங்கள் நம் மூளையில் பதிவாகிவிடுகின்றன. எது நல்லது எது கெட்டது என அறியாமல் வாழ்க்கை நகரும். உதாரணமாக, திருடனுடன் முதன்முதலில் சென்று யாருக்கும் தெரியாமல் திருடி அகப்பட்டுககொள்ளாமல் வந்து லாபம் கிடைத்துவிட்டால், அதை சரியானதாக எண்ணி மன உறுத்தலின்றி தொடர்ந்து திருட ஆரம்பிக்கி றான். அகப்பட்டு அடிவாங்கிப் பழகி விட்டால் சிந்திக்கும் யோசனையின்றி தெரிந்தே தவறுசெய்யத் துணிகிறான். ஆனால் பயந்து பாதியில் வருபவர்கள்தான் சிந்திக்கத் தொடங்குவார்கள். அதன்பின்புதான் வாழ்க்கை புதிய பாதையைக் காட்டுகிறது. எது சரி, எது தவறு, எதனால் வாழமுடியும் என்பதெல்லாம் வளர வளர வாழ்க்கை கற்றுக்கொடுக்கிறது.
மனிதர்களுக்கு நல்லவன்- கெட்டவ

மனிதர்களுக்கு நல்லவன்- கெட்டவன், யோக்கியன்- அயோக்கியன் என்கிற பட்டமெல்லாம் சூழ்நிலைகளால்தான் கிடைக்கின்றன.
நம்மில் பலரும் நம்மைப்பற்றி யோசிப்பதைவிட, நம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றியே அதிகம் யோசிக்கிறோம். பக்கத்து வீட்டில், எதிர் வீட்டில், நம் தெருவில், நம் ஊரில் நம்மைப் பற்றி நல்லவிதமாக எண்ணவேண்டுமென நல்லவராக நடக்க முயற்சிக்கிறோம். நம்மை மதிக்க வேண்டும் என்பதற்காக சிலசமயம் கெட்டவனாக வாழவும்கூட தயாராகிவிடுகிறோம். உண்மையில் பலரும் யாரைப் பற்றியும் நினைக்கமாட்டார்கள். அவரவர் வாழ்க்கைத் தேவைக்குப் போராடிக் கொண்டிருப்பார்கள். நேரில் பார்க்கும்போது எதையாவது பேசவேண்டும் என்பதற்காக ஏன் மெலிந்து விட்டீர்கள், என்ன குண்டாகி விட்டீர்கள் என கேட்பார்கள். சிலர், வருடம் போனாலும் நீங்க மட்டும் எப்பவும் அப்டியே இருக்கீங்க என தேவைக்குப் புகழ்ந்து போகிறவர்களும் உண்டு. இப்படிப்பட்ட பேச்சைக் கேட்டுவிட்டுவீட்டிற்கு வந்ததும் கண்ணாடியைத் தேடிச்சென்று பார்க்கிறோம் என்றால் இன்னும் நாம் பக்குவப்படவில்லை என்றுதான் பொருள்.
பொதுவாக இந்த உலகில் யாரும் யாரையும் ஏமாற்றுவதில்லை. பேராசையால் ஏமாந்துபோகிறவர்கள்தான் ஏராளம். நம்பி ஏமாந்துவிட்டேன் என்று நினைப் பதைவிட, நம்பியதுதான் தவறென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கை அனைவருக்கும் அவசியம் அதிகம் சிந்திக்கிறவர்கள்தான் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். பிரச்சினைகளை சந்திக்க தைரியம் தருவது நமக்கு ஏற்பட்ட தோல்விகள், அவமானங்கள்தான். முதல் தோல்வியில் ஏற்படும் மனக்கஷ்டம் அடுத்தடுத்த தோல்விகளில் ஏற்படாது. ஜெயித்துக்கொண்டே இருக்கவேண்டுமானால் கிடைக்கும் வெற்றியையும் ஏற்படும் தோல்வியையும் கண்டுகொள்ளாமல் இருந்தாக வேண்டும். இத்தகைய பக்குவம் எல்லாருக்கும் உடனே எளிதாக வந்து விடாது. வெற்றிக்கு வழி முயற்சி. வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க வழி தோல்விகள்.
பாராட்டுகளும் வாழ்த்துகளும் மட்டும் தொடர் வெற்றி தராது. திறமைகளை வளர்த்துக்கொண்டால்தான் அடுத்தடுத்த வெற்றிக்கு வழி கிடைக்கும்.
எதிர்காலம் பற்றிய பயமே அத்தனை துன்பங்களுக்கும் காரணம். இன்றைய தலைமுறையினர் தோல்விகள் ஏற்படக் கூடாதென நினைக்கின்றனர். வருமுன் காக்க வேண்டுமென்பதற்காக முன்னவர்கள் சொல்லும் தோல்வி அனுபவங்களை எதிர்மறையாகப் பேசுவதாகச் சொல்கிறார்கள். நாம் எந்தத் துறையில் வெற்றி பெற வேண்டுமென நினைக்கிறோமோ, நாம் முதலில் சந்திக்க வேண்டியவர் அந்தத் துறையில் தோல்வியடைந்தவராக இருக்கவேண்டும். ஏனென்றால் தோல்விக்கான காரணத்தையும், தான் எடுத்த தவறான முடிவுகளையும், எடுக்கத் தவறிய முயற்சிகளையும் ,பொறுமையின்றி அவசரத்தால் இழந்ததையும் அவருடைய அனுபவத்தில்தான் கேட்டுணர முடியும்.
கனவுகள் எப்போதும் அழகாய் இருக்கும். நாம் நினைத்த அனைத்தும் அதில்கிடைக்கும். கற்பனையில் வெற்றி பெற்று வாழ்வது சுகமாகத்தான் இருக்கும்.எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்பதற்காக எதார்த்தத்தை, உண்மையைச் சொல்வதை எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாக விவரம் அறியாதவர் சொல்கிறார்கள். அறிவுரைகள் அனுபவம் என்பதை பலர் அறிவதில்லை. வயதானவர் கள் ஒரு நூலகம் என்பதை அறிந்து பயன் படுத்திக் கொள்பவர்களுக்கு தோல்வி வராது. நாம் சாகசம், சாதனை என நினைப்பதையெல்லாம் யாரோ ஒருவர் சாதாரணமாகச் செய்துகொண்டிருப்பர் அல்லது செய்து முடித்திருப்பர். காலம் அத்தனையையும் மறக்கடித்துவிடும். பணக்காரனிடம் காரியம் சாதிக்க வேண்டுமானால் புகழ்ந்தும், ஏழையிடம் காரியம் சாதிக்க வேண்டுமானால் அன்பாகவும் பேச வேண்டும் கெட்ட விஷயம் என சொல்லப்படுகிற அனைத்தின்மீதும் ஆசைகொள்ளும் மக்கள் அதிகமாகிவிட்டனர்.
சமூகப் பொறுப்புடன் இருப்பதுபோல் பேசும் சிலர், எனக்குக் கிடைக்கல, நீங்க மட்டும் அனுபவிக்கிறீங்களே என்னும் ஆதங்கத்தில் புலம்புகிறார்கள். எனக்கு பங்கு கொடுத்துவிட்டுட்டு என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்கிற கூட்டமும் பெருகி விட்டது.
நமக்கு கெடுபலன்கள் நடக்கும்போது அடுத்த மனிதர்களை நாடுகிறோம். யாருடைய உதவியும் கிடைக்காதென்கிற நிலையில், நாம் கணக்கு போட்டு வைத்தது நடக்காம லும், நினைத்தது பலிக்காமலும் போகும் போதுதான் நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை உணருகிறோம். கடவுளிடம் நாம் நினைத்தது நடக்க சுயநலத்துடனே சரணடைகிறோம். கடவுளையும் தன்னைப் போல் நினைத்து, கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் முறையைக் கண்டறிந்து சலுகைகள் பெற எண்ணுவதுதான் மனிதனின் குணம். நாம் இப்படி நினைத்தால் நம்மைப் படைத்த இறைவன் எப்படி நினைப்பார்? மனிதர்கள் உருகி வேண்டுவதற்காக அடிக்கடி விதியை மாற்றியமைத்துக் கொண்டிருந்தால் கடவுளுக்கு இது மட்டுமே வேலையாக இருக்கும். முன்ஜென்ம கர்மாவின் அடிப் படையில் தரப்படும் இந்த ஜென்மத் தில் சரியாக நடந்துகொண்டால் பூர்வ புண்ணியம் பலம்பெற்று அடுத்த ஜென்மத்தை வளமாக்கிக் கொள்ளலாம். இதுவே சாத்தியம்.
இந்த ஜென்மத்தில் பிறந்தது முதல் இறப்புவரை நாம் சந்திக்கும் நபர்கள் சில ஆயிரங்களிலும், அதில் நன்கு தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கிலும், நெருங்கிப் பழகுபவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும், ஒன்றாய் வாழ்வது சில நபர்களுடனும் என நம் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இதற்குள் ஒருவர்மேல் ஒருவருக்கு போட்டி, பொறாமை, ஆசை, கோபம், வன்மம், பழிதீர்த்தல் என வாழ்க்கையைப் பலரும் வீணாக்குகின்றனர். ஒரு மனிதனின் சராசரி வயது எழுபதுக்குள் முடிந்துவிடுகிறது. பிடிக் காதவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அவர்களாகவே ஒதுங்கிவிடுவர். நாம் நம் வாழ்க்கையை வாழவே நாட்கள் போதாது. அதை விடுத்து அடுத்தவருக்காக நொடிகளை வீணடித்தாலும் நஷ்டம் நமக்குதான். உலகில் அன்றாடம் இறப்பு நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்தும் நமக்கு மட்டும் மரணமில்லை என நினைத்து வாழ்தல் அறியாமை. தன்னை நேசித்து, தன்னைச் சார்ந்தவர்களுக்கு அன்பைக் கொடுத்து, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வாழ்ந்தால் தினம்தினம் இன்பம் நம் வாழ்வில் பெருகும்.
மரணத்தை நோக்கிய பயணத்தில் அன்றாடம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நகருகிறோம்... சிலர் மெதுவாகவும்பலர் வேகமாகவும் கடந்துபோகிறார்கள். ஆசை களைத் துறந்து அன்பைத் தொலைத்து வெறுமையைச் சுமந்து ஓடுவதும், கை கோர்த்து மகிழ்வாய் வாழ்க்கையை ரசித்து ருசித்து சுவாசித்து ஊர்ந்து செல்வதும் அவரவர் கைகளில்தான் இருக்கிறது.
அவசரபட வேண்டிய அவசியமில்லை.
நம் வாழ்வில் மகிழ்ச்சி நம்மிடமே!