Advertisment

மயிலம் முருகன் திறப்புகள்! - கவிதா பாலாஜிகணேஷ்

/idhalgal/om/peacock-murugan-openings-kavita-balajiganesh

வத்துக்குரிய திசை வடக்கு. சூரபத்மன் மயிலத்தில் வடக்குநோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்குக் கிடைத்திருக்கிறது.

முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன.

Advertisment

தினமும் காலை பூஜையின் போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள்.

அதன்பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கி றார்கள்.

கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரம்மாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன.

செவ்வாய்க்கிழமைதோறும் காலசந்தி பூஜையின்போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினை அகலுமென்பது நம்பிக்கை.

மயிலம் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ம

வத்துக்குரிய திசை வடக்கு. சூரபத்மன் மயிலத்தில் வடக்குநோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்குக் கிடைத்திருக்கிறது.

முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன.

Advertisment

தினமும் காலை பூஜையின் போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள்.

அதன்பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கி றார்கள்.

கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரம்மாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன.

செவ்வாய்க்கிழமைதோறும் காலசந்தி பூஜையின்போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினை அகலுமென்பது நம்பிக்கை.

மயிலம் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது.

Advertisment

dd

பாலசித்தர் தவம்புரியும் காலம்வரையிலும் சூரபத்மன் மலையாக நிலைகொண்டு அங்கு காத்திருந்தான். "மயூராசலம்' என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழிமாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்ப் புத்தாண்டு விழாவின்போது மிகவும் சிறப்பான உற்சவமாகக் கொண்டாடுகின்றனர்.

காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

நான்காம் நாள் திருவிழாவில் "திருவாட்டல்' என்னும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதில் "வள்ளி' தன் கணவரான முருகனை சந்திக்க மறுப்பதுபோன்ற காட்சி வருகிறது. மற்ற சிவன் ஆலயங்களில் இந்தக் காட்சியில் சுந்தரர் மத்தியஸ்தம் செய்வதுபோல் இருக்க, இந்த ஆலயத்தில் பிரம்மா மத்தியஸ்தம் செய்வதாக ஐதீகம் உள்ளது.

தல புராணத்தின்படி, "சங்ககுணா' என்னும் அசுரன் அழகில்லாதவன்; நிலையில்லாதவன். ஆகவேதான் அவன் பெயரிலுள்ள சங்க என்ற வார்த்தை ஒலிதரும் சங்கைக் குறிக்கும். சங்கூதும் பல பூத கணங்களில் அவனும் ஒன்றாக இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட உருவச் சிலைகள் இங்குள்ள தேர்களில் நிறையவே செதுக்கப்பட்டுள்ளன.

ஆலயத் திருவிழாவில் பங்கேற்க இரண்டு தேர்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பங்குனி பிரம்மோற்சவத்தில் உபயோகிக்கிறார்கள்.

அங்குள்ள சிற்பத்தில் காரத்திகைப் பெண்கள் ஆறு குழந்தைகளாக தாமரை யில் இருந்த முருகனை தங்களுடைய கரங்களில் எடுத்துக்கொள்வதைப் போன்ற காட்சி உள்ளது.

தங்கும் வசதியோ, பெரிய ஹோட்டல்களோ இல்லாத கிராமம் என்பதால், தொலைதூரத்திலிருந்து வருகிறவர்கள் பக்கத்து நகரங்களில் தங்குவது உசிதம்.

இதற்குப் பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சனேயர் கோவில்கள் இருப்பதால் எல்லாவற்றையும் தரிசிக்கும் ஏற்பாடுகளோடு பக்தர்கள் வரலாம்.

வாகனங்களில் வருகிறவர்கள் நேராக மலைமீதுள்ள கோவிலுக்குச் செல்ல சாலைவசதி உள்ளது. இதுதவிர நடந்து வருகிறவர்களுக்காக நேர்த்தியாக அமைக்கப்பட்ட படிக்கட்டு வழி உள்ளது.

எப்போதும் அமைதி நிலவும் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். பல்வேறு பெருமைகளைத் தாங்கிய மயிலம் திருத்தலத்தை அருண கிரிநாதர், ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள், வைத்தியநாத தேசிகர், பண்ருட்டி மணி அய்யர், அப்பாவு அய்யர், ஆ. சிவலிங்கனார், தியாகராஜ கவிராயர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், நமச்சிவாய முதலியார், தே.ஆ. சீனிவாசன், இராஜமாணிக்கம் நடராஜன், இரத்தின முதலியார், வீரபத்திரன், பெரிய சாமிப்பிள்ளை, திரு.வி. கலியாண சுந்தரனார், வே. விஜய ரங்கம் உள்ளிட்ட பல்வேறு புலவர்கள் போற்றிப் பாடியுள்ளனர்.

ஞாயிறு மற்றும் விழாக்காலங்களில் கோவில் முழுநேரம் திறந்திருக்கும்.

மயிலம் முருகன் கோவில் திண்டிவனத் திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின்மேல் அமைந்துள்ளது.

om011022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe