அரண்மனை வாழ்க்கை. இளவரச பதவி. கையசைத்தால் காரியம் நடக்கும். விரும்பியதெல்லாம் உண்ணலாம். பட்டுமெத்தையில் படுத்துறங்கலாம். எந்தெந்த சுகங்களை எப்படியெப்படிக் கேட்டாலும் அவை தானாக ஓடிவரும்.
இப்படியெல்லாம் இருந்தும் அத்தனையும் உதறிவிட்டு துறவறத்தை மேற்கொண்டார் சித்தார்த்தன்.
எங்கிருந்து வந்தோம்? வந்து வாழ்ந்தபின் எங்கே போகிறோம்? எப்படிப் போகிறோம் என்பதே தெரியாத நிலையில் மனிதன் போடும் ஆட்டமென்ன? இதைத்தான் எச்சரித்தார். பிணி, மூப்பு, சாக்காடு என்பது எல்லா மனிதருக்கும் உண்டு என்பதை உணர்த்தினார். மனிதன் ஒழுக்க நெறியோடு வாழவேண்டுமென்று போதித்தார். அவரே புத்தர்.
கபிலவஸ்துவின் அரசர் சுத்தோதனருக்கும், அன்னை மகாமாயாவுக்கும் மகனாகப் பிறந்தவர். "சித்தார்த்தா' என்ற பெயரோடு இளவரசராக இருந்தவர். 16-ஆவது வயதில் "யசோதரை' என்ற இளவரசியை மணம்புரிந்தவர்.
மனித வாழ்க்கையில் அடங்கிக்கிடக்கும் உண்மையைக் காணும் தேடலில், தமது 29-ஆவது வயதில் அரச சுகங்களைத் துறந்து, பல புகழ்பெற்ற குருமார்களை அணுகி விளக்கம் கேட்டார். அவருடைய கேள்வி
அரண்மனை வாழ்க்கை. இளவரச பதவி. கையசைத்தால் காரியம் நடக்கும். விரும்பியதெல்லாம் உண்ணலாம். பட்டுமெத்தையில் படுத்துறங்கலாம். எந்தெந்த சுகங்களை எப்படியெப்படிக் கேட்டாலும் அவை தானாக ஓடிவரும்.
இப்படியெல்லாம் இருந்தும் அத்தனையும் உதறிவிட்டு துறவறத்தை மேற்கொண்டார் சித்தார்த்தன்.
எங்கிருந்து வந்தோம்? வந்து வாழ்ந்தபின் எங்கே போகிறோம்? எப்படிப் போகிறோம் என்பதே தெரியாத நிலையில் மனிதன் போடும் ஆட்டமென்ன? இதைத்தான் எச்சரித்தார். பிணி, மூப்பு, சாக்காடு என்பது எல்லா மனிதருக்கும் உண்டு என்பதை உணர்த்தினார். மனிதன் ஒழுக்க நெறியோடு வாழவேண்டுமென்று போதித்தார். அவரே புத்தர்.
கபிலவஸ்துவின் அரசர் சுத்தோதனருக்கும், அன்னை மகாமாயாவுக்கும் மகனாகப் பிறந்தவர். "சித்தார்த்தா' என்ற பெயரோடு இளவரசராக இருந்தவர். 16-ஆவது வயதில் "யசோதரை' என்ற இளவரசியை மணம்புரிந்தவர்.
மனித வாழ்க்கையில் அடங்கிக்கிடக்கும் உண்மையைக் காணும் தேடலில், தமது 29-ஆவது வயதில் அரச சுகங்களைத் துறந்து, பல புகழ்பெற்ற குருமார்களை அணுகி விளக்கம் கேட்டார். அவருடைய கேள்விகளுக்கு சரியான விடை கிடைக்காமல்போகவே, முழு உண்மையை உணர தாமே துறவியானார்.
தமது 35-ஆவது வயதில் கயா என்னும் தலத்தில், ஒரு போதி மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார்.
அப்படி எத்தனை நாட்கள் இருந்தாரோ...
ஒரு வைகாசி மாதப் பௌர்ணமியன்று சுஜாதா என்ற பெண்மணி ஒரு கிண்ணத்தில் பால்பாயசம் கொண்டுவந்து அவருக்குக் கொடுத்தாள். அதைப் பருகிய மாத்திரத்தில், அந்த துறவிக்கு மின்னல்போல ஒளியொன்று சிந்தையில் வந்து மின்னியது. அந்த நொடியிலேயே அவருக்கு ஞானம் பிறந்தது. ஒரு பூரண நிலவுபோல முழுமையான ஞானத்தைப் பெற்றார். கருணை, அன்பு, நேசம் என்பன போன்ற தர்மதத்துவங்களை எடுத்துரைத்தார்.
எந்த மனிதனும் ஒழுக்கத்தோடு வாழவேண்டும். அப்படி வாழ்ந்த மனிதனே தெய்வமாகிறான். மனித வாழ்வின் அனைத்து துன்பங்களுக்கும் ஆசைதான் காரணம். அந்த ஆசையைத் துறந்து முக்தியைத் தேடவேண்டும் என்பன போன்ற அறிவுரைகளில் இதுவும் ஒன்று.
"முற்றி முதிர்ந்த ஞானம் வற்றாமல் இருக்க வேண்டுமென்றால், பற்றும் பாசமும் வற்றிப்போக வேண்டும்' என்று கவியரசு கண்ணதாசன் கூறியதுபோல, அத்தனையும் விட்டொழித்த அற்புதத் துறவியே மகாபோதி புத்தர்- மகாநிர்வாண புத்தர்.
ஐம்புலன்களும் உயர்வானவை. அதில் மனம் என்பது மேலானது. அதைவிட அறிவும், ஆன்மாவும் மேலானவை என்று மனதை வென்றவர்- மரணத்தைக் கண்டு அஞ்சாதவர் புத்தர்.
அவரது போதனைகள் கடல் கடந்தும் பரவின. சாந்தம் தவழும் முகத்தோடு புத்தரின் திருவுருவச் சிலைகள் நிறுவப்பட்டன. அந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று.
மகாபாரதத்தில் கௌரவர்களின் மனதை மாற்றிய சகுனியைப்போன்ற ஒருவன், 5-ஆம் நூற்றாண்டில் இலங்கையின் அனுராதாபுரம் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த தாதுசேன மன்னனின் இரண்டாவது மகன் காசிபன் என்பவனின் மனதை மாற்றினான்.
அவனுக்கு நாடாளும் ஆசையைத் தூண்டினான்.
அது கொழுந்துவிட்டெரிந்தது. சமயம் பார்த்து அவன் தந்தையான தாதுசேனனைக் கொன்று நாட்டைக் கைப்பற்றினான்.
ஆட்சிப் பொறுப்பேற்கும்போது அந்த நாட்டு மக்கள், "தந்தையைக் கொன்ற துரோகி! இவன் எங்களுக்கு மன்னனாக இருக்கக்கூடாது' என்று காசிபனை நாட்டை விட்டே ஓடஓட விரட்டியடித்தார்கள். அவனும் உயிருக்கு பயந்து ஓடி, கொழும்பு நகரில் இருந்து 225 கிலோமீட்டர் தூரத்திலுள்ள "ஸிகிரியா' என்னும் மலைக்குன்றுக்குள் ஒளிந்துகொண்டான்.
மக்கள் அவனை மறக்கும்வரை, அவன் அங்கேயே காலத்தைக் கழித்தான்.
அந்தப் பாதுகாப்பான மலைக்குகைக்குள் இருந்துகொண்டே, தனது திறமையால் தனக்கு ஆதரவாக ஒரு கும்பலைத் திரட்டினான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த மலைமேல் ஒரு பெரும் கோட்டையைக் கட்டினான். அங்கே புத்தருக்கு ஒரு ஆலயம் அமைத்தான். அந்த ஆலயத்திற்குள் நின்ற கோலத்தில், அமர்ந்த கோலத்தில், சயன கோலத்தில் என்று வகைவகையாக புத்தரின் சிலைகளை அழகாக வடித்தான். ஓவியங்களாகவும் வரைந்தான்.
கோவிலுக்குள் தெய்வத்தை வைத்தவன், அந்த தெய்வத்திற்காக நீர் நிறைந்த குளம் ஒன்றையும் வெட்டினான். அந்த குளத்திலிருக்கும் அல்லி மலர்களைப் பறித்து வந்து அந்த மகானுக்கு சமர்ப்பித்தான்.
இன்றும் அகழியைத்தாண்டி இந்த "ஸிகிரியா' கோட்டைக்குள் சென்றால் அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களைப்போல இங்கும் காணலாம். மேலும் இங்குள்ள "கண்டமாலா' ஏரியைத்தாண்டி கண்டிக்குப் போகிற வழியில், தம்புல்லா என்னும் ஊரில் தங்க புத்தர் கோவிலையும் வண்ண வண்ண சித்திரங்கள் நிறைந்த குகைக்கோவிலையும் காணலாம். இங்கு புத்தரின் முகத்தில் காணப்படும் சாந்தமும், அமைதியும் நம்மை மெய்மறக்கச் செய்யும். இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வட்டகாமினி அபய என்னும் மன்னன் இதைக்கட்டியதாக வரலாறு கூறுகிறது. இந்த மலைக்கோவிலின் மேலே இந்துமத ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
இந்தியாவில் புத்தர் முக்தியடைந்த பிறகு, அவரை சந்தனக்கட்டைக் குவியலில் வைத்து எரித்தபொழுது, அந்த நெருப்பிலிருந்து புத்தரின் பற்களை மட்டும் எடுத்துவந்த கலிங்க அரசன் ஒருவன், இலங்கை நாட்டைச் சேர்ந்த பிரம்மதத்தனிடம் கொடுக்க, அந்தப் பல்லைப் புதைத்து பிரம்மதத்தன் கட்டிய முதல் புத்தர் கோவில் அந்த கண்டி புத்தர் கோவிலாகும்.
ஜனவரி, ஏப்ரல், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இங்கு திருவிழாக்கள் நடைபெறும். அதில் வைகாசிப் பௌர்ணமியன்று வரும் திருவிழா மிக அமர்க்களமாகக் கொண்டாடப்படும்.
கனியைப்போல கனிவான மனம் கொண்டவர் புத்தர். கருணையே வடிவானவர். புத்தரின் முகத்திலே கருணை இருக்கிறது. அதுதான் ஞானத்தின் வெளிப்பாடு.
புத்தம் சரணம் கச்சாமி!