திருமணம் என்பது மனித வாழ்க்கையில் ஓர் புதிய சமூக உறவுமுறை. "திரு' என்றால் "மங்களம்' என்கிற பொருள் உண்டு. அதேபோல் "மணம்' என்றால் கூடுதல் அல்லது இணைதல் என்கிற பொருள் உண்டு. திருமணம் விழா என்பது ஓர் மங்களகரமான நிகழ்வு மற்றுமின்றி இரு மனங்கள் சங்கமிக்கிற விழா.

தெய்வீகத் திருமணங்களாக சொல்லப்படும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், வள்ளி- முருகன் திருக்கல்யாணம், சீதா கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இரண்டு மனங்ககளுக்கு இடையே நடைபெறும் தெய்வீக உறவு முறைதான்.

mm

திருமண வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களும் உண்டு. தோற்றவர்களும் உண்டு. அது அவர்களின் கர்மவினையைப் பொறுத்தது. திருமணம் சிறப்பாக நடக்கவும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவும் அதில் ஏற்படும் தடைகளைக் களையவும் சென்னை பூந்தமல்லிக்கு அடுத்த திருமணம் கிராமத்தில் கோவில்கொண்டுள்ள அருள்மிகு ப்ரசூன குந்தளாம்பிகா சமேத ஸ்ரீ தாத்தரீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் எல்லாம் மங்களகரமாக நடக்கும். இந்த ஸ்தலம் சித்தர்கள் பலர் வாழ்ந்த இடமென்பதால் சித்தர்காடு என்றும் சொல்வார்கள். தற்சமயம் பெயர் மருவி சித்துட்காடு என்றாயிற்று.

முற்காலத்தில் பூஞ்சோலையாக இருந்த இந்த இடத்தில் சித்தர்கள் பலர் கூடி சந்திப்பதும், தங்களுக்குள் விவாதிப்பதும் சிவபெருமானை நோக்கி தவம் புரிதல் போன்றவற்றைச் செய்து வந்தனர். பூஞ்சோலையில் இருந்த ஒரு நெல்லி மரத்தின் அடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சித்தர்கள் வழிபட்டனர்.

Advertisment

சமஸ்கிருதத்தில் நெல்லிக் கனிக்கு தாத்ரி என ஒரு பெயர் உண்டு என்பதால் மூலவருக்கு தாத்ரீஸ்வரர் என்கிற பெயர் வந்தது. இந்த சித்தர்களில் பிராண தீபிகா சித்தரும், படுக்கை ஜடாமுடி சித்தரும் பிரபலம் என்பதால் நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா சித்தரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவரை வழிபடுவதால் ஆயுள் கூடும் என்பதில் ஐயமில்லை. அதேபோல் கோவில் உள்ளே ஒரு தூணில் படுக்கை ஜடா முடி சித்தரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தவிர போடோ சித்தர் உள்ளிட்ட பல சித்தர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. சித்தர்களின் பாதம் பட்ட இந்த பூமியை வணங்குவதுமூலம் நம்முடைய தோஷங்களும், கர்மவினைகளும் களையும்.

மூலவர் தாத்ரீஸ்வரர் (நெல்லியப்பர்) சந்நிதிக்கு அருகே பரசூன குந்தளாம்பிகை (பூங்குழலி) அம்பாளுக்கு தனிச் சந்நிதி உள்ளது. இக்கோவில் ஐடாவர்ம சுந்தர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. கோவில் திருப்பணிக்காக வேலைகள் நடக்கும் சமயத்தில் பூச்சோலையில் அம்பாள் சிலை கிடைத்தது. அந்த அம்பாளுக்குதான் பூங்குழலி என்கிற பெயர் சூட்டப்பட்டது. மூல பிராகாரத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர், குபேரன், மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு சிறிய சந்நிதிகள் உள்ளன. தனிச் சந்நிதியாக சுப்ரமணிய சுவாமி வீற்றிருக்கிறார். க்ஷேத்திர பாலகராக வீரபத்திரர் காட்சியளிக்கிறார்.

ss

Advertisment

இக்கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கு வதுதான். 27 நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு அந்தந்த நட்சத்திரத்திற்கு என ஒவ்வொரு கோவில் இருப்பதுபோல் சுவாதி நட்சத்திரத்திற்கு இக்கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இக்கோவில் சிறந்த பரிகார ஸ்தலம் என்பதால் மூலவருக்கு நெல்லிச் சாறு, நெல்லிப்பொடி அபிஷேகளும், அம்பாளுக்கு பச்சை நிற வஸ்திரம், வளையல் போன்றவற்றை அணிவித்தாலும் சிறந்த பலனை உண்டாக்கும். அதேபோன்று சனிக்கிரகத்தால் பாதிப்பு உள்ளவர் இங்குள்ள போடோ சித்திரை வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.

கோவிலை ஒட்டி பெரியகுளம் ஒன்று உள்ளது. இக்குளம் இந்த கிராமத்தின் நீர் ஆதாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ஊரின் பெயரே திருமணம் என்பதால், திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நல்ல பலனைக்கிட்ட சித்தர்கள் பூஜித்த இந்த ஸ்தலத்திற்கு சென்று வருவோம்!

மேலும் விவரங் களுக்கு: கோவில் அர்ச்ச கர் போன்: திரு. குமார்: 94447 93942, திரு. விஸ்வ நாதன்: 94445 62335.