தர்மம் நீங்கி தர்மம் தழைக்கவேண்டிய காலத்திலெல்லாம், இறைவன் பல அவதாரங்கள் எடுத்து, மக்களைத் தங்கள் மாளாத் துயர்களிலிருந்து காத்து ரட்சித்து அருள்பாலிக்கிறார். அத்தகைய அற்புத அவதாரங்களில் ஒன்றுதான் ஸ்ரீதர்மசாஸ்தா எனும் ஐயப்பன் திரு அவதாரமாகும். ஆழ்கடலில் அமுதெடுத்து தேவர்களுக்கும், அசுரர் களுக்கும் பரிமாறியபோது, அரக்கர்களை மயக்க நாராயணன் மோகினி அவதார மெடுத்தபோது, அவர் அழகில் மயங்கிய நீலகண்டன் சிவபெருமான்மூலம் அவதரித்த வரே ஹரிஹரசுதன் அய்யன் ஐயப்பன் ஆவார். பூலோகத்திலுள்ள கோடானு கோடி ஜீவராசிகளைக் காத்து ரட்சிக்க அவதரித்த அந்த தெய்வக் குழந்தைக்கு தர்மசாஸ்தா என நாமகரணம் செய்வித்தார் பிரம்மதேவன்.

மலையாள நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆன்மிகத் தலம் சபரிமலை. இதற்கு இப்பெயர் வரக் காரணமென்ன? வேடுவ குலத்தில் பிறந்து, இறைவனின்பால் மாறாத பக்திகொண்டு தவமிருந்து, இராமபிரானின் அன்பைப் பெற்ற சபரி வாழ்ந்த புனிதமான இடமே சபரிமலை. இம் மலையைப் பற்றியும், பம்பா நதி பற்றியும் குறிப்புகள் இராமாயணத்தில் இடம்பெற்றுள்ளன. சபரிமலைக்கு மதங்க வனம் என்ற பெயரும் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

12

Advertisment

சபரிமலையில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக் கோவிலை பரசுராமர் நிர்மானித்ததோடு, மேலும், 18 கோவில்களை நிர்மானித்தார்.

அவற்றில் முக்கியமான கோவில்கள் எருமேலியிலுள்ள தர்ம சாஸ்தா கோவில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப் புழை, பொன்னம்பல மேடு ஆகியவையாகும்.

கேரளத்தில் சேரப் பேரரசு வீழ்ந்தபின், பாண்டிய நாட்டைச் சேர்ந்த உதயன் என்ற கொள்ளையன் சாஸ்தாவின் கோவிலை இடித்து மூலவர் விக்ரகத்தை பின்னப்படுத்தினான். பந்தளநாட்டு ராஜகுமாரியையும் சிறைப் பிடித்தான். கொலையுண்ட கோவில் பூசாரியின் மகன் ஜயந்தன் மீண்டும் சாஸ்தாவை பிரதிஷ்டை செய்யவேண்டி, அவரை பக்திப்பூர்வமாக நினைத்து கடுந்தவம் புரிந்தான். ஐயப்பனும் அவன் கனவில் தோன்றி, பந்தள ராஜகுமாரியை மீட்டுத் திருமணம் செய்துகொள்ளும்படியும், அவர் களுக்குப் பிறக்கும் குழந்தை சாஸ்தாவை மீண்டும் நிர்மானிக்கும் என்றும் கூறினார்.

ஜயந்தனுக்கும், பந்தள ராஜகுமாரிக்கும் மகனாக ஐயப்பன் அவதரித்தபோது, "சாஸ்தாவும், ஐயப்பனும் ஒருவரே' என அசரீரி ஒலித்தது. ஐயப்பனின் அவதார மகிமையையறிந்த பந்தள மன்னன் இராஜசேகரன் அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்துச்சென்று, சகல கலைகளையும் கற்பித்தான். ஐயப்பனுக்கு பட்டம் சூட்டுவதை விரும்பாத அமைச்சர், அரசிக்கு ஏற்பட்டுள்ள தீராத தலைவலியைப் போக்க புலிப்பால் அவசியம் தேவையென, மருத்துவனை ஐயப்பனிடம் பொய்யுரைக்கச் சொன்னான். ஐயப்பன் அரசன் தனக்களித்த உணவையும், தேங்காயையும் இருமுடிக் கட்டாகக் கட்டியெடுத்துச் சென்றார். புலிப்பாலோடு புலிமீதேறி வந்த ஐயப்பனைக் கண்டதும், தன் தவற்றை உணர்ந்த அமைச்சர் அவர் பாதம் பணிந்து மன்னித்தருள வேண்டினார்.

கருநாகப்பள்ளி கடற்கரையில், கடற் கொள்ளையனும் ஏழைகளுக்கு உதவும் குணமுடைய வாபர் எனும் அரேபிய முகம்மதியரை எதிர்த்துப் போரிட்டு வென்று தோழனாக்கிக்கொள்ள ஐயன் திருவுளம் கொண்டார். சாஸ்தாவின் பெருமைகளை உணர்ந்து வாபர் ஐயனின் மலர்ப்பாதம் பணிந்தார். வாபரை ஐயன் தனது சேனாதிபதி யாக்கிக் கொண்டார்.

கொள்ளையர் தலைவன் உதயனை வெற்றிகொள்ள படையோடு புறப்பட்டார். மகர சங்கராந்தியன்று படைவீரர்கள் அனைவரும் எருமேலியில் சந்திக்க ஆணை யிட்டார். மகர சங்கராந்திக்கு 41 நாட்களுக்கு முன்பிருந்தே பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டித் தார். தன் தந்தை ஜயந்தனை சாஸ்தாவைப் பிரதிஷ்டை செய்ய வேண்டினார். போர்ப் பயிற்சிபெற்ற பெரியவர்கள் குருமார்களாக பணியேற்க, கருட தரிசனம் செய்து புறப் பட்டனர்.

18ss

Advertisment

எரிமேலியை அடைந்த அனைவரும் தங்கள் ஆயுதங்களையும், காய்கறிகளையும் ஒரு மூட்டையாகக் கட்டி, கருப்பு ஆடை அணிந்தும், தலையில் கம்பளியை சுற்றியும் வாபர் வழிபட்ட மசூதியை வலம்வந்து சபரிமலை நோக்கிச் சென்றனர். களைகட்டி என்ற இடத்தில் உதயன் படைத்தளபதியான முண்டன் என்பவனையும், பின்னர் சபரிமலையில் உதயனையும் போரிட்டு அழித்தார். சபரி மலையிலிருந்து இறங்கிய ஐயனின் படைகள் பம்பை நதியில் நீராடி, ஓய்வெடுத்தனர்.

அங்கிருந்து புறப்பட்ட படைகள் நீலிமலையை அர்ச்சித்து சபரிபீடம் வணங்கி, மீண்டும் பயணித்தபோது, இனி தன் வீரர்களுக்குப் படைக்கலங்கள் தேவையில்லையென்று கருதிய ஐயன், ஓர் ஆலமரத்தடியில் அனைத்து ஆயுதங்களையும் போடுமாறு ஆணையிட்டார். அந்த இடமே "சரங்குத்தி ஆல்' ஆகும்.

பின்னர், மேளதாளங்கள் முழங்க, வேத கோஷங்கள் ஒலிக்க, ஜயந்தன் சாஸ்தாவின் திருவுருவச் சிலையை கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்தார். அப்போது வானில் மின்னல் ஒளி தோன்றி மறைந்தது.

அத்தருணத்தில் ஐயப்பன் மறைந்து சாஸ்தாவின் விக்ரகத்தில் ஐக்கியமானதை கண்ணுற்ற வீரர்கள் "சாமியே சரணம் சரணம் ஐயப்பா' என பக்திப் பரவசத்துடன் கைகூப்பி வணங்கினர்.

மணிகண்ட மூர்த்தி, ஐயன் ஐயப்பன் வில், வாள், குந்தம், ஈட்டி, கைவாள், பரிசம், முன்தடி, முசலம், கதை, அங்குசம், பிந்திபாலம், வேல், கருத்திலை, பரசம், சக்கரம், தலம், மழு, கரிகை எனும் பதி னெட்டு வகை ஆயுதங்களைக் கொண்டு அவதார மூர்த்தியாகி தர்மத்தைக் காத்து சாஸ்தாவில் ஐக்கியமானார். அவரைப்போல் பக்தர்கள் தங்களின் புலன்கள் 5, பொறிகள் 5, பிராணன் 5 = 15 + மனம், புத்தி, அகங் காரம் ஆகிய பதினெட்டையும் அடக்கி அய்யனை சரணடையவேண்டும் என்பதே சபரிமலை ஆலயத்திலுள்ள பதினெட்டுப் படிகளின் தத்துவமாகும்.