சிறப்பான வாழ்வு தரும் சித்திரை வழிபாடு!

/idhalgal/om/picture-worship-gives-better-life

பிலவ புத்தாண்டுப் பிறப்பு- 14-4-2021

ராமநவமி- 21-4-2021

ரறிவுத் தாவரம்முதல் ஆறறிவு மனிதன்வரை பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளிலும் பஞ்சபூதங்கள் அடங்கியுள்ளன. நிலம் என்ற மண் உடலிலுள்ள தசையாகும். நீர் உடலில் ஓடும் ரத்தம் மற்றும் வியர்வை. நெருப்பு உடலில் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் உஷ்ணம். மனிதர்களின் சுவாசமே காற்று. ஆகாயம் என்பது உடலில் எண்ணமாக இயங்கிக்கொண்டிருக்கும் மனம்.

கோடானுகோடி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் காந்த அலைக் கதிர்வீச்சினால்தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. "மாற்றங்கள் நிறைந் தது மனித வாழ்க்கை; மாறாதவன் மாண்டு போவான்' என்னும் சொல்லுக்கேற்ப, எல்லா கோள்களும் வலம்வந்துகொண்டிருப்பதால், பூமிக்கு அருகில் வரும்போதும், தூரத்தில் செல்லும்போதும், அந்த கதிர்வீச்சின் தாக்கம் மனிதர்களின் உடலிலும் மனதிலும் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

உதாரணமாக, சூரியனது ஒளியே உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் மூலப் பொருள். சூரியனின் கதிர்வீச்சு இல்லை யெனில் இந்த பூமியில் ஜீவராசிகள் இல்லை. சித்திரை மாதம் சூரியனின் கதிர்வீச்சு மிகவும் அதிகமாக இருக்கும். கத்திரி எனும் அக்னி வெய்யில் கொளுத்தும். சூரியன் பூமிக்கு அருகிலிருப்பதால் உச்சமாக- பலமாக இருக்கிறார் என்று பொருள். சூரியன் உச்சம் பெறும்போது சூரியனின் காரகத்துவங்கள் தொடர்பான அனைத்தும் பலமடங்கு பலன்தருவதாகவே இருக்கும். சூரியன் உச்சம்பெறும்போது ஏற்படும் கதிர்வீச்சின் தாக்கம் மனிதனுக்குப் பலவிதமான வாழ்வியல் மாற்றத்தைத் தருகின்றன.

உலக உயிர்களை இயக்கும் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாளென்று கூறப்படுகிறது. காலபுருஷ முதல் ராசியான மேஷத்தில் சூரியன் உச்சம்பெறும் மாதமான சித்திரை தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால், சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டாக உற்சாகத்துடன் தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர். இதையே வட இந்தியாவில் பைசாகி என்றும், கேரளாவில் விஷு என்றும், ஆந்திராவில் யுகாதி என்றும் புத்தாண்டு அனுசரிக்கப்பட்டுவருகிறது.

தமிழ் மாதக் கணக்கின்படி சித்திரை 1-ஆம் நாள், ஸ்ரீ பிலவ வருடம் 14-4-2021 அன்று, புதன்கிழமை துவங்குகிறது. தமிழக மக்களின் முக்கியமான பண்டிகையான சித்திரைத் திருநாளில் விஷுக் கனி காண்பது மிகவும் சிறப்பு. இது கேரள மாநிலத்தில் சிறப் பாகக் கொண்டாடப்படும். சித்திரைத் திங்கள் புலர்வதற்குமுன், இரவு வீட்டில் ஒரு புதுக் கண்ணாடியை எடுத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து அதைத் தங்க நகைகளால் அலங்கரிக்கவேண்டும். கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்- காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைக்க லாம். ஒரு பெரிய தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், வெள்ளி, தங்கம், மஞ்சள், குங்குமம், பணம் ஆகியவற்றை வைத்துக்கொள்ளலாம்.

ஒரு சிறு தட்டில் கிடைக்கும் பூக்களை வைத்து அலங்கரிக்கவும். மற்றொரு தட்டில் அரிசி, கல் உப்பு, பருப்பு, மஞ்சள், வெல்லம் என ஒற்றைப் படையில் ஐந்து பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் இஷ்ட தெய்வப்

பிலவ புத்தாண்டுப் பிறப்பு- 14-4-2021

ராமநவமி- 21-4-2021

ரறிவுத் தாவரம்முதல் ஆறறிவு மனிதன்வரை பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளிலும் பஞ்சபூதங்கள் அடங்கியுள்ளன. நிலம் என்ற மண் உடலிலுள்ள தசையாகும். நீர் உடலில் ஓடும் ரத்தம் மற்றும் வியர்வை. நெருப்பு உடலில் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் உஷ்ணம். மனிதர்களின் சுவாசமே காற்று. ஆகாயம் என்பது உடலில் எண்ணமாக இயங்கிக்கொண்டிருக்கும் மனம்.

கோடானுகோடி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் காந்த அலைக் கதிர்வீச்சினால்தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. "மாற்றங்கள் நிறைந் தது மனித வாழ்க்கை; மாறாதவன் மாண்டு போவான்' என்னும் சொல்லுக்கேற்ப, எல்லா கோள்களும் வலம்வந்துகொண்டிருப்பதால், பூமிக்கு அருகில் வரும்போதும், தூரத்தில் செல்லும்போதும், அந்த கதிர்வீச்சின் தாக்கம் மனிதர்களின் உடலிலும் மனதிலும் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

உதாரணமாக, சூரியனது ஒளியே உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் மூலப் பொருள். சூரியனின் கதிர்வீச்சு இல்லை யெனில் இந்த பூமியில் ஜீவராசிகள் இல்லை. சித்திரை மாதம் சூரியனின் கதிர்வீச்சு மிகவும் அதிகமாக இருக்கும். கத்திரி எனும் அக்னி வெய்யில் கொளுத்தும். சூரியன் பூமிக்கு அருகிலிருப்பதால் உச்சமாக- பலமாக இருக்கிறார் என்று பொருள். சூரியன் உச்சம் பெறும்போது சூரியனின் காரகத்துவங்கள் தொடர்பான அனைத்தும் பலமடங்கு பலன்தருவதாகவே இருக்கும். சூரியன் உச்சம்பெறும்போது ஏற்படும் கதிர்வீச்சின் தாக்கம் மனிதனுக்குப் பலவிதமான வாழ்வியல் மாற்றத்தைத் தருகின்றன.

உலக உயிர்களை இயக்கும் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாளென்று கூறப்படுகிறது. காலபுருஷ முதல் ராசியான மேஷத்தில் சூரியன் உச்சம்பெறும் மாதமான சித்திரை தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால், சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டாக உற்சாகத்துடன் தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர். இதையே வட இந்தியாவில் பைசாகி என்றும், கேரளாவில் விஷு என்றும், ஆந்திராவில் யுகாதி என்றும் புத்தாண்டு அனுசரிக்கப்பட்டுவருகிறது.

தமிழ் மாதக் கணக்கின்படி சித்திரை 1-ஆம் நாள், ஸ்ரீ பிலவ வருடம் 14-4-2021 அன்று, புதன்கிழமை துவங்குகிறது. தமிழக மக்களின் முக்கியமான பண்டிகையான சித்திரைத் திருநாளில் விஷுக் கனி காண்பது மிகவும் சிறப்பு. இது கேரள மாநிலத்தில் சிறப் பாகக் கொண்டாடப்படும். சித்திரைத் திங்கள் புலர்வதற்குமுன், இரவு வீட்டில் ஒரு புதுக் கண்ணாடியை எடுத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து அதைத் தங்க நகைகளால் அலங்கரிக்கவேண்டும். கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்- காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைக்க லாம். ஒரு பெரிய தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், வெள்ளி, தங்கம், மஞ்சள், குங்குமம், பணம் ஆகியவற்றை வைத்துக்கொள்ளலாம்.

ஒரு சிறு தட்டில் கிடைக்கும் பூக்களை வைத்து அலங்கரிக்கவும். மற்றொரு தட்டில் அரிசி, கல் உப்பு, பருப்பு, மஞ்சள், வெல்லம் என ஒற்றைப் படையில் ஐந்து பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் இஷ்ட தெய்வப் படங்களையும், புத்தகங்கள் மற்றும் பஞ்சாங்கத்தையும் வைக்கலாம். முதல்நாள் இரவு இதையெல்லாம் அலங்கரித்து வைக்க வேண்டும்.

காலையில் துயில்நீங்கி எழும்போது, அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண்விழிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர் களையும் எழுந்து இந்தக் காட்சியைக் காணச் செய்ய வேண்டும். பூஜையறையை அலங் கரித்து விளக்கேற்றி, முக்கனிகளை இறைவனுக்குப் படைத்து வழிபடுவதுடன், புது வருடப் பஞ்சாங்கத்தை பெரியோர் வாயால் வாசித்து பஞ்சாங்கப் பலனைக் கேட்க வேண்டும்.

நகை, பணம் ஆகியவற்றில் லட்சுமி, புத்தகத்தில் சரஸ்வதி, தீபத்தில் சக்தி என முப்பெரும் தேவியரைப் பார்ப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேருமென்பது நம்பிக்கை.

சித்திரை முதல் நாளை பிரம்மதேவன் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் மனிதர்களின் விதிக் கணக்கை எழுதும் பிரம் மாவை சிவன்கோவிலுக்குச் சென்று தரிசனம், வழிபாடு, பூஜை செய்ய தலைவிதி மாறும். கோவிலுக்குச் செல்லமுடியாதவர்கள் வீட்டில் பிரம்மா வின் படம் வைத்து தீபமேற்றி, வாசனை மலர்களை சாற்றி, பால், கற்கண்டு, கேசரி போன்ற முடிந்த நிவேதனம் வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம், தூபம், கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

cc

"ஓம் பிரம்மதேவரே போற்றி ஓம்' என்னும் மந்திரத்தை 108 முறை சொல்லி, வாசனை மலர்கள் அல்லது மஞ்சள் கலந்த அரிசி அட்சதை போடவேண்டும்.

விஷு புண்ணிய நாளில் இந்த வழி பாட்டை மனமுருகிச் செய்தால் நியாய மான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்றுமாத காலம் முடிவடை வதற்குள் நிறைவேறும். அன்றைய தினம் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று நமது இஷ்ட தெய்வத்தை வழிபடலாம்.

விஷு புண்ணிய நாளில் விஷுக் கனி தரிசனம், பிரம்மா தரிசனம், வழிபாடு, பூஜை, தானம், தர்மம், அன்னதானம் போன்றவற்றை நம்பிக்கை யோடு செய்து நலம் பல பெறுவோம்.

உலகில் மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் அவரவர் செய்த கர்மாவின் அடிப்படையில் வாழ்க்கை அமையும். சாதகமான பலன்கள் நடைபெறும்போது மனது மகிழ்ச்சியாக உள்ளது. சில சாதகமற்ற பலன்களை சந்திக்கும்போது அதை ஏற்றுக் கொள்ளும் மனவலிமை இல்லாமல் பல சிரமங் களுக்கு ஆளாகிறார்கள். எதனால் இப்படி நிகழ்கிறதென்னும் தெளிவில்லாமல் மன சங்கடத்தை மேலும் அதிகரித்துக்கொள்கி றார்கள்.

இவ்வுலகில் தோன்றிய அனைத்து ஜீவாத்மாக்களும் சந்திக்கும் எல்லாப் பிரச் சினைகளுக்கும் மூலகாரணமாக இருப்பது ஊழ்வினையே.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா'; "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்' என்னும் முன்னோர்கள் வாக்கிற்கேற்ப, மனிதர்கள் சந்திக்கின்ற அனைத்து அனுபவங்களுக்கும் தாங்களே முழுமுதற் காரணமென்பதை உணரவேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் செய்த செயல்களுக்கான விளைவுகளை அவர் அனுபவித்தே தீர்க்கவேண்டும். நல்லவற்றைச் செய்தால் நன்மையையும், தீயவற்றைச் செய்தால் தீய பலன்களையும் கண்டிப்பாக அனுபவித்தே தீர்க்கவேண்டும். வாழ்க்கையில் பாதகமான அனுபவங்களை சந்திக்கும்போது, அதற்கு மிக முக்கியமான காரணம் தானே என்கிற புரிதல் இருந்துவிட்டால் கோபம் குறையும்; அமைதியாக இருப்பார்கள். பலர் இந்த அடிப்படை ஞான மில்லாமல் கோபத்தை முன்னிறுத்தி அமைதியை மறந்துபோவதால், பல பிரச் சினைகளும் ஏற்படுகின்றன.

பிரச்சினைகளை சந்திக்கும்போது, தான் யாரென்று பிறருக்குக் காண்பிக்கவேண்டும்; உண்டு இல்லையென்று பார்க்கவேண்டும் என்னும் கோபஉணர்வு தோன்றினால் அது பக்குவமற்ற நிலையைக் காட்டுவதாகும்.

அதேபோல் அன்றாட வாழ்க்கையில் செய்யக்கூடிய சில தவறுகள், நல்ல ஜாதகத் தைக் கொண்டவர்களும் ஒருசில காலகட்டங்களில் கஷ்டப்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. அதாவது தாய், தந்தை, தாத்தா, பாட்டி மற்றும் தங்களு டைய சொந்த பந்தங்களை மதிக்காமல், அலட்சியமாக- மரியாதைக் குறைவாக நடத்துபவர்களுக்கும், போதிய பொருளா தாரம் இருந்தும் கஷ்டப்படும் உடன்பிறப்பு களுக்கு உதவாதவர்களுக்கும், கணவன்- மனைவி ஒருவரையொருவர் ஏளனம் செய்பவர்களுக்கும், மனைவியின் பெற்றோர், சகோதர- சகோதரிகளை மதிக்காதவர்களுக் கும், கணவரின் பெற்றோர், சகோதர- சகோதரி களை மதிக்காதவர்களுக்கும், தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு உழைத்த கூலியைக் கொடுக்காமல் ஏய்ப்பவர்களுக்கும், கலப்படப் பொருள் விற்பவர்களுக்கும், ஏமாற்றுபவர்களுக்கும் நவகிரகங்களின் ஆசிர்வாதமும் அனுக்கிரகமும் நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது.

இதுபோன்ற பல தவறுகளைச் செய்பவர் களுக்குத் திருமணம் தள்ளிப் போகும். வேலைவாய்ப்பில் பிரச்சினை ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படாது. அழகு குறைய ஆரம்பிக்கும். அறிவாற்றல் மங்கிப் போகும். குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவார்கள். மனநிம்மதியே இருக்காது.

வீட்டில் மகாலட்சுமி தங்கமாட்டாள்.

இதை உணராமல் "அந்த தோஷம் இருக் கிறது- இந்த தோஷம் இருக்கிறது- அங்கு சென்று இதைச் செய்தால் சரியாகிவிடும்' என்றெல்லாம் பணம், காலநேரத்தை வீண டிப்பதுடன், மேலும் மன உளைச்சலை அதி கரித்துக் கொள்கிறார்கள். இதுவும் அவர் களுடைய வினைப்பயனின் ஒரு பகுதியே. உலகம் தோன்றிய நாள்முதல் தற்போது வரை இறைவன் பல திருவிளையாடல்களைப் புரிந்தும், பல குருமார்களை அனுப்பி யும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறி யிருந்தாலும், உலகில் பெரும்பான்மையான மக்கள் அவற்றையெல்லாம் பின்பற்றா மல் இருக்கின்றனர். உண்மையான பக்தி மற்றும் சரணாகதியானது ஒரு ஜீவாத்மா வின் கர்மவினையை இல்லாமல் செய்து விடும். நமது சனாதன தர்மம் உணர்த்தும் உண்மையை உணர்ந்து அதனைப் பின்பற்று வதோடு, இறைவனே வியக்குமளவிற்கு சரணாகதி செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது இறையருளால் ஞானம் கிடைக்கப் பெற்று, தங்களுடைய கர்மவினையின் அடிப்படையில் சந்திக்கும் அனுபவங்களை ஏற்றுக்கொள்ளும் மிகச்சிறந்த மனப்பக்குவம் கிடைக்கப்பெறும்.

வாழ்வை நல்வழிப்படுத்தும் ஸ்ரீ ராமநவமி விரதம்

ஸ்ரீ பிலவ வருடம், சித்திரை மாதம் 8-ஆம் நாள், புதன்கிழமை நவமி திதியில், 21-4-2021 அன்று ஸ்ரீ ராமநவமி அனுசரிக்கப்படவுள்ளது.

"உலகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் அநீதியை அழிக்க அவதாரம் எடுக்கிறேன்' என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லியிருப்பது நாமனைவரும் அறிந்ததே.

வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்ட பரம்பொருள் திருமால், பூலோகத்தைக் காப்பதற்காக எடுத்த பல்வேறு அவதாரங்களில், மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை உணர்த்துவதற்காக எடுத்த உன்னதமான அவதாரம் இராமாவதாரம். இது மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகும். ரகு குலத்தில், தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் சித்திரை மாதம், வளர்பிறை நவமியன்று அவதரித்தார். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்ததும், அரக்கன் இராவணனை சம்ஹாரம் செய்ததும், தந்தைக்குக் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் இராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். இராமபிரான், தந்தை சொன்ன ஒரு வார்த்தைக்காக காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். இராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்குப் பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. இராமனின் வரலாற்று நூல் இராமாயணம் எனப் பெயர்பெற்றது. மனிதன் என்பவன் இப்படித்தான் இருக்கவேண்டுமெனும் நியதிகளைக் கற்றுத்தந்து, மனிதகுலத்தை மேம்படுத்த மகாவிஷ்ணு எடுத்த அவதாரமான இராமாவதாரம் நிகழ்ந்த நாளே ஸ்ரீ ராமநவமி.

இராமாவதாரத்தில் ஸ்ரீராமன் மனிதனாகவே வாழ்ந்து, ஒரு மனிதன் எவ்வாறு நடக்கவேண்டும் என்பதற்கு உதாரண புருஷராக இருந்து, நியாயவாதியாக, சத்தியம், தர்மம் கடைப்பிடிப்பவராக கடைசிவரை வாழ்ந்து காட்டினார்.

ஸ்ரீ ராமநாம மந்திர மகிமை

விஷ்ணுவும் சிவமும் கலந்ததே ராம நாமம். "ஓம் நமோ நாராயணாயா' என்னும் அஷ்டாட்சரத்திலிருந்து "ரா' என்ற சப்தத்தையும், "ஓம் நமசிவாயா' என்ற பஞ்சாட்சரத்திலிருந்து "ம' என்ற சப்தத்தையும் ஒன்றுசேர்த்தால் வருவதே "ராம' மந்திரம்.

ராம மந்திரம் முக்தி, மோட்சம் ஆகியவற்றுக்குக் காரணமாகிறது. ஒருவர் இறக்கும் தறுவாயில் அவருடைய காதுகளில் "ராம ராம' என்று ஓதுவார்கள்- அவருக்கு நற்கதி கிடைக்க வேண்டுமென்று. காசியில் இன்னும் இதை நடைமுறையாகச் செயல்படுத்துகிறார்கள். காசி விஸ்வநாதரே ராம மந்திர உச்சாடனம் செய்வதாக ஐதீகம்.

"ராம' நாமத்தை தினம் எழுதுவதும், ஆஞ்சனேயர் பாதங்களில் சமர்ப்பிப்பதும், மாலையாகப் போடுவதும், கோடி நாமங்கள் எழுதுவதும் இன்று நடைமுறையாக இருப்பதிலிருந்தே ராமநாம மந்திர மகிமை புரியும்.

நேரம் காலம் பார்க்காமல் எப்பொழுது வேண்டுமானாலும் மனதாரச் சொல்லக்கூடிய மகா மந்திரம் இது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் காலநேரக் கோட்பாடுகள், அனுஷ்டானம், ஆச்சாரம், குரு உபதேசம் ஆகியனவெல்லாம் வேண்டும். ஆனால் இந்த ராமநாமத்திற்கு இவை ஒன்றும் தேவையில்லை. ராமநாமம் சொல்லப்படும் இடங்களிலெல்லாம் ஆஞ்சனேயர் இருப்பார் என்பது ஐதீகம். ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாடப்படும் இடங்களிலெல்லாம் ஆஞ்சனேயர் நேரில்வந்து பக்தருள் பக்தராய்க் கலந்து உபன்யாசத்தைப் ரசித்து, அனைவருக்கும் சகல சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரிவழங்கிப் பேரருள் புரிவார்.

சுந்தர காண்டம்

இராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2,885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கின்றன. இதை எவரொருவர் ஆழமாகப் படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும். இதன் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாகப் பயன்பெறலாம். ராமநவமியன்று விரதமிருந்து, ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்துவந்தால் வாழ்வில் அமைதிபெறலாம். ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதியின்மை நீங்கும்.

மனம் லேசாகிவிடும். பாவம் தீரும். வாழ்க்கையிலுள்ள துக்கங்கள் முடிவுக்கு வரும். முடியாத செயல்கள் முடிந்துவிடும். வாழ்வு வளம்பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும். தொடர்ந்து வாசிக்க வாசிக்க மன வலிமை உண்டாகும். நவகிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

சுந்தரகாண்ட சுலோகங்களை முறையாகப் பாராயணம் செய்தால் உடனே திருமணம் கைகூடும். பிரிந்த கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். இந்த புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்கக்கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும். இதை முழுமையாகப் படித்துமுடித்ததும் ஆஞ்சனேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவிசெய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும். சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

வழிபடும் முறை

ராமநவமி நாளில் ராமர் கோவில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். விஷ்ணு ஆலயங்களில் அதிகாலை அபிஷேக அலங்காரங்களுடன், பெருமாளை வழிபட்டு ராமநாமத்துடன் நாலாயிர திவ்யப்பிரபந்தம், இராமாயணம் படித்து பாவங்களிலிருந்து விடுபடலாம்.இந்தநாளில் ஸ்ரீ ராமரை நினைத்து விரதமிருந்து நீர், மோர், பானகம் தயார் செய்து, அதை ராமருக்கு நைவேத்தியமாகப் படைத்து வழிபட்டபின், பக்தர்கள் அனைவருக்கும் தாகம் தீர்க்கக் கொடுப்பது சிறப்பு.

ஸ்ரீராமநவமியன்று விரதமிருந்து ஸ்ரீராமரை வழிபடுவோர், ஸ்ரீராமர் அருளோடு ஸ்ரீஆஞ்சனேயர் அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை. அன்று ஆஞ்சனேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாற்றி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாற்றி ஆராதிக்கவேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம்.

இந்தநாளில் விரதமிருப்பது நல்லது. அப்படி விரதமிருக்க முடியாதவர்கள், ராமரை வணங்கி அன்று முழுவதும் ராமநாமத்தைப் பாராயணம் செய்வது சிறப் புக்குரியது. உள்ளத்தில் ராமனை நினைத்து ராமநாமத்தை எழுதியோ, மனனம் செய்தோ ஒருமுகமாக ராமரை சிந்தித்து வழிபட்டால் வாழ்வுவளம் பெறும். ஜாதகத்திலுள்ள அனைத்துவிதமான தோஷங்களும் தீரும்.

ஆயிரக்கணக்காக பணம் செலவழித்து செய்த பரிகாரத்திற்குக் கிடைக்காத தீர்வு கிடைக்கும். பெற்றோர்கள் மற்றும் முன்னோர் களின் நல்லாசிகள் கிடைக்கும். தொழில் பெருகும். உத்தியோகத்தில் இருக்கும் சிரமங்கள் குறையும். கடன் தீரும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் நிம்மதி பெருகும். குடும்ப உறவு களிடையே அன்பும் அரவணைப்பும் அதிகரிக்கும்.

இராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும். நவகிரகங்களின் நல்லாசிகள் கிடைப்பதுடன் முக்தியைக் கொடுக்கும்.

மற்றவர் மனம் புண்படுத்தும் சொற்களைப் பேசாமலும், தீய செயல்களைச் செய்யாமலும், நேர்வழியில் சென்று அமைதிகாத்து, ராமரின் நற்குணங்களை நினைத்து அதன்வழி வாழ உறுதிகொள்ளவேண்டும்.

om010421
இதையும் படியுங்கள்
Subscribe