Advertisment

உடலைப் பிறர்காண அனுமதிக்காத கற்பியல் குணம்! - அடிகளார் மு.அருளானந்தம் 40

/idhalgal/om/pedagogical-nature-not-allowing-body-be-seen-by-others

ண வாழ்க்கையை பாதிக்கக்கூடிய பயிர்ப்பு குணத்தையும், அதனைப் போக்கு வதற்காக, "மஞ்சள் குத்துத் திருநாள்' என்ற பெயரில் நடத்தப்பட்ட திருமணச் சடங்கை யும் கடந்த அத்தியாயத்தில் விவரித்திருந் தோம். இன்னும் சில பயிர்ப்பு குணங்கள் உள்ளன.

கற்பியல் பயிர்ப்பு

Advertisment

கற்புக்கு அடிப்படையாக விளங்குவது இந்த பயிர்ப்பு எனும் குணம்தான் என சங்கத்தமிழ்ச் சமுதாயத்தவர்கள் கருதிவந்தனர். கணவன் மட்டுமே பார்க்கக்கூடிய உடல் அங்கங் களை, தன் உயிரே போவதாக இருந்தாலும், பிறரைப் பார்க்க அனுமதிக்காத கற்பியல் குணமென்பது, ஒரு பெண்ணுக்கு இந்த பயிர்ப்பு குணத்தால் மட்டுமே வாய்க்கப்பெறும் என நம்பினர். காதலால் உருவான கள வியல் ஒழுக்கத்தில் கணவனைத் தொட அனுமதித்தவள், திருமணத்திற்குப்பின் கணவனைத் தவிர, பிறர் யாரேனும் தன்னை அணுகினால் வெகுண்டெழுந்து சினம்கொள்வாள். இதுவே, கற்பியல் பயிர்ப்பாகும்.

dd

இந்தப் பயிர்ப்பினால்தான், கணவன் இறந்த பின் தன் அழகைப் பிறர் நுகர்ந்துவிடக்கூடாது என்னும் காரணத்தால் உருவாகிய உடன் கட்டை ஏறுதல் எனும் கற்பியல் நெறிமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. உடன்கட்டை ஏறுதல் என்றால், கணவன் இறந்தபின் அவனு டைய உடலுக்குத் தீ மூட்டும்போது, மனைவி யானவள் முதலிரவில் கணவனைக் காணச் சென்றபோது தான் செய்துகொண்ட அலங் காரத்தைப்போல் செய்துகொண்டு, கணவன் உடலில் எரியும் நெருப்பில் அமர்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வதாகும்.

சிலர், கணவன் இறந்தபின் அவனை மண்ணில் புதைக்கும் வழக்கத்தை உடையவர் களாய் இருப்பின், கணவன் இறந்தபின் தனக்கு அழகு சேர்த்துவந்த ஆபரணங்களை யும், பட்டுச்சேலைகளையும் அணியாமல், காவி நிறத்திலோ அல்லது வெள்ளை நிறத் திலோ புடவையை உடுத்தி, தன் அழகைக் குறைத்துக்கொள்வதுண்டு. இச்செயல்முறைகளெல்லாம் கற்பியல் பயிர்ப்பினால் உருவானது.

காதல் பயிர்ப்பு

கணவனுக்காக எத

கணவனுக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த பெண்கள், தன் கணவனை யாருக்காகவும் தியாகம் செய்யமாட்டார்கள். யாரேனும் அவனைத் தொட்டால் (காமத் தால்) துடித்துவிடுவார்கள். போர்க்களத்தில் கணவன் வீரமரணத்தால் சாயும்போதுகூட, அவனது உடலைப் பிறர் தாங்க அனுமதிக்க மாட்டார்கள். ஏன்- நிலமகள்கூடத் தன் கணவனைத் தாங்கக்கூடாதென ஓடிச்சென்று கட்டியணைத்து, தன் உடல்மீது அவனது உடலைத் தாங்கிக்கொள்வாள். இக்குணமே காதல் பயிர்ப்பென்று அழைக்கப்பட்டது.

Advertisment

dd

தாய்மைப் பயிர்ப்பு

கூச்ச குணம் அதிகமுள்ள வளரிளம் பெண்கள், திருமணமாகித் தாய்மை நிலை யடைவதை நினைத்துப் பார்க்கவே, கூச்சமும் வெட்கமும் உடையவர்களாய் இருப்பார்கள். குழந்தைப்பேறு பெற்றபின் தாய்ப்பால் கொடுக்கக்கூட கூச்சமடைபவர்களாக இருப்பர். இவர்களது இந்த குணத்திற்கு தாய்மைப் பயிர்ப்பென்று பெயர். இந்த குணத்தைப் போக்குவதற்காகவே வள்ளி- முருகன் திருமண நாடகத்தை, பொதுமன்றத் தில் ஆதிகாலந் தொட்டே நடத்திவருகின்றனர்.

அதில், வள்ளியின் பயிர்ப்பு குணத்தைப் போக்குவதற்காக முருகன் படும் பாட்டையும், அவர் செய்யும் தந்திர உத்திகளையும் நாடகமாக நடித்துக் காட்டுவார்கள். இதைப் பார்க்கும் வளரிளம் பெண்கள், தங்களது பயிர்ப்பு குணத்திலிருந்து மாற்றமுறுவார்கள்.

இதேபோல், கோவில் சுவர்களில் ஓவியங் களையும், சிற்பங்களையும் உருவாக்கினர், அதைப் பார்க்கும் வளரிளம் பெண்கள் தங்களது பயிர்ப்பு குணத்தைக் குறைத்துக் கொள்வார்கள். இந்த நோக்கத்திற்காகவே பழங்கால வீடுகளில் தலை வாசலுக்குப்பின், பின்வாசலுக்கு அடுத்து, தொடர்ச்சியாக மாட்டுக்கொட்டங்களை அமைத்து, பசுமாடு களை அவ்வீட்டு வளரிளம் பெண்களைக் கொண்டு பரமரிக்கச் செய்வார்கள். பசுங்கன்றுகள் மாட்டு மடிகளில் பால் குடிப்பதைப் பார்க்கும்போது, பெண்களின் தாய்மை உணர்வுகள் அதிகரிக்கும் என்பதே இதன் நோக்கமாகும்.

இதுபோலவே, அக்காள் குழந்தைகளை அவ்வீட்டின் திருமணமாகாத தங்கைகளை செவிலித்தாயாக இருந்து பராமரிக்கச் செய்வார்கள். அவர்கள் அக்காள் குழந்தையைத் தன் குழந்தையாகவே அரவணைக் கப் பழகுவார்கள். இதன்மூலம் அவர்களுக்கு நல்ல அன்பு, பாசம் என அனுபவம் ஏற்படும். வருங்காலத்தில் ஒரு நல்ல தாயாகத் திகழ்வாள். இவற்றின்மூலம் தாய்மைப் பயிர்ப்பை அவர் களிடமிருந்து நீக்குவார்கள்.

இதுதவிர, இன்னும் எத்தனையோ வகையான பயிர்ப்பு வகைகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்!

eee

மறப் பயிர்ப்பு

வாள், ஈட்டி, சிலம்பம் போன்ற போர்ப்பயிற்சிகளில் ஈடுபடும் காளையர்கள் உடல்மீது, எதிரி யிடமிருந்து வாள், வேல், ஈட்டி, சிலம்பம் பட்டுவிடக்கூடாது என்றும், அவ்வாறு பட்டு விட்டால் அது தன்மானத் திற்கு இழுக்காகிவிடும் எனவும் கூறி, ரோஷத்தோடு சேர்ந்த பயிர்ப்பு குணத்தினைத் தங்கள் சீடர்களுக்கு ஊட்டி வளர்ப்பார்கள். இப்பயிர்ப்புக்கு மறப் பயிர்ப்பென்று பெயர். மறப் பயிர்ப்பு ஒருவனிடம் எவ்வளவு மேலோங்கிக் காணப்படுகிறதோ, அவ்வளவு சிறப்பான வெற்றிகளை அவன் குவிப்பான்.

பரி பயிர்ப்பு

ஒரு போர்க்குதிரைக்குப் பயிற்சி தரும்போது, பயிற்சி யளிக்கும் போர்வீரனின் மூச்சும், குதிரையின் மூச்சும் ஒரே கதியில் ஒன்றும்போது, குதிரை தன் தலைவனுக்கு (போர்வீரனுக்கு) அடிபணிந்து செல்லும். போர்க் களங்களில் குதிரையின் உயிர் போகும் தறுவாயேற்பட்டாலும், தன் தலைவனை பத்திரமாகத் தரையிறக்கிவிட்டபின்பே தன் உயிரை நீக்கும். இப்படிப்பட்ட குதிரை, தன்னை வளர்த்த தலைவனைத் தவிர வேறு யார் தொட்டாலும் வெகுண்டு சீறிப் பாய்ந் தோடும். இல்லையேல், இரண்டு பின்னங்கால்களையும் உயரே தூக்கி உதைத்து, தொட்டவனை வீழ்த்தும். குதிரையின் இக்குணத்திற்கு பரி பயிர்ப்பென்று பெயர்.

வேழப் பயிர்ப்பு

போர் யானைகளுக்கு குட்டிகளிலிருந்து யானைக் கொட்டங்களில் பயிற்சியளிக்கும்போது, தினந்தோறும் தன்நாட்டுப் போர்வீரர்கள் அணியும் நிறமுடைய உடைகளை மட்டுமே பயிற்சியாளர்கள் அணிவர். மேலும், ஒரு வகையான சங்கேத மொழிகளை யானைகளுக்குக் கற்றுக்கொடுத்து வளர்ப்பார்கள். அம்மொழிகளில் பேசினால் மட்டுமே அந்த யானை பாகனுக்குப் பணிந்து பணிவிடைசெய்யும். போர்க்களங்களில் பகைவர்கள் அணிந்துவரும் மாற்றுநிற உடுப்பைப் பார்த்தும், அவர்கள் பேசும் மாற்று மொழிகளைக் கேட்டும் வெறுப்படைந்து, கோபாவேசத்துடன் அவர்களை ஓடிப்போய்த் தாக்கும். அதனை வளர்த்த யானைப் பாகன் கூறும் சங்கேத மொழிகளைக் கேட்டு இன்னும் வேகமாக அவர்கள் செய்யும் குறிப்பறிந்து, எத்திசையில் யார் யாரைத் தாக்கவேண்டுமோ அவர்களைச் சரியாகத் தாக்கிக் கொல்லும். யானைகளின் இந்த வெகுண்டழிக்கும் குணத்திற்கு வேழப் பயிர்ப்பென்று பெயர்.

பழிப் பயிர்ப்பு

அறவோர்களும், அறவழி நடக்கும் மன்னர் களும் தங்களையறியாது சில சமயங்களில் அறந்தவறிவிட்டால், அதனால் "இவன் நீதி தவறிவிட்டான் அல்லது அறம் பிறழ்ந் தான்' என தம்மக்கள் கூறிவிடுவார்களோ என அஞ்சும் பெரியோர்களுக்கு "பழிக் கஞ்சி' என்று பெயர். இவர்கள் தங்கள் காதுகளுக்கு மக்கள் பேசும் பழிச்சொல் வந்தடைவதற்கு முன்பே தங்களது உயிரை நீத்துவிடுவார்கள். இவர்களது இந்த குணத்தையே பழிப் பயிர்ப்பென ஆன்றோர் களும் சான்றோர்களும் கூறுகின்றனர்.

உதாரணமாக, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும் அவனது அரசியாரும், தாம் அறியாது கண்ணகிக்குப் பெருந்தவறு இழைத்துவிட்டோமோ என, அதுகுறித்து தம்மக்கள் பேசும் பேச்சு தங்கள் காதுகளுக்கு வந்தடைவதற்குமுன்பே, தங்கள் உயிரை நீத்தனர். அன்றிலிருந்து இன்றுவரை இப்பயிர்ப்பு குணம் உள்ளவர்கள்தான், தம்மீது பழிவந்துவிடுமோ என அஞ்சி தற்கொலை செய்துகொள்கின்றனர். இன்று மாணவர்களிடையே மரணங்கள் ஏற்படுவதற்குக் காரணம் இக்குணத்தை அவர்கள் கொண்டிருப்பதால்தான்.

ஏறு பயிர்ப்பு

சங்க காலத்திலிருந்து இன்றுவரை நடைபெற்று வரும் தமிழர் பண்பாட்டு விழாவான ஏறு தழுவுதல் எனும் காளைகளை அணைந்து அடக்கும் போட்டிகளுக்கு வளர்க்கப்படும் காளைகளுக்கு ஏறு என்று பெயர். இது கன்றுக் குட்டிகளாக இருக்கும் போதிலிருந்து மனிதர்கள் அதை அண்டாத வாறு அதன் திமிலைக் கடித்தும், சுற்றிநின்றும் அதற்கு பயிர்ப்பு குணத்தை வளர்க்கும் வண்ணம் கோபமுறச் செய்வார்கள். இந்த பயிர்ப்பு குணம் எந்தக் காளைக்கு அதிகமாக உள்ளதோ, அது கிட்டிவாசல் என்றழைக்கப்படும் போட்டி மைதானத்தின் நுழைவாயிலி-ருந்து போட்டி முடியும் மைதானம்வரை, சுற்றி நிற்கும் எவரையும் தன்னருகே நெருங்கவிடாது. ஓடிச்சென்று முட்டிச் சாய்க்கும். சுழன்று சுழன்று குத்தவும் செய்யும். காளையின் இந்த குணத்திற்கு ஏறு பயிர்ப்பென்று பெயர். காளையின் பயிர்ப்புத்தன்மை அதிகரிக்க அதிகரிக்க, ஏறுதழுவுதலில் வெற்றிவாகை சூடும். விவசாயத்திற்குப் பயன்படும் காளை களுக்கு முழுமையாக இந்த குணத்தை அகற்றிவிடும் வண்ணம், அதனை சில உத்திகளைக் கையாண்டு வளர்ப்பார்கள்.

அரிப் பயிர்ப்பு

சிங்கம் தன் பெண் இணையைத் தன் ஆளுமைக்குக் கொண்டுவரும்போது, பிற சிங்கங்களைத் தன் இணையுடன் நெருங்கவிடாது. தன் ஆளுமைக்குக் கொண்டுவரும் பெண் சிங்கத்திற்கு ஏற்கெனவே வேறு சிங்கத்தின்மூலம் குட்டிகள் பிறந் திருந்தால், அவையனைத்தையும் முதலில் கொன்றுவிட்டுதான் தன் இணையோடு இணையும். இதன் குணம் என்னவென்றால், தன் இணையோடு வேறு சிங்கங்களோ அல்லது குட்டிகளோ ஒன்றியிருப்பதைக் கண்டால் கடுங்கோபம் கொள்வதாகும். சிங்கங்களின் இப்பண்பே அரிப் பயிர்ப்பு எனப்படுகிறது. இதுபோல் பயிர்ப்பு குணங்கள் எல்லாரிடத்திலும், நன்மையாகவும் தீமையாகவும் செயல்படக்கூடிய தன்மை யுடையதாக உள்ளது.

இனிமையுடன் தொடர்வோம் வரும் இதழில்...

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்

nkn010622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe